மீண்டும் ரஜினி-தனுஷ் உடன் இணையும் சந்தோஷ் நாராயணன்

மீண்டும் ரஜினி-தனுஷ் உடன் இணையும் சந்தோஷ் நாராயணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ranjith santhosh narayananரஜினியின் நடிப்பில் 160வது படமாக உருவாகி வரும் படம் 2.0.

இதனையடுத்து தன் 161வது படத்தை இயக்கும் வாய்ப்பை ரஞ்சித்துக்கும், தயாரிக்கும் வாய்ப்பை தனுஷ்க்கும் அளித்தார் ரஜினி.

இந்த மே மாதம் 3வது வாரத்திற்குள் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகளை துவங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே ரஜினியின் கபாலி, தனுஷின் கொடி, வடசென்னை ஆகிய படங்களுக்கு சந்தோஷ் இசையமைத்திருந்தார். (வடசென்னை தற்போது உருவாகி வருகிறது)

மேலும் ரஞ்சித் இயக்கிய எல்லா படங்களுக்கும் இவரே இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Santhosh Narayanan teams up with Rajini Dhanush combo project

அஜித் ரசிகர்களுக்காக அட்வான்ஸாக விவேகம் டீசர்

அஜித் ரசிகர்களுக்காக அட்வான்ஸாக விவேகம் டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith and Director Sivaஅஜித் நடித்து வரும் விவேகம் படத்தை இயக்கி வருகிறார் சிவா.

இப்படத்தின் டீசர் வருகிற மே 18ஆம் வெளியாகும் என அறிவித்தார் சிவா.

ஆனால் அஜித் ரசிகர்களின் வற்புறுத்தலால் டீசரை அட்வான்ஸாக வெளியிட உள்ளதாக சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

அதாவது மே 11ஆம் தேதியே டீசர் ரிலீஸாகிறதாம்.

பாகுபலி 2 படம் பற்றி தவறாக பேசினாரா கபாலி ரஞ்சித்..?

பாகுபலி 2 படம் பற்றி தவறாக பேசினாரா கபாலி ரஞ்சித்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ranjith and Rajinikanthஇந்தியளவில் பட்டைய கிளப்பி வரும் பாகுபலி2 படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு முதல் அனைவரும் பாராட்டி வரும் வேளையில், ரஜினியின் கபாலி பட இயக்குனர் ரஞ்சித் படத்தை தவறாக விமர்சித்தாக செய்திகள் வந்தன.
பாகுபலி படம் மக்களுக்கு எந்த கருத்தையும் கூறவில்லை என்று ரஞ்சித் சொன்னதாக செய்திகள் பரவியது.

இதனால் கபாலி தோல்வி என்றும், கபாலி வெற்றிக்கு ரஜினி மட்டுமே காரணம் என பலரும் அந்த கருத்தை விமர்சித்துள்ளனர்.

இதுகுறித்து ரஞ்சித் கூறியுள்ளதாவது… “நான் பாகுபலி2 படம் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை” என கூறியுள்ளார்.

விஜய்யின் சாமர்த்திய பதிலால் அசந்துபோன பாடலாசிரியர் விவேக்

விஜய்யின் சாமர்த்திய பதிலால் அசந்துபோன பாடலாசிரியர் விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lyricist vivekஅட்லி இயக்கிவரும் தளபதி 61 படத்தில் விஜய்யுடன் ஒரு நட்சத்திர பட்டளாமே நடித்து வருகிறது.

ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில் இடம்பெற்றுள்ள விஜய்யின் அறிமுக பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறாராம்.

மேலும் மற்றொரு பாடலை எழுதும் வாய்ப்பையும் இவருக்கு கொடுத்திருக்கிறார் அட்லி.

இந்நிலையில் இதன் சூட்டிங் தளத்திற்கு சென்ற விவேக் விஜய்யை சந்தித்துள்ளார்.

அப்போது கத்தி வைத்துக் கொண்டு விஜய் போடும் சண்டைக் காட்சியை பார்த்தாராம்.

அதன்பின்னர் எப்படி இவ்வளவு நுனுக்கமாக சண்டை போட்டீர்கள் என்று கேட்டராம்.

