கொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காத வேல் முருகன்

கொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காத வேல் முருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Singer Velmurugans Corona awareness short filmசுப்ரமணியபுரம் படத்தில் மதுரை குலுங்க என்ற பாடல் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் பாடகர் வேல்முருகன்.

இதைத்தொடர்ந்து சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் தனது குரல் பங்களிப்பையும் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தர்மபிரபு ஆகிய படங்களில் நடித்தும் தனது திரைப் பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார்.

கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற அசுரன் படத்தில் இவர் பாடிய ‘கத்தரி பூவழகி…’ பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திரைப்படங்களிலும் நாட்டுப்புற மேடைகளிலும் தனது பங்களிப்பை கொடுத்துவரும் வேல்முருகன் கொரோனா நோய் தொடர்பாக ஒரு விழிப்புணர்வு குறும்படத்தில் சம்பளமே இல்லாமல் நடித்து கொடுத்துள்ளார்.

கொரோனா நோய்க்காக பல்வேறு தனிப்பாடல்கள் வெளியிடப்பட்டாலும் வேல்முருகன் நடித்து வெளியாகியிருக்கும்

‘பச்சை மண்டலம்’ என்ற இந்த குறும்படம் மிகவும் வித்தியாசமான அதே நேரத்தில் யாரும் சொல்லாத ஒரு முக்கியமான கருத்தை மையமாகக்கொண்டு உருவாகியுள்ளது.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமான மனிதர்களை நாம் ஒதுக்கி வைக்கவோ புறக்கணிக்கவோ கூடாது என்பதையும், அவர்களை மனிதாபிமானத்தோடு எப்படி நடத்த வேண்டும் என்பதையும் உணர்த்தும் வகையில் இந்த குறும்படம் அமைந்துள்ளது.

எனவே இந்த குறும்படத்திற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவும் பாராட்டுகளும் குவிகின்றன.

இன்றைய சூழ்நிலையில் சமூகத்திற்கு மிக மிக அவசியமான விழிப்புணர்வு கருத்தோடு வெளியாகியுள்ள இந்த குறும்படத்துக்கு கொரோனா நோயை வெல்ல போராடும் அரசு அதிகாரிகளும் மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் கூட பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

கொரோனா என்ற நோயினை மட்டுமே எதிர்க்க வேண்டும். தவிர்த்து, நோயாளியை எதிர்க்க கூடாது என்ற கருத்தை உணர்வு பூர்மமாக விளக்கும் ‘பச்சை மண்டலம்’ குறும்படத்தை ஷில்டன் தேவராஜ் இயக்கியுள்ளார்.

குறும்படத்தை கைஷோ கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.நாக சுப்ரமணியம் கதை எழுதி தயாரித்துள்ளார். கண்மணி ராஜா திரைக்கதை வசனத்தை எழுத, தஜ்மீல் ஷெரீப் இசையமைத்துள்ளார்.

இந்த குறும்படத்தில் பாடகர் வேல் முருகனுடன் சிற்றரசு, ரம்யா, சிவரஞ்சனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

Singer Velmurugans Corona awareness short film

10 வகுப்பு பொதுத்தேர்வை புறக்கணிக்கும் மாணவர்கள்.? – கௌரவ் நாராயணன் அதிரடி கருத்து

10 வகுப்பு பொதுத்தேர்வை புறக்கணிக்கும் மாணவர்கள்.? – கௌரவ் நாராயணன் அதிரடி கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gaurav-narayanan-bac7fd56-2050-48ed-b575-35ff9cff222-resize-750கொரோனா பொது முடக்கத்தால் மார்ச் & ஏப்ரலில் நடைபெறவிருந்த 10 வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

அதனையடுத்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ்-1 இறுதிநாள் தேர்வு மற்றும் பிளஸ்-2 இறுதிநாள் தேர்வு எழுதாதவர்களுக்கான தேர்வுகள் வருகிற ஜூன் 15ஆம் தேதி தொடங்குகின்றன.

