சினிமாவில் அஜித் மனைவி ரீ-எண்ட்ரீ..; மீண்டும் ஷாலினியை இயக்கும் மணிரத்னம்

சினிமாவில் அஜித் மனைவி ரீ-எண்ட்ரீ..; மீண்டும் ஷாலினியை இயக்கும் மணிரத்னம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shalini (2)குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி வளர்ந்து நாயகியாக சில படங்களில் நடித்தார் ஷாலினி.

விஜய், பிரசாந்த், மாதவன் உள்ளிட்ட டாப் ஹீரோஸ் உடன் ஜோடியாக நடித்திருந்தார்.

அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்த போதே அஜித்குமாரும் ஷாலினியும் காதலித்தனர்.

இதனையடுத்து 2000-ம் ஆண்டில் பெற்றோர் சம்மத்ததுடன் திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார் ஷாலினி.

இவர்களுக்கு தற்போது ஒரு மகள் & ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷாலினியை நடிக்க வைக்க மணிரத்னம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கிய ‘அலைபாயுதே’ படத்தில் மாதவன் ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shalini Ajith re entry in mega budget movie

பள்ளி நண்பர்களுடன் இணைந்து சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய வசந்தபாலன்

பள்ளி நண்பர்களுடன் இணைந்து சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய வசந்தபாலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vasantha Balan (2)இயக்குநர் ஷங்கருடன் துணை, இணை இயக்குநராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குநரான வசந்தபாலன், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவராவார்.

தற்போது அவர், தான் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய ஜி வி பிரகாஷ் நடித்து, இசையமைக்கும் ஜெயில் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றன.

இவற்றில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோர் இணைந்து பாடிய ‘காத்தோடு காத்தானேன்…’ பாடல் 14 மில்லியன் பார்வைகளை கடந்து தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது, விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் படித்த நூறு ஆண்டுகளைக் கடந்த பெருமைமிகு பள்ளியான க்ஷத்திரிய வித்யாசாலாவில் தன்னுடன் பயின்ற மூன்று நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர் வசந்தபாலன் தொடங்கியுள்ளார்.

அதில் ஒருவரான வரதராஜன் வசந்தபாலனுடன் ஆல்பம் திரைப்படம் துவங்கி அவரது எல்லா திரைப்படங்களிலும் உதவி இயக்குநர், கேஸ்டிங் இயக்குநர், புராஜெக்ட் டிசைனர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் என பல்வேறு பணிகளில் ஈடுபட்ட அனுபவம் பெற்றவர்.

வெயில் திரைப்படத்தில் இடம்பெற்ற பரத் கதாபாத்திரம், லோக்கல் விளம்பர நிறுவனம் எல்லாம் அவரை மனதில் கொண்டு எழுதப்பட்டவை.

இன்னொரு நண்பரான முருகன் ஞானவேல் தற்போது அமெரிக்காவின் மிகப்பெரிய கணிப்பொறி நிறுவனத்தில் உயரதிகாரியாக உள்ளார்.

மற்றொரு நண்பரான கிருஷ்ணகுமார் கணினி உப பொருட்களை சிறியதாக விற்கத்துவங்கி தன் கடின உழைப்பால் இன்று தொழிலதிபராக உயர்ந்த இடத்தில் உள்ளார்.

விரைவில் இவர்கள் தயாரிக்கவுள்ள திரைப்படத்தின் பெயரும், அதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகளின் பெயர்களும் அறிவிக்கப்படும்.

தனது முந்தைய படங்களைப் போலவே, புதிய படமும் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அழுத்தமாகவும், அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் இருக்கும் என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

Director Vasantha Balan’s next project details here

‘வேலையில்லா பட்டதாரி’ புகழ் அமிதாஷின் அசத்தும் பாடல் ‘அரக்கியே’

‘வேலையில்லா பட்டதாரி’ புகழ் அமிதாஷின் அசத்தும் பாடல் ‘அரக்கியே’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ARAKKIYE (2)‘கொரோனா கண்ணாளா’ மூலம் ஊரடங்கையும் தாண்டி இதயங்களுக்குள் நுழைந்த குழுவின் முக்கிய உறுப்பினர்கள், தற்போது ‘அரக்கியே’ என்னும் பாடலின் (சிங்கிள்) மூலம் அடுத்த ‘அட்டாக்’-க்கு தயாராக உள்ளனர்.

2020 பிப்ரவரி 12-ம் தேதி இப்பாடல் வெளியாகவுள்ளது.