அதற்கு விஜய் நேரிடையாக பதிலளிக்காமல், நீங்கள் எப்படி? சரியான இடத்தில் சரியான வார்த்தைகளை நிரப்பி பாடல்களை எழுதுகிறீர்கள் என கேட்டாராம்.

அவரின் இந்த சாமர்த்திய பதிலால் தான் அசந்து போனதாக தெரிவித்துள்ளார் பாடல் ஆசிரியர் விவேக்.

ரஜினியை இயக்குவது எப்போது.? பாகுபலி இயக்குனர் ராஜமௌலி பேட்டி

ரஜினியை இயக்குவது எப்போது.? பாகுபலி இயக்குனர் ராஜமௌலி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Rajamouliபிரம்மாண்ட இயக்குனர் ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி 2’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகி வசூலில் இந்தியாவையே மிரள வைத்து வருகிறது.

இதுவரை இதன் வசூல் மட்டும் ரூ. 700கோடியை கடந்து, 1000 கோடியை நோக்கி வெற்றி நடைப்போடுகிறது.

இந்நிலையில் ரஜினி படத்தை இயக்குவது எப்போது? என்ற கேள்விக்கு ஒரு வடஇந்திய டிவி சேனலுக்கு
அளித்துள்ள பேட்டியில் ராஜமெளலி கூறியதாவது…

‘இந்திய சினிமாவில் ரஜினிகாந்த் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். அவரது கால்ஷீட்க்காக சினிமாவே காத்து கிடக்கிறது.

அவரை வைத்து இயக்குவது என் பாக்கியம். ஒரு நல்ல கதையும் வாய்ப்பும் கிடைத்தால், நிச்சயம் இயக்குவேன்.’ என்று கூறியுள்ளார்.

When will Baahubali director SS Rajamouli direct Rajinikanth

‘தனுஷுக்கு ஹீரோ லுக் இல்லை’… கஸ்தூரிராஜாவிடம் இப்படி சொன்னது யார்?

‘தனுஷுக்கு ஹீரோ லுக் இல்லை’… கஸ்தூரிராஜாவிடம் இப்படி சொன்னது யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush dont have hero look who said this to Kasthuri RajaJVDM கிரியேஷன்ஸ் சார்பில் பாலசுதன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘துணிகரம்’.

கதாநாயகனாக நடித்துள்ள வினோத் லோஹிதாசன் உட்பட முற்றிலும் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் இயக்குனர் பாலசுதனும் கதைக்கு திருப்பமான முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

க்ரைம் த்ரில்லர் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்தப்படம் சிறிய பட்ஜெட் படம் என்றாலும் இசைக்கு ஷான் கோகுல் மற்றும் பின்னணி இசைக்கு தனுஜ் மேனன் என இரண்டு இசையமைப்பளர்கள் பணியாற்றியுள்ளனர். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கஸ்தூரிராஜா, பேரரசு, ஆர்.கே.வித்யாதரன் நடிகர்கள் போஸ் வெங்கட், விஜய் டிவி சீரியல் புகழ் அமித் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் (கில்ட்) ஜாக்குவார் தங்கம் ஆகிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது, “மும்பையிலே ரோஹித் ஷெட்டின்னு ஒரு டைரக்டர் இருக்கிறார். அவர்தான் சும்மா ஜிம் பாடியெல்லாம் வச்சுக்கிட்டு படம் டைரக்ட் பண்ணுவாரு.

அவருக்கப்புறம் தமிழ் சினிமாவுல அப்படி ஒரு ஜிம் பாடி டைரக்டரா இந்த படத்தோட இயக்குனர் பாலசுதன் தெரியுறாரு. இந்த குழுவினருக்கு ஒரே ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

வெற்றிக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி வந்தால், அதுவரை பொறுமையாக இருங்கள். நானும் அப்படி காத்திருந்து, இன்று கவண்’ படம் மூலம் அப்படி ஒரு வெற்றி அங்கீகாரத்தை பெற்று, அதன்பின் இப்பொது இந்த மேடையேறி பேசும்போது கிடைக்கும் சந்தோசமே புதிதாக இருக்கிறது” என கூறினார்.

விழாவில் பேசிய கஸ்தூரிராஜா, ஒரு நபர் இயக்குனராக மாறி புகழ்பெறுவதற்காக என்னனென்னவெல்லாம் இழக்கிறான் என நெகிழ்ச்சியாக பேசினார்.

