தினம் 7கிமீ நடந்து செல்லும் மாணவிகளை காரில் ஏற்றிய வரலட்சுமி

தினம் 7கிமீ நடந்து செல்லும் மாணவிகளை காரில் ஏற்றிய வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varalakshmi met 7 School students and dropped them in car‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘ சண்டக்கோழி-2’ ‘சர்கார்’, ‘வெல்வெட் நகரம்’ உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் வரலட்சுமி.

இந்நிலையில், இவர் படப்பிடிப்புக்கு காரில் செல்லும்போது சில மாணவிகளை சந்தித்துள்ளார்.

அந்த மாணவிகள் தினமும் 7 கிலோமீட்டர் நடந்து செல்லும் பள்ளி சிறுமிகளை சந்தித்துள்ளார் வரலட்சுமி.

உடனே அவர்களை தன்னுடைய காரில் ஏற்றிக் சென்று இறக்கி விட்டிருக்கிறார்.

அவர்களுடன் நம் வாழ்க்கையை ஒப்பிடும்போது நாம் எவ்வளவோ நன்றாக வாழ்கிறோம். இந்த சிறுமிகளை நினைத்து பெருமைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

varu sarathkumar‏Verified account @varusarath

So proud of these girls who walk everyday 7km to school..today was car pool day.decided to pick them up and drop them..so much excitement n happiness on their faces..makes my heart melt..god bless them..so amazing to see them feel so proud when they get of car..makes me wonder(1)

Makes me wonder how blessed we are to have so much in our lives..and we still end up complaining about life..god bless these innocent souls…muahhhhhh….

என்ஜிகே-விஸ்வாசம் விலகல்; தீபாவளிக்கு சர்கார் சரவெடி மட்டுமே!

என்ஜிகே-விஸ்வாசம் விலகல்; தீபாவளிக்கு சர்கார் சரவெடி மட்டுமே!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Viswasam and NGK movies postponed Only Sarkar will release on Diwali 2018தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்து விஜய், அஜித், சூர்யா விக்ரம் ஆகியோர் உள்ளனர்.

இதில் அஜித், விஜய், சூர்யா ஆகியோரின் படங்கள் இந்தாண்டு 2018 தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதாவது விஜய்யின் சர்கார், அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்ஜிகே ஆகிய படங்கள்தான் இவை.

இதனால் இந்த தீபாவளிக்கு கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையில் சில தினங்களுக்கு முன் அஜித்தின் விஸ்வாசம் இந்தாண்டில் வெளியாகாது எனவும் இது அடுத்த ஆண்டு 2019 பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

தற்போது சூர்யாவின் என்ஜிகே படமும் இந்தாண்டு தீபாவளி ரேசில் இருந்து விலகுவதாக தெரிய வந்துள்ளது.

என்ஜிகே பட இயக்குனர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தில் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் படத்தை 2018 கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

எனவே விஜய்யின் சர்கார் மட்டும் இந்தாண்டு தீபாவளிக்கு வந்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Viswasam and NGK movies postponed Only Sarkar will release on Diwali 2018

ரஜினிக்கு ஒரு நியாயம்? எனக்கு ஒரு நியாயமா? ; சென்சாரை வெளுக்கும் வாராகி

ரஜினிக்கு ஒரு நியாயம்? எனக்கு ஒரு நியாயமா? ; சென்சாரை வெளுக்கும் வாராகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director varagiஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிவா மனசுல புஷ்பா’.. நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் இந்தப்படத்தின் டைட்டில் எந்த அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்தியதோ, அதே அளவுக்கு தயாரிப்பாளருக்கு தற்போது சிக்கலையும் இழுத்துவிட்டுள்ளது. ஆம்.. இந்தப்படத்தின் டைட்டிலையே தூக்குங்கள் என கூறி, தயாரிப்பாளரும் இயக்குனருமான வாராகியை அதிரவைத்துள்ளனர் சென்சார் அதிகாரிகள்..

இந்த பிரச்சனையை பொதுவெளிக்கு கொண்டுசெல்வதற்காகவும் சென்சார் அதிகாரிகளின் எதேச்சதிகார போக்கை வெட்டவெளிச்சம் போட்டு காட்டுவதற்காவும் பத்திரிகையாளர்களை சந்தித்தார் வாராகி.

