மேயாத மான் சூப்பர்னு தலைவரே சொல்லிட்டாரு… கார்த்திக் சுப்புராஜ் குஷி

மேயாத மான் சூப்பர்னு தலைவரே சொல்லிட்டாரு… கார்த்திக் சுப்புராஜ் குஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth praises Meyaadha Maan movie Karthik Subburaj felt happyகடந்த அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளியன்று மெர்சல் படத்துடன் மேயாத மான் மற்றும் சென்னையில் ஒரு நாள் 2 ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது.

இதில் மெர்சல் படத்தை பார்த்த ரஜினிகாந்த் முன்பே பாராட்டியிருந்தார் என்பதை பார்தோம்.

இப்போது மேயாத மான் படத்தையும் அவர் பார்த்து பாராட்டியுள்ளதாக அப்பட தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில் தலைவரே சொல்லிடாரு என உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

ரத்னகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் வைபவ், பிரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் இசையமைக்க, விது அய்யனா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

படத்திற்கு பாசிட்டிவ்வாக விமர்சனங்கள் கிடைத்துவந்த நிலையில் சூப்பர் ஸ்டாரின் பாராட்டும் கூடுதல் எதிர்பார்ப்பை கொடுக்கும் என நம்பலாம்.

Rajinikanth praises Meyaadha Maan movie Karthik Subburaj felt happy

karthik subbaraj‏Verified account @karthiksubbaraj 37m37 minutes ago
Wow !! Thalaivar watched #Meyaadhamaan yesterday. He loved it & wished the team for giving a super fun film….Thanks Thalaivaaa…

meyadha maan rajini wish

பாபாஜி பக்தர்களுக்காக இமயமலையில் தியான மண்டபம் கட்டிய ரஜினி

பாபாஜி பக்தர்களுக்காக இமயமலையில் தியான மண்டபம் கட்டிய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini baba symbolசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடிக்கடி இமயமலைக்கு செல்வது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

மேலும் டெல்லியில் உள்ள ராணிகேட் பாபாஜி குகைக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.

தனது வாழ்வின் பல முக்கிய முடிவுகளை அங்கு சென்ற பிறகுதான் ரஜினிகாந்த் எடுப்பதாக கூறப்பட்டு வருகிறது.

துவாரகா, ஹிரித்வார், ரிஷிகேஷ் உள்ளிட்ட புனித சுற்றுலாத் தலங்களைக் கடந்து அந்த குகைக்குச் செல்லும் அவர் காடு, மலை என கடினமான பாதைகளில் பயணித்து அங்கே போகிறார் என்று கூறப்படுகிறது.

பாபாஜி குகையில் உள்ள பாபாவின் அவதார புருஷர் ஒருவர் அந்த குகையில் வசித்துள்ளார் என்ற நம்பிக்கை அங்கே உள்ளது.

ரஜினி அங்கு செல்வதே அவருடைய ஆசிர்வாதம் பெறுவதற்குத்தான் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இமய மலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும் தியானம் செய்வதற்கும் உதவும் வகையில் ஸ்ரீ பாபாஜி தியான மண்டபம் ஒன்றை கட்டியுள்ளனர்.

இக்கட்டிடத்தின் கிரஹபிரவேச விழா அடுத்த மாதம் நவம்பர் 10 அன்று நடைபெறவுள்ளதாம்.

மேலும் அடுத்த வருடம் இந்த மண்டபத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு:

Trustee Mr viswanathan,
Lawyer cell 9444382543
Information from Hari Himalaya friend of rajinikanth

Rajinikanth built Ashram cum House for Babaji devotees in Himalayas

baba rajini

நிலவேம்பு சர்ச்சை; முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்கு பதிய கோர்ட் உத்தரவு

நிலவேம்பு சர்ச்சை; முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்கு பதிய கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Court Order in Kamal opinion on Dengue and Nilavembu issueடெங்கு காய்ச்சலுக்கு வழங்கப்படும் நிலவேம்பு குடிநீரால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதனையடுத்து, ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை, நிலவேம்பை விநியோகம் செய்ய வேண்டாம் என தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் கமல்.

