ரஜினியுடன் டூயட் பாடப்போகும் நாயகி த்ரிஷா ?அனுஷ்கா..?

ரஜினியுடன் டூயட் பாடப்போகும் நாயகி த்ரிஷா ?அனுஷ்கா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trisha or Anushka may join with Rajini for Sun picture production movieரஜினிகாந்த நடித்துள்ள காலா மற்றும் 2.ஓ படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் நடிகை யார்? என்ற பேச்சு கோலிவுட்டில் பரவலாக எழுந்துள்ளது.

கடந்த 10 வருடங்களாகவே ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என ஓபன்னாகவே தன் ஆசையை வெளிப்படுத்தி வருகிறார் த்ரிஷா.

அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிது.

எனவே ரஜினியுடன் இணைய போகும் நாயகி யார்? என்ற ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Trisha or Anushka may join with Rajini for Sun picture production movie

கார்த்தி உடன் இணையும் தானா சேர்ந்த கூட்டம் கூட்டணி

கார்த்தி உடன் இணையும் தானா சேர்ந்த கூட்டம் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi 17 starts with a formal launch in Chennaiமாபெரும் வெற்றி பெற்ற “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தை தொடர்ந்து கார்த்தி, ரகுல் பிரீத்சிங் ஒரு புதிய படத்தில் இணைகின்றனர்.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், RJ விக்னேஷ், அம்ருதா, ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள் .

இவர்களுடன் முக்கிய வேடத்தில் நவரச நாயகன் கார்த்திக் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் நடிக்கின்றனர்.

இவர்கள் இருவரும் அண்மையில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை ரஜத் ரவிசங்கர் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார்.

கதை திரைக்கதை, வசனம் எழுதும் இவர் ,”எங்கேயும் எப்போதும்” இயக்குநர் சரவணன், பிரபல இந்தி இயக்குநர் அனுராக்காஷ்யப், இயக்குநர் R.கண்ணன் இவர்களுடன் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.

திரைப்படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.

இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார், இயக்குநர் ரஜத் ரவிசங்கர் , 2D Entertainment ராஜசேகர் பாண்டியன் , ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவ், இயக்குநர் பாண்டிராஜ் , இயக்குநர் மாதேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சிவகுமார் கிளாப் அடித்து படபிடிப்பை துவக்கி வைக்க சூர்யா கேமராவை ரோல்லிங் செய்தார்.

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு : R வேல்ராஜ்
எடிட்டிங் : ரூபன்
கலை : ஜெயஸ்ரீநாராயணன்
ஸ்டன்ட் : அன்பறிவ்
பாடல்கள் : கபிலன் , தாமரை , விவேக்
நிர்வாக தயாரிப்பு : K.V.துரை
அஸோஸியேட் தயாரிப்பு : ஜெய் ஜெகவீரன்.

பெயரிடப்படாத “ கார்த்தி 17’’ படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க – பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லஷ்மண்குமார் தயாரிக்கிறார்.

இவர், சூர்யா நடித்த சூப்பர் ஹிட்டான :சிங்கம்2” படத்தை தயாரித்தவர் .தற்போது விரைவில் வெளியாக இருக்கும் திரிஷா நடிப்பில் R. மாதேஷ் இயக்கத்தில் “மோகினி“ படத்தை தயாரித்து வருகிறார்.

யுரோப் நாட்டில் 15 நாட்களும், ஹைதராபாத், மும்பை, இமயமலை பகுதிகளிலும் இப்படம் உருவாக உள்ளது.

Karthi 17 starts with a formal launch in Chennai

Karthi 17 starts with a formal launch in Chennai

கமல் என்னுடன் சேரட்டும்; ரஜினி என்ன செய்தார்.? சரத்குமார் பேச்சு

கமல் என்னுடன் சேரட்டும்; ரஜினி என்ன செய்தார்.? சரத்குமார் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarathkumar talks about Rajini and Kamal political entryநடிகர்கள் ரஜினி மற்றும் கமல் இருவரும் அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.

இவர்களின் வருகைக்கு ஒரு பக்கம் ஆதரவும் மறுபக்கம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இவர்களின் வருகை குறித்து அண்மையில் பேசியுள்ளதாவது….

நான் கடந்த 20 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். ஓய்வு பெறும் காலத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை.

கமலுடன் கூட்டணி வைப்பீர்களா? என்கிறார்கள். வேண்டுமானாலும் அவர் வந்து என்னுடன் கூட்டணி சேரட்டும்.

காவிரி விவகாரத்தில் ரஜினி உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை” என்றார்.

Sarathkumar talks about Rajini and Kamal political entry

நேற்று விவசாயிகள்; இன்று ரங்கம்மாள்; உதவிகள் செய்யும் அபிசரவணன்

நேற்று விவசாயிகள்; இன்று ரங்கம்மாள்; உதவிகள் செய்யும் அபிசரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Abi Saravanan helped Old Actress Rangammalதமிழில் பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் திருமதி ரங்கம்மாள் பாட்டி. வடிவேலுவின் படங்களில் அடிக்கடி இவரை பார்த்திருக்கலாம்.

இவர் தமிழ் திரைப்படங்களில் அவ்வபோது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் வரும் ரூபாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு ரங்கம்மாள் பாட்டி மெரீனா கடற்கரையில் பிச்சை எடுத்து வந்ததாக செய்தி ஒன்று வெளியானது.

