#BREAKING திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளிக்க விஜய் & சிம்பு கோரிக்கை..; அரசு அனுமதி

#BREAKING திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளிக்க விஜய் & சிம்பு கோரிக்கை..; அரசு அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Simbuகொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் மாதம் 17ந் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு கடந்தாண்டு நவம்பர் 10 முதல் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது.

50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டது.

மாஸ்டர் ரிலீஸ்… விஜய் வேண்டுகோள்.; முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் பேட்டி

எனவே இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டியும் இருக்கையில் தடுப்பு வைத்தும் தடுத்து வைத்தும் தியேட்டர்கள் இயங்கி வந்தன.

இதனால் சிறிய படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ரிலீசாகின.

இந்த நிலையில் 2021 பொங்கலுக்கு ரிலீசாகும் மாஸ்டர், ஈஸ்வரன் படத்திற்காக 100% இருக்கைகளுக்கு அனுமதியளிக்க விஜய், சிம்பு ஆகியோர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்

இவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் தமிழக அரசு அனுமதியளித்து இன்று ஜனவரி 4 அரசாணை வெளியிட்டுள்ளது.

TN govt allowing 100% occupancy in theatres

நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள்..; என் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ பாருங்கள்.. விஜய் ரசிகர்கள் ‘ஈஸ்வரன்’ பாருங்கள்… – சிம்பு அறிக்கை

நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள்..; என் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ பாருங்கள்.. விஜய் ரசிகர்கள் ‘ஈஸ்வரன்’ பாருங்கள்… – சிம்பு அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay simbuஇனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்!

“ஈஸ்வரன்” பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான்.

திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம்.

அதற்காகத்தான் இந்தக் கொராணா காலத்திலும் வெகுபிரயத்தனப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில் நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சியல்ல.

இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதேசமயம் அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வரவேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய, அந்த மீடியமிற்கு செய்யும் மரியாதை.

அதில் எனது பங்கும் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள். மக்கள் எங்களைத் திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள்.

அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டிருக்கலாம். ஆனால் திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வரவேண்டுமென பொறுத்திருந்து வெளியிடுகிறார்.

திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும். கலவையான படங்கள் வரும்போது மக்கள் திரையரங்குக்கு பயமின்றி வரத் தொடங்குவார்கள்.

என் ரசிகர்கள், மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள்.

திரையரங்குகள் நிறையட்டும். கொராணா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றிபெற்று நிற்கும் நாம் நமது மன அழுத்தங்களிலிருந்து வெளியாக வேண்டும். அதற்கு இந்தப் படங்கள் நிச்சயம் உதவும். உங்களை மகிழ்விக்கும்.

விநியோகஸ்தர்கள், திரையரங்குகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நல்லபடியாக மீண்டு வரவேண்டும்.

திரையுலகம் செழிக்க வேண்டும்.

அதற்கான வாசலை மாஸ்டரும், ஈஸ்வரனும் செய்யும் என்று நம்புகிறேன்.

அரசாங்கம் கடைகள், மால்கள் , கடற்கரை என எல்லாமே முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டன.

திரையரங்குகள் முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டாலொழிய அந்த பழைய நிலை வராது.

வசூல் நஷ்டமே ஏற்படும். அரசும் தயைகூர்ந்து 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து, பாதுகாப்பு விதிகளை அதிகரித்து, திரையரங்க உரிமையாளர்களையும், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விரைந்து தமிழ்ப் புத்தாண்டிற்குள் நூறு சதவீத இருக்கை ஆக்ரமிப்பு குறித்து உத்தரவிட்டால், மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

நன்றி

#அன்புசெய்வோம்

இவண்

உங்கள்

சிலம்பரசன் TR

STR asks audiences to watch both Master and Eeswaran this Pongal in theatres

குரூப் 1 தேர்வில் ‘பரியேறும் பெருமாள்’ படம் பற்றிய கேள்வி

குரூப் 1 தேர்வில் ‘பரியேறும் பெருமாள்’ படம் பற்றிய கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TNPSC asks questions on Pariyerum Perumal movieபா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய படம் ‘பரியேறும் பெருமாள்’.