“நான் எடுத்துள்ளது அரசியல் காதல் படம்.. சம கால நிகழ்வுகளை கற்பனை கலந்து படமாக்கி இருக்கிறேன்.. படம் ஓடக்கூடிய மொத்த நேரமே 1 மணி 45 நிமிடம் தான்.. ஆனால் இந்தப்படத்தை பார்த்துட்டு இரண்டரை மணி நேரம் விவாதிச்சிட்டு சில அரசியல் வசனங்கள், கிளாமர் காட்சிகள், சில பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை நீக்க சொன்னார்கள். நான் அவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டதால் டில்லியில் உள்ள சேர்மனுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அங்கிருந்து வந்த உத்தரவில் படத்தின் டைட்டிலையும் மாற்ற சொல்லி வந்ததுடன் படத்தின் மைய கதாபாத்திரங்களான சிவா, புஷ்பா ஆகிய இரண்டு பெயர்களுக்கு பதிலாக வேறு பெயர்களை மாற்றச்சொல்லி இன்னொரு அதிர்ச்சியும் கொடுத்தார்கள்…

சிவா, புஷ்பாங்கிற பெயர்கள் எல்லாம் தடை செய்யப்பட்ட பெயர்களா என்ன..? இல்லை இந்த பெயர்களை மாற்றுங்கள் என யாரவது புகார் கொடுத்தார்களா..? சிவா மனசுல சக்தி வந்தப்போ மட்டும் தடை செய்யலையே.. மோடி மனசுல அமித்ஷான்னு நான் படம் எடுக்கலையே.. அட அப்படியே வக்கிரம் பிடித்த பெயராக இருந்தால் கூட, அவர்கள் சொல்வது நியாயம் என சொல்லலாம். இருட்டு அறையில் முரட்டு குத்துன்னு ஒரு படம் வந்துச்சு.. இப்போ அடுத்ததா பல்லுப்படாம பார்த்து செய்யுங்கன்னு ஒரு படம் வரப்போகுது….இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு சென்சார் அதிகாரிகளுக்கு தெரியாதா என்ன..? அவற்றையே அனுமதித்த சென்சார் அதிகாரிகள் என் படத்தின் டைட்டிலை மாற்றச்சொல்லும் காரணம் என..?

சென்சார் விதிகளின்படி டைட்டிலை மாற்றச்சொல்ல எந்த அதிகாரிக்கும் அதிகாரமில்லை… சென்சார் குழுவில் சினிமா தவிர்த்து பார்த்தால் பத்திரிகையாளர், சமூக சேவகர்கள் இருக்கலாம்… ஆடிட்டருக்கு சென்சாரில் என்ன வேலை..? இதனால் என்ன கூத்து நடந்துச்சு தெரியுமா..? சம்பந்தமே இல்லாத இடத்தில் வசனங்களை மியூட் பண்ண சொன்னாங்க.. ஆனா எதை வெட்டுவாங்கன்னு நாங்க எதிர்பார்த்தோமோ, அதை அவங்க கண்டுக்கவே இல்லை.. அப்புறம் இவங்க என்ன பெரிய அறிவாளி..?

புகை பிடிக்கிற காட்சியிலயும் மது அருந்துற காட்சியிலயும் அது கெடுதல்னு எச்சரிக்கை வாசகம் போட சொல்றாங்க.. அப்படின்னா என் படத்துல லஞ்சம் வாங்குற காட்சி இருக்கு. கொலை செய்யுற காட்சி இருக்கு. எல்லாத்துக்கும் எச்சரிக்கை வாசகம் போடமுடியுமா..?. இப்படி ஒவ்வோர் விஷயத்துக்கும் குத்தம் கண்டுபிடிச்சா அப்புறம் எப்படி படம் எடுக்குறது..?

ஒரு காட்சி படமாக்குறப்போ ஏதேச்சையா ஒரு பூனை நடந்து போகுது.. அதை நாங்க எந்த தொந்தரவும் பண்ணலை.. ஆனா அதுக்கு வனவிலங்கு வாரியத்துல சான்றிதழ் வாங்கிட்டு வான்னு சொல்றாங்க..

ரஜினி படத்தின் டைட்டில் எல்லாம் பெயர்களில் தான் வருகிறது.. பெரிய படங்களுக்கு ஏன் பண்ணவில்லை..? பெரிய நடிகர் சின்ன நடிகர் பாகுபாடு காட்டுகிறார்களோன்னு சந்தேகம் வருது. சென்சார் ஒருதலை பட்சமா செயல்படுவது நன்றாகவே தெரிகிறது.. அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உறவினர்களும் வேண்டியவர்களும் தான் சென்சாரில் இருக்கிறார்கள்.

