அஜித்திடம் ‘வலிமை’ அப்டேட் கேட்ட ரசிகர்..; தல என்ன சொன்னாரு தெரியுமா..?

அஜித்திடம் ‘வலிமை’ அப்டேட் கேட்ட ரசிகர்..; தல என்ன சொன்னாரு தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Valimai (1)அஜித் நடிப்பில் வினோத் இயக்கி வரும் படம் ‘வலிமை’

இதில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் அஜித்.

இந்தப் படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.

ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்டோர் அஜித்துடன் நடித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே ‘வலிமை’ அப்டேட்டை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

தமிழக முதல்வரின் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவரிடம் கூட அப்டேட் கேட்ட கூத்தும்… கடவுள் முருகனிடமும் அப்டேட் கேட்ட கூத்தும் இந்த தமிழகத்தில் மட்டும் தான் நடக்கும்.

(முதல்வரிடம் முறையிட எவ்வளவோ பிரச்னைகள் இருக்கும் போது இது தேவதையா? என பொது மக்களே கேட்டனர்.)

இந்த நிலையில் அண்மையில் பைக்கிலேயே பயணம் செய்த அஜித்தை சிலர் சந்தித்து புகைப்படம் எடுத்தனர்.

அந்த சந்திப்பின் போது ஒரு ரசிகர் அஜித்திடமே வலிமை அப்டே குறித்து கேட்டு இருக்கிறார்.

அதற்கு அஜித் அவரது பாணியில் சிரித்துக் கொண்டே, “SOON” என பதில் அளித்ததாக அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

Thala Ajith about Valimai update

அசோக்செல்வன் & அஞ்சு குரியனுடன் நட்சத்திர பட்டாள கூட்டணி.; படத்தயாரிப்பில் இறங்கும் A R ENTERTAINMENT

அசோக்செல்வன் & அஞ்சு குரியனுடன் நட்சத்திர பட்டாள கூட்டணி.; படத்தயாரிப்பில் இறங்கும் A R ENTERTAINMENT

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ashok Selvanதமிழ் திரையுலகில் திரைப்பட விநியோகம் செய்து கொண்டிருக்கும் A R ENTERTAINMENT எனும் நிறுவனம் திரைப்பட தயாரிப்பிலும் அடியெடுத்து வைக்கிறது.

இந்த நிறுவனத்தின் முதல் படைப்பை அறிமுக இயக்குநர் விஷால் வெங்கட் எழுதி இயக்குகிறார்.

இவர் சந்துரு மற்றும் மதுமிதா ஆகிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும், டிவி, OTT மற்றும் விளம்பரத்துறைகளிலும், பிக்பாஸ் போன்ற முன்னணி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றிய அனுபவம் உடையவர்.

இத் திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் அஷோக் செல்வன், ரியா, பிரவீன்ராஜா, ரித்விகா, அபிஹாசன், அஞ்சு குரியன், மணிகண்டன் ஆகியோர் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், K.S.ரவிக்குமார், பானுப்பிரியா, மற்றும் அனுபமா குமார் ஆகியோர் ஒன்றினைந்து நடிக்க இருக்கிறார்கள்.

விக்ரம் வேதா படத்தின் புகழ் பெற்ற வசனகர்த்தா மணிகண்டன் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட KD என்கிற கருப்புதுறை படத்தின் ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ரதன் இசையமைக்கிறார்.

பிரசன்னாGK படத்தொகுப்பு செய்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

TRIDENT ARTS நிறுவனம் இந்த படத்தை வெளியீடு செய்கிறது.
இந்த படம் வெவ்வேறு வாழ்க்கை சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் நான்கு கதாபாத்திரங்களின் ஒரு உணர்ச்சிப் பூர்வமான கதையாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

இரண்டு நாட்களில் நடக்கும் இந்த கதை மனித மனத்தின் உள்ளார்ந்த உணர்ச்சிகளை பற்றி பேசும் படமாகவும் இருக்கும்.

Ashok Selvan and Anju Kurian joins for a new film

இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டினர் கருத்து..; மத்திய அரசு கண்டனம்

இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டினர் கருத்து..; மத்திய அரசு கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Modiபுதுடெல்லியில் கடந்த 80 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று போலீஸ் தடியடியுடன் கலவரமாக மாறியது.

இந்திய தேசிய கொடி பறந்த செங்கோட்டையில் அன்றைய தினம் சீக்கிய கொடியையும் பறக்க விட்டனர் விவசாயிகளில் சிலர்.

இன்று வரை தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்க பாப் பாடகி ரிஹானா என்பவர் “நாம் ஏன் விவசாயிகள் போராட்டம் பற்றி பேசுவதில்லை?” என டுவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரை தொடர்ந்து, சுவீடனை சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க் என்பவரும், இந்தியாவில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்” என தெரிவித்தார்.

