அதிமுக-பாஜகவுக்கு எதிராக தல-தளபதியை திருப்பி விட்ட ரசிகர்கள்..; குஷியில் திமுக-வினர்

அதிமுக-பாஜகவுக்கு எதிராக தல-தளபதியை திருப்பி விட்ட ரசிகர்கள்..; குஷியில் திமுக-வினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி & கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இது கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் வாக்காளர்களுக்கான புதிய அறிவுரைகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர்-நடிகைகள் வாக்களித்துள்ள இடம் குறித்த தகவல்களை முன்பே பார்த்தோம்..

நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் அதிகாலையிலேயே 7 மணிக்கு வாக்கை பதிவு செய்தனர்.

அதன்படி…

நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் – ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சென்னை

நடிகர் கமல்ஹாசன் மற்றும் குடும்பத்தினர் – ஆழ்வார்பேட்டை சென்னை

நடிகர் விஜய் – நீலாங்கரை, சென்னை

நடிகர் அஜித், திருவான்மியூர் சென்னை

இதில் கருப்பு சிவப்பு கலர் சைக்கிள் விஜய் ஓட்டி வந்தார்.

கருப்பு சிவப்பு கலர் (மாஸ்க்) முக்கவசத்தை அணிந்து வந்தார் அஜித்.

இதனையடுத்து இந்த இரு கலரானது திமுக-வின் அடையாளம் எனவும் இவர்கள் இருவரும் திமுகவின் ஆதரவாளர்கள் என இவர்களது ரசிகர்களே ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

அதாவது மத்தியில் ஆளும் பாஜக-விற்கு எதிராகவும் மாநிலத்தில் ஆளும் அதிமுகவிற்கு எதிராகவும் விஜய் அஜித் செயல்படுவதாக மீம்ஸ்களை உருவாக்கினர்.

கருப்பு சிவப்பு கலர் திமுகவின் அடையாளம் என்பதால் அந்த கட்சி தொண்டர்களும் தலைமையும் தல தளபதி ரசிகர்களின் ஆதரவு கிடைத்து விட்டதாக குஷியில் உள்ளனர்.

Vijay and Ajith were DMK Supporters in Election 2021

ஊருக்கு உபதேசம் செய்வோம்.. வாக்களிக்க வர மாட்டோம்.; ஓட்டு போடாத தனுஷ் விஷால் ஜிவி பிரகாஷ்-க்கள் லிஸ்ட் இதோ

ஊருக்கு உபதேசம் செய்வோம்.. வாக்களிக்க வர மாட்டோம்.; ஓட்டு போடாத தனுஷ் விஷால் ஜிவி பிரகாஷ்-க்கள் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஊருக்கு உபதேசம் செய்வோம்.. வாக்களிக்க வர மாட்டோம்.; ஓட்டு போடாத தனுஷ் விஷால் ஜிவி பிரகாஷ்-க்கள் லிஸ்ட் இதோ

இன்று ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி & கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது.

இது கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் வாக்காளர்களுக்கான புதிய அறிவுரைகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வாக்களிக்க வந்தனர்.

இதோ அவர்களது பெயர்கள்…

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சிவக்குமார், சரத்குமார், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஆர்யா, சிம்பு, நாசர், பிரபு, விக்ரம் பிரபு, விக்ரம், சத்யராஜ், சிபிராஜ், விஜய் ஆண்டனி, விமல், ஜெயம் ரவி, அர்ஜூன், டி.ராஜேந்தர், ஆரி, அமீர், ஆனந்த்ராஜ், உதயநிதி ஸ்டாலின், ரகுமான், நகுல், அருண் விஜய், விஜயகுமார், ஜீவா, விஷ்ணு விஷால், பாபி சிம்ஹா, ஆர்.ஜே.பாலாஜி, சூரி, உதயா, அருள்நிதி, முண்டாசுப்பட்டி ராம்தாஸ், சந்தானம், பிரசன்னா, சசிகுமார், எஸ்.வி.சேகர், கருணாகரன், சித்தார்த், ஹரீஷ் கல்யாண், யோகிபாபு, அருண் பாண்டியன், வசந்த் ரவி, வெற்றி, செந்தில், ஆதவ் கண்ணதாசன், சாம்ஸ், கொட்டாச்சி, சின்னி ஜெயந்த், கிங்காங்…

