ரஜினி-அஜித்-விஜய்-சூர்யா-விக்ரம் ஆகியோரின் டாப் 10 வசூல் படங்கள்

ரஜினி-அஜித்-விஜய்-சூர்யா-விக்ரம் ஆகியோரின் டாப் 10 வசூல் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Vijay Ajith Suriya Vikramஅண்மைகாலமாக தமிழ் படங்களுக்கு மலேசியா மற்றும் அயல் நாடுகளில் வரவேற்பு பெருகி வருகிறது.

இதில் ரஜினி முதல் சூர்யா படங்களுக்கு அதிகளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் மலேசியாவில் இதுவரை வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படங்களின் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதில் என்றும் நான்தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த்.

கபாலி படம் முதலிடத்தில் உள்ளது. மேலும் எந்திரன் மற்றும் சிவாஜி ஆகிய படங்கள் அடுத்தடுத்து உள்ளன.

மற்ற படங்களில் வரிசை இதோ….

1. #Kabali
2. #Endhiran
3. #Sivaji
4. #Vedalam
5. #I
6. #Kaththi
7. #Lingaa
8. #Si3
9. #Singam2
10. #Theri

Top 10 collection movies of Rajini Vijay Ajith Suriya Vikram

நேற்று பவர் பாண்டி; இன்று கோர்ட்; நாளை…? வேகமெடுக்கும் தனுஷ்

நேற்று பவர் பாண்டி; இன்று கோர்ட்; நாளை…? வேகமெடுக்கும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanushநடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர் என அனைத்திலும் அதே சுறுசுறுப்புடன் வெற்றிகரமாக வலம் வருபவர் தனுஷ்.

இவர் முதன்முறையாக இயக்கி வரும் பவர் பாண்டி படத்தின் சூட்டிங்கை நேற்று நிறைவு செய்தார். இதனை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இதனையடுத்து இன்று இவரை சொந்தம் கொண்டாடும் திடீர் பெற்றோர் வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார்.

இதனை தொடர்ந்து நாளைமுதல் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் சூட்டிங் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

விரைவில் இப்படம் முடிவடையவுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

இப்படத்தை சௌந்தர்யா ரஜினி இயக்க அமலா பால், கஜோல் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

Dhanush‏Verified account @dhanushkraja 6m6 minutes ago
#VIP2 last schedule starts tom … racing toward the finishing line #Excited , can’t believe it’s getting over so soon .. #Raghuvaran

இறைவன் தந்த ஆஸ்கர் ரஜினி; விக்னேஷ் சிவன் வியப்பு

இறைவன் தந்த ஆஸ்கர் ரஜினி; விக்னேஷ் சிவன் வியப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Vignesh Shivanஇயக்குனர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் காட்டி வருபவர் விக்னேஷ் சிவன்.

நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து இவர் தற்போது சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டு அதை ட்விட்டர் பதிவிட்டு தன் மகிழ்ச்சியை தெரியப்படுத்தியுள்ளார்.

அதில்… ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும் நாளில் இறைவன் எனக்கு தந்த ஆஸ்கர் இது. ரஜினியை சந்தித்து தெய்வீக சக்தியை பெற்றேன்.

இது வாழ்நாளில் ஒரு முறை நடக்கும் தருணம் என பதிவிட்டுள்ளார்.

Vignesh ShivN‏Verified account @VigneshShivN
On the day of #Oscars .. Iraivan enakku thandha #Oscar #DheiveegaEnergy #OnceInALifeTime moment ! #DemiGod #SuperStarRajnikanth sir

விஜய்-தனுஷ்-கலா மாஸ்டருக்கு நன்றி கூறிய காயத்ரி ரகுராம்

விஜய்-தனுஷ்-கலா மாஸ்டருக்கு நன்றி கூறிய காயத்ரி ரகுராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gayathri Raghuramபிரபல நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் முதன்முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் இயக்கியுள்ள யாதுமாகி நின்றாய் என்ற படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது.

இதில் தனுஷ் அவர்கள் புடவை நிலவே என்ற ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதை நாம் முன்பே பார்த்தோம்.

இந்நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது காயத்ரி ரகுராம் பேசும்போது…

இப்படம் திரைத்துறையில் பணியாற்றும் நடன கலைஞர்களின் பற்றிய உண்மை சம்பவங்களின் தொகுப்பு என்றார்.

மேலும் பேசும்போது….

பெண்களின் வாழ்க்கையில் ஆரம்பம் முதல் அவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொறு கட்டத்தையும் அவர்கள் எப்படி வாழவேண்டும் என்ற ஒரு சமூக
கருத்தை கூறும் வகையில் இப்படம் உள்ளது.

குறைந்த செலவில் பெண்களுக்கு முக்கியதுவம் கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கவர்ச்சி என்பது இல்லை.

தனுஷ் இப்படத்தில் ஒரு பாடலை பாடி உதவி செய்தார். மேலும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் பேருதவி செய்தார்.

இது என் அப்பாவின் கனவாகும், அதை தவிர இப்படத்தை என் குருநாதர் இயக்குனர் திரு A.L.விஜய் அவர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.

தன் தந்தை ஸ்தானத்தில் இருந்து உதவி வரும் கலா மாஸ்டருக்கு நன்றியும் தெரிவித்தார்.

விழாவில் கலா மாஸ்டர் பேசும்போது…

தற்போது இருக்கும் சூழ்நிலையில் பெண்கள்,பெண்குழந்தைகளின் பாதுகாப்பற்ற நிலையை நாமே பார்த்து கொண்டிருக்கிறோம்.

அந்த வகையில் இப்படம் பெண்களுக்கான ஒரு அழகான திரைப்படம், இதை தவிர இப்படத்தில் என் கணவரும் நடித்துள்ளார். எங்கள் குடும்பத்தில் ஒருவர் இயக்குனராகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் இப்படம் பார்ப்பவர்களை இது ஒரு அருமையான கதை என்று சொல்ல வைக்கும்.” என்றார்.

Gayathri Raghuram directorial Yaadhumaagi Nindraai Press meet

Yaadhumaagi Nindraai Press meet

 

கோர்ட்டில் ஆஜரானார் தனுஷ்; திடீர் பெற்றோர் வழக்கில் மாற்றம்

கோர்ட்டில் ஆஜரானார் தனுஷ்; திடீர் பெற்றோர் வழக்கில் மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanushநடிகர் தனுஷ், தங்களின் சொந்த மகன் என மேலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பஸ் கண்டக்டர் கதிரேசன் மற்றும் இவரது மனைவி மீனாட்சி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

மேலும், அதற்கான ஆதாரங்களையும் அவர்கள் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, இன்று நடிகர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் ஆஜரானர் தனுஷ்.

அப்போது திடீர் பெற்றோர் கூறிய உடல் அடையாளங்களை தனுஷ் காண்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கை மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

Actor Dhanush appeared in madurai high court

முதல் அமைச்சருக்கு கமல்ஹாசன் பாராட்டு

முதல் அமைச்சருக்கு கமல்ஹாசன் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanஜல்லிக்கட்டு பிரச்சினை, தமிழக முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பு பிரச்சினை என எதையும் விடாமல் கமல் தன் கருத்துக்களை கூறி வருகிறார்.

தற்போது ஹைட்ரோ கார்பன் என்ற மீத்தேன் குறித்து தன் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெரு நஷ்டமாகும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

இதற்கு கமல் தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

More Articles
Follows