வஞ்சகர் உலகத்தில் யுவனுக்கு கைகொடுக்கும் மாதவன்

வஞ்சகர் உலகத்தில் யுவனுக்கு கைகொடுக்கும் மாதவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vanjagar Ulagam 2nd single track will be released by Madhavanசாம்.சி.எஸ் இசையமைப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வஞ்சகர் உலகம்’.

இதில் ஒரு இடம் பெறும் ஒரு முக்கியமான பாடலை யுவன் சங்கர் பாடியுள்ளார் என்பதை பார்த்தோம்

அந்த ரொமான்டிக் மெலோடியை நடிகர் மாதவன் நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ் பீதா இப்படத்தை இயக்கியுள்ளார்.

சிபி நாயகனாகவும், அனீஷா ஆம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.

குரு சோமசுந்தரம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கேங்ஸ்டராக நடித்துள்ளார்.

சிபி புவன சந்திரன், ஹரேஷ் பெரடி, விஷாகன் வணங்கமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ரோட்ரிகோ டெல் ரியோ, ஹெர்ரெரா மற்றும் சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆண்டனி எடிட்டிங் செய்கிறார்.

லாபிரிந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரிக்கிறார்.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

Vanjagar Ulagam 2nd single track will be released by Madhavan

madhavan vanjagar ulagam

ரஜினியின் சூப்பர் ஹிட் பாடலை படத்தலைப்பாக்கிய சந்திரன்

ரஜினியின் சூப்பர் ஹிட் பாடலை படத்தலைப்பாக்கிய சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanths super hit song became movie title for Kayal Chandranகிரகணம்’, ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ மற்றும் ‘பார்ட்டி’ ஆகிய படங்கள் கயல் சந்திரன் நடிப்பில் திரைக்கு வரத் தயாராகவுள்ளன.

தற்போது ‘டாவு’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் இவர்.

இந்நிலையில் ‘நான் செய்த குறும்பு’ என்ற புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் தற்போது வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் மகாவிஷ்ணு இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக அஞ்சு குரியன் நடிக்கிறார்.

சில மலையாள படங்களிலும் தமிழில் ‘சென்னை டு சிங்கப்பூர்’ படத்திலும் நடித்துள்ளார்.

‘கோலிசோடா-2’ படத்திற்கு இசையமைத்த அச்சு ராஜாமணி இசை அமைக்கிறார்.

‘WRITER IMAGINATIONS’ என்ற பட நிறுவனம் சார்பில் உருவாகும் ‘நான் செய்த குறும்பு’ படத்தின் துவக்க விழா ஆகஸ்ட் 5-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப்பில் நடைபெறவுள்ளது.

ரஜினி நடித்த மூன்று முகம் திரைப்படத்தில் இடம் பெற்ற நான் செய்த குறும்பு பாடல் மிகப்பிரபலமானது. தற்போது அதுவே இப்படத்திற்கு தலைப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1982ஆம் வெளியான இப்பட பாடலை எஸ்பி. பாலசுப்ரமணியம் பாடியிருந்தார்.

Rajinikanths super hit song became movie title for Kayal Chandran

மோசமான விமர்சனங்களால் கசக்கி பிழிந்த ஜுஸாகும் *ஜுங்கா*

மோசமான விமர்சனங்களால் கசக்கி பிழிந்த ஜுஸாகும் *ஜுங்கா*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why Vijay Sethupathis Junga became disappointed movie to audienceகோகுல் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து பணியாற்றிய ஜுங்கா திரைப்படம் கடந்த ஜீலை 27ஆம் தேதி வெளியானது.

இப்படத்திற்கு ஆரம்பத்தில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதற்கு முக்கியமான காரணங்களாக சிலவற்றை விமர்சகர்கள் கூறிவருகிறார்கள்.

விஜய்சேதுபதியின் டயலாக் டெலிவரிக்கு எப்போதும் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் நன்றாக இருக்கும்.

ஆனால், இந்த படத்தில் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றார் அவர்.

படம் முழுவதும் கத்திக் கொண்டே இருக்கிறார். கஞ்ச டானாக இருக்கலாம். ஆனால் கதற கதற கத்திக் கொண்டே இருந்துவிட்டார்.

மடோனா கேரக்டர் படத்துக்கு தேவையில்லை என தோன்ற வைத்தது. அதுவும் கவண் படத்தில் நம் கவனம் ஈர்த்த அழகான மடோனா இதில் ரசிக்கும்படியே இல்லை.

படத்தில் தேவையில்லாத பாடல்கள் ஆங்காங்கே இடம் பெற்றன.

