JUST IN : ELECTION LEADING : தமிழகம் புதுச்சேரி கேரளா அசாம் & மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில தேர்தல் நிலவரம்

JUST IN : ELECTION LEADING : தமிழகம் புதுச்சேரி கேரளா அசாம் & மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில தேர்தல் நிலவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமி

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த தேர்தல் முடிவுகள்..

தமிழக சட்டமன்றத் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை; காலை 12 மணி நிலவரம்!
திமுக 140 தொகுதிகளில் முன்னிலை
அதிமுக கூட்டணி 92 இடங்களில் முன்னிலை.. கமல் கட்சி – 1

புதுச்சேரி : காலை 12 மணி நிலவரப்படி என்.ஆர்.காங் + பிஜேபி கூட்டணி 11 தொகுதிகளில் முன்னிலை… காங்கிரஸ் + திமுக கூட்டணி 4 இடங்களில் மட்டுமே முன்னிலை.

கேரள தேர்தல் முடிவுகள் : கேரளாவில் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளில் 16 தனித் தொகுதிகளாகும்… சிபிஎம் இடது சாரி தொடர்ந்து முன்னிலை..94 தொகுதிகளில் முன்னிலை.. மீண்டும் பினராயி விஜயன் ஆட்சி.

மேற்குவங்க தேர்தல் முடிவுகள் : திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை.. ஆனால் மம்தா பின்னடைவு.

அசாம் தேர்தல் 12 மணி : பாஜக தொடர்ந்து 80 தொகுதிகளில் முன்னிலை.
——————————————–

புதுக்கோட்டை தொகுதியில் தபால் வாக்குப்படிவத்தில் குளறுபடி இருப்பதாக புகார்.. திமுக – அதிமுக இடையே கடும் வாக்குவாதம்.

சென்னை மண்டலத்தில் உள்ள 15 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை.

திருவொற்றியூர் தொகுதியில் சீமான் பின்னடைவு… தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சியே அதிக வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது..

ராயபுரத்தில் ஜெயக்குமார், மதுரவாயலில் பெஞ்சமின், ஆவடியில் மாஃபா பாண்டியராஜன், திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன், விழுப்புரம் தொகுதியில் சி.வி.சண்முகம், ராஜபாளையத்தில் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

புதுச்சேரி ஏனாம் தொகுதியில் ரங்கசாமிக்கு பின்னடைவு.
காங்கிரஸ் கூட்டணி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் 700 வாக்குகள் முன்னிலை..

TN Kerala Puducherry Assam West Bengal Election Result updates

டபுள் மாஸ்க் போட சொல்லி திரை பிரபலங்கள் விழிப்புணர்வு கொடுங்க..; முதல்வர் வேண்டுகோள்

டபுள் மாஸ்க் போட சொல்லி திரை பிரபலங்கள் விழிப்புணர்வு கொடுங்க..; முதல்வர் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினம் அதிகரித்து செல்கிறது.

தற்போது கொரோனா 2வது அலையிலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தாலும் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது.

இந்த நிலையில், பொது இடங்களில் மக்கள் இரட்டை முகக்கவசங்களை அணியுமாறு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அந்த மாநில கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டர் பக்கத்தில்…

கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் அனைவரும் இரட்டை முகக் கவசங்களை அணிய வேண்டும்.

பொது இடங்கள் மட்டுமல்லாமல் கடைகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் இரட்டை முகக் கவசங்களை அணிய வேண்டும்.

சமூக ஆர்வலர்கள், மத போதகர்கள், திரையுலக பிரபலங்கள் இது குறித்த விழிப்புணர்வில் பங்கேற்க வேண்டும்.”

இவ்வாறு முதல்வர் பதிவிட்டுள்ளார்.

Kerala CM Vijayan requests people to use double masks to protect from Corona

என் அன்பை வாங்கிக்கோங்க..; யோகி பாபுவுக்கு பிரியா பவானி சங்கர் கோரிக்கை

என் அன்பை வாங்கிக்கோங்க..; யோகி பாபுவுக்கு பிரியா பவானி சங்கர் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யோகிபாபு ஷீலா சங்கிலி முருகன் உள்ளிட்டோர் நடித்த படம் ‘மண்டேலா’.

இப்படத்தை மடோன் அஷ்வின் என்பவர் இயக்க தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரித்து இருந்தார்.

