தனுஷை நெருங்கும் விஜய்சேதுபதி

தனுஷை நெருங்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay sethupathi going to write script for new movieகோலிவுட்டில் பிரபலமாக உள்ள போதே பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.

மேலும் படங்களை தயாரித்து வந்த இவர் முதன்முறையாக கதை, திரைக்கதை எழுதி பவர் பாண்டி படத்தை இயக்கினார்.

இவரது வழியில் தற்போது விஜய்சேதுபதி தொடர்ந்து வருகிறார்.

இவரும் விரைவில் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில், தனது அடுத்த கட்டமாக ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதவிருக்கிறாராம்.

இப்படத்தை பிஜூ விஸ்வநாத் இயக்க, இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் விஜய்சேதுபதி.

இதற்கு முன்பே, ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்திற்காக இயக்குனர் பிஜூ விஸ்வநாத்துடன் இவர் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

விரைவில் தனுஷைப் போல விஜய்சேதுபதியும் இயக்குனர் ஆவார் என்றே எதிர்பார்க்கலாம்.

இவையில்லாமல், ‘புரியாத புதிர்’, ‘மாமனிதன்’, ‘சீதக்காதி’, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, ’96’ , ‘அநீதி கண்கள்’, ‘கருப்பன்’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட படங்கள் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிறது என்பது கவனிக்கத்தக்கது.

Vijay Sethupathi going to write script for new movie

100 பேருக்கு தங்க செயினை சொந்த செலவில் வழங்கிய விஜய்சேதுபதி

100 பேருக்கு தங்க செயினை சொந்த செலவில் வழங்கிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijaysethupathiஉலகாயுதா சார்பில் தமிழ்த் தேசிய சலனப்படம் 100வது ஆண்டை ஒட்டி 100 மூத்த திரைப்பட தொழிலாளர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

இதற்கான மொத்த செலவையும் நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக் கொண்டார். மொத்தம் 100 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

அதில் முதல் பதக்கத்தை நடிகர் விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமிக்கு விஜய் சேதுபதியின் தாயார் வழங்கி கவுரவப்படுத்தினார்.

33 துறைகளை சார்ந்த 99 தொழிலாளர்களுக்கு தங்கப் பதக்கங்களை தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வழங்கினர்.

ஆயிரத்தில் ஒருவன் உட்பட 50 படங்களுக்கு வசனம் எழுதிய வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம் விருது வழங்க மேடைக்கு அழைக்கப்பட்டார். விருது வழங்க வந்த அவருக்கும் ஒரு விருதை வழங்கி சிறப்பித்தனர் விழாக்குழுவினர்.

விருது வாங்கிய பின் ஆர்.கே.சண்முகம் பேசும்போது, “எனக்கு வயது 87, மனதளவில் எனக்கு வயது வெறும் 27 தான். அதனால் இங்குள்ளவர்களிலேயே நான் தான் இளைஞன். தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் எதுவும் இப்போது வருவதில்லை.

ஆனால் அதில் ஜனநாதன் விதிவிலக்கு. அவர் ஒரு புரட்சி இயக்குனர். அவரின் பேராண்மை படத்தை நான் ஐந்து முறை பார்த்து ரசித்திருக்கிறேன், நல்ல படங்கள் நிறைய வர வேண்டும்” என்றார்.

பணம் இருப்பனிடம் குணம் இருக்காது, குணம் இருப்பவனிடம் பணம் இருக்காது. இந்த இரண்டும் விஜய் சேதுபதியிடம் இருக்கிறது.

ஜனநாதனிடம் குணம் இருக்கிறது, ஆனால் பணம் இல்லை.
பணம் சேர்க்கும் நோக்கமும் இல்லை.

ஜாக்கி சான், அர்னால்டு, ரஜினி, கமல், விஜய், அஜித் பலரும் கலந்து கொண்ட விழாக்கள் சென்னையில் நடந்துள்ளன. அதை விட இந்த விழாவை முக்கியமான விழாவாக நான் கருதுகிறேன். இந்த அரங்கம் நிறையவில்லை என்றாலும் இங்கு வந்துள்ள அனைவரின் மனமும் நிறைந்துள்ளது.

