‘சிக்சர்’ படத்தில் இணைந்தார் சிவகார்த்திகேயன்.; ஜிப்ரான் மகிழ்ச்சி

‘சிக்சர்’ படத்தில் இணைந்தார் சிவகார்த்திகேயன்.; ஜிப்ரான் மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan crooned in Sixer in Ghibrans musicநடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் ஜொலித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

தற்போது இவர் ஜிப்ரான் இசையமைத்து வரும் ‘சிக்சர்’ என்ற படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார்.

இதுகுறித்து ஜிப்ரான் கூறியுள்ளதாவது…, ‘சிக்சர்’ படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல் ஒன்றை ரிகார்டிங் செய்துள்ளோம். ‘நீ எங்கவேனா கோச்சிக்கினு…’ என தொடங்கும் இந்த பாடலை பாடிக்கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

சிக்சர் படத்தில் வைபவ் ரெட்டி, பல்லாக் லால்வானி, சதீஷ், ராதாரவி உள்பட பலர் நடித்து வருகிறார்கள்.
சாச்சி என்பவர் இயக்கி வரும் இப்படத்திற்கு பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

Sivakarthikeyan crooned in Sixer in Ghibrans music

மீண்டும் கொலைகாரன் கூட்டணி; விஜய் ஆண்டனியை இயக்கும் விஜய் மில்டன்

மீண்டும் கொலைகாரன் கூட்டணி; விஜய் ஆண்டனியை இயக்கும் விஜய் மில்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Milton directing Vijay Antony for Infiniti Film Ventures விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜீன் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “கொலைகாரன்” திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை செய்து வருகிறது.

இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருமே வெற்றியை பற்றி மகிழ்ச்சியில் மூழ்கியுள்ள நிலையில், போஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவிஸ் ஆகியவை இப்போது திரைப்படத் துறையின் முன்னணி ஃபைனான்சியர்களில் ஒருவரான கமல் போராவுடன் இணைந்து ‘இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்’ என்ற நிறுவனத்தின் பெயரில் நல்ல தரமான படங்களை தயாரிக்க இருக்கிறார்கள்.

இதில் கூடுதல் உற்சாகத்தை கொடுக்கும் விஷயம் என்னவென்றால், ‘கொலைகாரன்’ படத்துக்கு பிறகு விஜய் ஆண்டனி இந்த பெயரிடப்படாத படத்திலும் நாயகனாக நடிக்கிறார்.

வெகுஜன வர்த்தக கூறுகளை யதார்த்தமான அணுகுமுறை மற்றும் காட்சிகள் மூலம் இணைப்பதில் மிகவும் பிரபலமானவரான ஒளிப்பதிவாளர்-இயக்குநர் விஜய் மில்டன் இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்குவதோடு, ஒளிப்பதிவும் செய்கிறார்.

தற்போது, இந்த படத்தில் பணிபுரிய முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன.

அக்டோபர் 2019 முதல் ‘இந்திய கடற்கரைகளின் தலைநகரமான’ கோவா, டையூ மற்றும் டாமன் ஆகியவற்றின் அழகான இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

விஜய் ஆண்டனி, விஜய் மில்டன் மற்றும் பிரபல தயாரிப்பாளர்கள் ஒன்றாக இணையும்போது, இந்த அணியில் இருந்து ஒரு நம்பகமான மற்றும் தரமான படத்தை எதிர்பார்க்கலாம்.

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப் குமார் மற்றும் கமல் போரா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

Vijay Milton directing Vijay Antony for Infiniti Film Ventures

நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதியை மாற்ற சொன்ன அஜித்..?

நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதியை மாற்ற சொன்ன அஜித்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajiths Nerkonda Paarvai release date changes updatesவினோத் இயக்கியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் முதன்முறையாக வக்கீல் வேடத்தில் நடித்துள்ளார் அஜித்.

அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார்.

