சிம்பு படத்தலைப்பை மாற்றி மீண்டும் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட ஐசரி கணேஷ் & கௌதம் மேனன்

சிம்பு படத்தலைப்பை மாற்றி மீண்டும் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட ஐசரி கணேஷ் & கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஈஸ்வரன்’ மற்றும் ‘மாநாடு’ ஆகிய படங்களை முடித்து விட்டு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தில் நடிக்கவிருந்தார்.

இது சிம்புவின் 47வது படமாக உருவாகிறது.

இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்க கௌதம் மேனன் இயக்குவார் என கூறப்பட்டது.

கௌதம் மேனன் & சிம்பு ஆகியோரது கூட்டணி ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்காக ஏற்கெனவே இணைந்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு அறிவித்தபடி ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற படத்தலைப்பை மாற்றியுள்ளனர்.

இப்படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

அதில் காடுகள் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

சின்ன பையன் தோற்றத்தில் உள்ளார் சிம்பு. கையில் நீண்ட கம்பு உடன் லுங்கி உடன் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார் சிம்பு.

Simbu – Gautham Menon movie gets a new title

விடுமுறைக்காக அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த சன்னி லியோன்

விடுமுறைக்காக அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த சன்னி லியோன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் தயாராகி வரும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படமான ‘ஷெரோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இதனை படத்தின் கதையின் நாயகியான நடிகை சன்னி லியோன் மற்றும் இயக்குனர் ஸ்ரீஜித் இருவரும் இணைந்து அறிவித்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் பேசுகையில்….

,’ ஷெரோ, ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் திரைப்படம்.

இந்தப் படத்தில் சாரா மைக் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணாக நடிகை சன்னி லியோன் நடிக்கிறார்.

விடுமுறையை கழிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகை தருகிறார். இங்கு அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.

சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக இருந்தாலும், இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.

இதற்காக நடிகை சன்னிலியோன் கடுமையாக பயிற்சி செய்து, உரிய பாதுகாப்புடன் நடித்தார். மூணாறு மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

இப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் நடிகை சன்னி லியோனின் கடுமையான உழைப்பு குறித்து குறிப்பிடாமல் இருக்க இயலாது. படப்பிடிப்பு நிறைவடைந்த போது ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது. ‘ என்றார்.

இதுதொடர்பாக நடிகை சன்னி லியோன் பேசுகையில்,’….

ஷெரோ போன்ற சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். இந்தப் படத்தின் மூலமாக பல மொழிகளையும், நடிப்பின் வேறு பரிமாணங்களையும் கற்றுக்கொள்ள முடிந்தது.

கேரளாவின் அழகியல் சார்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. என்னுடைய கலைப் பயணத்தில் நான் நடித்த சுவராசியமான படங்களில் ஷெரோவும் ஒன்று.

சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது படக்குழுவினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.’ என்றார்.

படப்பிடிப்பு நிறைவடைந்தது என்பதை குறிப்பிடும் வகையில் கதையின் நாயகியான நடிகை சன்னி லியோனும், இயக்குனர் ஸ்ரீஜித் விஜயனும் கையில் கிளாப் போர்டு ஒன்றை வைத்துக்கொண்டு அதில் படப்பிடிப்பு நிறைவு என குறிப்பிட்டு, அதை புகைப்படமாக எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றிருக்கிறார்கள்.

Sunny Leone calls a wrap on her action packed psychological thriller Shero

‘சார்பட்டா பரம்பரை’-யினரை நேரில் அழைத்து பாராட்டிய கமல்.; மகிழ்ச்சி-யில் ரஞ்சித்

‘சார்பட்டா பரம்பரை’-யினரை நேரில் அழைத்து பாராட்டிய கமல்.; மகிழ்ச்சி-யில் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’ படம் சமீபத்தில் வெளியானது .

அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படம் மக்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிபடமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பல்வேறு தரப்பினர் இப்படத்தைப்பார்த்து குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் படம் பார்த்துவிட்டு குழுவினரை அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

தவிர்க்க முடியாத வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் பா.இரஞ்சித், மற்றும் குழுவினருக்கும், இதில் நடித்த நடிகர்கள் தொழில் நுட்பகலைஞர்களுக்கும் உலக நாயகனின் வாழ்த்து பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள் குழுவினர்.

Kamal Haasan invited and praised Sarpatta Parambarai movie team

அட்லி இயக்கத்தில் டபுள் ஷாரூக்கான் & நயன்தாரா.; கேப்டன் பட ரீமேக்..?