என்னோட படத்தோட டீசர் ‘சிவா மனசுல புஷ்பா’ எனும் பெயரில்தான் சென்சாரில் இருந்து சர்டிபிகேட் வாங்கினேன்.. அப்போது தவறாக தெரியாத ‘சிவா மனசுல புஷ்பா’ பெயர் இப்பொழுது தவறாக தெரிவதால்தான் எனக்கு அவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நான் கடந்த பல வருடங்களாக பல விஷயங்களில் சமூக நோக்கோடு வழக்கு தொடர்ந்து வருவதால் தற்போது இதன் பின்னணியில் அரசியல் தலையீடு இருக்கலாமோ என்கிற சந்தேகமும் உண்டாகிறது…

நான் ஒரு சின்ன தயாரிப்பாளர்.. ஒவ்வொரு முறையும் பணம் கட்டி மேல்முறையீடு செய்யும் அளவுக்கு வசதி இல்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன்… இப்படி டைட்டில் பிரச்னை ஓடிக்கொண்டு இருப்பது அவர்களுக்கும் தெரியும்.. எல்லாவற்றையும் சொன்னால்தான் செய்வார்களா.?

சான்றிதழ் கொடுப்பதுதான் சென்சாரில் வேலை.. அதை நிறுத்தி வைக்க அவர்களுக்கு உரிமையில்லை.. காழ்ப்புணர்ச்சியில தான் இப்படி செய்கிறார்கள். அதனால் தான் ரிவைசிங் கமிட்டிக்கு விண்ணப்பித்துள்ளேன்.. இதில் எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தின் கதவை தட்டுவேன்… என்னைப்போல இனி வரும் தயாரிப்பாளர்களுக்கு சென்சார் மூலம் இதுபோன்ற சோதனைகள் நிகழக்கூடாது என்பதால் தான் நானே நேரடியாக களமிறங்கி விட்டேன்.. ஊடகங்கள் மூலமாக இந்த பிரச்னை உரியவர்கள் கவனத்துக்கு சென்று நல்ல தேர்வு கிடைக்கும் என நம்புகிறேன்” என கூறினார் வாராகி.

சொன்ன தேதிக்கு முன்பே *கழுகு-2* சூட்டிங்கை முடித்த சத்யசிவா

சொன்ன தேதிக்கு முன்பே *கழுகு-2* சூட்டிங்கை முடித்த சத்யசிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kazhugu 2 movie stillsகிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் கிருஷ்ணா நடிக்கும் கழுகு – 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது.

30 நாட்களில் வசன காட்சிகளுக்கான படப்பிடிப்பை முடிப்பதாக உறுதி கூறிய இயக்குநர் சத்யசிவா 28 நாட்களில் மொத்த வசன காட்சிகளுக்கான படப்பிடிப்பையும் இன்று முடித்து கொடுத்துள்ளார்.

பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் கடைசி வாரத்தில் துவங்க இருக்கிறது.

படத்தை அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிட தயாரிப்பாளர் சிங்காரவேலன் முடிவெடுத்துள்ளார்.

முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து நூறு நாட்களுக்குள் மொத்த படப்பிடிப்பு பணிகளையும் முடித்து படத்தை வெளியிட இருப்பது தமிழ் சினிமாவின் சமீபத்திய சாதனையாக பார்க்கப்படுகிறது.

4 கோடியில் தயாராகியுள்ள இந்த படத்தின் வியாபாரம் 7 கோடியை தாண்டும் என சினிமா விமர்சர்கள் கணித்துள்ளனர்.

என்னிடம் பணியாற்றிய 6 பேர் விரைவில் இயக்குனராக வருவார்கள் – மோகன்ராஜா

என்னிடம் பணியாற்றிய 6 பேர் விரைவில் இயக்குனராக வருவார்கள் – மோகன்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Next Year 6 Directors will come out from my team says Mohan Raja at Viu launchஉலக அளவில் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் OTT சேவையில் முன்னோடியாக விளங்கி வரும் VIU, தமிழில் தனது சேவைகளை துவங்குகிறது. அதன் அதிகாரப்பூர்வ துவக்க விழா சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது.