இப்படத்தின் மூலம் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 10-ம் தேதி சனிக்கிழமையில் வருவதாலும், தனது வியாழக்கிழமை சென்டிமெண்ட்டை மீண்டும் கடைப்பிடிக்க நினைப்பதாலும் ஆகஸ்ட் 1-ம் தேதியே படத்தை வெளியிட திட்டமிட்டள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Ajiths Nerkonda Paarvai release date changes updates

சர்வதேச பனோரமா பிரிவில் ஷாங்காய் சர்வதேசப் படவிழாவில் சர்வம் தாளமயம்

சர்வதேச பனோரமா பிரிவில் ஷாங்காய் சர்வதேசப் படவிழாவில் சர்வம் தாளமயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarvam Thaalamayam selected into Intl Panorama of 22nd Shanghai International Film festival இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஜி வி பிரகாஷ் குமார், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த ‘சர்வம் தாளமயம்’ தமிழ் திரைப்படம், ‘சர்வதேச பனோரமா’ பிரிவில், 2019ம் ஆண்டுக்கான 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மதிப்பு மிக்க இத்திரைப்படவிழா, ஜூன் மாதம் 15ம் தேதி, அதாவது இன்று முதல் 24 தேதி வரை நடைபெறுகிறது.

Sarvam Thaalamayam” directed by Rajiv Menon and music by A R Rahman starring G V Prakash Kumar, Nedumudi Venu , Aparna Balamurlai and others was officially selected into International panorama of 22nd Shanghai International Film festival 2019.

Sarvam Thaalamayam selected into Intl Panorama of 22nd Shanghai International Film festival

சிம்பு -கவுதம் கார்த்திக்கின் படத்தை துவங்கினார் ஞானவேல்ராஜா

சிம்பு -கவுதம் கார்த்திக்கின் படத்தை துவங்கினார் ஞானவேல்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu and Gautham Karthik team up for Tamil remake of Kannada film Muftiகன்னடத்தில் மஃப்டி என்ற பெயரில் வெளியாகி வெற்றிப் பெற்ற படத்தை நார்தன் என்பவர் இயக்கியிருந்தார்.

இவரே தற்போது தமிழிலும் இப்படத்தை இயக்கவுள்ளார்.

சிம்பு -கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் மெகா பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக படத்தைத் தயாரிக்கும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிம்புவின் 45- வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் மதன் கார்க்கி வசனம் மற்றும் பாடல்களை எழுதுகிறார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது பூஜையுடன் படம் துவங்கியுள்ளது.

Simbu and Gautham Karthik team up for Tamil remake of Kannada film Mufti

கமல் சர்போர்ட்; 6 மாசத்துல நடிகர் சங்க கட்டிடம் கன்பார்ம்.. – விஷால்

கமல் சர்போர்ட்; 6 மாசத்துல நடிகர் சங்க கட்டிடம் கன்பார்ம்.. – விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal supports Pandavar ani in Nadigar Sangam says Vishalநடிகர் சங்கத் தேர்தல் என்றவுடன் ரஜினி சார், கமல் சாரை சந்திக்கும் போது புத்துணர்ச்சி, உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அதுவொரு நல்ல தொடக்கமாக இருக்கும். மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கமல் சாரின் ஆதரவோடு தான் பாண்டவர் அணியாக செயல்படத் தொடங்கினோம்.

ஜூன் 23-ம் தேதி நடைபெறும் தேர்தலுக்காக கமல் சாரின் ஆசிர்வாதம் வாங்கினோம். இந்த பாண்டவர் அணி மீண்டும் தேர்தலில் நிற்கிறது. இன்னும் 6 மாதங்களில் கட்டிடம் முடியும் தருவாயில் இருக்கிறது. அதற்குள் சின்ன சின்ன விஷயங்களால் எதிரணி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

எங்கள் அணியில் யார் என்ன பதவிக்கு என்பதை அறிவித்துவிட்டோம். கமல் சாரோட சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது.