ஒரு சவரன் தங்கத்தில் பெரிதாக என்ன வாங்கி விட முடியும் என நினைக்கலாம். அது இத்தனை காலம் சினிமாவில் உழைத்தவர்களுக்கான அங்கீகாரம் என்றார் இயக்குனர் அமீர்.

100 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கும் மொத்த செலவையும் ஏற்றுக் கொண்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசும்போது, “நான் பெரிதாக எதையும் கொடுத்து விடவில்லை.

சினிமா எனக்கு கொடுத்ததில் இருந்து கொஞ்சம் எடுத்து, சினிமாவிற்கு கொடுக்கிறேன். சினிமா தான் என்னை அங்கீகரித்தது. சினிமா தான் எனக்கு எல்லாம். ஒரு ஹீரோவாக நான் நடித்த முதல் படத்திலேயே எனக்கு சினிமா தொழிலாளர்கள் கொடுத்த மரியாதை என்னை ரொம்பவே நெகிழ வைத்து விட்டது.

என்னை கவுரவித்த என் இயக்குனர் ஜனநாதனுக்கு நான் தங்கம் கொடுக்கிறேன். இதை கூட அவர் உபயோகப்படுத்த மாட்டார். வேறு யாருக்காவது தான் இந்த தங்கமும் பயன்படும்.

எல்லா கலைஞர்களும் சந்தித்து கொண்ட ஒரு விழாவாக தான் இதை நான் பார்க்கிறேன். இனி வரும் ஆண்டுகளிலும் இது தொடர வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்றார்.

விழாவில் மூத்த பத்திரிக்கையாளர்கள் தேவி மணி, கலைப்பூங்கா ராவணன், மாலி, நெல்லை பாரதி ஆகியோரும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அப்போது பேசிய நெல்லை பாரதி, “ஏற்பது இகழ்ச்சி என்பர், ஆனால் ஏற்பது மகிழ்ச்சி என உணர்கிறேன்” என்றார்.

70 ஆண்டுகளை சினிமாவில் நான் சினிமாவில் நிறைவு செய்திருக்கிறேன் என பெருமிதத்துடன் கூறினார் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன். எடிட்டர் மோகன் தன்னுடைய ஆரம்ப கால சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

விழாவில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், எடிட்டர் லெனின், வினியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, நடிகை கஸ்தூரி, இயக்குனர் விக்ரமன், இயக்குனர் சீனு ராமசாமி, சுசீந்திரன், இயக்குனர் சேரன், தயாரிப்பாளர் தனஞ்செயன், ஒளிப்பதிவாளர் கண்ணன், கன்னட திரையுலகின் சார்பில் கிரிஷ் துவாரகீஷ், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இயக்குனர் பேரரசு, நடிகை ரோகிணி, தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன், நடிகர் ராஜேஷ், இயக்குனர் வி.சேகர், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், நடிகர் அருள்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

பாகுபலி2 படத்தில் நடித்தவர்களின் சம்பளம் முழு விவரம்

பாகுபலி2 படத்தில் நடித்தவர்களின் சம்பளம் முழு விவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baahubali 2 movie stillsராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி2 படம் இந்திய பாக்ஸ் ஆபிஸை மிரட்டி வருகிறது.
இப்படம் பல சாதனைகளை படைத்து, ரூ. 1000 கோடி கிளப்பில் விரைவில் இணையவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் பணியாற்றிய நடிகர்களின் சம்பள விவரம் கிடைத்துள்ளது.
அவை பின்வருமாறு….
பிரபாஸ் ரூ. 50 கோடி
ராணா டக்குபதி ரூ. 25 கோடி
அனுஷ்கா ரூ. 14 கோடி
தமன்னா ரூ. 9 கோடி
சத்யராஜ் ரூ. 4 கோடி
ரம்யா கிருஷ்ணன் ரூ. 3 கோடி
நாசர் ரூ. 1.5 கோடி
இவர்களின் சம்பளமே இத்தனை கோடிகள் என்றால் படத்தின் கேப்டன் டைரக்டர் ராஜமௌலியின் சம்பளம் எவ்வளவு இருந்திருக்கும்? என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