இவர் எடுத்த ஏலே படமும் தியேட்டர் அதிபர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக டிவியில் நேரடியாக ஒளிபரப்பானது. அதே போல் ‘மண்டேலா’ படத்தையும் விஜய் டிவியில் நேரடியாக ரிலீஸ் செய்து ஒளிப்பரப்பினர்.

இது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

எனவே தமிழக புதுச்சேரி சட்டன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கு முன்பே ஒளிப்பரப்பினர்.

இந்த நிலையில் இந்த படத்தை இப்போது பார்த்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

இது குறித்து அவர் கூறியதாவது…

“யோசிச்சு பார்த்தா கடந்த சில பல நாட்கள்ல என் கண்ணில் கருத்தில் பதிந்த ஒரே நல்ல விஷயம் #Mandela @madonneashwin @vidhu_ayyanna @yogibabu_offl ணா! என் அன்பை வாங்கிக்கோங்க. அவ்ளோதான். வேற ஒன்னுமில்லை. நன்றி வணக்கம்.

Priya Bhavani Shankar request to Actor Yogi Babu

தேர்தல் முடிவுகள் வர தாமதமாகும்.; புதுச்சேரி் மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் வர தாமதமாகும்.; புதுச்சேரி் மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மாநலத்திலும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

அங்குள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நாளை நடைபெற உள்ளது.

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை லாஸ்பேட்டை அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி ஆகிய 3 மையங்களில் நடைபெறுகிறது.

காரைக்காலின் 5 தொகுதிகளுக்கு காரைக்கால் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்க அறையில் செய்தியாளர்களை பூர்வா கார்க் சந்தித்தார்.

“மத்திய அரசின் கொரோனா விதிமுறைகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள், உயர்நீதிமன்ற உத்தரவு ஆகியவை வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றப்பட வேண்டும்.

கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யும் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அல்லது 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

அந்த நபர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தினுள் அனுமதி வழங்கப்படும்.

அவர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்து கொண்டு வர வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைவரும் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அங்கு முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்படும்.

பிபிஇ கிட் வேண்டுமாலும் வாங்கிக் கொள்ளலாம்.

வெற்றி வேட்பாளர் சான்றிதழ் பெற வரும்போது 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி வெற்றி ஊர்வலம் நடத்தக்கூடாது.

கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. எனவே கூட்டம் கூடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

ஏற்கனவே ஒரு அறைக்கு 7 டேபிள்கள் போடப்பட்டது. தற்போது கொரோனா விதிகளை பின்பற்றப்படுவதால் ஒரு அறைக்கு 5 டேபிள்கள் மட்டுமே போடப்பட்டுள்ளது.

இதனால் தேர்தல் முடிவுகள் வர சற்று காலதாமதம் ஆகலாம்.

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளில் காலை 8 மணிக்கு, முதல் 8 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.

முன்னணி நிலவரம் 10 மணிக்கு தெரியவரும். இதன் முடிவு 12.30 மணி வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது கட்டமாக 1 மணிக்கு 8 தொகுதிகள் எண்ணப்படுகிறது. அதன் முடிவுகள் தெரிய 6 மணி வரை ஆகலாம்.

இறுதியாக மாலை 6 மணிக்கு 7 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இதன் முடிவு தெரிய நள்ளிரவு வரை ஆகலாம். ஒவ்வொரு தொகுதிக்கும் 4 முதல் 5 சுற்றுவரை செல்ல வாய்ப்புகள் உள்ளது.

நாளை ஞாயிறு ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்புடன் இருக்க வேண்டும்” என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

Puducherry Election Result will be delay says District Collector Purva Garg

2 வாரம் எல்லா கடையும் மூடுறோம்..; டாஸ்மாக்ல மட்டும் கொரோனா வராதா..? – வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் கேள்வி

2 வாரம் எல்லா கடையும் மூடுறோம்..; டாஸ்மாக்ல மட்டும் கொரோனா வராதா..? – வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா தொற்றின் பாதிப்பு தமிழகத்தில் தினம் தினம் அதிகரித்து வருகிறது.

எனவே கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுவதாகவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வார நாட்களில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள அனைத்து பெரிய கடைகளும் அடைக்கப்பட வேண்டும்.

