பாடல்களை பயன்படுத்த தடை.; மீண்டும் எச்சரிக்கும் இளையராஜா

பாடல்களை பயன்படுத்த தடை.; மீண்டும் எச்சரிக்கும் இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Songs copyright issue Again Ilayaraaja warning statementஎக்கோ ரெக்கார்டிங் நிறுவனத்துக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா, அளித்த புகாரில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இதுதொடர்பாக இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு :

2014-ம் ஆண்டு எனது பாடல்களை பயன்படுத்த தடை கோரிய வழக்கின்படி இன்றளவும் எனது பாடல்களை பயன்படுத்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை செல்லும்.

அந்த தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை. அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு கூடிய விரைவில் வெளிவரும்.

2010-ம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும், அதன் உரிமையாளர் மீதும் போலீசில் புகார் அளித்தேன்.

சட்டத்துக்கு புறம்பாக என் பாடல்களை விற்பனை செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சிடிக்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

நேற்று வெளியான தீர்ப்பில் நீதிபதி எக்கோ நிறுவனத்தின் மீதான குற்றவியல் நடவடிக்கையை மட்டுமே ரத்து செய்துள்ளார். எனது காப்புரிமை செல்லாது என அறிவிக்கவில்லை.

இந்த வழக்குக்கும், எனது பாடல்களின் உரிமை மீதான வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை.

சில செய்தி நிறுவனங்கள், “இளையராஜா பாடல்கள் வழக்கு ரத்து”, “இளையராஜா காப்புரிமை வழக்கு தள்ளுபடி” என தவறான செய்தி வெளியிடுகின்றனர்.

தவறான செய்தி வெளியிடுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் நஷ்டஈடு கோரி வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் இளையராஜா.

Songs copyright issue Again Ilayaraaja warning statement

விஜய் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிகள்.; மெர்சலை முடியடித்த சர்கார்

விஜய் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிகள்.; மெர்சலை முடியடித்த சர்கார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Sarkar fans special shows beat Mersal recordவிஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

தமிழகத்தைப் போலவே விஜய்க்கு கேரளாவிலும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் கேரளாவில் வெளியாகிறது.

கடந்த வருடம் தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியானது. அப்போது கேரளாவில் மட்டும் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகள் 187 வரை திரையிடப்பட்டதாம்.

தற்போது அந்த சிறப்பு காட்சிகளின் எண்ணிக்கையை முறியடித்துள்ளது சர்கார்.

தற்போது வரை 194 சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தீபாவளிக்கு இன்னும் 5 நாட்கள் இருப்பதால் இந்த சிறப்பு காட்சிகளின் எண்ணிக்கை கூடும் என தெரிகிறது.

Vijays Sarkar fans special shows beat Mersal record

ஆம்னியின் மருமகள் ஹிரித்திகாவின் *விடியாத இரவொன்று வேண்டும்*

ஆம்னியின் மருமகள் ஹிரித்திகாவின் *விடியாத இரவொன்று வேண்டும்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hrithikaதமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன். சுட்டிக்குழந்தை, கோபாலா கோபாலா, பொற்காலம், பூந்தோட்டம்,வாஞ்சி நாதன் உட்பட ஏராளமான படங்களை தயாரித்தவர்.

தமிழில் பல படங்களில் நடித்ததுடன் தெலுங்கில் ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்தவர் ஆம்னி.

காஜாமைதீன் ஆம்னி திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஆம்னி மீண்டும் தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது ஆம்னியின் தம்பி சீனிவாஸ் மகள் ஹ்ரித்திகா நடிகையாக அறிமுகமாகிறார். கருப்பையா முருகன் இயக்கத்தில் அசோக் நடிக்கும் “விடியாத இரவொன்று வேண்டும்” என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.

அவரிடம் பேசிய போது…

எனது அத்தை ஆம்னிக்கு தெலுங்கில் மிகப் பெரிய செல்வாக்கு… அவர் ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார்.

அவரை பார்த்து வளர்ந்த நான் அவரைப் போலவே நடித்து பேர் வாங்க வேண்டும் என்று சின்ன வயதிலிருந்தே ஆசை.

அதே மாதிரி மாமா காஜாமைதீனும் ஏராளமான படங்களை எடுத்து பேர் பெற்றவர்..

இருவரும் பள்ளிப் படிப்பை முடி அதற்குப் பிறகு நடிக்கலாம் என்று ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினர்.

நடிப்பது என்று முடிவான பிறகு முறைப்படி பரத நாட்டியம் மற்றும் சினிமாவுக்குண்டான டான்ஸ் எல்லாம் கத்துக்கிட்டேன்.

