ரஜினி-விஜய்யை அடுத்து கமலுக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி..?!

ரஜினி-விஜய்யை அடுத்து கமலுக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி..?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan vijay sethupathi (1)கமல்ஹாசன் தயாரித்து அவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’.

மாஸ்டர் படத்தை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார். அனிருத் இசை.

பிரபல மலையாள நடிகர் பகத்பாசில் இதில் கமலுடன் நடிக்கிறார்.

இந்த நிலையில் வில்லன் வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்தன.

இதுகுறித்த தகவலில்…

விக்ரம் படக்குழு இவரை அணுகினாலும் இன்னும் கால்ஷீட்டுகள் ஒதுக்கவில்லையாம்.

ஏற்கெனவே கமல்ஹாசன் மற்றும் பகத்பாசில் இருக்கும்போது இதில் விஜய்சேதுபதியும் இணைந்தால் ஏதேனும் சிறப்பாக இருக்க வேண்டும் என நினைக்கிறாராம்.

தன் கேரக்டருக்கு முக்கியம் இல்லையென்றால் அதை செய்வதில் அர்த்தம் இருக்காது எனவும் நினைக்கிறாராம்.

ஏற்கெனவே பேட்ட படத்தில் ரஜினிக்கும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய்சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi to play baddie for Kamal Haasan’s Vikram ?

JUST IN விவேக் ஆஸ்பத்திரியில் அனுமதி.; நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவருக்கு என்னாச்சு?

JUST IN விவேக் ஆஸ்பத்திரியில் அனுமதி.; நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவருக்கு என்னாச்சு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vivekசின்ன கலைவாணர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விவேக்.

இவர் சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது நடிகர் விவேக் மயங்கி விழுந்துள்ளார்.

விவேக்குக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

எனவே அவரது மனைவி மற்றும் மகள் அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்த முடிவில் ஆஞ்சியோ அறுசை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது சுயநினைவோடு உள்ளார் விவேக்.

நடிகர் விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comedy Actor Vivek has been admitted to a private hospital in Chennai

‘அந்நியன்’ ஹிந்தி ரீமேக்..: தடை போட்ட தயாரிப்பாளர்..; முழு உரிமை எனக்கே என ஷங்கர் சண்டை

‘அந்நியன்’ ஹிந்தி ரீமேக்..: தடை போட்ட தயாரிப்பாளர்..; முழு உரிமை எனக்கே என ஷங்கர் சண்டை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், சதா, பிரகாஷ்ராஜ், விவேக், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் 2005ல் வெளியான படம் ‘அந்நியன்’.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்து வெளியிட்டு இருந்தார்.

வசூலிலும் வரவேற்பிலும் இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது இப்பட ஹிந்தி ரீமேக்கை இயக்கவுள்ளார் ஷங்கர் என்பதை அதிகார அறிவிப்புக்கு முன்பே நம் தளத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம்.

பென் மூவிஸ் தயாரிக்கவுள்ள இப்பட ரீமேக்கில் விக்ரம் கேரக்டரில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படவுள்ளது.

இதனைஅடுத்து ‘அந்நியன்’ படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன், ஷங்கருக்குக் கடிதம் ஒன்றை இன்று (ஏப்ரல் 15) காலை அனுப்பினார்.

அதில்…

‘அந்நியன்’ கதைக்கான உரிமை என்னிடம் உள்ளது. அதற்கான ஆவணங்கள் உள்ளன.

இதன் கதையை என்னுடைய அனுமதியின்றி தழுவுவதோ, ரீமேக் செய்வதோ முற்றிலும் சட்ட விரோதம் ஆனது” என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆஸ்கர் ரவிச்சந்திரன் அனுப்பிய அந்த கடிதத்துக்கு, இயக்குநர் ஷங்கர் தற்போது பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் ஷங்கர் கூறியிருப்பதாவது…

‘அந்நியன்’ திரைப்படத்தின் கதைக்கு நீங்கள் உரிமை கோரிய மின்னஞ்சலைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன்.

கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்கிற பெயருடன்தான் இந்தப் படம் வெளியானது.

படத்தின் திரைக்கதையை எழுத யாரையும் நான் நியமிக்கவில்லை. எனவே, இந்தத் திரைக்கதையை நான் விரும்பும்படி பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை உள்ளது.

