இன்று ரிலீஸாகும் *போத* படத்தில் ஆண் விபச்சாரனாக விக்கி

இன்று ரிலீஸாகும் *போத* படத்தில் ஆண் விபச்சாரனாக விக்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vicky starring Bodha movie is about Gigolos releasing today“போத” படத்தின் வாயிலாக கதாநாயகராக அடியெடுத்து வைத்துள்ளார் ஆர்.எஸ்.விக்னேஷ்வரன் எனும் விக்கி.

சின்ன வயது முதலே எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை… எனும் விக்கிக்கு., அதிலும் கும்பகோணம் அரசு கல்லூரியில் பி.டெக் ஐ.டி படிக்கும் போது சினிமாவில் நடிக்க ரொம்பவும் ஆசை. காரணம் .அவரது தந்தை ராஜசேகர்.

பல வருடங்களுக்கு முன் ‘எத்தனை மனிதர்கள்’ உள்ளிட்ட ஒரு சில டி.வி. சீரியல்களில் தலை காட்டிய என் தந்தை குடும்ப பாரம் காரணமாக சினிமா நடிகனாக ஜெயிக்க முடியவில்லை.

அதனால் எனது சின்ன வயதிலேயே அவரது நிராசை … எனது ஆசை மற்றும் லட்சியமானது.. என்கிறார் விக்கி!
அதன் விளைவு… சென்னைக்கு காலேஜ் ப்ராஜக்ட் ஒர்க்கிற்காக வந்த விக்கி ., பெசன்ட் நகரில் உள்ள “ஆக்டர்ஸ் ஸ்டுடியோ ” எனும் பிரைவேட் ஆக்டிங் ஸ்கூலில் நடிப்புக் கற்றபடி நடிக்க வாய்ப்பு தேடி இருக்கிறார்.

“வடகறி”, “அச்சமில்லை அச்சமில்லை”, “நிலா ” உள்ளிட்ட திரைப்படங்களில் சின்னதும் பெரிதுமான ரோல்களில் நடித்த படி தான் நடிப்பு கற்றுக் கொண்ட, பெசன்ட் நகர், “ஆக்டர்ஸ் ஸ்டுடியோ ” ஆக்டிங் ஸ்கூலிலேயே மற்றவர்களுக்கு நடிப்பு கற்றுத் தந்தபடி, கோடம்பாக்கத்தையே வலம் வந்தவருக்கு நண்பர் கணேஷ் மூலம் சுரேஷ் ஜி இயக்கத்தில் “போத” பட வாய்ப்பு கிட்டியிருக்கிறது .

இதில் “ஆண் பாலியல் தொழிலாளி ” வேடமாமாமே ? எனக் கேட்டால் ., “அது சும்மா ஒன்றிரண்டு சீன்களில் மட்டுமே சார் ., மொத்த ஸ்க்ரிப்டிலும், சரி தப்பு எதுன்னு தெரியாமல் பொய், திருட்டு… என பணத்தை சேஸ் பண்ணிப் போறது தான் என் கேரக்டர்.

படத்தில் ஹீரோயினே இல்லன்னாலும் காமெடியாக கதை சொல்லப்பட்டிருக்கும் “போத” படத்தை பேமிலியோட போய் பார்க்கலாம் சார் “என கேரண்டி சொல்கிறார் விக்கி. அதையும் பார்ப்போமே!

Vicky starring Bodha movie is about Gigolos releasing today

நியூஸ் சேனல்களை நான் பார்ப்பதில்லை; *பேய்பசி* விழாவில் யுவன் பேச்சு

நியூஸ் சேனல்களை நான் பார்ப்பதில்லை; *பேய்பசி* விழாவில் யுவன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I wont like to watch News Channels says Yuvan at Pei Pasi audio launchரைஸ்ஈஸ்ட் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சாகர் தயாரித்திருக்கும் திரைப்படம் “பேய் பசி” இதில் யுவனின் சகோதரர் ஹரிகிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இவருடன் கருணாகரன்,டேனியல் பாலாஜி, அம்ருதா, ராமசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் திரையுல பிரபலங்கள் பலரும் பங்கேற்று பேசினர்.

இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் படம் குறித்து கூறுகையில், “முழுக்க டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் நடக்கும் முதல் படம் இது தான் என்று நினைக்கிறேன். இந்த படத்தின் முதுகெலும்பு யுவன் சங்கர் ராஜா தான். பின்னணி இசையை மிகச்சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தனர். கதையை கூட கேட்கவில்லை. காஸ்ட்யூம் இந்த படத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த படத்தில் லைவ் சவுண்ட் முயற்சி செய்திருக்கிறோம். வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

இப்பட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில…

“ஹரிக்கு சின்ன வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம். எங்கள் வீட்டில் கோபித்து கொண்டு ஆஸ்திரேலியா கிளம்பி விட்டான். பின் நானே தயாரிக்க முடிவு செய்தேன்.

அதன் பின் இலங்கை சென்று விட்டான். தற்போது இந்த படத்தில் நடித்து விட்டான். நான் தான் இசையமைக்க வேண்டும் என்று சொன்னான். அன்புக்காக இசையமைத்திருக்கிறேன்.

நான் இப்போது எல்லாம் நியூஸ் சேனல்களை பார்ப்பதில்லை. எங்கு பார்த்தாலும் நெகட்டிவ் நியூஸ்தான் அதிகமாக உள்ளது.

எனவே அதை தாண்டி அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டியது இந்த காலகட்டத்தில் அவசியமாகி விட்டது. காசு, பணம் தாண்டி அன்புக்காக எல்லோரும் முன்வர வேண்டும்.” என்று பேசினார்.

தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் பேசுகையில், “என் தந்தை 90 களில் சினிமா தயாரிப்பதை நிறுத்தி விட்டார். அதை நான் மீண்டும் கையில் எடுத்திருப்பது மகிழ்ச்சி.

யுவனை மிகவும் தொந்தரவு செய்து நல்ல நல்ல பாடல்களை கேட்டு வாங்கியிருக்கிறோம். அவரும் இது என்னோட படம் என உரிமை எடுத்து எங்களுக்காக இசையமைத்து கொடுத்தார்.” என்றார்.

இயக்குநர் நலன் குமாரசாமி பேசும் போது, “இயக்குநர் சீனுவும், நானும் நண்பர்கள். சினிமாவில் எனக்கு நல்ல நண்பர்கள் அறிமுகமாக காரணம் சீனு தான்.

நல்ல சினிமா அறிவு உடையவர். சூது கவ்வும் படத்தில் பல விஷயங்கள் ஸ்ரீநிவாஸ் சொன்னது தான். இந்த படத்தில் பல புதுமையான, நல்ல விஷயங்களை எதிர்ப்பார்க்கிறேன்.” என்றார்.

நடிகர் ஆர்யா பேசுகையில், “ஹரி பாஸ்கர் என்னுடைய ஜிம் மேட். யுவன் இசையில் நாயகனாக அறிமுகமாவது ஒரு பெரிய பாக்கியம். இந்த படத்தை பற்றி தயாரிப்பாளர்கள் நிறைய சொல்லியிருக்கிறார்கள். புது விஷயங்களை கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இந்த படமும் ஏற்றுக் கொள்ளப்படும்.” என்றார்.

ஸ்ரீகாந்த் தேவா பேசும் போது, “நானும் ஹரியும் இதே சத்யம் தியேட்டரில் நிறைய படங்கள் பார்த்திருக்கிறோம். அப்போது என்னுடைய படமும் இதே தியேட்டர்ல வரணும்னு ஆசையாக சொல்வான் ஹரி. தற்போது அதே இடத்தில் இசை வெளியீடு நடக்கிறது. ஹரி சாதிப்பான்.” என்றார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும் போது..

“சூது கவ்வும் படத்துக்கு இசையமைத்த காலத்தில் இருந்தே ஸ்ரீநிவாஸ் கவிநயம் எனக்கு அறிமுகம். அவருடைய குறும்படம் ஒன்றை பார்த்தேன். நல்ல திறமையாளர், அவர் படம் இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அவர் இயக்கிய படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி.

என்னுடைய முதல் படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா சார் தான் ரிலீஸ் செய்தார். இன்று அவர் படத்தின் இசை வெளியீட்டில் அவருடன் மேடையில் அமந்திருப்பது எனக்கு பெருமை.” என்றார்.

ஹீரோ ஹரி பாஸ்கர் பேசுகையில், “நடிக்க வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை. என்னை இயக்குநருக்கு அறிமுகப்படுத்தி வைத்த பூர்ணிமாவுக்கு நன்றி. நான் உட்பட 4 பேர் புதுமுகங்களாக அறிமுகம் ஆகிறோம்.