2018ல் வெளியான இந்த படத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தை அனைவருமே பாராட்டினர். பல விருதுகளை வென்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இன்று நடைப்பெற்ற குரூப் 1 தேர்வு கேள்வியில் இந்த படம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அந்த கேள்வியில் ‘தலைசிறந்த படைப்பான பரியேறும் பெருமாள் என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்து கீழ்காணும் கூற்றுகளில் தேர்வு செய்யவும்’ என்றுக் கூறி சில ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த கேள்வியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பரியேறும் பெருமாள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

TNPSC asks questions on Pariyerum Perumal movie

 

pariyerum perumal question in govt question paper

இனிமேல் பேச எதுவுமில்லை… செயல் மட்டும் தான்… – சிம்பு

இனிமேல் பேச எதுவுமில்லை… செயல் மட்டும் தான்… – சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STR aka Simbu mass speech at Eeswaran audio launchசுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால், நந்திதா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஈஸ்வரன்’.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஜனவரி 2ஆம் தேதி மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது:

படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசும்போது,

இதேமாதிரி போய்கிட்டே இருக்க வேண்டும் என்று ஆசை. படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் திரையரங்கில் சென்று பாருங்கள்.

இயக்குநர் பாரதிராஜா பேசும்போது,

நான் பார்த்து வளர்ந்தபிள்ளை சிம்பு. நான் கேள்விப்பட்ட சிம்பு வேறு. நான் பார்த்து பழகிய சிம்பு வேறு. தங்கமான பையன். அவரைப் பற்றி சொன்னார்கள். ஆனால், 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45க்கே வந்துவிடுவார். இப்படம் விரைந்து முடிப்பதற்கு இதுவே உதாரணம். மிகவும் ஒழுக்கமானவர் சிம்பு. இப்படத்தின் பாடல்கள் எப்படி நன்றாக வந்திருக்கிறதோ அதுபோன்ற படமும் நன்றாக வந்திருக்கிறது. இப்படத்தின் இசை மிகவும் அருமையாக உள்ளது. நிதி அகர்வால் அருமையாக தமிழ் பேசுகிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

நந்திதா சிறப்பாக நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் நடித்த ஒவ்வொருவரும் நன்றாக நடித்தார்கள். படப்பிடிப்பில் இருப்பது போன்ற எண்ணமே தோன்றவில்லை. என் குடும்பத்தில் உள்ளவர்கள் என்று தான் தோன்றியது. ஒளிப்பதிவைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. நேர்த்தியான திறமைக்காரர் திரு.

இப்படம் குடும்ப பாங்கான படம். இப்படத்தை பொழுதுபோக்காக பார்க்காமல் குடும்பத்தோடு வந்து பாருங்கள்.

நாங்கள் அந்த காலத்தில் 27 நாட்களில் படத்தை முடித்திருக்கிறோம். ஆனால் இப்போது டிஜிட்டல் உலகத்தில் 28 நாட்களிலேயே எடுத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு இயக்குநர் சுசீந்திரனின் திறமை தான் காரணம்.

என் பிள்ளை மனோஜ் எனக்கு ஜுனியராக நடித்து நான் பார்த்த படம் ‘ஈஸ்வரன்’ நெகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

நடிகர் பாலசரவணன் பேசும்போது,

எனக்கு மிக மிக முக்கியமான படம் ‘ஈஸ்வரன்’. அதற்கு இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி. ஒரே நேரத்தில் 3 படத்தில் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். சிம்புவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி.

எல்லோரிடமும் ஒரே மாதிரி பேசக் கூடியவர் சிம்பு. அனைவரிடமும் ஒரே பேச்சு ஒரே முகம் தான். ஒரு நாள் படப்பிடிப்பில் அன்பைக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அவர் கொடுத்ததால் தான் இன்று அவருக்கு கிடைத்திருக்கிறது என்றார்.

நடிகை நந்திதா ஸ்வேதா பேசும்போது,

சினிமாத் துறைக்கு வரும்போது அனைவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். எனக்கு இருந்தது. அது சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. ஆனால், நான் லிட்டல் சூப்பர் ஸ்டாருடன் நடித்து விட்டேன் என்பதில் மகிழ்ச்சி. இப்படத்தில் நிறைய கலைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.

அறிமுக நடிகை நிதி அகர்வால் பேசும்போது,

சிம்புவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. சிம்பு திறமையானவர். அவர் சிங்கிள் டேக் நடிகர். இரண்டாவது டேக் போகவே மாட்டார் என்றார்.