எனவே, நிலவேம்பு கசாயம் குறித்து கமல் தவறான தகவலை பரப்புவதால், கமல் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரின் புகார் மீது விசாரணை மேற்கொண்டு, உரிய முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Court Order in Kamal opinion on Dengue and Nilavembu issue

தேசபக்தியை பொது இடத்தில் நிரூபிக்க கட்டாயப்படுத்தாதீர்… கமல்

தேசபக்தியை பொது இடத்தில் நிரூபிக்க கட்டாயப்படுத்தாதீர்… கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan talks about National Anthem on Cinema Theatresதிரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்பது கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது மக்கள் எழுந்து நின்று தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் நள்ளிரவில் அந்நாட்டு தேசியகீதம் இசைக்கப்படுகிறது.

அதேபோல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நமது தேசியகீதத்தை ஒளிபரப்பலாம்.

எனது தேசபக்தியை பொது இடங்களில் நிரூபிக்க கட்டாயப்படுத்தி பரிசோதிக்காதீர்கள்.

விவாதங்களில் சிங்கப்பூரைப் பற்றி பலரும் உதாரணம் பேசுகின்றனர்.

சிங்கப்பூரில் இருப்பது கருணைமிக்க சர்வாதிகாரமே என்பதே சில விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. நமக்கும் அதுபோன்ற சூழல் வேண்டுமா? வேண்டாமே!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Kamalhassan talks about National Anthem on Cinema Theatres

2018 பொங்கல் தினத்தில் சூர்யா-விஷாலுடன் மோதும் விமல்

2018 பொங்கல் தினத்தில் சூர்யா-விஷாலுடன் மோதும் விமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vimal stillsவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

இப்படத்தை அடுத்த ஆண்டு 2018 பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இதே நாளில் விஷால் தயாரித்து நடித்துள்ள இரும்பு திரை படமும் வெளியாகவுள்ளது.

இந்த இரு படங்களும் மோதவுள்ள நிலையில் பொங்கல் ரேஸில் விமல் நடித்துள்ள மன்னர் வகையறா படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு…

விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது. அந்த அளவுக்கு விமலுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை, காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார்.

விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோசங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி) என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

குறிப்பாக ரோபோ சங்கருடன் விமல் புதிதாக கூட்டணி அமைத்திருப்பது படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் நவ-8ஆம் தேதி இந்தப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட இருக்கிறார்கள்.

அதை தொடர்ந்து வரும் 2018 ஜனவரியில் பொங்கல் திருநாளன்று இந்தப்படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துள்ளார்கள்.

மன்னர் வகையறா படம் 2017 தீபாவளிக்கே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

Actor Vimal movie clash with Suriya and Vishal on Pongal 2018

vimal prabu anandhi

மெர்சலில் டபுள் ஆக்டிங் செய்யும்போது மற்றொரு விஜய்யாக நடித்தது யார்.?

மெர்சலில் டபுள் ஆக்டிங் செய்யும்போது மற்றொரு விஜய்யாக நடித்தது யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay mersal lookஅட்லி இயக்கிய மெர்சல் படத்தில் 3 வேடங்களில் விஜய் நடித்திருந்தார்.

தந்தை மற்றும் இரண்டு மகன்களாக நடித்திருந்தார்.

இதில் தந்தை கேரக்டர் பிளாஷ்பேக்கில் வரும். ஆனால் மகன்கள் கேரக்டர்கள் இரண்டும் தற்கால நிகழ்வாக வரும்.

அதில் இரண்டு விஜய்யை இயக்கும்போது மற்றொரு விஜய்யாக அட்லிதான் நடிப்பாராம்.

அதன் பின்னர்தான் விஜய் அந்த கேரக்டரில் நடித்து டேக்கை முடிப்பார்கள்.

இந்த தகவலை மெர்சல் பட ஒளிப்பதிவாளர் விஷ்ணு தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Mersal movie double character of Vijay news

More Articles
Follows