பூர்வீகம் ஆந்திரா வளர்ந்தது தமிழ் நாடு இப்போ காலேஜ் படிச்சிட்டு இருப்பது பெங்களூரில். அசோக் நடிக்கும் படத்தில் வாய்ப்பு வந்ததும் ஒத்துக்கிட்டேன். படம் முடிவடைந்து விட்டது.

இனி நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். என் அத்தையை விட நிறைய படங்களில் நடிக்கணும்.

அவரை விட அதிகமான விருதுகளை பெற்று அவர்களிடம் அதை காணிக்கையாக்க வேண்டும். அது தான் என் ஆசை என்கிறார் ஹிரித்திகா.

அரசுப் பள்ளியை புதுப்பித்த லாரன்ஸ்; ஓவியா திறந்து வைத்தார்

அரசுப் பள்ளியை புதுப்பித்த லாரன்ஸ்; ஓவியா திறந்து வைத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

oviya raghava lawrenceவிழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் ஒன்று இருந்தது.

இதை புதுப்பித்து தரும்படி அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை மன்ற செயலாளர் சங்கர் மற்றும் பொதுமக்கள், நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்சிடம் கோரிக்கை வைத்தனர்.

இதன் பேரில் ரூ.5 லட்சம் செலவில் அந்த கட்டிடத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் புதுப்பித்து கொடுக்க ஒப்புக்கொண்டார். அதன்படி அந்த கட்டிட வேலைகள் நடந்து முடிந்தது.

அதன் திறப்பு விழாவில் நடிகர் லாரன்ஸ் கலந்துக் கொள்ளவில்லை.

அவரின் தாயார் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் இருப்பதால் கலந்துக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளர்.

அவருக்கு பதிலாக நடிகை ஓவியா விழாவில் கலந்து கொள்வார் என தெரிவித்தார்.

இது பற்றி ராகவா லாரன்ஸ் கூறும்போது, “இரண்டு பள்ளிகளோடு நின்று விடப்போவதில்லை… என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பள்ளிகளை சீரமைக்க முடிவு செய்திருக்கிறேன்.

என்னால் தான் படிக்க முடியவில்லை. படிக்கிற குழந்தைகளாவது நிம்மதியாக படிக்கட்டும் என்றார்.

புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் ஓவியா பேசியதாவது,

உங்களை இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நானும் ஒரு அரசு பள்ளியில் படித்தவள் தான்.

அரசு பள்ளிகளில் படிக்க அனைவரும் முன்வரவேண்டும். பெரிய பள்ளியில் படித்தால் தான் பெரிய ஆளாக வரமுடியும் என்பது கிடையாது.

விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பெரிய ஆளாக வரலாம். அரசு பள்ளியை நடிகர் – நடிகைகள் தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவ முன்வர வேண்டும்.

இந்த பள்ளி கட்டிடத்தை திறந்து வைக்க எனக்கு வாய்ப்பு அளித்த மாஸ்டர் ராகவா லாரன்சுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நேற்று நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்தநாள். அன்று இந்த திறப்பு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 3 படத்தில் ஓவியா நாயகியாக நடித்து வருகிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

குப்பை படங்களை கூட பார்க்கும் பத்திரிகையாளர்கள் பாவம்… : ஆர்.வி. உதயகுமார்

குப்பை படங்களை கூட பார்க்கும் பத்திரிகையாளர்கள் பாவம்… : ஆர்.வி. உதயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RV Udhayakumarஎஸ் .விஜயசேகரன் இயக்கத்தில் உருவான “எவனும் புத்தனில்லை” படத்தின் விழாவில் இயக்குனர் ஆர்.வி .உதயகுமார் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது…

இந்த விழாவில் பேசிய சிலர் மீ டூ பற்றி குறிப்பிட்டார்கள். இது என்ன மீ டூ.?

ஏ டூ பி டூ? இங்கே என்ன மாதிரியான நிலைப்பாடு என்றே புரியவில்லை.

ஒரு ஆணும் இன்னொரு ஆணும் உடலுறவு கொள்வதும் ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் உறவு கொள்ளவும் அனுமதி கொடுக்கிறது சட்டம்.

ஒரு ஆண் ஒரு பெண் உறவு கொள்வது தவறு என்கிறது.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கவரப்பட்டு உறவு கொள்வது எப்படி தவறாகும்.

அப்படி கவரப்படாமல் போனால் பிறப்பு என்கிற லிங்கே விடுபட்டு போகும்.

இது போல் பிரச்சனை வராமல் இருக்கவே நான் படப்பிடிப்புக் ஆரம்பித்த உடனேயே ஹீரோயின்களை திட்டியும் அடித்தும் விடுவேன்.

