தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பரதன்-விஜய் கூட்டணியில் உருவாகி வரும் பைரவா படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களை டிசம்பரில் வெளியிட இருப்பதாக தெரிகிறது.
ஆனால், டிசம்பர் முதல் வாரத்தில் பாடல்களை மட்டும் முதலில் வெளியிட்டுவிட்டு பின்பு, சில நாட்கள் கழித்து அதாவது கிறிஸ்துமஸ் தினத்தில் ட்ரைலரை வெளியிட ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இது உறுதியாகும் பட்சத்தில், டிசம்பரில் இரண்டு விருந்தை பைரவா தனித்தனியாக தருவார் என எதிர்பார்க்கலாம்.