விஜய் டிவி பாலா வரும் பாடல் ரசிகர்களுக்கு சோதனை பாடலாக அமைந்தது.

ரசிகனை ரசிக்கும் தலைவா பாடலும் அந்த பாடல் வரிகளும் எதற்கு? என்றே கேட்க தோன்றுகிறது.

ஒரு டான் என்றால் கூட பத்து பேர் இருப்பார்கள். இதில் யோகிபாபு என்ற ஒருத்தர் மட்டுமே இருக்கிறார்.

அப்படியிருக்கும்போது யாருக்கு? யார் தலைவன் என்றே தெரியவில்லை. ஏதோ பாடல் வரிகள் மாஸாக இருக்க வேண்டும் என்று வைக்கிறார்களா? என்று தெரியவில்லை.

ஒரே பாடலில் டான் ஆகி டார் டார் என ரசிகர்களை இந்த ஜுங்கா கிழித்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

யோகிபாபு, டான் அம்மா சரண்யா, டான் பாட்டி விஜயா ஆகியோர் மட்டும் ஆறுதலாக இருந்தார்கள்.

சாயிஷா ஆடும் அளவுக்கு இதில் அவர் நடிப்புக்கு தீனி ஏதுவுமில்லை.

சாயிஷாவுடன் சேதுபதிக்கு மெமிஸ்டரியும் இல்லை. எதுவுமில்லை. அதுவும் காதலை சொல்லும் நேரத்திலும் கத்தி கத்தியே பேசுகிறார்.

எத்தனையோ டான் படங்களில் காதலை பார்த்துக்கிறோம். ஆனால் இதில் டான் இனி டாவு அடிக்கக்கூடாது என பன்ச் வேற பேசியிருக்கிறார்.

டான் என்றால் மாஸாக இருக்க வேண்டும். ஆனால் இதில் கண்களில் மை வரைந்துக் கொண்டு ரசிகர்களை பயமுறுத்திவிட்டார் விஜய்சேதுபதி.

பிளாக் காமெடி என்ற பெயரில் ரசிகர்களுக்கு பெரும் சோதனையான படம் தான் இது.

ஆக.. இப்படம் திறமையான கலைஞன் விஜய்சேதுபதிக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துவிட்டது என்றே கூற வேண்டும்.

அடுத்த படத்தில் வீறு கொண்டு வருவார் விஜய்சேதுபதி என நம்பலாம்.

Why Vijay Sethupathis Junga became disappointed movie to audience

சாம் சி.எஸ். இசையில் யுவன் பாட ஒப்புக் கொள்ள இதான் காரணமா.?

சாம் சி.எஸ். இசையில் யுவன் பாட ஒப்புக் கொள்ள இதான் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why Yuvan Shankar Raja accepted Sam CS offer for Vanjagar Ulagamதனது நிலையான வெற்றியால் கிடைத்த பாராட்டுகளின் மூலம் உச்சத்தில் சவாரி செய்து வருகிறார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.

அவரின் மிக எளிதில் வெளியில் வர முடியாத மிகப்பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், சாம் இசையில் யுவன் ஷங்கர் ராஜா பாடுவது தான்.

“நள்ளிரவு 3 மணிக்கு நாங்கள் பாடலை பதிவு செய்தோம். யுவன் ஷங்கர் ராஜா ஒரு மணி நேரத்திற்குள் முழு பாடலையும் நிறைவு செய்தார்” என பேசத்துவங்கும் சாம் சிஎஸ், வஞ்சகர் உலகம் படத்தில் யுவனை, ஒரு அழகான காதல் மெல்லிசை பாடலை பாட வைத்திருக்கிறார்.

“இசைத்துறையில் நுழைவதற்கு முன்பே, இளையராஜா சார் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஆகியோரின் மிகப்பெரிய ரசிகனாக இருந்தேன். ஆனால், 2004-06 காலகட்டத்தில், லட்சக்கணக்கான ரசிகர்கள் போல, நானும் முற்றிலும் யுவன் சார் இசைக்கு அடிமையாகி இருந்தேன்.

தமிழ் இசைத்துறையின் இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட அவரது இசை என்பது ஒவ்வொரு நபரின் முக்கியமான பகுதியாக மாறி இருந்தது. நான் அவரை ஒரு பாடகராக மிகவும் மதிக்கிறேன். அவருக்குள் நேட்டிவிட்டி மற்றும் மேற்கத்திய கிளாசிக் இசை உள்ளது.