இது தொடர்பாக, வெளிநாட்டினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“விஷயம் தெரியாமல் பேச வேண்டாம். கிளர்ச்சியை தூண்டும் வகையில் செயல்பட வேண்டாம்” என மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நம் நாட்டு விவகாரத்தில் தலையிட்டு கருத்து பதிவிட்ட பிரபலங்களுக்கு சச்சின் டெண்டுல்கர், நடிகர் அக்ஷய்குமார், நடிகை கங்கனா ரணாவத், டாப்சி உள்ளிட்டோர் தங்களது எதிர்ப்பை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Central Government launches India against Propaganda

பெயிண்ட் அடித்தவர் பெயரை உங்க வீட்டுக்கு வைப்பீர்களா..? ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ பெயருக்கு வைகோ கண்டனம்

பெயிண்ட் அடித்தவர் பெயரை உங்க வீட்டுக்கு வைப்பீர்களா..? ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ பெயருக்கு வைகோ கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vaikoகோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

“சென்னை மாநகர மெட்ரோவின் தலைமை அலுவலகம், கோயம்பேட்டில் அமைந்து இருக்கின்றது. அங்கே இருக்கின்ற பாலத்திற்கு, கடந்த சில நாள்களாக பெயிண்ட் அடித்தார்கள்.

திடீரென நேற்று, ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என, புதிய பெயரைச் சூட்டி எழுதி இருக்கின்றார்கள். இதுகுறித்து, எந்தவிதமான முன்அறிவிப்பையும், மாநகரத் தொடரி வெளியிடவில்லை. இந்தப் பெயர் மாற்றத்தை, வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

அந்த பாஷ்யம்? கோயம்பேடு மெட்ரோ நிலையத்தை விலைக்கு வாங்கி இருக்கின்றாரா? அது நிறுவனமா? அல்லது தனி ஒருவரா? அல்லது பராமரிப்புப் பணிகளுக்கான ஒப்பந்தம் பெற்று இருக்கின்றாரா?

அவர் தமிழ்நாட்டுக்குச் செய்த தியாகம் என்ன? எதற்காக இந்தப் பெயர் மாற்றம்? என்பதற்கு, சென்னை மாநகரத் தொடரி விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்தப் பெயர் மாற்றம், தமிழக அரசுக்குத் தெரியுமா? இதற்கு இசைவு அளித்து இருக்கின்றார்களா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

நாடு விடுதலை அடைந்து 72 ஆண்டுகளாக, வான் ஊர்திகள், தொடரி நிலையங்களில் எத்தனையோ நிறுவனங்கள் ஒப்பந்தங்களைப் பெற்றுச் செய்து வருகின்றன.

இதுவரை எந்த நிறுவனத்தின் பெயரையும் எழுதியது இல்லை. ஆனால், கேரளத்தில் திருவனந்தபுரம் வான்ஊர்தி நிலையத்தின் பராமரிப்புப் பணிகளைப் பெற்ற அதானி குழுமம், ‘அதானி ஏர்போர்ட்’ எனப் பெயர் மாற்றம் செய்ததை, கேரள மாநில அரசு கடுமையாகக் கண்டித்து இருக்கின்றது. உங்கள் வீட்டுக்கு வண்ணம் பூச வருகின்ற ஒருவர், வீட்டு முகப்பில், தன் பெயரை எழுதினால், ஒப்புக் கொள்வீர்களா?

அதுபோல, வான் ஊர்தி மற்றும் தொடரி நிலையங்களைப் பராமரிக்கின்ற நிறுவனங்கள், அவற்றைச் சொந்தம் கொண்டாட முடியாது.

கோயம்பேடு மெட்ரோ நிலையத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டு இருக்கின்ற பாஷ்யம் என்ற பெயரை, உடனே நீக்க வேண்டும்“ என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Koyembedu metro train station name controversy

BaashYaam Koyembedu Metro

ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்!

ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vaibhav Vani Bhojan2020 ஆம் ஆண்டில், ZEE5 ‘லாக்கப்’ ‘க / பெ. ரணசிங்கம்’, ‘முகிலன்’ உள்ளிட்ட தனித்துவமிக்க, தரமான படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து மகிழ்வித்தது.

இந்த 2021ம் வருடத்தில் ZEE5 மேலும் பல சுவாரஸ்யம் மிகுந்த படைப்புகளை தொடர்ந்து வழங்க இருக்கிறது.