அந்த படைப்பை எழுதியவன் என்ற முறையில் எந்தச் சூழலிலும் எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது.

மறைந்த சுஜாதாவின் பெயரை இதில் சம்பந்தப்படுத்தியதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.

அவர் இந்தப் படத்துக்கு வசனங்கள் எழுத மட்டுமே நியமிக்கப்பட்டார். அதற்கான உரிய பெயரும் அவருக்குக் கொடுக்கப்பட்டது.

வசனகர்த்தா என்பதைத் தாண்டி அவர் எந்த வகையிலும் இதில் ஈடுபடவில்லை.

திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்குள்ளது.

நீங்களோ உங்கள் நிறுவனமோ எந்த விதமான உரிமைகளை கோர முடியாது. இந்த படத்தை ரீமேக் செய்யவும் முடியாது.

ஏனென்றால் அந்த உரிமை எழுத்துப்பூர்வமாக உங்களுக்குத் தர வில்லை.

ஒரு தயாரிப்பாளராக, ‘அந்நியன்’ படத்தின் மூலம் லாபம் அடைந்துள்ளீர்கள். தற்போது தேவையில்லாமல், உங்களுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத எனது எதிர்கால முயற்சிகளின் மூலம் அநியாயமாக உங்களுக்கு ஆதாயம் தேடப் பார்க்கிறீர்கள்.

இதுபோன்ற மோசமான, சட்டவிரோதமான உரிமை கோரல்களால் எனது எதிர்கால திரைப்படங்களைப் பாதிக்க முயலும் நிலையில் ஒரு இயக்குநராக, கதாசிரியராக உண்மையான நிலை குறித்த தெளிவைத் தரவே எந்தவித பாரபட்சமும் இன்றி இந்த பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.”

இவ்வாறு இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

Director Shankar’s Reply to Producer Aascar Ravichandran

யோகி பாபு உடன் காட்டு விலங்குகள் இணையும் ‘வீரப்பனின் கஜானா’

யோகி பாபு உடன் காட்டு விலங்குகள் இணையும் ‘வீரப்பனின் கஜானா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Veerappanin Ghajanaகாடுகளின் பெருமையை திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படம் ‘வீரப்பனின் கஜானா’.

பிரபாதீஸ் ஷாம்ஸ் மற்றும் “ராட்சசி” புகழ் சை கௌதம் ராஜ் கதையை புதுமுக இயக்குநர் யாசின் இயக்கும் படம் ‘வீரப்பனின் கஜானா’

காட்டிற்கும் மனிதனுக்கும் பிரிக்கப் முடியாத ஒரு பந்தம் இருக்கிறது. ஆதி மனிதன் காட்டில் தான் வாழ்ந்தான். பிறகு நாகரிகம் வளர்ச்சியடைந்து கிராமம், நகரம் என்று மாறியது.

இருப்பினும் காட்டின் மீது அனைவருக்கும் எப்போதும் ஒரு மோகம் இருந்துக் கொண்டே இருக்கும்.

குறிப்பாக குழந்தைளுக்கு காடு பற்றிய ஆர்வமும் கற்பனையும் அதிகம் உண்டு. காடுகளைப் பற்றி கேட்கவும் காட்சிகளாக பார்க்கவும் உற்சாகமாகிவிடுவார்கள்.

அந்தக் காட்டின் பெருமையை பேன்டஸி, காமெடி, த்ரில்லர் கலந்து என்டர்டெயின்மென்டுக்கு பஞ்சம் வைக்காமல் பேசும் திரைப்படம் தான் ‘வீரப்பனின் கஜானா’.

மேலும், தமிழ்நாட்டில் காடு என்றால் ஞாபகம் வருவது சத்தியமங்கலமும், வீரப்பனும் தான். ஆகையால், அதை மையமாக கொண்டு இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

காட்டின் காவலனான வீரப்பன் சம்மந்தமானக் காட்சிகள் படத்தில் முக்கியமானதாக இருக்கும்.

குரங்கு, புலி, யானை என படம் முழுவதும் சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கிறது.

ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் பிரபாதீஸ் ஷாம்ஸ் தயாரிக்க, ராட்சசி இயக்குனர் சை.கௌதம்ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் சேர்ந்து எழுதிய கதையை புதுமுக இயக்குநர் யாசின் இயக்குகிறார்.

யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா என யூத் காம்போவுடன் உருவாவதால் இப்படம் குழந்தைகள் முதல் அனைவரும் குதூகலித்து பார்க்கக் கூடிய படமாக இருக்கும். தென்காசி, குற்றாலம், நாகர்கோவில் காட்டுப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவிருக்கிறது.

மேலும், வீரப்பனின் கஜானா திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.

Yogi babu in Veerappanin Ghajana Movie Final Schedule going Full Swing

அருண் விஜய்க்கு கிடைக்காத அடையாளத்தை ‘பார்டர்’ கொடுத்திடும் – பிரபு திலக்

அருண் விஜய்க்கு கிடைக்காத அடையாளத்தை ‘பார்டர்’ கொடுத்திடும் – பிரபு திலக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Borderஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பார்டர்’.

அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார்.

‘AV31’ என பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் மூத்த நடிகர் விஜயகுமார், தயாரிப்பாளர் டி. சிவா, இயக்குனர், அறிவழகன், நடிகர் அருண் விஜய், நடிகை ஸ்ஃடெபி பட்டேல், இசையமைப்பாளர் சாம் சி எஸ், பாடலாசிரியர் விவேகா, இயக்குனர் ஏ. எல் விஜய், இயக்குனர் கார்த்திக் நரேன், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர் பிரபு திலக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் தொடக்கமாக சென்னையின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ‘த பார்க்’ நட்சத்திர ஹோட்டலில் முகப்பு பகுதியில் 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் இப்படத்தின் டைட்டிலான ‘பார்டர்’ வெளியிடப்பட்டது.

தமிழ் திரை உலகில் முதன்முறையாக இந்த தொழில்நுட்பத்தில் ஒரு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதால், விழாவிற்கு வருகை தந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் வியப்புடன் கண்டுகளித்து கரவொலி எழுப்பினர்.

பின்னர் விழாவில் படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்டது. தொடர்ந்து விழாவுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான பிரபு திலக் பேசுகையில்,…

‘தமிழ் புத்தாண்டு தினமான இன்று கோடை மழை பெய்தது. கோடையில் மழை எவ்வளவு அபூர்வமோ.. அந்த அளவிற்கு இந்தப் படமும் அபூர்வமான திரைப்படம். இயக்குனர் அறிவழகன் என்பது அறிவு- அழகன் என காரணப் பெயராகிவிட்டது.

இதைவிட சிறப்பாக அவரது பெற்றோர்கள் இவருக்கு பெயர் சூட்ட இயலாது. இந்த கொரோனா காலகட்டத்தில் திரை அரங்கிற்கு வருகை தந்து படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களின் காலில் விழுந்து நான் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து கலைகளின் சங்கமம் தான் சினிமா என்பதை யாராலும் மறுக்க இயலாது.

அனைத்து திறமைசாலிகளின் இறுதி இலக்கு சினிமாவாக இருப்பதை நினைத்து ஆராதிக்கிறேன். கொண்டாடுகிறேன்.

இன்று பிறந்திருக்கும் ‘பிலவ’ ஆண்டிற்கான அர்த்தத்தில் ‘தாவி குதித்து’ என்ற ஒரு பொருளும் உண்டு.

அதேபோல் இந்த ஆண்டில் திரை கலைஞர்களுக்கு ‘தாவிக்குதித்து அடையும் வெற்றி போல்’ பெரும் வெற்றியைப் பெற வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். இந்த நாளில் ‘பார்டர்’ படத்தையும், அதன் ஃபர்ஸ்ட் லுக்கையும் அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

‘அடுத்த சாட்டை’, ‘வால்டர்’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படக்குழுவுடன் இணைந்திருக்கிறேன். இப்படத்தின் கதாநாயகனான அருண் விஜய் நடித்த அனைத்து திரைப்படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறேன்.

ஆனால் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் முழுமையாக கிடைக்கவில்லையோ.. என்ற ஆதங்கம் என்னுள் உண்டு.

அந்த அடையாளத்தை இந்த ‘பார்டர்’ திரைப்படம் பெற்றுத் தரும் என உறுதியாக நம்புகிறேன். என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னால் என்னுடைய தாயாரின் ஆசீர்வாதமும், வழிகாட்டலும் இருக்கிறது. அவர்கள் என்னை இயக்கும் மாபெரும் சக்தி.

இப்படத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், ஏனையவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘பார்டர்’ படத்தை மே மாதம் திரை அரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும். ‘என்றார்.

தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில்,…

‘ இன்னும் ‘ஈரம்: குறையாமல் இருக்கும் இயக்குனர் அறிவழகனுக்கு வாழ்த்துக்கள். டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிற்காக புதிதாக சிந்தித்து வெளியிட்டதற்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.

இன்றைய சூழலில் திரைப்படங்களுக்கு முதல் நாள், முதல் காட்சிக்கு ரசிகர்களை வரவழைப்பது தான் சவாலான பணியாக இருக்கிறது. அதற்கான பணியை இந்த படக்குழுவினர் மிகப்பொருத்தமாக செய்திருக்கிறார்கள்.

அதனால் இந்தப் படத்திற்கு மிக சிறந்த ஓபனிங் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நடிகர் அருண்விஜய் திரை உலகில் அறிமுகமான முதல் நாளிலிருந்து கடந்த 23 ஆண்டுகளாக தெரியும். அவருடன் ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் பணியாற்றியிருக்கிறேன்.

கடினமாக உழைப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதனை அருண்விஜய் விசயத்தில் நேரடியாக கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இத்தனை ஆண்டுகாலம் அவருடைய தன்னம்பிக்கையை பாதுகாத்து, அவரை வளர்த்தெடுத்த அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முயற்சி திருவினையாக்கும் என்பது ஏவிஎம் நிறுவனத்துக்கு மட்டுமல்ல, அருண் விஜய்க்கும் பொருந்தும் என்பதை நிரூபித்து வருகிறார். இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தபிறகு அருண் விஜயின் வெற்றி உறுதியாகியிருக்கிறது.

இப்படத்தை வெளியிடும் பிரபு திலக் பெரிய வெற்றியைப் பெறவேண்டும். அம்மாவின் ஆசீர்வாதத்தை பெற்றவர்கள் நிச்சயம் வெற்றி அடைவார்கள்.’ என்றார்.

இயக்குனர் அறிவழகன் பேசுகையில்,…

‘ என்னுடைய படைப்பை காட்சி ரீதியாகவும், கதையாகவும் ரசிகர்களிடம் துல்லியமாக சேர்க்க வேண்டுமென நினைப்பேன். என்னுடைய எண்ணத்தையும், எதிர்பார்ப்பையும் புரிந்து கொள்ளும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதை தான் நான் விரும்புகிறேன்.

அந்த வகையில் ‘பார்டர்’ படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தை 47 நாட்களில் இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தி, நிறைவு செய்தோம். 20 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு செய்தவுடன் கொரோனா பெருந்தொற்று பரவல் அச்சம் ஏற்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தினோம்.

இத்தகைய சூழலில் என்னுடைய உதவியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து கடினமாக உழைத்து படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா அவர்களின் நோக்கமும், என்னுடைய எண்ணங்களும் ஒரே நேர்கோட்டில் பயணித்ததால், இப்படத்தை எந்தவித இடையூறுமின்றி இயக்க முடிந்தது.

எனக்கும் அவருக்கும் கலை மீது ஒரே விதமான பார்வை இருந்தாலும், அவருடைய பார்வையில் வணிகமும் இணைந்திருக்கும். இன்று வெளியாகி இருக்கும் ‘பார்டர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் புதிய தொழில்நுட்பத்தில் வெளியாகி இருப்பதற்கு அவரும், அவரது குழுவினரின் அயராத உழைப்புமே காரணமாகும்.

‘ஈரம்’, ‘குற்றம் 23’ படத்தின் வெற்றிக்குப் பிறகு எனக்கு கூடுதல் பொறுப்புணர்வு ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறேன். ‘குற்றம் 23’ பட வெளியீட்டுக்குப் பிறகு இயக்குனர் ஹரி என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டியது மறக்க முடியாதது.

வினியோகஸ்தர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். இதுபோன்ற பாராட்டுகள் தான் இயக்குனர்களை உற்சாகப்படுத்தும்.

எனக்கும், அருண் விஜய்க்கும் இடையே என்றைக்கும் ‘பார்டர்’ இருந்ததில்லை. அதனால் தான் அவரை வைத்து தொடர்ந்து படங்களை இயக்க முடிகிறது.

‘குற்றம் 23’ படத்திற்கு பிறகு நான்கு ஐந்து திரைக்கதைகளை எழுதி, பட தயாரிப்பு நிறுவனங்களின் மூலம் இயக்க திட்டமிட்டேன்.