நடிகைகளில் த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், நிக்கி கல்ரானி, ஆண்ட்ரியா, வரலட்சுமி சரத்குமார், ரெஜினா கேஸண்ட்ரா, ரம்யா பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சரண்யா பொன்வண்ணன், ஷாலினி அஜீத், விஜயலட்சுமி, கனி, அஞ்சனா ரங்கன், தேவயானி, திவ்யதர்ஷினி, ரேஷ்மி மேனன், கீர்த்தி சுரேஷ், மகேஸ்வரி, மதுமிதா, ரேகா, விஜி சந்திரசேகர், குஷ்பூ, நமீதா, ஸ்மிருதி வெங்கட், ஸ்ருதிஹாசன், அக்சரா ஹாசன், சுகன்யா, தன்யா ரவிச்சந்திரன், சுவாசிகா, லதா ராவ், ஷில்பா மேரி தெரசா, கற்பகம், சிநேகா, சாந்தினி தமிழரசன் மற்றும் பலரும் வாக்களித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் ஹெச்.முரளி, சித்ரா லட்சுமணன், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் ராஜேஷ், உஷா ராஜேந்தர், சிங்காரவேலன், சுரேஷ் காமாட்சி, ஜி.டில்லி பாபு, கமீலா நாசர், பாத்திமா விஜய் ஆண்டனி, ஞானவேல்ராஜா..

இயக்குநர்கள் ஷங்கர், சேரன், சீனு ராமசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், மோகன்ராஜா, லோகேஷ் கனகராஜ், சுசீந்திரன், சிம்பு தேவன், கெளரவ் நாராயணன்..

இசையமைப்பாளர்கள் தாஜ் நூர், வித்யாசாகர், சாம் சி.எஸ்., டி.இமான், ஜிப்ரான்,

பாடலாசிரியர் வைரமுத்து, பாடகர் வேல்முருகன், கவிஞர் சினேகன், பின்னணிப் பாடகி மாலதி லஷ்மண்.

*ஆனால் சில பிரபலங்கள் வரவில்லை. வராதவர்களின் தகவல்களை முடிந்தவரை பகிர்ந்துள்ளோம்..*

தனுஷ், விஷால், ஜிவி பிரகாஷ், கார்த்திக், விஜயகாந்த், சமுத்திரக்கனி, இளையராஜா, யுவன், ஏஆர். ரஹ்மான், பிரபுதேவா, மீனா உள்ளிட்ட பலர்..

சினிமாவில் மட்டும் தேசப்பற்று மற்றும் வாக்குரிமை பேசும் இவர்கள் வாக்களிக்காமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Dhanush Vishal Gv Prakash Non voted list of Election 2021

செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை சிவக்குமார் பாணியில் பிடுங்கிய அஜித்.; அப்புறம் என்னாச்சு?

செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை சிவக்குமார் பாணியில் பிடுங்கிய அஜித்.; அப்புறம் என்னாச்சு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி & கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

திருவான்மியூரில் நடிகர் அஜித் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

அஜித் வாக்களிக்க வந்தபோது அவருடன் செல்ஃபி எடுக்கக் ரசிகர்கள் கூடினார்கள்.

சிலரை அஜித் கோபமாக முறைக்கவே ரசிகர்கள் திரும்பி சென்றனர்.

இன்னொருபுறம் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க வந்த போது கோவமாக அவருடைய போனை பறித்துவிட்டார் அஜித்.

இதனால் பொதுமக்கள் & ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் காவல்துறையினர் வந்து ரசிகர்களை வெளியேற்றினார்கள்.

பின்னர் தனது பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை எடுத்து அந்த ரசிகரை அழைத்துக் கொடுத்துவிட்டார் அஜித்.

இதுபோன்ற இடங்களில் செல்ஃபி எடுக்க வேண்டாம் என அஜித் அட்வைஸ் செய்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சிவக்குமாருடன் செல்ஃபி எடுக்க ஒரு ரசிகர் வந்தார். அப்போது கோவப்பட்ட சிவக்குமார் அதனை தட்டிவிட்டார்.

இதனால் செல்போன் உடைந்துவிட்டது. இந்த செய்தி பெரும் சர்ச்சையானது.

இதனையடுத்து அந்த ரசிகருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்தார் சிவகுமார் என்பது வேறுக்கதை.

Actor Ajith and Fans Selfie issue at Election 2021

தேர்தல் 2021 : ஓட்டு போட சைக்கிள் ஓட்டி வந்த நடிகர் விஜய்..; ஓ.. இதான் காரணமா?

தேர்தல் 2021 : ஓட்டு போட சைக்கிள் ஓட்டி வந்த நடிகர் விஜய்..; ஓ.. இதான் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி & கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய் சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் வந்தார்.

அவர் வந்ததை கண்டதும் அவரது ரசிகர்கள் அங்கு கூடினர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விஜய்யை வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் சென்றனர்.

பின்னர் தனது வாக்கை செலுத்தினார் தளபதி விஜய்.

கருப்பு சிவப்பு கலர் சைக்கிளில் விஜய் வந்ததால் அவர் ஒரு கட்சிக்கு ஆதரவாக வந்துவிட்டதாக சிலர் புரளியை கிளப்பினர்.

