ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் ‘சூரரைப் போற்று’ இல்லை..; சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் ‘சூரரைப் போற்று’ இல்லை..; சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகினருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது.

93வது ஆஸ்கர் விருது விழா அடுத்த மாதம் 26ஆம் தேதி நடைபெறுகிறது.

அதற்கான இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் வெளியிட்டனர்.

இந்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்பட்ட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு ஏற்கனவே வெளியானது.

இந்த நிலையில், தற்போது ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து தற்போது வெளியேறியுள்ளது.

இறுதிப் பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம் பெறவில்லை என்பதால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

Soorarai Pottru is out of OSCARS

‘பில்லா’ ரீ-ரிலீஸ்..: பஸ் மேல ஆட்டம் போட்ட அஜித் ரசிகர்கள்..; இன்னா தல இப்பூடி பண்றாங்கோ..

‘பில்லா’ ரீ-ரிலீஸ்..: பஸ் மேல ஆட்டம் போட்ட அஜித் ரசிகர்கள்..; இன்னா தல இப்பூடி பண்றாங்கோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’.

இப்படத்தின் அப்டேட் கேட்டு கேட்டு் நொந்து போனவர்களுக்கு ஆறுதலாய் அமைந்தது அஜித்தின் ‘பில்லா’ ரீ-ரீலீஸ்.

கடந்த 12ஆம் தேதி தமிழகத்தின் சில தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.

இதனை தல ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை பிரியா சினிமாஸ் திரையரங்கம் அருகே சில ரசிகர்கள் சாலையை மறைத்து பஸ் மேல் ஏறி ஆட்டம் போட்டனர்.

இன்னா தல இப்பூடி பண்றாங்கோ.. என அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை திட்டியப்படி சென்றனர்.

சமீபத்தில் ‘வலிமை’ அப்டேட் கேட்டு எல்லை மீறிய ரசிகர்களை கண்டித்து அஜித் அறிக்கை விட்டார். தற்போது அடுத்த அலப்பறையை ஆரம்பித்துவிட்டனர். இனி என்னாகுமோ?

அலப்பறை Starts in @Priya_Cinemas

#BillaInPriyaCinemas
#Valimai

Ajith fans attrocities in billa re release theatres

ஆண்டு வருமானம் வெறும் 1000 தான்.; சீமானை ச்சீ..ச்சீ என கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

ஆண்டு வருமானம் வெறும் 1000 தான்.; சீமானை ச்சீ..ச்சீ என கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து அரசியல் கட்சி & சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தொடங்கியுள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தொடங்கியது.

முக்கிய கட்சிகள், கூட்டணிகளின் வேட்பாளர்கள் நேற்று முதல் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

வேட்புமனுத் தாக்கல் செய்ய வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் நேற்று, திங்கள்கிழமை, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்டுகிறார் சீமான்.

வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்த சொத்து விவரத்தில்…

“தனக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.31,06,500 என்றும், அசையா சொத்துகள் ஏதுமில்லை என சீமான் தெரிவித்துள்ளார்.

தன் மனைவிக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.63,25,031 என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.25,30,000 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.65,500 வருமானம் வந்துள்ளதாக சீமான் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன் குறிப்பாக 2019-20ஆம் நிதியாண்டில் தமக்கு வந்த ஆண்டு வருமானம் ரூ.1,000 மட்டுமே என சீமான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினசரி கூலி வேலைக்கு செல்வோர் கூட தினம் 500-1000/- வரை சம்பாதிக்கும் இந்த காலக்கட்டத்தில் ஆண்டு வருமானம் வெறும் 1000 ரூபாய் என (பெரிய பொய்யை) சீமான் குறிப்பிட்டுள்ளதால் அவரை சமூக வலைத்தளங்களில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

NTK leader Seeman revealed his property and income

கோவை தெற்கில் கமல்ஹாசன் வேட்புமனு..; சொத்து எவ்வளவு..? கடன் எவ்வளவு..?

கோவை தெற்கில் கமல்ஹாசன் வேட்புமனு..; சொத்து எவ்வளவு..? கடன் எவ்வளவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து அரசியல் கட்சி & சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தொடங்கியுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் நேற்று, மார்ச் 15ல் திங்கள்கிழமை, தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

தனக்கு 45,09,01,476 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 131,84,45,000 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளதாக கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

இவரது மொத்த சொத்து மதிப்பு மொத்தம் 176.93 கோடி ரூபாய்.