ஆனால் பல காரணங்களால் அவை நடைபெறவில்லை. இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் காத்துக்கொண்டிருந்தேன். ஒரு நடிகரை வைத்து இயக்குனர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்கிறார் என்றால், அவர்கள் இருவருக்குமிடையே ஆழ்ந்த புரிதல் இருப்பதால் தான் சாத்தியமாகிறது.

அது போன்ற ஆழ்ந்த நட்பு, எனக்கும் அருண் விஜய்க்கும் இடையே இருக்கிறது. அவர் என்மீது வைத்திருந்த நம்பிக்கைதான் எனக்கு இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பும், கூடுதல் பொறுப்புணர்வையும் அளித்தது.

‘குற்றம் 23’ படத்திற்கும், ‘பார்டர்’ படத்திற்கும் என்ன வேறுபாடு என்றால், அதில் கதைக்குள் நடிகர் அருண் விஜய் இருந்தார். அந்த கதைக்கு தேவையான எமோஷனலான ஆக்ஷன் கலந்த நடிப்பை வழங்கினார்.

‘பார்டர்’ படத்தில் நடிகர் அருண் விஜய்யின் வித்தியாசமான கோணத்தை -அற்புதமான நடிப்பை பார்க்கலாம். இந்த ‘பார்டர்’ திரைப்படத்தை திரையரங்கில் கண்டுகளிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறோம். திரை அரங்கிற்கு வருகை தரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யும்.’ என்றார்.

நடிகர் அருண் விஜய் பேசுகையில்…,’

ரசிகர்களுக்கும், வருகை தந்திருக்கும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இதுபோன்ற ஒரு நன்னாளில் நான் நடித்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவது மகிழ்ச்சியாக இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று பரவல் அச்சத்திற்கு இடையே இப்படத்தின் படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘கைதி’ படத்தின் பின்னணி இசையை பார்த்தும், கேட்டும் வியப்படைந்தேன்.

இப்படத்தின் கதையைக் கேட்டபிறகு இயக்குனர், சாம் சிஎஸ் தான் இசையமைக்கிறார் என்று சொன்னதும் நான் உற்சாகமானேன்.

ஏனெனில் ‘பார்டர்’ படத்திற்கு பின்னணி இசைக்கு பெரும் பங்களிப்பு உண்டு. என்னுடைய கலை உலக பயணத்தில் நான் நம்பும் ஒரு சில இயக்குனர்களில் அறிவழகன் சாரும் ஒருவர்.

ஒரு நடிகருக்கு பக்கபலமாக இருப்பவர்கள் இயக்குனர்கள் தான். அந்த வகையில் இயக்குனர் அறிவழகன் எனக்கு பக்கபலமாகவும், நல்லதொரு புரிதலுடனும் இருக்கிறார். இப்படத்தின் டைட்டில் நல்ல விதமாக அமைந்து விட்டது.

இதற்குமுன் வேறு ஒரு தலைப்பை வைக்கலாமென திட்டமிட்டிருந்தோம். ஆனால் ‘பார்டர்’ என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக அமைந்தது, வெற்றிக்கான ஆசியாக நினைக்கிறேன்.

நடிப்பை பொருத்தவரை இப்படம் எனக்கு சவாலாக இருந்தது. திரைப்படங்கள் நன்றாக இருந்தால் திரையரங்கத்திற்கு ரசிகர்கள் வருகை தருவார்கள் என்பதை இந்த கொரோனா தொற்று காலகட்டத்திலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘பார்டர்’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் அவரது குழுவினர் மும்பைக்கும், புது டெல்லிக்கும் கடந்த நான்கு மாத காலமாக பறந்து பறந்து கடினமாக உழைத்ததை நான் நேரில் கண்டிருக்கிறேன்.

தற்போது ரசிகர்கள் அதனை பெரிதும் வரவேற்கிறார்கள். என்னுடைய நடிப்பும் அடுத்த கட்டத்திற்கு ‘பார்டர்’ படம் நகர்த்தியிருக்கிறது . இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

இறுதியில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா வருகை தந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் இடம் பெற்றதால் இந்த திரைப்படம் இந்தியா முழுமைக்குமான Pan- Indian Film ஆக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Producer Prabhu Thilak talks about new film Border

‘நீ சுடத்தான் வந்தியா’ கவர்ச்சி பாம் இலக்கியாவுடன் நடித்த ஹீரோவின் அனுபவங்கள்…

‘நீ சுடத்தான் வந்தியா’ கவர்ச்சி பாம் இலக்கியாவுடன் நடித்த ஹீரோவின் அனுபவங்கள்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nee Sudathan Vanthiyaடிக் டாக் புகழ் நடிகை இலக்கியா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘நீ சுடத்தான் வந்தியா’.

