கராத்தே போட்டியில் தங்கத்தை வென்ற ஸ்டன் சிவாவின் மகன்கள்

கராத்தே போட்டியில் தங்கத்தை வென்ற ஸ்டன் சிவாவின் மகன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Stunt Master Stun Sivas two sons won Gold medal in Karate37வது தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் சார்பில் சென்னை கீழ்பாக்கம் JJ ஸ்டேடியத்தில் மாநில கராத்தே சாம்பியன் போட்டி நடைபெற்றது.

இன்று (13 ஜனவரி, ஞாயிறு) நடைபெற்ற போட்டியில் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவாவின் மகன்கள் 76KG பிரிவில் கலந்து கொண்ட ஸ்டிவன் குமாரும், 70KG பிரிவில் கலந்து கொண்ட கெவின் குமாரும் வெற்றி பெற்றனர்.

தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் மாநிலத்தலைவர் கராத்தே R.தியாகராஜன் வெற்றி பெற்ற ஸ்டிவன் குமார் மற்றும் கெவின் குமார் ஆகியோருக்கு தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்வில் ஸ்டன் சிவா, லாஸி சிவா, கனகராஜ், அல்தாப் ஆகியோர் உடனிருந்தனர்.

Stunt Master Stun Sivas two sons won Gold medal in Karate

Stunt Master Stun Sivas two sons won Gold medal in Karate

‘சார்லி சாப்ளின் 2’ போல பார்ட் 3 பார்ட் 4 வர வேண்டும்.. : பிரபுதேவா

‘சார்லி சாப்ளின் 2’ போல பார்ட் 3 பார்ட் 4 வர வேண்டும்.. : பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Prabhu Deva talks about Charlie Chaplin 2 sequelsஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சார்லி சாப்ளின் 2’.

அம்ரீஷ் இசையமைத்துள்ள இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா தயாரித்துள்ளார்.

வருகிற ஜனவரி 25-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதால், இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பிரபுதேவா பேசியதாவது:

இப்பட சூட்டிங்கில் கலந்துக் கொண்டு நடித்த நாட்கள் ரொம்ப சந்தோஷமான நாட்கள்.

படத்தைப் பார்த்து சிலர் திட்டுவார்கள், சிலர் பாராட்டுவார்கள்.

மற்றவர்கள் படத்தை திட்டும் போது நமக்கு சந்தோஷமாக இருக்கு இல்லயா. அதைப் போல நம்ம படத்தை திட்டும் போதும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

‘சார்லி சாப்ளின் 2’ படம் ரொம்ப நல்லா வந்திருக்கு.

இப்படம் பாகம் 3, 4, 5 என வர வேண்டும்” என பேசினார் பிரபு தேவா.

Actor Prabhu Deva talks about Charlie Chaplin 2 sequels

Actor Prabhu Deva talks about Charlie Chaplin 2 sequels

மனநலம் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையை சொல்ல வரும் “ஆயிஷா”

மனநலம் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையை சொல்ல வரும் “ஆயிஷா”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Debut Director Rafeek Muhammad directing AyeshaGrace production தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ரஃபீக் முஹம்மது இயக்கத்தில் புதுமுகம் ரவிகுமார் நடிப்பில் உருவாகும் படம் ” ஆயிஷா”.

இதில் கதாநாயகியாக உத்தரவு மகாராஜா படத்தில் மதுமிதா நடிக்கிறார் மேலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் ரமேஷ் கண்ணா, முத்துக்காளை ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படம் குறித்து இயக்குனர் ரஃபீக் முஹம்மது பேசுகையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.”

இப்படத்திற்கு லெனின் ஜோசப் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீ விஷ்ணு படத்தொகுப்பை மேற்கொள்ள, நடன இயக்குனராக பவர் சிவாவும், ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பாளராக பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் துவக்க விழா பிரசாத் லேப் -ல்பூஜையுடன் துவங்கியது.

இவ்விழாவில் கில்டு தலைவர் ஜாகுவர்தங்கம் அவர்கள், தயாரிப்பாளர் மக்கள் தொடர்பாளர் திரு. விஜய்முரளி அவர்களும், கதையாசிரியர் கலைஞானம் அவர்களும், வையாபுரி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Debut Director Rafeek Muhammad directing Ayesha

ayesha movie pooja

சட்டக்கதிர் வெள்ளி விழா; சட்டம் & நீதிக் கருத்தரங்கு விருதுகள் வழங்கும் விழா

சட்டக்கதிர் வெள்ளி விழா; சட்டம் & நீதிக் கருத்தரங்கு விருதுகள் வழங்கும் விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sattakadir Silver Jubilee Conference on Law and Justice Award Ceremony‘சட்டக்கதிர்’ இதழ் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி சென்னையில் சட்டக்கதிர் சட்ட மாத இதழின் வெள்ளி விழாவும், சட்டம் மற்றும் நீதிக் கருத்தரங்கும், நீதித்துறையிலும் சட்டத்துறையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை ‘சட்டக்கதிர்’ இதழுடன் இணைந்து லிப்ரா ஹவுஸ் ஆப் ஆர்ட்ஸ் நடத்தியது.

தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக ஆளுநர் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்கள் ‘சட்டக்கதிர்’ ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டியதுடன், இந்திய மாநில உயர்நீதி மன்றங்களில் அந்தந்த மாநில ஆட்சிமொழிகள் கூடுதல் வழக்கு மொழியாக வருவதற்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.

தொடக்க விழாவிற்கு தலைமையேற்ற மாண்புமிகு நீதியரசர் ஆர். மகாதேவன் அவர்கள் சட்டக்கதிரின் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி டாக்டர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்களுக்கு நீதித் தமிழ் அறிஞர் விருதினை ஆளுநர் வழங்கினார்.

முழுநாள் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மாநில மொழிகள் உயர் நீதிமன்றங்களில் பயன்படுத்துதல், நீதித்துறை நிர்வாகமும் தீர்ப்புகளை வழங்குதலும், இந்திய அரசமைப்பில் இசைவு பட்டியலும் மத்திய மாநில அரசு உறவுகளும் என்ற தலைப்பில் சட்ட வல்லுநர்கள் வழக்கறிஞர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.

நிறைவு விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் விமலா அவர்கள் தமிழ் மொழி சட்ட மொழியாக்க வேண்டியதின் தேவையை வலியுறுத்தினார்.

சட்டத்தமிழ் மாமணி , சட்டத்தமிழ் மணி விருதுகளை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி அவர்கள் சட்டக்கதிர் இதழின் சேவையை பாராட்டினார். “தமிழ் பெரும் பாரம்பரிய மிக்க மொழி. கலாச்சார ரீதியாக தமிழ் சிறப்பான மொழி.

எனக்கு கொஞ்சம் கொஞ்சமாய் தமிழ் தெரியும். நான் பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் நிச்சயமாக தமிழ் மொழியை அதிகம் கற்பேன். தமிழ் இலக்கியங்களை படிப்பேன்.

நான் பிறந்த வீடு ஓரிடமாக இருந்தாலும் தமிழ்நாடு எனது இன்னொரு வீடு. ” என சுப்ரீம் கோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார்.

விழாவில் ஹவுஸ் ஆப் ஆர்ட்ஸ் நிறுவனர் ரவீந்தர் சந்திரசேகர் அவர்களும் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் சட்டக்கதிர் ஆசிரியர் டாக்டர் வி ஆர் எஸ் சம்பத் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் திரு. டேவிட், திரு. கே. துரைசாமி, திரு. ஆர் வி தனபாலன், திரு எம் முத்துவேலு, திரு கே பாலு ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Sattakadir Silver Jubilee Conference on Law and Justice Award Ceremony

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டி கொடுத்த சூர்யா-கார்த்தி ரசிகர்கள்

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டி கொடுத்த சூர்யா-கார்த்தி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Surya And Karthi Fans Build House For Gaja cyclone Victimsகஜா புயலில் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு விவசாய நிலங்களும், சிறு, குறு விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தென்னை விவசாயிகள் பாதிப்பில் இருந்து மீண்டு வர குறைந்தது பதினைந்து ஆண்டுகள் ஆகும் என்கின்றனர்.

தமிழ்த் திரையுலகில் இருந்து முதல் நபராக; நடிகர் சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ஐம்பது லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி விவசாயிகள் துயர் துடைக்கும் பணியைத் தொடங்கி வைத்தனர்.

அவர்களைத் தொடர்ந்து அவர்களின் ரசிகர் மன்றத்தினர் நேரடியாக களத்தில் இறங்கினர். புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களுடன் தங்கி தேவையான உதவிகளைச் செய்தனர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செருவா விடுதி கிராமம் அருகே ‘தண்டா குளத்துக்கரை’ என்ற குக்கிராமத்தில் வசித்த 50 குடும்பங்கள் கஜா புயலில் தங்கள் வீடுகளை முற்றிலும் இழந்து விட்டனர்.

தலைமுறையாக அதே இடத்தில் வசித்தாலும் மின் இணைப்பு கூட இல்லாத வறுமையான சூழலில் வாழ்ந்த அந்த மக்களுக்கு மீண்டும் வீடு கட்டித் தரும் முயற்சியில் சூர்யா – கார்த்தி நற்பணி இயக்கத்தினர் இறங்கினர்.

நற்பணி இயக்கத் தலைவர் பரமு அவர்கள் நேரடியாக சென்று அந்த இடத்தைப் பார்வையிட்டார். தென்னங்கீற்று வேய்ந்த கூரை வீடுகள் வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பணிகள்
தொடங்கப்பட்டன.

பத்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பதினைந்து வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இரண்டு வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சூர்யா – கார்த்தி நற்பணி இயக்கத்தினர் தண்டா குளத்துக்கரை கிராமத்துக்கு நேரடியாக சென்று அந்த மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர்.