இத்துடன் தனக்கு 49 கோடியே 50 லட்சத்து 11 ஆயிரத்து 10 ரூபாய் கடன் இருப்பதாகவும் தனது வேட்புமனுவில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Actor KamalHaasan reveals his total assets, liabalities and family details during nomination

தரக்குறைவாகப் பேசிய விகடன்..; ‘தீதும் நன்றும்’ படக்குழு போலீசில் புகார்

தரக்குறைவாகப் பேசிய விகடன்..; ‘தீதும் நன்றும்’ படக்குழு போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அன்பிற்குரியவர்களுக்கு வணக்கம்,

ஒரு படம் என்பது பலருடைய கடின உழைப்பு, பண முதலீடு உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கியது. இதனை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் விமர்சனம் செய்து, படக்குழுவினருக்கும் தயாரிப்பாளருக்கு கடும் மன உளைச்சலை உண்டாக்குவார்கள்.

படங்களை விமர்சனம் செய்யலாம் தவறில்லை, அது எல்லை மீறிப் போகும் தான் சிக்கல் உண்டாகிறது.

அப்படியொரு சிக்கலில் சிக்கியிருக்கிறது ‘தீதும் நன்றும்’ திரைப்படம்.

ராசு ரஞ்சித் இயக்கத்தில் அபர்ணா பாலமுரளி, லிஜோ மோல் ஜோஸ், ஈசன், இன்பா உள்ளிட்ட பலருடைய நடிப்பில் மார்ச் 12-ம் தேதி வெளியான படம் ‘தீதும் நன்றும்’. சார்லஸ் இம்மானுவேல் தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தின் மீதிருந்த நம்பிக்கையால் மார்ச் 9-ம் தேதி பத்திரிகையாளர்களுக்கு பிரத்தியேக காட்சி திரையிட்டோம்.

அதில் பங்கேற்ற பல பத்திரிகையாளர்கள் நிறைகள், குறைகள் என அனைத்தையுமே சுட்டிக் காட்டினார்கள். அவை அனைத்திலுமே எங்களுக்கு உடன்பாடு இருந்தது.

பத்திரிகையாளர்களும் நல்லவிதமாக விமர்சனம் எழுதவே, மார்ச் 12-ம் தேதி வெளியான படத்துக்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல கூட்டம் இருந்தது.

திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் படக்குழுவினருக்குப் பாராட்டுகள் தெரிவித்து வந்தார்கள்.

அந்தச் சமயத்தில் தான் எங்களுக்கு வந்தது ஒரு பேரதிர்ச்சி. மிகப்பெரிய பத்திரிகை குழுமமான விகடன் குழுமத்தின் சினிமா விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் எங்களுடைய படத்துக்கு விமர்சனம் செய்திருந்தார்கள். அவர்கள் விமர்சனம் செய்ததில் தவறில்லை.

ஆனால், அதில் மிகவும் தரக்குறைவாகப் பேசியிருந்தார்கள். படத்தில் எந்தவொரு நிறையுமே இல்லை என்பது போல வெறும் குறைகளை மட்டுமே பேசியிருந்தார்கள்.

அதிலும் படத்தை ரொம்ப மட்டந்தட்டிக் கூறியிருக்கிறார்கள். அந்த விமர்சனத்தின் இறுதியில் திரையரங்குகளுக்குச் சென்று ரிஸ்க் எடுக்காதீர்கள் என்று பேசியிருப்பது காலத்தின் கொடுமை என்பதைத் தாண்டி வெறும் என்ன சொல்ல என்று தெரியவில்லை.

இந்த விமர்சனத்தின் மூலம் எங்கள் படத்துக்கு வர வேண்டிய கூட்டத்தையே தடுத்திருக்கிறார்கள். அதிலும், விமர்சனத்தில் 5 ஆண்டுகள் பழைய படம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதை எங்கேயாவது நிரூபிக்க முடியுமா?

2018-ம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட படம் எப்படி 5 ஆண்டுகள் பழைய படமாகும். எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இன்றி பழைய படம், திரையரங்கிற்குப் போகாதீர்கள் என்றெல்லாம் பேசி எங்கள் படத்துக்கு வர வேண்டிய கூட்டத்தையே தடுத்திருக்கிறார்கள்.

இதனால் எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய நஷ்டமாகியுள்ளது.

மேலும் இயக்குநருக்கு மிகப்பெரிய மன உளைச்சல் உண்டாகி இருக்கிறது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விகடன் குழுமத்தின் மீது புகார் அளித்திருக்கிறோம்.