அதற்கு பிறகு எப்படி என்கிட்டே நெருங்குவார்கள்.

என் இயக்கத்தில் நடித்த ரஜினிகாந்த் கமல், விஜய்காந்த் கார்த்திக் எல்லோருமே கட்சி ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு அப்படி ஒரு ராசியோ என்னவோ?

சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்க வில்லை என்று புகார் சொல்லும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

தரமான படங்களாக எடுங்கள்..மக்கள் ரசிக்கிற மாதிரி படங்களை எடுங்கள். தியேட்டர் தருவார்கள்.

நான் வரி விலக்குக்காக பல படங்களை பார்த்திருக்கிறேன். அதில் பெரும்பாலான படங்கள் குப்பையோ குப்பை..

அப்படி ஒரு படத்தை எவன் காசு கொடுத்து பார்ப்பான். அப்புறம் எப்படி தியேட்டர் கிடைக்கும்.

இந்த பத்திரிகைகாரங்க பாவம்.எவ்வளவு குப்பை படமாக இருந்தாலும் இரண்டரை மணி நேரம் உட்கார்ந்து தண்டணையை அனுபவித்தே வருகிறார்கள்.

படம் ஆரம்பித்த உடனேயே டைரக்டர் வெளியே வந்து விடுகிறார்.

பத்திரிக்கையாளர்களும் இந்த சீனுக்கு அடுத்த சீனும் நல்லா இருக்கும் .பாராட்டி எழுதுவோமே என்று கடைசி வரை பார்த்து விடுகிறார்கள்.

பத்திரிக்கையாளர்களை பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது…

இவ்வாறு ஆர்.வி உதயகுமார் பேசினார்.

விழாவில் இயக்குனர் தளபதி நடிகர்கள் நபி நந்தி, சரத் சுவாசிகா எலிசபெத் சுப்புராஜ் இயக்குனர் எஸ்.விஜயசேகரன் இசையமைப்பாளர் மரியா மனோகர் ஆகியோர் பேசினார்கள்.

விஜய்யை போல் அவரது ரசிகர்கள் இல்லையே..; பாக்யராஜ் வேதனை

விஜய்யை போல் அவரது ரசிகர்கள் இல்லையே..; பாக்யராஜ் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay bhagyarajமுருகதாஸ் இயக்கியுள்ள விஜய்யின் சர்கார் திரைப்படம் வருகிற நவம்பர் 6ல் வெளியாகிறது.

இப்படத்தின் கதை என்னுடையது என செங்கோல் பட கதை உரிமையாளர் வருண் என்கிற ராஜேந்திரன் கோர்ட்டில் வழக்கு போட இது பிரச்சினையானது.

தற்போது கோர்ட்டில் இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டது. மேலும் வருண் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க முருகதாஸ் சம்மதம் சொல்லியிருக்கிறார் என கூறப்படுகிறது-

இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே உதவி இயக்குனர் வருணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என போராடியவர் எழுத்தாளர்கள் சங்க தலைவர் பாக்யராஜ்.

இன்று கோர்ட்டில் வழக்கு முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பாக்யராஜ் பேசியதாவது :

சர்கார் கதை விவகாரத்தில் முடிந்தவரை வெளியே பிரச்னை தெரியாமல் சுமூகமாக பேசி தீர்க்க முயற்சித்தேன்.

சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தை மறுத்த முருகதாஸ் இப்போது கோர்ட்டில் சம்மதம் சொல்லியிருக்கிறார். பிரச்னை சுமூகமாக முடிந்தது மகிழ்ச்சி.

அதேசமயம் இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது நான் தான். நான் ஏதோ விஜய் படத்திற்கு தடை ஏற்படுத்துவது போன்று என்னையும், எனது மகன் சாந்தனுவையும் விஜய் ரசிகர்கள் மிகவும் விமர்சித்தார்கள்.

என் மகனும் விஜய்யின் ரசிகன் தான், விஜய்யை எனக்கு நன்றாக தெரியும். அதேப்போல் வருணை விட முருகதாஸை எனக்கு நன்றாக தெரியும்.

அப்படி இருக்கையில் எதற்காக வருண் பக்கம் நிற்க வேண்டும். நான் ஒரு சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறேன், நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தினால் தான் படத்தின் கதையை வெளியில் சொன்னேன்.

இதுதொடர்பாக விஜய்யிடம் பேசினேன். அவரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். எனது படம் பார்த்து பண்ணுங்கள் என்று சொல்லவில்லை, உங்கள் மனதிற்கு எது நியாயமோ அதை செய்யுங்கள் என்றார்.

விஜய்யின் பெருந்தன்மையை அவரது ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்று பாக்யராஜ் உருக்கமாக பேசினார்.

More Articles
Follows