தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள அஜித்தின் விஸ்வாசம் வருகிற ஜனவரி 10-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.
இதனையடுத்து இந்த நிறுவனம் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த 2 படங்களை தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் தனுஷின் 34வது படத்தையும் ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் தனுஷின் 35வது படத்தையும் இயக்கவுள்ளனர்.
தனுஷின் 34-வது படத்திற்கு விவேக் – மெர்வின் இணைந்து இசையமைக்கின்றனர்.
இதுதவிர வெற்றிமாறனின் வடசென்னை 2, அசுரன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என தனுஷ் பிசியாகி இருக்கிறார்.
இவையில்லாமல் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படமும் வெளியீட்டுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரு படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
Sathya Jyothi films going to Produce Dhanush 34 and 35th films