அட்லி இயக்கத்தில் டபுள் ஷாரூக்கான் & நயன்தாரா.; கேப்டன் பட ரீமேக்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி முதல் பிகில் வரை விஜய்க்கு மாஸான படங்களை கொடுத்தவர் அட்லி.

விஜய்யை இயக்கிய பின்னர் தமிழில் வேறு எந்த ஹீரோக்களையும் இயக்க விரும்பவில்லை போலும் அட்லி.

எனவே நேரடியாக பாலிவுட் படத்தை இயக்க சென்றுவிட்டார்.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானை வைத்து பிரம்மாண்டமான ஒரு படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் அதில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

அண்மையில் இதற்கான ப்ரோமோ வீடியோ எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதில் ஷாரூக்கான் டபுள் ரோலில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கேப்டன் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் கதை தழுவல் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.

Hot updates on Shah Rukh Khan – Nayanthara film

MGR ரசிகர் முதல் அதிமுக வேர் வரை..: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மரணம்.; 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

MGR ரசிகர் முதல் அதிமுக வேர் வரை..: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மரணம்.; 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஇஅதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று வயது மூப்பு காரணமாக காலமானார்.

1991 ஆம் ஆண்டு அதிமுகவில் ஜவுளி மற்றும் கைத்தறி அமைச்சராக இருந்த மதுசூதனன்.

2010 ஆண்டு முதல் அதிமுகவின் அவைத்தலைவராக செயலாற்றி வந்தவர் மதுசூதனன்.

இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என்று அதிமுக பிரிந்திருந்த நிலையிலும் கூட , கட்சியின் சின்னம், கொடி ஆகியவையை தேர்தல் ஆணையம் மதுசூதனிடமே வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மதுசூதனன் இருக்கும் வரை அவர்தான் அதிமுகவின் அவைத்தலைவர் என ஜெயலலிதா கூறியிருந்த நிலையில், கடைசி வரை அது பின்பற்றப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டார் மதுசூதனன்.

இதன் சிகிச்சைக்கு பின்னர் தேறியிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக கட்சி வேலைகளில் இருந்து ஓய்வு பெற்று தண்டையார்பேட்டையில் இருந்தார்.

இந்நிலையில் அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சேர்க்கப்பட்டிருந்த மதுசூதனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது காலமானார்.

இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (ஆக. 05) கூட்டாக வெளியிட்ட இரங்கல் செய்தியில்..

“அதிமுகவின் அவைத் தலைவரும், அதிமுகவின் மூத்த முன்னோடியும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.

எம்ஜிஆரின் விசுவாசமிக்க தொண்டர், எம்ஜிஆருக்காக எதையும் தியாகம் செய்யத் துணிந்த ரசிகர்; எம்ஜிஆர் கண்ட பேரியக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, இயக்கத்தின் தொடக்க நாள் முதல் தன் விழிகளின் இமைகள் மூடும்வரை ஓயாது உழைத்த அதிமுக உடன்பிறப்பு; ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய போர்ப்படைத் தளபதி; அதிமுக தொண்டர்களை எப்பொழுதும் தன் தோளில் வைத்துக் கொண்டாடிய, அதிமுகவின் வேர்களில் ஒருவர் எனப் பலவாறாகவும், மதுசூதனனைப் பற்றி வரலாறு சொல்லும்.

அதிமுகவின் சோதனையான காலகட்டங்களில் அதிமுகவைக் கட்டிக்காத்த போற்றுதலுக்குரிய அதிமுகவின் தூண் சரிந்ததே என்று, கண்ணீர்க் கடலில் மூழ்கி இருக்கும் நமக்கெல்லாம் யார் ஆறுதல் சொல்ல முடியும்? உண்மையிலேயே அவரது இழப்பு அதிமுகவுக்கும் எம்ஜிஆரின் ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

மதுசூதனன் 1953-ம் ஆண்டு எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தினைத் தொடங்கி, அதனைத் தொடர்ந்து வடசென்னை பகுதியில் எம்ஜிஆர் பெயரில் மன்றங்களை அமைத்து, சிறுவர்கள் படிக்கும் வண்ணம் எம்ஜிஆர் பெயரில் இரவுப் பாடசாலைகளைத் தொடங்கியவர்.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக உடன்பிறப்புகள் அனைவராலும் ‘அஞ்சா நெஞ்சன்’ என்று கம்பீரத்தோடு அழைக்கப்பட்ட மதுசூதனன், எம்ஜிஆர் இயக்கம் தொடங்கியபோது, எம்ஜிஆர் நீக்கப்பட்டதைக் கண்டித்து சிறையில் இருந்துள்ளார்; அதிமுகவுக்காக ஏறத்தாழ 48 முறை சிறை சென்றுள்ளார்.

