ஜல்லிக்கட்டு குறித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

ஜல்லிக்கட்டு குறித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini jallikattuதமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

இந்த தீர்ப்புக்கு தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு ஆதரவாக ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.

“ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம் அதை விட்டுக்கொடுக்கவே கூடாது.

விதிமுறைகளை வகுக்கலாம். ஆனால், விளையாட்டை தடை செய்யக்கூடாது” என தெரிவித்துள்ளார்.

Superstar Rajini support Jallikattu

தமிழ் நடிகர்களில் சூர்யாவுக்கு கிடைத்த பெருமை

தமிழ் நடிகர்களில் சூர்யாவுக்கு கிடைத்த பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya as Bodhidharmarஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் 7ஆம் அறிவு.

இதில் உண்மைத் தமிழரான போதி தர்மன் கேரக்டர் இடம் பெற்றது.

இவர் சீனா நாட்டில் தமிழரின் கலை, பெருமைகளை எடுத்துரைத்தவர் என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில் ராம் மாத்வானி இயக்கத்தில் இந்த கேரக்டர் தற்போது ஒரு நீண்ட படமாக உருவாகவுள்ளதாம்.

இயக்குனர் ராம் மத்வானி மற்றும் இந்தி பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

இதில் போதி தர்மரின் முழு வாழ்க்கையும் இடம் பெறும் என கூறப்படுகிறது.

இது போதி தர்மராக நடித்த சூர்யாவுக்கு பெருமை என்றே கூறலாம்.

போதி தர்மர் பற்றிய ஒரு சிறு குறிப்பு…

  • போதி தர்மர் கி.பி.6ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ இளவரசன். காஞ்சிபுரத்தில் பிறந்தவர்.
  • பல்லவ மன்னன் நாகேந்திர பல்லவனின் 3வது மகன். முதல் மகன் மன்னனாவும், இரண்டாவது மகன் தளபதியாகவும் ஆன பிறகு போதி தர்மனை அமைச்சராக பதவியேற்க சொன்னார்கள்.
  • ஆனால் புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட போதி தர்மன் அரச வாழ்க்கை துறந்து துறவு வாழ்க்கை மேற்கொண்டார். பின்னர் நடை பயணமாகவே சீனாவுக்கு சென்ற போதி தர்மன் தமிழ்நாட்டின் தற்காப்பு கலையை மாற்றம் செய்து ஷாலின் குங்பூவாக அங்கு கற்றுக் கொடுத்தார்.
  • சீனாவில் தீராத நோயாக இருந்த அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்தார்.
  • போதி தர்மரின் இயற்பெயர் யாருக்கும் தெரியாது.
  • அவரை போதி தர்மர் என்றும் சீன மக்களை காப்பாற்றிய வீரத் துறவி என்றும் அவர் திராவிட நாட்டை சேர்ந்தவர் என்றும் சீன வரலாறு குறிப்பிடுகிறது.

Bodhidharmar Biopic will be produced by Bollywood director Ram

வேதாளத்தை வென்று கபாலியிடம் தோற்ற பைரவா

வேதாளத்தை வென்று கபாலியிடம் தோற்ற பைரவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali Vedhalam Bairavaaநேற்று விஜய் நடித்த, பைரவா படம் வெளியானது.

இப்படம் கோவை மாவட்டத்தில் வசூல் வேட்டை செய்து வருகிறது.

இதன் முதல்நாள் வசூல் மட்டும் அங்கு ரூ. 3.90 கோடியை கடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்குமுன் கோவையில் வெளியான படங்களில் வேதாளம் ரூ. 2.85 கோடியையும், தெறி படம் ரூ. 3.68 கோடியையும் வசூலித்துள்ளது.

இவை அனைத்தையும் முறியடித்து கபாலி படம் ரூ. 4.20 கோடியை கடந்து, முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Bairavaa beats Vedalam but failed to beat Kabali

‘கபாலி-பாகுபலி’க்கு பிறகு சீரஞ்சிவி பட சாதனை

‘கபாலி-பாகுபலி’க்கு பிறகு சீரஞ்சிவி பட சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

khaidi no 150தென்னிந்திய சினிமாக்களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களுக்கு பலத்த வரவேற்பு இருந்து வருகிறது.

எனவே, இம்மொழிகளில் உருவாகும் படங்கள் வசூலில் பெரும் சாதனைகளை படைத்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

இந்நிலையில் இதுநாள் வரை அரசியலில் கவனம் செலுத்திய மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள தற்போது கைதி நம்பர் 150 படத்தில் நடித்தார்.

இது விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.

இப்படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ. 48 கோடியை வசூலை அள்ளியுள்ளதாம்.

இதற்கு முன்பு ரஜினியின் கபாலி படம் மற்றும் ராஜமௌலியின் பாகுபலி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இந்த தொகையைவிட அதிகமாக வசூலித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Khaidi no 150 movie 1st day collection world wide After Kabali and Baahubali movies

சூப்பர் ஸ்டார் படத்தை தோற்கடித்த பைரவா

சூப்பர் ஸ்டார் படத்தை தோற்கடித்த பைரவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mohnanlal vijayபரதன் இயக்கி விஜய் நடிப்பில் பைரவா படம் நேற்று வெளியானது.

இப்படத்திற்கு கேரளாவிலும் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் ஏரிஸ்பிளக்ஸ் என்ற திரை வளாகத்தில் மட்டும் முதல்நாள் வசூலில் இப்படம் ரூ. 10.30 லட்சத்தை கடந்துள்ளதாம்.

சில மாதங்களுக்கு முன் வெளியான கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் புலிமுருகன் படம் ரூ. 8.20 லட்சம் வசூலை மட்டுமே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Bairavaa beats Puli Murugan record in Kerala theatre

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கயல்’ சந்திரன்

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கயல்’ சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

venkat prabu and kayal chandranவெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் சென்னை 28 பார்ட் 2.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்க தயராகிவிட்டார்.

இப்படத்தை அம்மா கிரியேசன்ஸ் சார்பாக டி.சிவா தயாரிக்கிறார்.

கயல் பட புகழ் சந்திரன் நாயகனாக நடிக்கிறாராம்.

இப்படத்தின் வசனங்களை இயக்குனர் ராஜேஷ் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Venkat Prabhu and Kayal Chandran teamsup for new project

More Articles
Follows