நாங்கள் என்ன செய்யவில்லை என்று ராதிகா அம்மா குற்றச்சாட்டு வைத்தார்கள். அதற்கான பதில் தான் அந்த வீடியோ. சும்மா ஏவி விடுவதற்கான வீடியோ அல்ல.

அங்கிருக்கும் உண்மைகளில் நாங்கள் செய்த விஷயத்தை காட்டுனோம். தண்டனை செய்திருந்தால் சட்ட ரீதியாக தண்டனை விதிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். அதை தான் செய்தோம். என்ன நடந்தது, என்ன செய்தோம் என்பது தான் அந்த வீடியோ. அதில் தவறில்லை.

பிரிவினை எல்லாம் கிடையாது. கலை நிகழ்ச்சி ஒட்டுமொத்த குடும்பமாக அனைத்து நடிகர்களும் ஒன்றாக சென்று, இவ்வளவு நிதி திரட்டியிருக்க மாட்டோம். ஒட்டுப் போட்டு முடித்தவுடன் அனைவரும் குடும்பமாகத் தான் பழகி வருகிறோம். ஆனால், அதில் தேர்தல் என்பது மிகவும் முக்கியம்.

ஒவ்வொருத்தருடைய நம்பிக்கை ஓட்டாக போடும் போது, எப்படி இவ்வளவு குறைவான ஓட்டில் ஜெயித்தோம் என்பது எங்களுக்கு தெரியவரும். இந்த ஓட்டு எல்லாம் ஏன் நமக்கு வரவில்லை என்று அப்போது தான் தெரியும்.

வரலட்சுமி உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் ஒரு கருத்து உள்ளது. என்னிடம் சில விஷயங்களைக் கேட்டால், என் நண்பர்கள் மீது என்ன கோபம் என்பதை வெளிப்படையாக சொல்வேன். ஒவ்வொருவருக்கும் அவர்கள் நினைப்பதை சொல்வதற்கு உரிமையுள்ளது.

ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தான் தேர்தல் நடக்கிறது. அவர் சொல்படி தான் நடக்க முடியும். ஏன் வாக்களிக்கும் லிஸ்ட்டில் என் பெயரில்லை என்பது தேர்தல் எல்லாம் முடிந்து புதிய அணி வந்தவுடன் தான் ஏன் இல்லை என்பதை பார்க்க முடியும். சந்தா கட்டாமல் விட்டிருப்பார். சந்தா கட்டுவதில் கூட தவறு பண்ணியுள்ளனர் என்று சொல்கிறார்கள்.
இப்படிச் சொன்னால், சொல்லிக் கொண்டே போகலாம். வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையை எப்போதோ அறிவித்துவிட்டோம். அப்போது எழும்பாத சர்ச்சை ஏன் இப்போது எழுப்பப்படுகிறது. அனைத்து கேள்விகளுக்குமே பத்மநாபன் ஐயா சரியாக பதிலளித்து வருகிறார்.

நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்பதை உறுப்பினர்கள் சொன்னால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். மருத்துவ உதவி, கல்வி உதவி, நிதியுதவி, பென்சன் என பண்ணிட்டு இருக்கிறோம். இந்த கட்டிடம் ஏன் நிற்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு எத்தனையோ பேர் தடை போட்டார்கள். அதனால் எத்தனை நாள் பணிகள் நின்றது என்பது தெரியும்.

ஒரு விஷயம், காவல்துறையினர் ஒருவர் மீது சாதாரணமாக எஃப்.ஐ.ஆர் போடமாட்டார்கள். நீதிமன்றம் 3 மாதத்தில் தகவல் சொல்ல வேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவவித்தே ஆக வேண்டும். அனைத்துமே நிரூபிக்கப்பட்டு தான் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.

Kamal supports Pandavar ani in Nadigar Sangam says Vishal

More Articles
Follows