‘படம் நல்லாயிருந்தா உடனே சொல்லுங்க… நல்லாயில்லேன்னா அப்புறம் சொல்லுங்க…’ உதயநிதி

‘படம் நல்லாயிருந்தா உடனே சொல்லுங்க… நல்லாயில்லேன்னா அப்புறம் சொல்லுங்க…’ உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Saravanan Irukka Bayamaen Press Meet Photos (7)எழில் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் ‘சரவணன் இருக்க பயமேன்’.

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ள இப்படத்தில் ரெஜினா, சூரி, சிருஷ்டி டாங்கே, லிவிஸ்டன், ரவிமரியா, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வருகிற மே 12ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

விழாவில் உதயநிதி பேசும்போது…

“’எம்புட்டு இருக்குது ஆசை’ பாட்டை பத்தி எல்லோரும் பேசுனாங்க. அந்த பாட்டு அவ்ளோ பெரிய ஹிட்டாக ரெஜினாதான் காரணம்.

‘கெளரவ் படம்’, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படங்களை தொடர்ந்து 3வது ஆக நான் ஒப்பந்தமான படம்தான் இது.

ஆனால் இந்த படம் முதலில் வெளியாகவுள்ளது. அதற்கு காரணம் இயக்குனர் எழில்.

இந்த படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் செய்யுங்கள் எழுதுங்கள். படம் நன்றாக இல்லை என்றால் 3 நாட்கள் கழித்து எழுதுங்கள்” என்று பேசினார்.

Udhayanithi request regarding movie reviews at Saravanan Irukka Bayamaen Press meet

Saravanan Irukka Bayamaen Press Meet Photos (21)

விவேகம் படத்தில் அஜித் பேசும் பன்ச் டயலாக் வெளியானது

விவேகம் படத்தில் அஜித் பேசும் பன்ச் டயலாக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vivegamகடந்த மே 1ஆம் தேதி அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அன்றைய தினம் அவர் நடித்துள்ள விவேகம் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு பதிலாக செகண்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியானது.

வருகிற மே 18ஆம் தேதி இதன் டீசர் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் விவேகம் படத்தில் அஜித் பேசும் ஒரு பன்ச் டயலாக் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த டயலாக் டீசரில் இடம் பெறும் என கூறப்படுகிறது.
(அட பன்ச் டயலாக்க சொல்லுங்கப்பா… இது உங்க மைண்ட் வாய்ஸ்தானே)

இதான் அந்த பன்ச் டயலாக்…

என்னை தோக்கடிக்கனுமுன்னு எல்லாரும் நினைக்கிறாங்க. நான் தோக்கனுமா இல்லையான்னு நான்தான் முடிவு பண்ணனும்.

Ajith Punch dialogue leaked out from his Vivegam movie

விஜய்-அஜித்-சூர்யாவை முந்தி ரஜினிக்கு அடுத்த இடத்தில் பிரபாஸ்

விஜய்-அஜித்-சூர்யாவை முந்தி ரஜினிக்கு அடுத்த இடத்தில் பிரபாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhasராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 படம் அண்மையில் வெளியாகி இந்தியளவில் பெரும் வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

இந்த பாகத்தின் மொத்த செலவு ரூ. 300 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது.

இதில் ஹீரோவாக இரு வேடங்களில் நடித்த பிரபாஸ்க்கு சம்பளம் மட்டும் ரூ. 50 கோடி கொடுக்கப்பட்டதாம்.

தென்னிந்திய சினிமாவில் ரஜினியை தவிர வேறு எந்தவொரு நடிகருக்கும் இத்தனை கோடிகள் சம்பளமாக வழங்கப்படவில்லை.

அஜித், விஜய், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களின் சம்பளம் கூட இன்னும் இந்த உயரத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Baahubali hero Prabhas in next level to Rajinikanth

More Articles
Follows