அதன்படி, தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களை வரிசைப்படுத்தி தினமும் தெர்மா மீட்டர் மூலம் உடல் வெப்பத்தை பரிசோதிக்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

எனவே தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என மாணவர்கள் & பெற்றோர்கள், ஆசிரியர்கள் & அரசியல்வாதிகள் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடர்ப்பட்ட நிலையில், இன்று அதனை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

மேலும், தேர்வை 1 மாதம் ஒத்திவைப்பது தொடர்பாக பிற்பகலுக்குள் பதிலளிக்க அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கிடையே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதல்வர் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான கௌரவ் நாராயணன் இது தொடர்பாக கூறியதாவது….

கொரோனா தொற்று பிரச்சினையின் போது தேர்வை நடத்துவது தமிழக கல்வித்துறையின் தவறான முடிவு.

உயிர் பாதுகாப்பே மிக அவசியம். அரசின் இந்த விபரீத முடிவால் பெற்றோர்கள் & மாணவர்கள் தேர்வை புறக்கணிக்க உள்ளனர்.. அரசு என்ன செய்ய போகிறது..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Director Gaurav Narayanan talks about Students refuse to write 10th Exam

‘என்றும் வாழும் கிரேஸி’… ஜுன் 10 நேரலையில் கமல்-குஷ்பூ பங்கேற்பு

‘என்றும் வாழும் கிரேஸி’… ஜுன் 10 நேரலையில் கமல்-குஷ்பூ பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

khushbooநடிகர் கிரேஸி மோகன் மறைந்து ஓராண்டு ஆகிவிட்டது.

அவரின் முதலாம் ஆண்டு நினைவேந்தலை, டோக்கியோ தமிழ் சங்கம், ‘என்றும் வாழும் கிரேஸி’ என்ற தலைப்பில் நடத்தி அவருக்கு அஞ்சலி செலுத்தவுள்ளது.

வருகிற ஜுன் 10 மாலை 6 மணிக்கு நடக்கும் இந்நிகழ்வு, நேரலையில் ஒளிப்பரப்பாகிறது. இதில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கிறாராம்.

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில்…

மக்களை நகைச்சுவை வழியே சிரிக்க, மகிழச் செய்வதே கிரேஸி மோகனுக்கான உண்மை நினைவேந்தலாக இருக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டும், தற்போது கொரோனா ஊரடங்கில் மக்கள் வீட்டில் இருக்கும் சூழலில் டோக்கியோ தமிழ் சங்கம், கிரேஸி கிரியேசன் உடன் இணைந்து கிரேஸி மோகனுக்கான நேரலை சிறப்பு நினைவந்தல் நிகழ்வை ஜுன் 10 அன்று கமல்ஹாசன் முன்னிலையில் பெருமையுடன் வழங்குகிறது.

இதில் 25க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள், சங்கங்கள் இணைந்துள்ளன. சமூக வலைதளத்தில் நேரலையில் ஒளிபரப்பப்படும் இந்நிகழ்வில் நாசர், பிரபு, குஷ்பு, கே.எஸ்.ரவிக்குமார், சந்தானபாரதி, ஞானசம்பந்தன் உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பிக்கின்றனர்.

இந்த நிகழ்வில் கிரேஸி மோகனின் சிறப்பு நினைப்பு பாடல் ஒன்றை நடிகர் கமல்ஹாசன் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மிஷன் இம்பாசிபிள் 7-க்காக கொரோனா இல்லா நகரை உருவாக்கும் டாம் குரூஸ்

மிஷன் இம்பாசிபிள் 7-க்காக கொரோனா இல்லா நகரை உருவாக்கும் டாம் குரூஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mission impossible 7 tom cruiseஹாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர் டாம் குரூஸ்.

இவர் தற்போது மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7ம் பாகத்தை தயாரித்து நடித்து வருகிறார்.