தயாரிப்பாளர் பாலாஜி கபா பேசும்போது,

இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி கூற வேண்டும். அதிலும் இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி கூற வேண்டும். மிகவும் நேர்மையானவர். அவர் கூறியது போல் 28 நாட்களிலேயே படத்தை முடித்துக் கொடுத்தார்.

சிம்புவைப் பற்றி கூற வேண்டுமென்றால் அவரை நான் இதுவரை மூன்று முறை தான் பார்த்திருக்கிறேன். அவர் என்ன பேசுவாரோ அப்படிதான் அவருடைய செயலும் இருக்கும். சிம்புவிற்கு நன்றி என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது

சிம்புவைப் பற்றி எங்களைவிட ரசிகர்களாகிய உங்களுக்குத்தான் அதிகமாக தெரியும். ஏனென்றால் எங்களைவிட அதிகமாக நீங்கள்தான் அவரை அதிகமாக பின்தொடருகிறீர்கள்.

ஆனால், சிம்புவுடன் நான் பழகும்போது தான் தெரிந்தது. அவருக்கு ஏன் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று. இன்னும் சில வருடங்களில் நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் என்பதில் ஐயமில்லை. இந்த வருடத்திலேயே அவர் நடிப்பில் 3 படங்கள் வெளியாகும்.

சிம்புவை வைத்து இயக்க போகிறேன் என்றதும் பல தயாரிப்பாளர்கள் எனக்கு போன் செய்து வேண்டாம் என்றார்கள். ஆனால், சிம்பு மற்றவர்கள் சொல்வதற்கு காது கொடுக்காதீர்கள். என் பின்னால் நீங்கள் மட்டும் இருங்கள், படப்பிடிப்பிற்கு 9ஆம் தேதி அன்று நான் இருப்பேன் என்றார். அதேபோல், நானும் இயக்கினேன். ஒரு மாதத்திலேயே படப்பிடிப்பு முடிந்து பொங்கலுக்கு வெளியிடுகிறோம்.

இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. சிலர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். அவர்களையெல்லாம் ‘ஈஸ்வரன்’ படத்தின் வெற்றி விழாவில் சந்திக்கிறேன்.

நிதி அகர்வாலை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி.

இப்படம் விரைந்து முடித்து வெளியாவதற்கு தயாரிப்பாளர் பாலாஜி காப்பா தான் காரணம். அவருக்கு மிகப்பெரிய நன்றி.

இப்படத்தில் சிம்னடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் KVதுரை.

நடிகர் சிம்பு பேசும்போது..

முதலில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்த கலைஞர்கள், தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருடன் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இறைவனுக்கு மட்டும் தான் தெரியும் இந்த படம் எப்படி விரைவாக முடிந்தது என்று.
‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் பாதியில் நின்றது. அந்த சமயத்தில் குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும் என்று இப்படத்தின் கதையை கூறினார் இயக்குநர். இப்படத்தின் கதையைக் கேட்டதும், கொரோனாவால் அனைவருக்கும் எதிர்மறையாக, மனைஉளைச்சலில் இருக்கும் சமயத்தில் இப்படத்தின் கதை நேர்மறையாக இருந்தது. ஆகையால், இப்படம் பார்க்கும் அனைவருக்கும் நேர்மறை எண்ணம் அதிகரிக்கும்.. அதனால்தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

என்னுடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் நான் ஒன்று கூற விரும்புகிறேன். அனைவரும் உங்கள் உள்ளத்தை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவரிடம் அறிவுரைக் கேட்பதை நிறுத்துங்கள். உங்கள் உள்ளத்தில் தான் இறைவன் இருக்கிறான். அதைதான் நான் செய்தேன்.

கொரோனா காரணமாக சிலர் திரையரங்கில் வெளியிடுகிறார்கள், சிலர் ஓடிடியில் வெளியிடுகிறார்கள். அது அவரவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் சினிமா என்றால் தியேட்டரில் பார்ப்பது தான் சுகம். அதனால் இப்படம் தியேட்டரில் தான் வரும்.

‘ஒஸ்தி’ படத்திற்கு தமன் இசையமைத்தார். இரவு பகலாக போனிலேயே பேசி பணியை முடித்துக் கொடுத்தார். நந்திதா ஸ்வேதா, நிதி அகர்வாலுக்கு நன்றி.