விழாவில் 4 புதிய வலைத்தொடர்கள் மற்றும் 2 குறும்படங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

முன்னதாக Vuclip President & COO அருண் பிரகாஷ், AVM அருணா குகன், Viu இந்தியா ஹெட் விஷால் மஹேஷ்வரி, இயக்குனர்கள் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், புஷ்கர் காயத்ரி, வெங்கட் பிரபு, பார்த்திபன், தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு, துரைராஜ், சஞ்சய் வாத்வா, ஆனந்தா சுரேஷ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, துஷ்யந்த், ட்ரைடெண்ட் ரவீந்திரன், ராமமூர்த்தி, நடிகை குட்டி பத்மினி ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.

Viu லோகோவையும் சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர். Vuclip President & COO அருண் பிரகாஷ் வரவேற்றுப் பேசும்போது…

“நான் ஒரு தமிழன். மீண்டும் தாய்நாட்டுக்கு வந்த உணர்வு ஏற்பட்டுள்ளது. நான் சென்னை வந்த பின் 25 வருடத்திற்கு பிறகும் அதே கலாச்சாரத்தை பார்க்க முடிந்தது.

இந்த தொழில் நுட்பம் இந்த அளவுக்கு நிச்சயம் வளரும் என்ற நம்பிக்கையில் தான் இது துவங்கப்பட்டது. துவக்கத்தில் நிறைய சவால்களை சந்தித்தோம். பைரஸி மிகப்பெரிய ஒரு பிரச்சினை.

பைரஸியோடு போராட, புதிய விஷயங்களை ரசிகர்களுக்கு கொடுப்பது என முடிவெடுத்தோம். 3 ஆண்டுகளுக்கு முன்பு PCCW உடன் இணைந்து VIU துவக்கினோம்.

தென்கிழக்கு ஆசியாவில் முதல் இரண்டு இடங்களில் நாங்கள் வெற்றிகரமாக இருந்து வருகிறோம். தமிழில் இளைஞர்கள் புதுமையான, நல்ல தரமான விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள்.

இன்று நாங்கள் அறிவிக்கும் நிகழ்ச்சிகள் வெறும் ஆரம்பம் தான். அடுத்த 3 ஆண்டுகளில் 100 ஒரிஜினல் நிகழ்ச்சிகளை தயாரிக்க இருக்கிறோம்” என்றார்.

குறும்படங்கள் இயக்கி விட்டு இயக்குனராவது தான் இப்போதைய ட்ரெண்ட். ஆனால் நான் சினிமா இயக்கி விட்டு குறும்படம் இயக்கியிருக்கிறேன். மாஷா அல்லா கணேஷா கதை என்னை ரொம்பவே ஈர்த்தது.

மற்ற எழுத்தாளர்களுடன் இணைந்து வேலை செய்ய எனக்கு ரொம்பவே ஆசை. சம்பத், டி சிவா, அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார்.

சென்சாருடன் சண்டை போட்டே, நிறைய விஷயங்களை சினிமாவில் சொல்ல முடியவில்லை. இதில் சென்சார் இல்லை என்பதால் நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறோம்.

இந்த நேரத்தில் இப்படி ஒரு தளம் எங்களுக்கு அமைந்தது மகிழ்ச்சி என்றார் மாஷா அல்லா கணேஷா என்ற குறும்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு. வேறு எங்கு வெற்றி பெறுவதையும் விட, தமிழ்நாட்டில் மிக வேகமாக ஜெயிக்கலாம்.

17 ஆண்டுகள் நான் இயக்குனராக இருந்தும் என்னிடம் இருந்து குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு யாரும் இயக்குனராக வரவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.

யாஸ்மின் அந்த குறையை தீர்த்திருக்கிறார். அடுத்த ஆண்டுக்குள் 6 பேர் நல்ல திறமையோடு இயக்குனராக வருவார்கள்.

நிறைய உதவி இயக்குனர்கள், வீட்டை விட்டு சென்னை வந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வார்கள்.

ஆனால் யாஸ்மின் 7 வருடங்களாக சிங்கப்பூரில் இருக்கும் குடும்பத்தை பிரிந்து வந்து இங்கு கடுமையாக உழைத்து இன்று இயக்குனர் ஆகியிருக்கிறார் என்றார் இயக்குனர் ராஜா.

தமிழ் சினிமாவில் வாம்பயர் கதைகள் கொண்டு வருவது சாத்தியமில்லாமலே இருந்தது. எனக்கு சிறு வயதில் இருந்தே ஹாரர், வாம்பயர் கதைகள் மிகவும் பிடிக்கும்.