இப்படத்தை கே.துரைராஜ் இயக்கி இருக்கிறார் . ஆல்பின் மீடியா தயாரித்துள்ளது.

இப்படத்தில் கவர்ச்சி நடிகை இலக்கியாவுக்கு ஜோடியாக புதுமுக நடிகர் அருண்குமார் நடித்துள்ளார்.

கவர்ச்சி நடிகையுடன் நடித்த அனுபவம் எப்படி என்பதைப் பற்றி புதுமுக நடிகர் அருண்குமார்
பேசும் போது,…

” சினிமாவைப் பார்க்கும் போது சுலபமாக தெரியும். நடிகர்கள் நடிப்பதெல்லாம் இலகுவாகத் தோன்றும் .

ஆனால் நடித்துப் பார்த்தால்தான் நடிப்பு எவ்வளவு சிரமமானது என்று புரியும்.

நான் ‘நீ சுடத்தான் வந்தியா’ படத்தில் நடித்த போது அதை உணர்ந்தேன்.

எனக்கு சினிமா மீது காதல் உண்டு. நடிப்பின் மீதும் ஆர்வம் உண்டு. இருந்தாலும் ஒரு தயக்கம் இருந்தது. அதற்கு ஒரு பயிற்சி தேவை என்று நினைத்தேன்.

அதனால் நான் கூத்துப்பட்டறையில் மாஸ்டர் பொன்முடி அவர்களிடம் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு என்னைத் தயார் செய்து கொண்டு பிறகுதான் நடிக்க வந்தேன்.

இருந்தாலும் இப்படத்தில் நடிக்கும்போது எனக்கு முதலில் தயக்கம் இருந்தது. சில நடைமுறைத் தடைகள் இருந்தன. இது சில நாட்களில் சரியாகி விட்டது.

இயக்குநர் எனக்குத் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார் .அப்போதுதான் மாஸ்டரிடம் பெற்ற நடிப்புப் பயிற்சி எனக்கு பெரிய உதவியாக இருந்ததை உணர்ந்தேன்.

இந்த படத்தில் 5 பாடல்கள். அதில் நானும் இலக்கியாவும் தோன்றும் 3 பாடல்கள் இருக்கின்றன. இலக்கியா டிக் டாக் வீடியோக்களில் புகழ்பெற்றவர்.

அவருக்கும் இது முதல் படம்; எனக்கும் இது முதல் படம் ‘எனவே இருவருக்கும் சில தயக்கங்கள், மனத்தடைகள், இருந்தன அது போகப் போக சரியாகி விட்டது.

இது ஒரு காதல் ,சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்தபோது தயாரிப்புத்துறைப் பற்றி தெரிந்து கொண்டேன்.

எவ்வளவு சிரமங்களுக்கிடையில் ஒரு படம் உருவாகுகிறது என்பதை அறிந்து கொண்டேன்.

இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட் படம் என்று சொல்லலாம் . முழுநீள வணிகப் படத்துக்கு என்னென்ன தேவையோ அதற்கேற்ப படப்பிடிப்பு உபகரணங்களைக் கொண்டுதான் படப்பிடிப்பு நடத்தினார்கள்.

இதில் ரெட் ட்ராகன், ஆரி கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. பெரிய படங்களுக்கான படப்பிடிப்பு யூனிட் பயன்படுத்தப்பட்டது.

இந்தப் படம் நடிப்பில் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

அது போலவே ரசிகர்களுக்கும் திருப்தி தரும் என்று நம்புகிறேன்” நான் இப்போது அடுத்த படத்தின் வேலையை தொடங்கி விட்டேன் எனது அடுத்த படத்தின் 5 கதாநாயகிகள் அதில் ஒருவர் இலக்கியா என்பது இப்போதைய உறுதி என்று கூறுகிறார்

Nee Sudathan Vanthiya hero Arun Kumar sharing his working experience with Tik Tok fame Elakkiya

More Articles
Follows