ஏற்காட்டில், நடுக்காட்டில் ‘சூரபத்மன்’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் அபிசரவணன், இந்த தகவலை கேள்விப்பட்டதும் வருத்தமடைந்தார்.

உடனே சென்னையில் உள்ள நண்பர்களையும் நடிகர்சங்கத்தினரையும் தொடர்புகொண்டு ரங்கம்மாள் பாட்டியுடன் பேசி அவரை ஏற்காட்டில் நடைபெறும் படப்பிடிப்புக்கு அழைத்து வரச்செய்தார் அபிசரவணன்.

தன்னுடன் ஐந்து நாட்கள் அவரை தங்க வைத்ததுடன் படப்பிடிப்பிலும் அவரை உற்சாகமாக கலந்துகொள்ள செய்தார்.

இந்தநிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து ஊர் திரும்பிய நடிகர் அபிசரவணன் பாட்டியின் வீட்டிற்கு சென்றார்.

அங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருப்பதைக்கண்டு வருந்திய அபிசரவணன், அந்த வீட்டிற்கு தேவையான கட்டில், பேன், மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கிக்கொள்வதற்காக ரங்கம்மாள் பாட்டியிடம் உதவித்தொகையாக பத்தாயிரம் ரூபாயை வழங்கினார்.

மேலும் அவரை நடிகர்சங்கத்துக்கு தனது வண்டியிலேயே அழைத்துச்சென்ற அபிசரவணன், சங்கம் மூலமாக அவருக்கு உதவிகள் கிடைக்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார்.

அபிசரவணனின் இந்த அன்பும் கரிசனமும் தன்னை நெகிழ வைத்ததாகவும் அவருடன் இருந்த நாட்களில் தான் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் ரங்கம்மாள் பாட்டி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

விவசாயிகளாக இருக்கட்டும், நடிகர்களாக இருக்கட்டும் நலிந்த நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு வளர்ந்து வரும் நடிகர் என்கிற நிலையிலும் கூட தம்மால் இயன்ற உதவியை செய்து வரும் அபிசரவணனை தாராளமாக பாராட்டலாம்.

Actor Abi Saravanan helped Old Actress Rangammal

புதிய படங்கள் ரிலீஸ் இல்லை; விஜய்-அஜித்-சூர்யா ரசிகர்கள் ஹாப்பி

புதிய படங்கள் ரிலீஸ் இல்லை; விஜய்-அஜித்-சூர்யா ரசிகர்கள் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Ajith Suriya fans were happy because of Producers Qube issue strikeதமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

இதற்காக சம்பந்தபட்ட அந்த நிறுவனங்கள் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலித்து வருகின்றன.

புதிய படங்களை திரையிடுவதற்கு டிஜிட்டல் சேவை அமைப்புகள் ரூ.22 ஆயிரத்தில் இருந்து ரூ.34 ஆயிரம் வரை கட்டணமாக வசூலித்து வருகின்றன.

இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இல்லையெனில் புதிய படங்களை திரையிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

அதன்படி மார்ச் 2 வெள்ளிக்கிழமை முதல் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதனால் தியேட்டர்களில் பழைய படங்களையே திரையிடும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் அஜித், விஜய், சூர்யா ரசிகர்களை கவர தமிழகத்தில் உள்ள ஒரு சில தியேட்டர்கள் அந்த நடிகர்களின் படங்களை திரையிட உள்ளனர்.

அதன்படி மெர்சல், வேதாளம், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை திரையிடுவதால் அந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Vijay Ajith Suriya fans were happy because of Producers Qube issue strike

புதுச்சேரியில் ரஜினி மக்கள் மன்றத்தின் சேவை மைய காவல்படை

புதுச்சேரியில் ரஜினி மக்கள் மன்றத்தின் சேவை மைய காவல்படை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Puducherry Rajini fans created a team for Abroad Rajini fansவெளிநாட்டு ரசிகர்களை ஒருங்கிணைக்க புதுச்சேரியில் ரஜினி மக்கள் மன்றத்தின் சேவை மைய காவல் படை தொடங்கப்பட்டுள்ளது.

இதனை பிரான்ஸ் நாட்டு ரஜினி ரசிகர் திறந்து வைத்தார்.

இவர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதுச்சேரியில் முதல் 3 இடம் பெறுவோருக்கு ரஜினிகாந்த் கையால் சிறப்புப் பரிசு தரவும் திட்டமிட்டு இருக்கிறாராம்.

இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற மாநில பொறுப்பாளர் ரஜினி சங்கர் கூறியதாவது..

“புதுச்சேரி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பலர் பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அதில் பலரும் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

ரஜினி ரசிகர்களை ஒருங்கிணைக்க உள்ளனர். தற்போது வெளிநாட்டிலிருந்து வந்த ரசிகர் பிரகாஷ், புதுச்சேரிக்காரர்.

அவர் இந்த ஒருங்கிணைப்புப் பணியை செய்ய உள்ளார். அதற்காக தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் பிரான்ஸ் ரசிகர் பிரகாஷ் கூறுகையில்… “வெளிநாட்டில் ரஜினி ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களை ஒருங்கிணைக்கவே இம்முயற்சி.

தன் கட்சி தொண்டர்கள் இனி காவலர்கள் போல் இருக்க வேண்டும் என்று ரஜினி கூறியதால் இப்பெயரை வைத்துள்ளோம்” என கூறினார்.

Puducherry Rajini fans created a team for Abroad Rajini fans

rajini kaval padai puducherry

More Articles
Follows