இந்த கதையை எடுக்க வாய்ப்பு கொடுத்த, உறுதுணையாக இருந்த Viuக்கு நன்றி என்றார் இயக்குனர் நந்தினி ஜேஎஸ். செம்ம ஃபீலு ப்ரோ என்பது வெறும் வார்த்தைகளாக இல்லாமல் நம்மை உணர வைத்திருக்கிறது இந்த விழா.

இந்த Viuவின் CO ஒரு தமிழர்.ஆள போறான் தமிழன் என்கிற பாடலின் தத்துவம் இவர்கள் மூலம் உண்மையாகிறது. இந்த துறை சொர்க்கமாக இருக்க வேண்டும் என்றால் அனைவருக்குள்ளும் ஒற்றுமை இருக்க வேண்டும். Contentக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும் என்றார் நடிகர், இயக்குனர் பார்த்திபன்.

நடிகர்கள் நாசர், கயல் சந்திரன்,சாந்தனு, சம்பத், அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி, அஸ்வின் காகமானு, நடிகைகள் பூஜா தேவரியா, குட்டி பத்மினி, காயத்ரி,ரூபா மஞ்சரி, கீ கீ விஜய் தயாரிப்பாளர்கள் ரகுநாதன், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, எஸ் ஆர் பிரபு, சமீர் பரத் ராம், இயக்குனர்கள் ஆதிக் ரவிச்சந்திரன், பிரவீன் காந்தி, ஸ்ரீகணேஷ், எடிட்டர் பிரவீன் கேஎல் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Next Year 6 Directors will come out from my team says Mohan Raja at Viu launch

செந்தில் கணேஷ்-ராஜலஷ்மி குரலுக்கு ஆடும் பிரபுதேவா-நிக்கி கல்ராணி

செந்தில் கணேஷ்-ராஜலஷ்மி குரலுக்கு ஆடும் பிரபுதேவா-நிக்கி கல்ராணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nikki Galrani team up with Prabhudheva in Charlie Chaplin news updatesஅம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக டி.சிவா மிகப் பிரமாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கும் பார்ட்டி படம் விரைவில் வெளி வர உள்ளது.

இதை தொடர்ந்து அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் “சார்லி சாப்ளின் 2”.

இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே.

முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, செந்தில், ரவிமரியா, கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ், காவ்யா, அமீத், பார்கவ்,கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடிக்கிறார்கள்.

தயாரிப்பாளர் டி.சிவா முக்கிய வேடமேற்க கெளரவ வேடத்தில் வைபவ் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – செளந்தர்ராஜன் / இசை – அம்ரீஷ்
பாடல்கள் – மகாகவி பாரதியார், யுகபாரதி, பிரபுதேவா, ஷக்திசிதம்பரம், கருணாகரன்
எடிட்டிங் – சசி / கலை – விஜய்முருகன் / நடனம் – ஜானி ஸ்ரீதர்
ஸ்டண்ட – கனல் கண்ணன் / தயாரிப்பு நிர்வாகம் – மகேந்திரன்
தயாரிப்பு மேற்பார்வை – பரஞ்சோதி
தயாரிப்பு – T.சிவா
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிறார் ஷக்தி சிதம்பரம்.

படம் பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் கேட்டோம்…

இது முதல் பாகம் மாதிரியே கலகலப்பான படம். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சூப்பர் சிங்கர் போட்டியில் முதல் பரிசு வென்ற செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி ஜோடி முதன் முறையாக சினிமாவில் பாடிய “சின்ன மச்சான் செவத்த மச்சான் சின்ன புள்ள செவத்த புள்ள ” என்ற பாடல் அம்ரீஷ் இசையில் பதிவு செய்யப்பட்டது.

இந்த பாடல் செந்தில் கணேஷ்-ராஜலஷ்மி ஜோடியால் தமிழகம் முழுவதும் கிராமம் நகர்ப்புறம் என்று எல்லா இடங்களிலும் பாடப்பட்டு பாப்புலரான பாட்டை அவர்களை வைத்தே சினிமாவில் பாட வைத்தோம்.

அவர்கள் திரைக்காக முதன் முதலாக பாடியது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் காட்சியில் பிரபுதேவா நிக்கி கல்ராணி ஜோடி ஆடிப் பாடிய பாடல் காட்சி பொள்ளாச்சியில் ஐந்து நாட்கள் மிகப் பிரமாண்டமாக படமாக்கப் பட்டது.

சூப்பர் ஹிட் பாடலாக இது பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் இயக்குனர்.

விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

Nikki Galrani team up with Prabhudheva in Charlie Chaplin news updates

More Articles
Follows