அழகிய ஆண் குழந்தைக்கு தாயானார் ‘மெலோடி குயின்’ ஸ்ரேயா கோஷல்

அழகிய ஆண் குழந்தைக்கு தாயானார் ‘மெலோடி குயின்’ ஸ்ரேயா கோஷல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shreya Ghoshalகடந்த 2000 ஆம் ஆண்டில் ஜி டிவியில் வெளியான ‘சரிகம’ பாட்டு போட்டியில் கலந்துக் கொண்டு பிரபலமானவர் ஸ்ரேயா கோஷல்.

2002 ஆம் ஆண்டு ஷாரூக்கான், ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித் உள்ளிட்டோர் நடித்த ‘தேவதாஸ்’ பட மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார் இவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், நேபாளம், பாகிஸ்தானி, பெங்காலி, போஜ்பூரி என பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

நான்கு முறை தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

இந்திய சினிமாவில் முன்னணி பாடகியான இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு அவரின் நண்பரும் தொழிலதிபருமான ஷைலாதித்யா முகோபாத்யாயாவை திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில், ஷ்ரேயா கோஷலுக்கு இன்று மதியம் ஆண் குழந்தை பிறந்துள்ளதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில்…

“கடவுள் அருளால் இன்று மதியம் எங்களுக்கு விலைமதிப்பற்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபோன்ற ஒரு மகிழ்ச்சியான உணர்வை இதற்கு முன்பு அடைந்ததில்லை. நான், எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அளவுகடந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். உங்களது வாழ்த்துக்களுக்கு என்ற நன்றி` எனக் குறிப்பிட்டுள்ளார்.

God has blessed us with a precious baby boy this afternoon. It’s an emotion never felt before. @shiladitya and I along with our families are absolutely overjoyed. Thank you for your countless blessings for our little bundle of joy.

Singer Shreya Ghoshal blessed with baby boy today

BIG NEWS : மே 22-23ல் அனைத்து கடை & பேருந்து அனுமதி.; அடுத்த ஒரு வாரம் தளர்வே இல்லாத முழு ஊரடங்கு – தமிழக அரசு

BIG NEWS : மே 22-23ல் அனைத்து கடை & பேருந்து அனுமதி.; அடுத்த ஒரு வாரம் தளர்வே இல்லாத முழு ஊரடங்கு – தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Lock Downகொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடெங்கிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழக சட்டசபையில் இடம் பெற்றுள்ள, 13 கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற்றனர்.

இந்த குழுவானது நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த அவ்வப்போது கூடி விவாதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதில் அதிமுக ஆட்சியின் முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் இன்று மே 22 காலையில் முதல்வரின் மருத்துவ நிபுணர் குழு ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஐ.சி.எம்.ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர், அருண்குமார் உள்ளிட்ட 19பேர் கொண்ட குழு நேரிடையாகவும், காணொலி காட்சி வாயிலாகவும் கலந்து கொண்டனர்.

கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முழு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும்,
கட்டுப்பாடுகள் விலக்கு அளிப்பது தொடர்பாகவும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 13 கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க அனைத்து சட்டமன்ற கட்சி குழு கூட்டத்தில் தீர்மானம் கூறப்பட்டது.

இந்த கூட்டத்தில் மே 24 முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

அதன் விவரம்…

மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை – தமிழக அரசு.

இன்றும் மே 22-23 நாளையும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி. இன்றும் நாளையும் அரசு, தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி.

பொதுமக்கள் நலன் கருதி இன்று (22.5.21) இரவு 9 மணி வரையிலும், நாளை ஞாயிறு ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி.

முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி.

பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி.

காய்கறிகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே வந்து விற்பனை செய்யப்படும். அடுத்த ஒரு வாரம் மளிகை, காய்கறி கடைகள் செயல்படாது.

#TNLockdown

#BREAKING: Total #Lockdown without any relaxation to be enforced in #TamilNadu for a week from Monday. All Shops likely to be kept open from 6am to 9pm tomorrow (May 23 SUNDAY) for people to replenish their supplies for the week.

‘ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்’..; இணையத்தை பற்ற வைத்த ரஜினி-மோகன் பாபு நட்பு

‘ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்’..; இணையத்தை பற்ற வைத்த ரஜினி-மோகன் பாபு நட்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர் மோகன்பாபு நட்பை பற்றி நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

இருவரும் பல வருடங்களாக சினிமாவை தாண்டியும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர்.