வெனிஸ் நகரில் இதன் சூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சூட்டிங் நிறுத்தப்பட்டது.

தற்போது படத்தை முடிக்க நினைத்துள்ள டாம் குரூஸ் இங்கிலாந்து அரசின் அனுமதியுடன் புதிய முயற்சியில் களம் இறங்கவுள்ளார்.

ஆக்ஸ்போர்டு ஷயர் மாகாணம் என்ற இடத்தில் தற்காலிக திரைப்பட நகரம் அமைக்க திட்டமிட்டு இருக்கிறாராம் டாம் குரூஸ்.

பரிசோதனைகளுக்கு பின்னர் கொரோனா இல்லாத நகரமாக அந்த பகுதி அறிவிக்கப்பட்டு மருத்துவ பாதுகாப்பு வசதிகளுடன் சூட்டிங்கை நடத்தவிருக்கிறாராம்.

முழுப்படமும் முடியும் வரை படக்குழுவினர் அங்கேயே தங்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறதாம்.

ஹவுஸ்புல் ரீமேக்..: அமிதாப் கால்ஷீட்டுக்காக பார்த்திபன் வெய்டிங்.?

ஹவுஸ்புல் ரீமேக்..: அமிதாப் கால்ஷீட்டுக்காக பார்த்திபன் வெய்டிங்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parthiban amitabh bachanநடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் பார்த்திபன்.

இவர் கடந்த வருடன் இயக்கி நடித்து தயாரித்த ஒத்த செருப்பு படம் அனைத்து தரப்பினரிடையே பெரும் பாராட்டை பெற்றது.

இந்த நிலையில் 20 வருடங்களுக்கு முன் பார்த்திபன் இயக்கி நடித்த ஹவுஸ்புல் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய போகிறாராம்.

இதில் விக்ரம், ரோஜா, சுவலட்சுமி, ஐஸ்வர்யா, சுவாதி, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இளையராஜா இசையமைத்து இருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

ஹிந்தி ரீமேக்கில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறாராம் பார்த்திபன்.

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை.

அர்ஜூனின் மருமகனும் மேக்னாவின் கணவருமான நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மரணம்

அர்ஜூனின் மருமகனும் மேக்னாவின் கணவருமான நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ்.

தப்புத்தாளங்கள் படத்தில் நடித்த பிரமிளா ஜோசாய் – சுந்தர்ராஜன் ஆகியோரின் மகள்தான் மேக்னாராஜ். இவருக்கு நயன்தாரா சாயல் இருப்பதாக பலரும் கூறுவர்.

மேலும் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார் மேக்னா..

இவர் கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சிரஞ்சீவி சர்ஜா (வயது 39) கன்னட திரையுலகின் இளம் ஆக்ஷன் ஹீரோ. நடிகர் அர்ஜூனின் மருமகனும் ஆவார்.

2009-ல் ‘வாயுபுத்திரா’ படம் மூலம் தன் திரை வாழ்க்கையைத் தொடங்கினார் சிரஞ்சீவி சர்ஜா.

கடைசி படம் ‘ஷிவார்ஜுனா’ ஆகும். 21 படங்களில் நடித்திருக்கும் சிரஞ்சீவி சர்ஜா தற்போது ரணம் உட்பட 4 படங்களில் நாயகனாக நடித்து கொண்டிருந்தார்.

இவருடைய தம்பி துருவா சர்ஜாவும் ஹீரோவாக வலம் வருகிறார்.

இந்த நிலையில் இன்று பிற்பகலில் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக பெங்களூர் ஜெய்நகரில் உள்ள சாகர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளித்தும் சிரஞ்சீவி சர்ஜாவின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

மாலை 6 மணி அளவில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இவரின் திடீர் மறைவு கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிரஞ்சீவி சர்ஜாவின் தொண்டை சளி கரோனா தொற்று பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Chiranjeeivi Sarja Dies Of Massive Heart Attack

#Chitraloka #ChiranjeeviSarja

More Articles
Follows