பாரதிராஜா அப்பாவை பார்க்கும்போது எனக்கு பெரிய சக்தி கிடைத்தது. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார். இப்படத்தில் எனக்கும் பாலசரவணனுக்கும் நல்ல வைபரேஷன் இருக்கும்.

ஒளிப்பதிவைப் பார்க்கும்போது தெய்வீகமாக இருக்கிறது. வசனம் நன்றாக எழுதியிருக்கிறார்.

என் ரசிகர்களுக்கு ஒன்று கூற ஆசைப்படுகிறேன். இனிமேல் பேசுவதற்கு எதுவுமில்லை செயல் மட்டும் தான்.

இந்த வருடத்திலேயே 3 படங்கள் வரப்போவதாக கூறினார்கள். அது உண்மைதான். ‘மாநாடு’, ‘பத்து தல’, அதற்கடுத்து ஒரு படம் இருக்கிறது. சுசீந்திரன் சார் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்கிறேன் என்றார்.

விழாவின் இறுதியாக ‘ஈஸ்வரன்’ படத்தின் இசைத் தகடு வெளியிடப்பட்டது.

STR aka Simbu mass speech at Eeswaran audio launch

தனுஷ் படத்திற்காக புதிய அவதாரம் எடுக்கும் பாடலாசியர் விவேக்

தனுஷ் படத்திற்காக புதிய அவதாரம் எடுக்கும் பாடலாசியர் விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyricist Vivek became dialogue writer in Dhanush movieபேட்ட, பிகில், தர்பார், பட்டாஸ் உள்ளிட்ட பல படங்களில் பாடல் எழுதியுள்ளார் பாடலாசிரியர் விவேக் .

அண்மைக்காலமாக இவரின் பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கவுள்ள தனுஷ் படத்தில் இவர் பணியாற்ற இணைந்துள்ளார்.

இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில் பாடலாசியரான விவேக் இந்த படத்தில் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுத உள்ளதாக சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது.

இந்த தலைமுறையின் முன்னணி நடிகரான தனுஷ் அவர்களுடன் இணைந்து வேலை செய்வது பாக்கியமான ஒன்று.

இயக்குநர் கார்த்திக் நரேனுக்கு நன்றி. ஜி.வி.பிரகாஷ் மற்றும் மாளவிகா மோகனனுடன் வேலை செய்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என விவேக் பதிவிட்டுள்ளார்.

Lyricist Vivek became dialogue writer in Dhanush movie

ஆத்தா-வை கைவிட்ட பாரதிராஜா..; இளையராஜா கூட்டணி முறிவு..

ஆத்தா-வை கைவிட்ட பாரதிராஜா..; இளையராஜா கூட்டணி முறிவு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bharathiraja announces his Aatha movie dropஇயக்குநர் பாரதிராஜா தற்போது முழு நேர நடிகராக மாறியிருக்கிறார்.

இவர் கடைசியாக இயக்கி நடித்த படம் மீண்டும் ஒரு மரியாதை.

என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்த இந்த படம் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீசானது.

தற்போது சிம்புவுடன் ‘ஈஸ்வரன்’ மற்றும் மாநாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார் பராதிராஜா.

இதனிடையில் ‘ஆத்தா’ என்ற திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்தார் பாரதிராஜப. பாரதி கிருஷ்ணகுமாரின் கதையை திரைப்படமாக எடுக்க உள்ளதாக கூறப்பட்டது.

27 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது கொரோனா சூழ்நிலையால் ஆத்தா படம் கைவிடப்பட்டதாக பாரதிராஜா அறிவித்துள்ளார்.

இது தொடர்பான பாரதிராஜா அறிக்கையில்….

“15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்த கதையை படமாக்கி இருந்தால்.

உங்கள் பாரதிராஜாவை கண்டிருக்கலாம். காலசூழ்நிலை ஒன்று உள்ளது. நடைமுறை நவீன முற்போக்கான இந்த கால கட்டத்தில் வந்த பல சினிமாக்களின்கருவை நாடியுள்ளது ஆத்தா.

இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும்,தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தினால்,ஆத்தா கைவிடப்படுகின்றன.

புதிய அறிவிப்பு , புதிய தலைப்புடனும், புதிய தொழில்நுட்ப கூட்டணியுடன் மிக விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது” இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bharathiraja announces his Aatha movie drop

More Articles
Follows