இது தொடர்பான நகலை இத்துடன் இணைத்துள்ளோம். தமிழகத்தின் மிகப்பெரிய பத்திரிகை குழுமம் இப்படியான ஒரு விஷயத்தைச் செய்திருப்பது, எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர்களும் முன்பு பல படங்களைத் தயாரித்திருக்கிறார்கள். அவர்களே ஒரு தயாரிப்பாளரின் வலி அறியாமல் இப்படி பொய்யாகப் பேசி, ஆதாரமற்று கூறியிருப்பது தான் காலத்தின் கொடூரம்.

இப்படிக்கு
‘தீதும் நன்றும்’ படக்குழு

Theethum Nandrum team filed complaint against Vikatan

*காட் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பும் நடிகர் தேஜ்*

*காட் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பும் நடிகர் தேஜ்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் கேடி குஞ்சுமோன் தயாரித்த காதலுக்கு மரணமில்லை படத்தில் அறிமுகமானவர் நடிகர் தேஜ்.. அதை தொடர்ந்து கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, காந்தம் ஆகிய படங்களில் நடித்தார்.. இயக்குநர், தயாரிப்பளர் என பன்முகம் கொண்ட இவர், தற்போது ‘ரீவைண்ட்’ என்கிற படத்தை தமிழ் மற்றும் கன்னடம் என, இருமொழி படமாக தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப்படம் வரும் ஏப்-16ஆம் தேதி ரிலீஸாகிறது. அதுமட்டுமல்ல சுமார் நாற்பது கோடி பட்ஜெட்டில் இந்தியா முழுமைக்குமான படம் ஒன்றையும் இயக்கவுள்ளார் தேஜ்.

இதுபற்றி தேஜ் கூறும்போது, “காதலுக்கு மரணம் இல்லை, கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படங்களில் நடித்தேன். காந்தம் என்கிற படத்தையும் ரிலீஸ் செய்தேன். இந்த நான்கு வருட இடைவெளியில் ‘தமிழ் மற்றும் கன்னடத்தில் ரீவைண்ட்’ என்கிற பெயரில் இருமொழி படம் ஒன்றை தயாரித்துள்ளேன் கர்நாடகாவில் ஏப்ரல் 16ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது தமிழில் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்து ஆலோசித்து வருகிறோம்.

இந்த டைட்டிலை தான், சிம்பு நடித்துவரும் மாநாடு படத்தின் கன்னட ரீமேக்கிற்கு டைட்டிலாக அறிவித்தார்கள். ஆனால் அதே டைட்டிலை, நான் ஏற்கனவே பதிவு செய்து, சென்சார் சான்றிதழ் வாங்கி, ரிலீஸ் வரை வந்துவிட்டேன் என்கிற தகவல், தெரிந்ததும் விட்டுக்கொடுத்து விலகி விட்டார்கள். ஒரு பத்திரிக்கை நிருபர், கார்ப்பரேட் மாஃபியா ஒன்றை எதிர்த்து டெக்னாலஜி உதவியுடன் போராடுகிறார். இது மனிதனின் மூளை சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான அம்சத்தை மையமாக கொண்ட சயின்டிஃபிக் ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ளது.

தற்போது 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்தியா முழுமைக்குமான படம் (Pan India Movie) ஒன்றை நடித்து இயக்கவுள்ளேன். படத்தின் பெயர் காட் (GOD).. அதாவது ‘குளோரி ஆஃப் டான்’ என்பதன் சுருக்கம் தான் அது.

கன்னடத்தில் கே.ஜி.எஃப் படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்தியா முழுமைக்குமான படம் (Pan India Movie) என்பது ஒரு புதிய ட்ரெண்ட் ஆக மாறியுள்ளது. அதுமட்டுமல்ல அனைத்து மொழிகளுக்கும் செட்டாக கூடிய கதையும் டைட்டிலும் எங்களுக்கு இயல்பாகவே அமைந்துவிட்டது சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த பில்லா படத்தை தாண்டிய ஒரு படமாக, அதாவது 2021ல் பில்லா போன்ற ஒரு டான் இருந்தால் அவன் எப்படி இருப்பான் என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது

இந்த படத்தின் நட்சத்திர தேர்வு நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக ஹாலிவுட் கதாநாயகி ஒருவரை நடிக்க வைக்க பேசி வருகிறோம் தற்போது கன்னடத்தில் ராமாச்சாரி 2.O என்கிற படத்தில் நடித்து வருகிறேன். அதை முடித்துவிட்டு, விரைவில் இந்த படத்தை துவங்க உள்ளேன்” என்கிறார் தேஜ்..

Actor Tej’s next in Tamil is God

More Articles
Follows