உணவகங்கள், டீக்கடைகளில் பார்சல் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 15 நாட்கள் முழு ஊரடங்கு என்று அரசாங்கம் முடிவெடுத்தால் கடைகளை முழுமையாக அடைத்து ஒத்துழைப்பு தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

அதே சமயம்.. எந்த அடிப்படையில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள் மூடப்பட வேண்டும் என்பதற்கு உரிய காரணங்கள் ஏதும் இல்லை என கேட்டுள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசலில் மதுபானங்களை வாங்கும்போது ஏற்படாத கொரோனா தொற்று, அத்தியாவசிய பொருள்களை வாங்கும் போது ஏற்படுகிறது என்பது ஏற்படையது அல்ல.

அரசின் இச்செயல் ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் விக்கிரமராஜா.

Will TN Govt close Tasmac shops for 2 weeks

‘கடைசி எச்சரிக்கை’ தரும் டவுட் செந்தில்.; தாணு சீமான் பாக்யராஜ் ஜிவிபி ஜஸ்டின் பிரபாகரன் & ஆரி ஆதரவு

‘கடைசி எச்சரிக்கை’ தரும் டவுட் செந்தில்.; தாணு சீமான் பாக்யராஜ் ஜிவிபி ஜஸ்டின் பிரபாகரன் & ஆரி ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ‘கடைசி எச்சரிக்கை’ எனும் 23 நிமிட குறும்படத்தை இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்கள் இன்று வெளியிட்டார்.

சுகுமார் கணேசன் எழுதி இயக்கியுள்ள படம் கடைசி எச்சரிக்கை.

மனிதனின் உணவுப் பழக்கம், சுற்றுச் சூழல் சீர்கேடு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் ‘கடைசி எச்சரிக்கை’

23 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் நாயகனாக சன் டிவி புகழ் டவுட் செந்தில் நடித்துள்ளார். அவருடன் நெல்லை சிவா, அமிர்தலிங்கம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை முன்னணி ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அவர்கள் வெளியிட, முன்னணி மற்றும் முன்னோடித் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு அவர்கள் டீசரை வெளியிட்டு வாழ்த்தினார்.

படத்தின் ட்ரைலரை இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் வெளியிட்டார்.

பாடல்களை முன்னணி இசையமைப்பாளர்களான ஜிவி பிரகாஷ் மற்றும் ஜஸ்டின் பிரபாகரன் வெளியிட்டனர்.

மேலும் இப்படத்தை பார்த்து நடிகர் ஆரி அர்ஜுனன், சமீபத்தில் கலைமாமணி விருது பெற்ற சண்டை இயக்குனர்
ஜாகுவார் தங்கம், ஹீலர் பாஸ்கர் மற்றும் இசையமைப்பாளர் தாஜ் நூர் அவர்களும் படத்தை வெகுவாக பாராட்டி வாழ்த்தியுள்ளனர் .

இப்போது படத்தை நடிகர் மற்றும் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்கள் வெளியிட்டு வாழ்த்தினார்.

இத்தனை பிரபலங்கள் மொத்தமாக பாராட்டியது கடைசி எச்சரிக்கை குறும்படத்திற்கான மிகப் பெரிய அங்கீகாரமாகும்.

மேலும், 2020ம் ஆண்டு நடந்த கிளப்பி மினி மூவி ஃபெஸ்டிவலில் சிறந்த படத்துக்கான விருது, செய்ஹர் தேசிய திரைப்பட விழாவில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது, கோல்டன் ஸ்பேரோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது உள்பட மொத்தம் 6 விருதுகளை ‘கடைசி எச்சரிக்கை’ படம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது..

*கடைசி எச்சரிக்கை*

நடிகர்கள் – கலைஞர்கள் விவரம்:

நடிப்பு: டவுட் செந்தில், நெல்லை சிவா, அமிர்தலிங்கம்.

தயாரிப்பு: அரவிந்தன் V
என்டர்டெயின்மெண்ட் வ. சீனிவாசன்

எழுத்து – இயக்கம் : சுகுமார் கணேசன்

பாடல்கள் : சுகுமார் கணேசன்

இசை: ஏஐஎஸ் நவ்ஃபால் ராஜா

ஒளிப்பதிவு: வி சந்திரசேகர்

படத்தொகுப்பு: தீபக், விஜய் சங்கர், எம். கோடீஸ்வரன்

ஸ்டுடியோ: நாக் ஸ்டுடியோ

மக்கள் தொடர்பு: எஸ் ஷங்கர்

Doubt Senthil starring The Last Warning This movie won 6 awards

More Articles
Follows