“துணிகரம் என டைட்டில் வைத்ததிலேயே படக்குழுவினரின் துணிச்சல் தெரிகிறது.. இந்த சினிமாவிற்கு வந்ததில் இருந்து இரண்டுமுறை நான் கோமாளியாக கண்ணுக்கு தெரிஞ்சிருக்கிறேன். இப்போ கூட அப்படித்தான் தெரிஞ்சுக்கிட்டிருக்கேன்.

முதல் தடவையா என்னோட படத்தை டைரக்ட் பண்ண தயாரிப்பாளர் தேடி அலைஞ்சபோது. இரண்டாவது துள்ளுவதோ இளமை படத்தை இயக்கியபோது. அப்போ தனுஷுக்கு ஹீரோ லுக் இல்லை.

அதனால் படம் எடுக்க பணம் கொடுத்த பைனான்சியர், ‘அப்பனும் மகனும் கேமராவ வச்சு விளையாடிட்டு இருக்காங்க’ன்னு விமர்சனம் பண்ணார்.

அவமானங்களையும் விமர்சனங்களையும் சந்தித்துதான் இங்கே வந்துள்ளோம்.. எனக்கு ராஜ்கிரண்னு ஒரு கடவுள் கிடைச்சார். இந்த உயரத்துக்கு வர முடிஞ்சது”. என்றார்.

மேலும் அவர் பேசும்போது, “இன்னைக்கு கொஞ்சம் சினிமா ஆரோக்கியமா இருக்கு. ஒரு ஆடியோ ரிலீஸுக்கு டிஸ்ட்ரிபியூட்டர் வர்றதே ஆரோக்கியமான விஷயம் தான். சின்னப்படம் வந்தாலும் மூணு நாள் தான். சூப்பர்ஸ்டார் படமும் மூணு நாள்.

இன்னைக்கு உலகம் பூரா பேசப்படுற பாகுபலி கூட பத்து நாட்கள் தான். அதுனால இன்னைக்கு நிறைய படங்கள் வெளிவர வாய்ப்பு இருக்கு” என்றும் இன்றைய சினிமா சூழலை விவரித்தார்.

இயக்குனர் பேரரசு பேசும்போது, “உதவி இயக்குனராக இருந்து இயக்குனராவதற்காக, இந்த புகழை அடைவதற்காக இளமையெல்லாம் தொலைக்க வேண்டி இருந்தது. தீபாவளி, பொங்கல், திருவிழா, நல்லது கெட்டது என எந்த விசேஷத்திற்கும் ஊருக்கு போனது இல்ல. ஊருக்குப்போய் ரெண்டு

நாள் தங்கினா, என்னப்பா இன்னும் டைரக்டர் ஆகலைன்னு கேட்க ஆரம்பிச்சுடுவாங்க. அவங்க பையன் 2௦ வருஷமா சும்மா சுத்திக்கிட்டு இருப்பான்.

ஆனா அது அவங்களுக்கு பெரிசா தெரியாது. சினிமாவுக்கு போனா உடனே சாதிக்கணும் அப்படிங்கிறது அவங்க நினைப்பு. ஆனா சினிமாவுல வெற்றிக்காக நிறைய இழக்கணும். ரொம்பநாள் காத்திருக்கணும்.

திருப்பாச்சி ரிலீஸான அன்னைக்குதான் ஊர்ல பொங்கல் கொண்டாடுனேன். சிவகாசி வெளியான அந்த தீபாவளி தான் நான் ஊர்ல கொண்டாடுனேன்.” என்று படக்குழுவினருக்கு தனது வாழ்க்கை அனுபவத்தை பாடமாக எடுத்தார் பேரரசு.

மேலும் இன்றைக்கு இயக்குனர்களாக முதல் படம் எடுக்கும் இயக்குனர்கள் எப்படி இருக்கவேண்டும் என ஒரு குட்டிக்கதை மூலமும் விளக்கினார் பேரரசு.

“ஒரு ராஜா. அவருக்கு மூன்று மகன்கள். தனக்குப்பின் யார் நாட்டை ஆளவேண்டும் என முடிவு செய்ய தனது மூன்று மகன்களையும் அழைத்து ஒரு போட்டி வைத்தார்.