எந்த ஒரு பாடகருக்கும் இது மிகப்பெரிய சொத்தாகும். AR ரஹ்மானின் இசையில் மரியான் படத்தில் யுவன் பாடிய “கொம்பன் சூரன்” எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்” என்கிறார் சாம் சிஎஸ்.

வஞ்சகர் உலகம் பாடலில் யுவன் ஷங்கர் ராஜாவை பாட வைக்க என்ன காரணம்? என அவர் கூறும்போது,

“வஞ்சகர் உலகம் படத்தில் தனித்துவமான விஷயம் ஒன்றை முயற்சிக்க வேண்டும் என்பது என் ஆசை. அதனால் மட்டும் அல்ல, இயக்குனர் மனோஜ் பீதா மற்றும் ஒளிப்பதிவாளர் இந்த திரைப்படத்தை படமாக்கிய விதத்தை பார்த்த போது எனக்கு வேறு வழியில்லை.

ஒவ்வொரு ஃபிரேமும் தனித்தன்மையுடனும், இணையற்ற ஆழமான காட்சியமைப்புகளோடும் இருந்தது. அதனால் என் வழக்கமான முறைக்கு அப்பால் என்னை தள்ளி இயற்கையான ஒலிகளுடன் ஏதாவது செய்ய முயற்சி செய்தேன்.

குறிப்பாக, மதன் கார்க்கி எழுதிய இந்த காதல் பாடல் மிகவும் புத்துணர்ச்சியோடு இருந்தது. ‘தீயாழினி’ என்ற ஆரம்ப வார்த்தையை வைத்தே இதை அறியலாம். கரு படத்தில் ‘கொஞ்சாளி’ என்ற ஒரு சிறப்பு சொல்லை அவர் கொடுத்திருந்தார்.

பாடலுக்கு இசையமைத்த உடனே, அந்த பாடலானது இயல்பான ஒரு குரலை கோரியது என்று உணர்ந்தேன். என் மனதில் உதித்த முதல் மற்றும் ஒரே பெயர் யுவன் ஷங்கர் ராஜா தான்.

Why Yuvan Shankar Raja accepted Sam CS offer for Vanjagar Ulagam

தமிழ்ப்படம்-2 பட வசூலை முடக்க துரை தயாநிதி நடவடிக்கை.?

தமிழ்ப்படம்-2 பட வசூலை முடக்க துரை தயாநிதி நடவடிக்கை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamizh Padam 2 movie title case news updatesஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் நம்ம ஹீரோக்களையும் கலாய்த்து வெற்றி பெற்ற திரைப்படம் தமிழ்ப்படம்.

இப்படம் கடந்த 2010ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெறவே, அதன் இரண்டாம் பாகம் சில நாட்களுக்கு முன் வெளியானது.

இப்படத்தையும் சிஎஸ். அமுதனே இயக்க, மிர்ச்சி சிவா நாயகனாக நடித்திருந்தார்.

ஆனால் தயாரிப்பு நிறுவனம் மட்டும் மாறியிருந்தது.

இரண்டாம் பாகம் சுமார் 6 கோடியில் தயாரிக்கப்பட்டு 10 கோடி வசூலை அள்ளியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்ப்படம் முதல் பாகத்தை தயாரித்த துரைதயாநிதி, தன்னுடைய அனுமதி இல்லாமல் தமிழ்ப்படம் என்ற தலைப்பை பயன்படுத்தி இரண்டாம் பாகத்தை எடுத்திருப்பதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழ்ப்படம்- 2 இதுவரை வசூலித்த தொகையை முடக்கும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Tamizh Padam 2 movie title case news updates

போராளிகளுக்கு உதவி செய்ய போய் சிக்கலில் மாட்டிய விஜய்சேதுபதி

போராளிகளுக்கு உதவி செய்ய போய் சிக்கலில் மாட்டிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vijaysethupathi under tracking by Police Departmentபல்வேறு சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவர் நடிகர் விஜய்சேதுபதி.

இதனால், பல அமைப்புகளும் அவரை தேடி உதவி கேட்கின்றனர்.

அவரும் சில உதவிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் அவரை தமிழக காவல்துறை கண்காணிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இதுகுறித்து அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

சமூக அக்கறை கொண்டவன் நான். அதனால், அவ்வப்போது சமூகத்துக்கு சில பிரச்னைகள் குறித்து, கருத்துக்களைச் சொல்கிறேன்.

மக்கள் பிரச்னைகளுக்காக போராடும் சிலருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்.

அவ்வளவுதான். மற்றபடி, அவர்கள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது எல்லாம் தெரியாது.” என தெரிவித்துள்ளனர்.

Actor Vijaysethupathi under tracking by Police Department

More Articles
Follows