முதல் இசை வீடியோ 22 லட்சம் பார்வைகளை கடந்த நிலையில், ஈடிஎம் எனப்படும் மின்னணு நடன இசை மற்றும் டீப் ஹவுஸ் ஆகிய புதிய முறைகளை கையாண்டு, புத்துணர்ச்சி மிக்க தமிழ் இசை காணொளிகளை உருவாக்க இக்குழு முயன்று வருகிறது.

உண்மைக் காதலின் உயிர்ப்பு பற்றி காதலர்களின் கருத்து பரிமாறல்களே ‘அரக்கியே’ பாடலின் அடிநாதமாகும்.

‘கொரோனா கண்ணாளா’ பாடலை பாடி, நடித்த அமிதாஷ், ‘அரக்கியே’ சிங்கிளையும் பாடி, அதில் தோன்றியும் உள்ளார்.

யார் இந்த அமிதாஷ் என்று கேட்பவர்களுக்காக:…

‘வேலையில்லா பட்டதாரி’ மூலம் அறிமுகமான இவர், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பான ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அவரது அடுத்த படமான ‘தள்ளி போகாதே’ இம்மாதம் வெளியாகவுள்ள நிலையில், 2020 பிப்ரவரி 12 வெளியாகவுள்ள ‘குட்டி ஸ்டோரி’-யிலும் அவர் நடித்துள்ளார்.

இது மட்டுமில்லாது, ‘ஹார்ட் பீட்ஸ்’ என்னும் ஹாலிவுட் திரைப்படத்திலும் கதாநாயகனாக அமிதாஷ் நடித்துள்ளார்.

‘அரக்கியே’ பாடலை பிரபல பாடகியான ஜோனிடா காந்தியுடன் இணைந்து அமிதாஷ் பாடியுள்ளர்.

முன்னணி நடன இயக்குநரான சதிஷ் கிருஷ்ணன், இந்த பாடலுக்கு நடனம் அமைத்திருப்பதோடு, இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

இதயம் தொடும் பாடல் வரிகளை மதன் கார்கி எழுதியுள்ள நிலையில், ‘கொரோனா கண்ணாலா’ மூலம் கவனம் ஈர்த்த அனிவீ ‘அரக்கியே’-க்கும் இசையமைத்துள்ளார்.

ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் அழுகுற இப்பாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள ‘அரக்கியே’-வில் காவ்யா ஜி நாயகியாக தோன்றுகிறார். ஆஃப் பீட் ஸ்டூடியோவில் இப்பாடல் பதிவு செய்யப்படடுள்ளது.

அமர்நாத் படத்தொகுப்பையும், சுதர்ஷன் (தி ஸ்டோரி டெல்லர்) விளம்பரம் மற்றும் புகைப்படங்களையும் கையாண்டுள்ளனர்.

ARAKKIYE, a new single is due for release on 12the Feb, 2021.

கானா பாலா பாடலுக்கு இயக்குனர் சுப்ரமணியம் சிவா கண் தெரியாத கேரக்டரில் நடிக்கிறார்

கானா பாலா பாடலுக்கு இயக்குனர் சுப்ரமணியம் சிவா கண் தெரியாத கேரக்டரில் நடிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

subramaniam siva (1)மனமே மனமே கலங்காதே மனமே நிழலாய் வருமே நாளை உன் கனவே கவலைகள் இங்கு நிரந்தரமில்லை துன்பங்கள் துயரங்கள் தொடர்வதில்லை…

எனும் பாடலை கானாபாலா பாடியுள்ளார். தொல்காப்பியன் பாடலுக்கு சுலக்ஷாடாடி இசையமைத்துள்ளார்.

திருடா திருடி, யோகி, வெள்ளை யானை போன்ற படங்களை இயக்கியவர் சுப்ரமணியம் சிவா.

வடசென்னை, அசுரன் படத்தின் மூலம் தன் நடிப்பால் அனைவரையும் அசர வைத்தவர்.இவர் “அம்மா உணவகம் ” படத்திற்கு இந்த தத்துவ பாடல் காட்சிக்கு கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விவேக பாரதி இயக்கத்தில் படிக்கட் பாய் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.பி. இப்ராகீம் தயாரித்து வருகிறார்.

அஸ்வின் கார்த்திக், சசிசரத், கதாநாயகர்களாகவும், கதாநாயகிகளாக ஸ்ரீநிதி, பாத்திமா நடிக்க “குள்ளபூதம்” இந்திரன், இயக்குனர்கள் ஆர்.வி. உதயகுமார், சுப்ரமணியம் சிவா, ஷரவண சக்தி, ஈரமான ரோஜாவே சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதன் நிறைவு கட்ட படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதிகளில் நடைபெற்று முடிவந்தது..