வடசென்னை மாவட்டத்தில், பகுதிக் கழகச் செயலாளராக, மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளராக, மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றிய மதுசூதனனை எம்ஜிஆர் தமிழக மேலவை உறுப்பினராக ஆக்கினார்.

ஜெயலலிதா, 1991-ல் நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலின்போது, சட்டப்பேரவை உறுப்பினராக்கி, அமைச்சர் பதவி வழங்கி அழகு பார்த்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவால் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர், அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளர் ஆகிய பொறுப்புகள் வழங்கப்பட்டு, சிறந்த முறையில் கட்சிப் பணிகளை ஆற்றியவர்.

பின்னர், ஜெயலலிதாவின் நல்லாசியோடு, 5.2.2007 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் மதுசூதனன் அதிமுக அவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, தற்போதுவரை சீரிய முறையில் கட்சிப் பணிகளை ஆற்றி வந்தவர்.

ஏறத்தாழ 70 ஆண்டுகள் எம்ஜிஆரின் புகழ்பாடி, அதிமுக வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வாழ்நாளெல்லாம் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் விசுவாசத் தொண்டராக வாழ்ந்து மறைந்த மதுசூதனனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உற்றார் உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டுமென்றும், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும், ஒன்றரைக் கோடி கழகத் தொண்டர்களின் சார்பிலும் எங்கள் சார்பிலும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

அவைத்தலைவர் மதுசூதனனின் மறைவையொட்டி, 5.08.2021 முதல் 7.08.2021 வரை மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.

அதேபோல், தமிழகம் மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும், கழகக் கொடி, அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதையும், அனைத்துக் கழக நிகழ்ச்சிகளும் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்”.

இவ்வாறு ஓபிஎஸ்- ஈபிஎஸ் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

AIADMK Presidium Chairman Madhusudhanan passes away

JUST IN #30YearsofAjith.: தன்னை வெறுப்பவர்களுக்கும் நச்சுன்னு நன்றி சொன்ன தல

JUST IN #30YearsofAjith.: தன்னை வெறுப்பவர்களுக்கும் நச்சுன்னு நன்றி சொன்ன தல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகிற்குள் நுழைந்து 30 வருடத்தை நிறைவு செய்கிறார் நடிகர் அஜித்.

குக்கிங், பைக் பிரியர், கார் ரேஸ், ஏரோ மாடலிங், துப்பாக்கி சுடுதல், போட்டோகிராஃபர் துறைகளில் அஜித்திற்கு அதிக ஆர்வம் உண்டு.

இவர் 1990களில் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழில் ‘அமராவதி’யில் அறிமுகமானாலும் அதற்கு முன்பே தெலுங்கில் சில படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் அஜித்.

இவரது ஆரம்ப கால சினிமா பயணத்தில் ‘ஆசை’, ‘காதல் கோட்டை’, ‘காதல் மன்னன்’ ஆகிய படங்கள் முக்கிய திருப்பமாக அமைந்தது.

‘சிட்டிசன், ‘வாலி’ & ‘அமர்க்களம்’ போன்ற படங்கள் ஆக்‌ஷன் ஹீரோ என்ற புதிய அடையாளத்தை அஜித்துக்கு தந்தன.

அஜித்திற்கு மிகப்பெரும் ரசிகர்கள் உருவாகினர்.

ஆனாலும் கடந்த 2011ல் ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அறிவித்தார் அஜித்.

அதன்பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் மீடியாக்களுக்கு பேட்டி தருவதையும் தவிர்க்க ஆரம்பித்தார்.

‘ஆரம்பம்’, ‘வீரம்’, வேதாளம்’ ‘விவேகம்’, ‘என்னை அறிந்தால்’ படங்கள் அவரது வெற்றி படங்கள் வரிசையில் இணைந்தது.

பொது நிகழ்ச்சிகளில் எதிலும் அஜித் தலை காட்டாமல் இருப்பதால் திரையில் மட்டுமே அவரை காண கூட்டம் அள்ளும்.

தற்போது அவரது நடிப்பில் ‘வலிமை’ உருவாகி வருகிறது.

இந்த நிலையில் சினிமாவில் 30 வருடத்தை நிறைவு செய்துள்ள அஜித் தன் மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் தன்னை வெறுப்பவர்களுக்கும் நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரின் நாலு வரி ஆங்கில அறிக்கை இதோ…

Mr Ajith Kumar’s message on his 30th year in the film industry

Fans, Haters & Neutrals are 3 sides of the same coin. I graciously accept the Love from fans, the hate from the haters & the unbaised views of the Neutrals.
Live & Let live!
Unconditional Love Always!!
Ajith Kumar

More Articles
Follows