விஜய் ஏன் சைக்கிளில் வந்தார்? என்பதை அவரது பிஆர்ஓ தரப்பில் விசாரித்தபோது…

“வாக்குச்சாவடி விஜய் வீட்டிற்கு அருகில் உள்ளதால் மற்றும் கார் அங்குள்ள சாலையில் செல்ல முடியாது என்பதால் நடிகர் விஜய் சைக்கிளில் வந்தார்… வேறு எந்த காரணமும் இல்லை..” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Why Actor Vijay came in Cycling for Casting Vote in Election 2021

தேர்தல் 2021 : கடமை தவறாத கதாநாயகர்கள்..; ரஜினி கமல் விஜய் அஜித் சூர்யா வாக்களித்தனர்

தேர்தல் 2021 : கடமை தவறாத கதாநாயகர்கள்..; ரஜினி கமல் விஜய் அஜித் சூர்யா வாக்களித்தனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி & கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இது கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் வாக்காளர்களுக்கான புதிய அறிவுரைகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

சானிடைசர் போட்டு கை கழுவி மாஸ்க் போட்டு வலது கைக்கு மட்டும் க்ளவுஸ் போட்டு வாக்களிக்க தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர்-நடிகைகள் வாக்களித்துள்ள இடம் குறித்த தகவல்களை இங்கே பகிர்கிறோம்.

நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் அதிகாலையிலேயே 7 மணிக்கு வாக்கை பதிவு செய்தனர்.

அதன்படி…

நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் – ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சென்னை

நடிகர் கமல்ஹாசன் மற்றும் குடும்பத்தினர் – ஆழ்வார்பேட்டை சென்னை

நடிகர் விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர்- சாலிகிராமம், சென்னை

நடிகர் விஜய் – நீலாங்கரை, சென்னை

நடிகர் அஜித், திருவான்மியூர் சென்னை

நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்தி – ஹிந்தி பிரச்சார சபா தியாகராய நகர், சென்னை

நடிகர் உதயநிதி மற்றும் கிருத்திகா உதயநிதி – எஸ்ஐடி கல்லூரி, தேனாம்பேட்டை, சென்னை

நடிகர் விஜய் சேதுபதி -கோடம்பாக்கம் கார்ப்பரேஷன் காலனி, சென்னை

நடிகை குஷ்பு – பட்டினம்பாக்கம், சென்னை

நடிகர் தனுஷ் -டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை

நடிகர் சித்தார்த் -டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை

நடிகை திரிஷா-டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை

நடிகர் சத்யராஜ் மற்றும் குடும்பத்தினர்- நுங்கம்பாக்கம் சென்னை

நடிகர் ஸ்ரீகாந்த்- காவேரி பள்ளி சாலிகிராமம், சென்னை

நடிகர் பிரபு மற்றும் விக்ரம் பிரபு குடும்பத்தினர் – தியாகராய நகர், சென்னை

நடிகர் டி.ராஜேந்தர் மற்றும் குடும்பத்தினர் – தியாகராய நகர் சென்னை

நடிகர் விஜய் ஆண்டனி – சாலிகிராமம், சென்னை

நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கம்

நடிகை சினேகா & நடிகை மதுமிதா

மம்மூட்டி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கேரளாவில் வாக்களித்துள்ளனர்.

Kollywood Top actors casts their votes at Chennai

திருச்சி ,திருவண்ணாமலை, கரூர், கொளத்தூர் ஆகிய 7 தொகுதிகளில் தேர்தல் ரத்து..? சத்தியபிரத சாகு விளக்கம்

திருச்சி ,திருவண்ணாமலை, கரூர், கொளத்தூர் ஆகிய 7 தொகுதிகளில் தேர்தல் ரத்து..? சத்தியபிரத சாகு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sathyaprabha sahoo (1)நாளை ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி & கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இது கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் வாக்காளர்களுக்கான புதிய அறிவுரைகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

சானிடைசர் போட்டு கை கழுவி மாஸ்க் போட்டு வலது கைக்கு மட்டும் க்ளவுஸ் போட்டு வாக்களிக்க தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாளை காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்குகிறது. இரவு 7:00 மணிக்கு முடிவடைகிறது.

எனவே இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையில் தேர்தல் செலவின பொறுப்பாளர்கள் சோதனையின் போது பணம் மற்றும் இலவச பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சி மேற்கு, திருவண்ணாமலை, கரூர், கொளத்தூர் உள்ளிட்ட 7 தொகுதிகளில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் பரவியது.

இந்த நிலையில் அந்த தகவலில் உண்மையில்லை எனவும் திட்டமிட்டபடி நாளை 234 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடத்துவற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.

பதற்றமான மிகவும் பதற்றமான தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் காலை 7 மணியிலிருந்து 6 மணி வரையிலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் (ஒரு மணி நேரம்) வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குசாவடிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையர் சத்தியபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.

TN Election Commission head clarifies on canceling election in 7 consituencies

More Articles
Follows