இந்த திட்டத்திற்கு செலவாகும் முழு தொகையையும் சூர்யா – கார்த்தி ரசிகர்களே முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இன்னும் ஒரு வார காலத்தில் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். இது பற்றி தண்டா குளத்துக்கரை கிராமத்தில் வசிக்கும் பாலு கூறும்போது,

“ரசிகர்கள் என்றால் இப்படி தான் இருப்பார்கள் என்ற எங்களின் மனநிலையை சூர்யா – கார்த்தி ரசிகர்கள் முற்றிலும் மாற்றிவிட்டனர். புயல் பாதிப்பில் நாங்கள் துவண்டு போய் இருந்தபோது அரிசி, பருப்பு, காய்கறி, சோலார் விளக்கு என அனைத்தையும் வழங்கினர்.

தற்போது யாரிடம் இருந்தும் ஒரு பைசா வாங்காமல், தங்கள் சொந்தச் செலவில் எங்கள் வீடுகளைக் கட்டித் தருகின்றனர். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைபட்டுள்ளோம்” என்றார்.

தஞ்சாவூரில் கலந்து கொண்ட நிர்வாகிகளின் பெயர்கள்…

பரமு, வீரமணி, சுந்தர், ஆரி , குணா, ஹரிராஜ், சுரேஷ், வாஸீம்ராஜா, மாரிமுத்து, ஜெகதீஷ், பெருமாள், சரவணன், ரமேஷ் கார்த்திக், ஆனந்த், சதிஷ்.

Surya And Karthi Fans Build House For Gaja cyclone Victims

இளைஞர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கிறார் பெரியார் : மீரா கதிரவன்

இளைஞர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கிறார் பெரியார் : மீரா கதிரவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

meera kathiravan stillsதமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து ரசிகர்களை கவனத்தை ஈர்ப்பவர்கள் ஒரு சிலரே. அதில் ‘அவள் பெயர் தமிழரசி’ என்னும் படத்தை இயக்கி பலருடைய கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் மீரா கதிரவன்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விழித்திரு என்னும் படத்தை இயக்கி இருந்தார். வித்தியாசமான திரைக்கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது இயக்குனர் மீரா கதிரவனுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

விருது குறித்து மீரா கதிரவன் கூறும்போது,

‘தமிழ் சினிமாவில் நல்ல படங்களையும் நல்ல கலைஞர்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகத்துறையிலுள்ள நல்லுள்ளங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.

என்னுடைய ‘அவள் பெயர் தமிழரசி’ மற்றும் ‘விழித்திரு’ ஆகிய படங்களுக்கு நீங்கள் அளித்த ஆதரவையும், அங்கீகாரத்தையும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன். என்னுடைய இரண்டு படங்களையும் பல்வேறு அமைப்புகள் பாராட்டி எனக்கு விருதுகள் வழங்கியிருகின்றன.

எனது முதல் படமான அவள் பெயர் தமிழரசியானது, திரையரங்குகளில் திரையிடப்படுவதற்கு முன்னரே துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறப்பு கவனத்தைப் பெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இப்போது,திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தினரால் வருடந்தோறும் வழங்கப்படும் பெரியார் விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த பெரியார் விருதானது கடந்த 1995 முதல் கடந்த 24 வருடங்களாக சமூகம் மற்றும் கலை, பண்பாட்டுத் தளங்களில் முக்கிய பங்காற்றி சிறந்து விளங்கி வரும் ஆளுமைகளூக்கு வழங்கப்படுகிறது.

சென்ற வருடங்களில் திரைப்பட துறையிலிருந்து இயக்குநர்கள் ராஜு முருகன், கோபி நயினார் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பார்த்திபன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தமிழர் பண்பாட்டு கலைகளை முதன்மைப்படுத்தியும், திரைநுட்பங்களில் தேர்ந்தும், திரைப்படங்களை வழங்கிடும் படைப்பூக்கத்தைப் பாராட்டும் வகையில் இந்த வருடம் திரைப்படத் துறையிலிருந்து என்னை சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுத்து பெரியார் விருதினை வழங்கியுள்ளார்கள்.

மனிதர்கள் சாதி, மதம், இனம் எல்லாவற்றையும் கடந்து மனிதர்களாக, வாழ்வதற்கு பெரியாரின் சித்தாந்தங்கள் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. பெரியார் இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் மிக அழுத்தமான செல்வாக்கினை செலுத்திக் கொண்டு இருக்கிறார்.

அவருடைய பெயரில் வழங்கப்படும் இந்த விருதை என் வாழ்வின் உயரிய விருதாக கருதுகிறேன். இந்த விருதை வழங்கிய திராவிட கழக தலைவர், ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்களுக்கும், திராவிடர் கழக தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த விருதானது சமரசமின்றி இன்னும் காத்திரமாக, தீவிரமாக, பொறுப்புடன் இயங்குவதற்கான நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தந்திருக்கிறது என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றார்.

More Articles
Follows