ZEE5 இந்த வருடத்தின் அடுத்த படைப்பாக, வைபவ் – வாணி போஜன் நடிக்கும் இந்த முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை வழங்குகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தைப் பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி
படத்தொகுப்பு – கே.எல்.பிரவீன்
இசை – பிரேம்ஜி
கலை – கதிர்

இயக்குநர் ராதாமோகன் கூறுகையில், ”OTTல் இது எனது முதல் படம். மிகச்சிறந்த முறையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்து அனைவரும் அற்புதமாக நடிக்கிறார்கள்.

வைபவ், வாணிபோஜன், கருணாகரன் மற்றும் என் நண்பர் M.S.பாஸ்கர் ஆகியோருடன் இப்படத்தில் கை கோர்ப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி’’ என்றார்.

நடிகர் வைபவ் கூறுகையில்…, ”

‘லாக்கப்’, ‘டானா’, ‘கப்பல்’ போன்ற படங்களுக்குப் பிறகு, மீண்டும் இப்படத்தின் மூலம் ZEE5 உடனான நட்பு தொடர்கிறது. இந்த நகைச்சுவை படத்தில் இதுவரை நான் ஏற்றிராத சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

குடும்பமாக அனைவரும் ரசித்துப் பார்க்கும்படி எடுக்கப்படும் இப்படத்தில் இயக்குநர் ராதாமோகன், வாணிபோஜன், கருணாகரன், M.S.பாஸ்கர் ஆகியோருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.

நடிகை வாணி போஜன் கூறுகையில்,… ” ‘ZEE5ன் ‘லாக்கப்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் வைபவ் உடன் இணைந்து நடிக்கிறேன். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட ஒரு படம். நகைச்சுவை மிகுந்த இப்படத்தில் பெண்கள் குறிப்பாக இல்லத்தரசிகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கின்றேன்.

ராதாமோகன் சார், M.S.பாஸ்கர் சார், கருணாகரன் ஆகியோருடன் பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது.”

நடிகர் M.S.பாஸ்கர் கூறுகையில்,….

‘’இயக்குநர் ராதாமோகன் என்று சொல்வதை விட அவர் என் சகோதரர், என் நலனில் அக்கறை செலுத்துபவர், என்னை ரசிப்பவர், ரசித்துப் பல கதாபாத்திரங்களை உருவாக்குபவர், என்று சொல்லிக்கொண்டே போகலாம். அவரோடு ‘அழகிய தீயே’ படத்தில் இணைந்தேன்.

அதைத் தொடர்ந்து ‘மொழி’, ‘பிருந்தாவனம்’, ‘காற்றின் மொழி’ இப்படிப் பல படங்களில் நடித்த எனக்கு, இந்த படத்திலும் அவருடன் இணைய வாய்ப்பளித்திருக்கிறார்.

மத்த படங்கள் போல் இதிலும் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுப்பார் என்று அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

நடிகர் கருணாகரன் கூறுகையில்…,

”நான் சமீபத்தில் கேட்ட கதைகளில் இப்படத்தின் கதை மிகவும் ரசிக்கும்படி நகைச்சுவையாக இருந்தது. ‘உப்பு கருவாடு’ படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குநர் ராதாமோகனுடன் இணைவதில் மகிழ்ச்சி.

அதே சமயம் வைபவ், M.S.பாஸ்கர், வாணிபோஜன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதிலும் சந்தோஷம். இப்படத்தின் மூலம் அனைவரையும் மகிழ்விக்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

Vaibhav and Vani bhojan joins for Radha Mohan’s next

நாட்டின் பாதுகாப்பை காக்க பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்கள் முடக்கம்..!

நாட்டின் பாதுகாப்பை காக்க பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்கள் முடக்கம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

facebookகடந்த 2020ல் நவம்பர் மாதம், பொதுத் தேர்தல் மியான்மர் நாட்டில் நடைபெற்றது.

மொத்தமுள்ள, 476 இடங்களில், 396 இடங்களைக் கைப்பற்றியது ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக கட்சி.

இந்த நாட்டில் ராணுவ கட்சியாக கருதப்படும், ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி, 33 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

இதனால் மக்களே சற்று குழப்பத்தில் இருந்தனர்.

இந்த தேர்தல் முடிவில் மோசடி நடந்துள்ளதாக, ராணுவத்தினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

ஆனால் அதற்கான ஆதாரங்களை, அவர்களால் திரட்டி நிரூபிக்க முடியவில்லை.

இதனால் ராணுவத்தின் குற்றச்சாட்டுகளை, மியான்மர் தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.

இந்த பரபரப்பான நிலையில், மியான்மர் அரசை, ராணுவம் அதிரடியாக கைப்பற்றியது.

இதனையடுத்து மியான்மரில் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பை பேண பிப்ரவரி 7ம் தேதி வரை பேஸ்புக் தடை செய்யப்படும்’ என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Myanmar bans Facebook, temporarily

More Articles
Follows