காட்டிற்கு சென்று ஒரு சாக்கு நிறைய இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவை கொண்டுவந்து மூவரும் ஆளுக்கொரு ஒரு ஏழைக்கு கொடுக்கணும். ஆனால் அந்த மூட்டையை என்னிடம் பிரித்துக்காட்ட தேவையில்லை என உத்தரவிட்டார்.

மகன்கள் மூவரும் காட்டிற்கு சென்றனர். முதலாமவன் மரத்தில் ஏறி நல்ல பழங்களாக பறித்து மூட்டை கட்டினான். இரண்டாமவன் சோம்பல் பட்டுக்கொண்டு கீழே விழுந்த அழுகிய பழங்களே போதும் என மூட்டை கட்டினான். மூன்றாமவனோ ஏழைக்குத்தானே கொடுக்கப்போகிறோம் என அலட்சியத்துடன் கீழே கிடந்த குப்பைகளை அள்ளி மூட்டை கட்டினான்.

மூவரும் ராஜாவிடம் வந்து நிற்க, ராஜாவோ நீங்கள் இதை கொடுக்கவேண்டிய அந்த ஏழை வேறு யாருமில்லை.
நீங்கள் தான் அந்த ஏழைகள். இரண்டு வாரங்களுக்கு நீங்கள் கொண்டு வந்ததை நீங்களே சாப்பிடுங்கள் என கூறி ஆளுக்கொரு அறையில் தள்ளி பூட்டிவிட்டார்.

நல்ல பழங்களை கொண்டுவந்தவன் நன்றாக சாப்பிட்டு சுகமாக இருந்தான். மற்ற இரண்டு பேரின் நிலையை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இப்படித்தான் முதல் பட வாய்ப்பு கிடைக்கும் இயக்குனர்கள், ஏனோ தானோவென்று அந்த நேரத்திற்கு வேலைபார்த்தால் அது அவர்களுக்குத்தான் ஆபத்தாக முடியும். நல்ல கதையாக தேர்வு செய்து படங்களை இயக்கினால் உங்களுக்கும் வாழ்வு.

தயாரிப்பாளருக்கும் லாபம்” என அடுத்ததாக படம் இயக்கவரும் இயக்குனர்களுக்கு பொட்டில் அடித்தாற்போல் அறிவுரையும் கூறினார் பேரரசு.

வழக்கம்போல திருட்டு விசிடிக்கு எதிராக குரல் கொடுக்கும் ஜாக்குவார் தங்கம் இந்த மேடையிலும் தனது கருத்தை பதிவு செய்தார்.

மேலும் விஷால் வரும் மே-3௦ முதல் ஆரம்பிக்க இருக்கும் போராட்டம் குறித்து பேசிய அவர் அது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என தெரியவில்லை. பார்க்கலாம்” என தனது அங்கலாய்ப்பை வெளிப்படுத்தினார்.

படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான பாலசுதன் பேசும்போது, இது தனது பனிரெண்டு வருட கனவு என்றார். படத்தின் ஹீரோவாக நடித்துள்ள வினோத் லோஹிதாசன், இந்தப்படத்தின் ஆடிசனுக்காக சென்றபோது சட்டையின் கை மடிப்பை எல்லாம் மடித்துவிட்டு கெத்தாக சென்றாராம்.

ஆனால் இயக்குனரின் பாடிபில்டிங் தோற்றத்தை பார்த்ததுமே, ஆட்டோமேட்டிக்காக சட்டையை இறக்கிவிட்டாராம். ஆனால் டைரக்டர் தான் ஹீரோவாக நடிப்பாரோ என சந்தேகப்பட்டவருக்கு, ஹீரோ சான்ஸ் கொடுத்து இன்ப அதிர்ச்சி அடைய வைத்துவிட்டாராம் இயக்குனர் பாலசுதன்.

சமீபத்தில் வெளியான ‘இலை’ படத்தை வெளியிட்ட ஆக்சன்-ரியாக்சன் நிறுவனம் தான் இந்தப்படத்தையும் வெளியிடுகிறது.

Dhanush dont have hero look who said this to Kasthuri Raja

Thunigaram audio launch

More Articles
Follows