இவர்களது குடும்பத்தினர் அடிக்கடி சந்தித்து கொள்வதையும் நாம் பார்த்து இருக்கிறோம்.

இந்த நிலையில் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ரஜினி்-மோகன்பாபு படங்களை பகிர அது வைரலாகி வருகிறது.

இந்த போட்டோக்களுடன் ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்’ என்ற கேப்ஷனையும் பதிவு செய்துள்ளார்.

இவர்கள் இருவரும் ஒய்ட் அண்ட் ஒயிட் உடையில் செம கெத்தாக போஸ் கொடுத்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இது ‘அண்ணாத்த’ பட சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்தபோது இவர்கள் சந்தித்து எடுத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

Rajinikanth and Mohan Babu are the original gangsters says Vishnu Manchu

rajini mohan babu

கமல்ஹாசன் தலைமையில் கவிஞர் சினேகன் திருமணம்.!

கமல்ஹாசன் தலைமையில் கவிஞர் சினேகன் திருமணம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

snehan kamal haasanபாடலாசிரியர் நடிகர் என பன்முகம் கொண்டவர் கவிஞர் சினேகன்.

யோகி, உயர்திரு 420 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் பாண்டவர் பூமி, மெளனம் பேசியதே, சாமி, ஆட்டோகிராஃப் உள்ளிட்ட பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார் கவிஞர் சினேகன்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.

அப்போது கமல்ஹாசனோடு ஏற்பட்ட நட்பு காரணமாக அவரின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டார். ஆனால் படு தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் விரைவில் கவிஞர் சினேகனுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இவரின் திருமணம் நடிகர் கமல்ஹாசன் தலைமையில் நடக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

Bigg Boss Snehan marriage fixed finally ?

கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசுக்கு உதவும் சத்யராஜ் சிவகார்த்திகேயன் ஜெயம் ரவி

கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசுக்கு உதவும் சத்யராஜ் சிவகார்த்திகேயன் ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

corona awarenessதமிழக அரசின்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.

ஒரு பக்கம் ஊரடங்கு மறு பக்கம் கொரோனா தடுப்பூசி என கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசுக்கு உதவிடும் வகையில் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவை திரைப்பிரபலங்கள் வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர்கள் சத்யராஜ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி ஆகியோர் வீடியோக்களில் விழிப்புணர்வு தொடர்பாக பேசி வெளியிட்டுள்ளனர்.

இதனை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இவர்கள் வீடியோவில் கூறியிருப்பதாவது…

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி நம்மை அச்சுறுத்தி வருகிறது.

இதை தடுக்க நம் தமிழக அரசின் சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மிக மிக அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும்.

வெளியே சென்றால் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மிக முக்கியமானது தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும்.

கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். நம்மையும் நாட்டையும் காப்போம். கொரோனா நோயை வெல்வோம். மக்களை காப்பாற்றுவோம்.”

என இவர்கள் பேசியுள்ளனர்.

Tamil celebrities on corona awareness video

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை.. கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா 1 லட்சம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை.. கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா 1 லட்சம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Stalin (3)கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிராக 20,000-த்துக்கு அதிகமான தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு 13 பேரை சுட்டுக்கொன்றனர்.

மேலும், இந்த கலவரம் தொடர்பாக ஏராளமானோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

எனவே அந்த ஆலை மூடப்பட்டது. தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் தயாரிக்க தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையின் இடைக்கால அறிக்கையை முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், கடந்த 14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

இந்த நிலையில் 2018ல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை இன்று மதுரையில் வழங்கினார் முதல்வர் முக. ஸ்டாலின்.

மேலும் அந்த சம்பவத்தில் தீவிர காயம் அடைந்த 3 பேருக்கும் பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இத்துடன் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் சிலருக்கு காயங்களும், பலருக்கு மன உளைச்சலும் ஏற்பட்டதைக் கருதி அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

அதனடிப்படையில், 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும்.

இதுதவிர ஒரு நபர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டாராம்.

அவரை இழந்துவாடும் அவரது 72 வயது தாயாருக்கு இரண்டு லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது.

மேலும் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

MK Stalin gives govt jobs to kin of Thoothukudi police firing victims

More Articles
Follows