Director Subramaniam siva plays blind in Amma Unavagam

‘ராதே ஷியாம்’ பட 4 மொழி பதிப்பிற்கு இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகர்

‘ராதே ஷியாம்’ பட 4 மொழி பதிப்பிற்கு இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இசையமைப்பாளர்கள் ‘ராதே ஷியாம்’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்கள்

ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பன்மொழிப்படமான ‘ராதே ஷியாம்’-ன் ப்ரீ-டீசர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், அது குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

இசை என்பது ஒரு திரைப்படத்தின் அடிநாதமாக விளங்குவதாலும், ‘ராதே ஷியாம்’ பன்மொழிப்படமாக உருவாகி வரும் காரணத்தாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையான இசையமைப்பாளர்களை ‘ராதே ஷியாம்’ படக்குழு ஒன்று திரட்டியுள்ளது.

இந்திய சினிமா இதுவரை கண்டிராத வகையில், இத்திரைப்படத்தின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாகவும், வித்தியாசமாகவும், விருந்து படைக்கும் வகையிலும் இருக்கும்.

இப்படத்தின் இந்தி பதிப்பிற்கும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பதிப்பிற்கும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர்.

பாடல்கள் வேறாக இருந்தாலும், அவை வெளிப்படுத்தும் உணர்வுகள் ஒரே மாதிரியாக இருக்கும்.

இந்த வித்தியாசமான முயற்சிக்கு நடிகர்கள் உட்பட அனைவரும் முழுமையாக ஒத்துழைத்த காரணத்தால், பாடல்கள் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக படமாக்கப்பட்டன.

‘ராதே ஷியாமின்’ இந்தி பதிப்பிற்கு மிதுன் இரு பாடல்களுக்கும், மனன் பரத்வாஜ் ஒரு பாடலுக்கும் இசையமைத்துள்ளனர். பிரபல கவிஞர்களான குமார் மற்றும் மனோஜ் முன்தஷிர் ஆகியோர் பாடல்களை இயற்றியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பதிப்பிற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, கிருஷ்ண காந்த் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பத்து வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் பிரபாஸ் நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிக்கின்றனர்.

Justin Prabhakar to Score the 4 Versions of Radhe Shyam

prabhas pooja hegde

மீண்டும் ‘சின்ன மச்சான்’ கூட்டணி..; பிரபுதேவா & ஸ்ரீதர் இணையும் வெஸ்டர்ன் பாடல்

மீண்டும் ‘சின்ன மச்சான்’ கூட்டணி..; பிரபுதேவா & ஸ்ரீதர் இணையும் வெஸ்டர்ன் பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhu Deva Sridhar‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன மச்சான்’ பாடல் அதன் இசைக்காகவும், நடன அசைவுகளுக்காகவும் பிரபலமானது அனைவரும் அறிந்ததே.

உற்சாகம் மிக்க நாட்டுப்புற இசைக்கு ஏற்ப பிரபுதேவா மற்றும் நிக்கி கல்ரானி ஆடிய அப்பாடலுக்கு நடனம் அமைத்த ஸ்ரீதர், பிரபுதேவாவுடன் மீண்டுமொருமுறை கைகோர்த்திருக்கிறார்.

அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெறுகிறது.

‘மஞ்ச பை’ புகழ் N.ராகவன் இயக்கும் படத்திற்கு, D. இமான் இசையமைக்கிறார்.

மேற்கத்திய இசையின் அடிப்படையில் அமைந்துள்ள துள்ளலான பாடலுக்கு, யுகபாரதி வரிகளை எழுத, ஸ்ரீதரின் நடன இயக்கத்தில் பிரபுதேவா ஆடியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இந்த பாடல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பேசிய ஸ்ரீதர்…

“பிரபுதேவா அவர்களுடன் பணிபுரிவது எப்போதுமே ஒரு உற்சாக அனுபவம். ‘சின்ன மச்சான்’ பாடலின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு மீண்டும் அவருடன் பணியாற்றியுள்ளேன்.

இது ஒரு ‘ஸ்டைலிஷ் வெஸ்டர்ன்’ பாடல். மிகவும் நன்றாக வந்துள்ளது. பிரபுதேவா, இயக்குநர் உட்பட அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Prabhudeva and choreographer Sridhar come together for a stylish Western number

More Articles
Follows