எங்களை வைத்து லைவ் சவுண்டில் இந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம். மிகப்பெரிய சாதனை அது.” என்றார்.

I wont like to watch News Channels says Yuvan at Pei Pasi audio launch

pei pasi

#Breaking ரெட் லைட் ஏரியா வேணும்; காட்டுப்பய சார் இந்த காளி இயக்குனர் பேச்சு

#Breaking ரெட் லைட் ஏரியா வேணும்; காட்டுப்பய சார் இந்த காளி இயக்குனர் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yourekaஊடகவாதியான யுரேகா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “காட்டுப்பய சார் இந்த காளி”.

ஜெய்வந்த் தயாரித்து நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக அகிரா நடித்துள்ளார்.

இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசினார் யுரேகா.

யுரேகா பேசியதாவது…

வட மாநில இளைஞர்கள் தமிழ்நாட்டை ஆக்ரமித்துள்ளனர்.

தொடர்ச்சியாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன.

எனவே சென்னையில் சிவப்பு விளக்கு பகுதி வேண்டும். ரெட் லைட் ஏரியா வந்தால் தான் இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்கள் குறையும்.

சிவப்பு விளக்கு பகுதி தமிழர்களுக்காக அல்ல. இங்கே வாழும் வடமாநில இளைஞர்களுக்காக கேட்கிறேன்..” எனப் பேசினார்.

ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பேன்.. : கார்த்தி கறார்

ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பேன்.. : கார்த்தி கறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sri reddy and karthiசினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை தினம் தினம் கூறி வருகிறார் ஸ்ரீரெட்டி.

இந்த ஸ்ரீரெட்டி விவகாரம் தொடர்பாக நடிகர் கார்த்தி
கூறியதாவது

“ ஸ்ரீரெட்டி எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டி வருகிறார்.

அவரிடம் ஆதாரம் இருந்தால் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருப்பார்.

ஆதாரமில்லாமல் கூறும் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்கமுடியாது.

நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராவது அவர் மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், “குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளது பெருமைக்குரியது” என்றும்
தெரிவித்துள்ளார்.

மீண்டும் *கஜினிகாந்த்* கூட்டணியில் இணையும் ஆர்யா

மீண்டும் *கஜினிகாந்த்* கூட்டணியில் இணையும் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya and santhosh pஆர்யா, சயிஷா சைகல், கருணாகரன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கஜினிகாந்த்’.

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

‘ஹர ஹர மஹாதேவகி’ மற்றும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கும் ‘யு’ சான்றிதழ் படம் ‘கஜினிகாந்த்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் சந்தோஷ் – ஆர்யா இணைந்து படம் பண்ண முடிவு செய்திருக்கிறார்கள்.

இப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமே தயாரிக்கிறது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

உயிர்த்தெழும் தனுஷ்; *ராஞ்சனா* 2-ஆம் பாகத்தில் நடிக்கிறார்

உயிர்த்தெழும் தனுஷ்; *ராஞ்சனா* 2-ஆம் பாகத்தில் நடிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raanjhanaa 2தமிழ் சினிமாவில் கோலோச்சும் தனுஷ் முதன்முறையாக நடித்த ஹிந்தி திரைப்படம் ‘ராஞ்சனா’.

இப்படம் வரவேற்பை பெறவே இதற்கு அடுத்தப்படியாக அமிதாப்பச்சனுடன் ‘ஷமிதாப்’ படத்தில் நடித்தார்.

தற்போது ‘ராஞ்சனா’ இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறாராம்.

இப்படம் `ராஞ்சனா’ படத்தின் 2ஆம் பாகமாக உருவாகுகிறது.

முதல் பாகத்தில் ‘உயிர்த்து எழுவேன்’ எனச் சொல்லி இறந்துபோகும் இவரது குந்தன் குமார் கேரக்டர் இதில் உயிர்த்தெழுவது போல கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் இதில் அவர் அரசியல்வாதியாக நடிக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே கொடி படத்தில் அரசியல்வாதியாக கலக்கியிருந்தார் தனுஷ் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அதிகம் பார்க்கப்பட்டவை – சூரியாவின் NGK யில் தனுஷ் !! 

More Articles
Follows