‘பைரவா’வை கலாய்த்தவருக்கு வெங்கட் பிரபு-அருண்ராஜா காமராஜ் பதிலடி

‘பைரவா’வை கலாய்த்தவருக்கு வெங்கட் பிரபு-அருண்ராஜா காமராஜ் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venkat prabhu Arunraja Kamarajவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள பைரவா பாடல் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது.

ஆனால் பாடல்கள் எதிர்பார்த்த அளவு இல்லை என ஒரு யூடியுப் பிரபல விமர்சகர் தெரிவித்திருந்தார்.

எனவே அவரின் ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்த பாடகர் அருண்ராஜ் காமராஜ், வெங்கட் பிரபுவிடம் என்னான்னு கேளுங்கள் சார் என பதிவிட்டு இருந்தார்.

அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு ‘சார் நம்ம மக்களுக்காக படம் பண்றோம், அவர்களுக்கு பிடிக்கும் சார்’ என்று அந்த விமர்சகருக்கு பதிலடி கொடுத்தார்.

@Arunrajakamaraj @itisprashanth @Music_Santhosh @YouTube hehehe bro naama makkalukku pandrom!! Makkal kodaduvaanga!! Adhaney venum
— venkat prabhu (@vp_offl)

மேலும் அருண்ராஜா காமராஜ் அந்த விமர்சகருடன் ட்விட்டரில் வாக்குவாதம் செய்தார்.

அதில்.. “நான் என் வழியில போறேன். எதிரில் எவன் வந்தாலும் பார்க்க மாட்டேன்” என கடும் ஆவேசமாக தெரிவித்துள்ளார் அருண்ராஜா காமராஜ்.

Venkat prabhu and Arunraja Kamaraj reaction to Bairavaa Songs

விஜய்சேதுபதி-த்ரிஷா இணையும் படத் தலைப்பு

விஜய்சேதுபதி-த்ரிஷா இணையும் படத் தலைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi and trishaஒரு ஹீரோவாக இருந்து, அரை டஜன் படங்களை அசல்ட்டாக கொடுத்து இருப்பவர் விஜய்சேதுபதி.

இவர் நடித்துள்ள புரியாத புதிர் படம் அடுத்த வருடம் 2017 பொங்கல் தினத்தில் வெளியாகிறது.

இதனையடுத்து ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவு இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முதன்முறையாக விஜய் சேதபதி ஜோடி சேர்கிறார் த்ரிஷா.

இப்படத்திற்கு 96 என்று பெயரிட்டுள்ளனர்.

பாரதிராஜா உடன் இணையும் விஜய்சேதுபதி

பாரதிராஜா உடன் இணையும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bharathi Raja and Vijay sethupathiஇயக்குனர் பாரதிராஜா நடித்து வரும் படம் குரங்கு பொம்மை,

இதில் நாயகனாக விதார்த் நடிக்கிறார்.

இப்படத்தின் அனிமேசன் போஸ்டரை நாளை டிசம்பர் 23ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருக்கிறார் விஜய் சேதுபதி.

‘கத்தி சண்டை’ மிஸ் ஆனாலும் ‘பைரவா’வுடன் இணையும் விஷால்

‘கத்தி சண்டை’ மிஸ் ஆனாலும் ‘பைரவா’வுடன் இணையும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and vishalவிஜய்யின் பைரவா படம் வெளியாகும் 2017 பொங்கல் தினத்தில் விஷாலின் கத்தி சண்டை படமும் வெளியாகும் என முதலில் கூறப்பட்டது.

ஆனால் தற்போது முன்பே வெளியாகிறது.

அதாவது டிசம்பர் 23ல் ரிலீஸ் ஆகிறது கத்தி சண்டை.

விஜய்யுடன் இணைந்து வர கத்தி சண்டை மிஸ் ஆனாலும் விஷாலின் மற்றொரு படமாக துப்பறிவாளன் படத்தின் பர்ஸ்ட் லுக் 2017 பொங்கல் சமயத்தில் வெளியாகவுள்ளதாம்.

மிஷ்கின் இயக்கிவரும் இப்படத்தில் பிரபல இயக்குநர் பாக்யராஜ் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நெல்லையில் மட்டுமல்ல சென்னையிலும் ‘தல நியூ இயர் பார்ட்டி’

நெல்லையில் மட்டுமல்ல சென்னையிலும் ‘தல நியூ இயர் பார்ட்டி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thala ajith latest stills2017 புத்தாண்டை முன்னிட்டு அஜித், விஜய் ஆகியோரின் படங்களை சில திரையரங்குகளில் திரையிட உள்ளனர்.

திருநெல்வேலியை சேர்ந்த ராம் சினிமாஸ் நிறுவனம் விஜய்யின் துப்பாக்கி படத்தை டிசம்பர் 31ஆம் தேதி, இரவு 9.30 மணி காட்சியிலும், அஜித்தின் வீரம் படத்தை புத்தாண்டு தினத்தில் அதிகாலை 6 மணிக்கும் திரையிட உள்ளனர்.

தற்போது நெல்லையை தொடர்ந்து சென்னையிலும் சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளதாம்.

சென்னை போரூரில் உள்ள ஜி.கே. சினிமாஸ் அரங்கில் ஜனவரி 1ஆம் தேதி காலை 9 மணி காட்சியில் பில்லா படம் திரையிடப்படுகிறது.

இதற்காக அங்கே பில்லா பேனர் தற்போதே வைக்கப்பட்டுள்ளது.

‘கஷ்டத்தை புரிந்து கொள்ளாத தமிழ் நடிகர்கள்..’ திருப்பூர் சுப்ரமணியம்

‘கஷ்டத்தை புரிந்து கொள்ளாத தமிழ் நடிகர்கள்..’ திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tirupur Subramaniamபிரபல விநியோகஸ்தரும் கோவை நீலகிரி மாவட்ட திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான திருப்பூர் சுப்ரமணியம் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் பெருகி வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மல்டி ப்ளக்ஸை குறித்து கூறியுள்ளார்.

மேலும், அதில் அவர் கூறியிருப்பதாவது…

மல்டி ப்ளக்ஸை பொறுத்தவரை மேல் தட்டு மக்களே அங்கு அதிகளவில் படம் பார்க்கின்றனர். அவர்களுக்கு டிக்கெட் விலை பற்றி கவலையில்லை.

ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தியேட்டர்களுக்கு வரத் பயப்படுகின்றனர்.

எனவே அவர்கள் திருட்டு விசிடியில் படம் பார்க்கின்றனர்.

ஆந்திராவில் உள்ள நடிகர்கள் பெரும்பாலோனார் சொந்தமாக தியேட்டர்கள் வைத்துள்ளனர்.

அவர்களுக்கு தியேட்டர் நடத்துவது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது தெரியும்.

எனவே அவர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதாலும், மக்கள் அதிகளவில் வருவதாலும் நிறைய லாபம் பார்க்கின்றனர்.

ஆனால் தமிழ் நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டு, திருமண மண்டபம் கட்டவே நினைக்கின்றனர்.

தியேட்டர்கள் கட்டுவதில்லை. எனவே அவர்களுக்கு எங்கள் கஷ்டம் புரிவதில்லை” என்றார்.

More Articles
Follows