நான் தலையிடமாட்டேன்; கார்த்திக் சுப்புராஜுக்கு ரஜினி கொடுத்த சுதந்திரம்

நான் தலையிடமாட்டேன்; கார்த்திக் சுப்புராஜுக்கு ரஜினி கொடுத்த சுதந்திரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini gave full freedom to Karthik Subbaraj in his movie scriptரஜினிகாந்த் நடிப்பில் காலா மற்றும் 2.0 திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

இப்படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க., அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் படம் சம்பந்தமாக ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ் என்பதை பார்த்தோம்.

இந்தச் சந்திப்பின் போது புதிய படத்தின் கதை அடங்கிய முழு ஸ்கிரிப்டை ரஜினியிடம் வழங்கினாராம்.

அப்போது ரஜினியின் கேரக்டர் குறித்தும் அவர் விளக்கினாராம்.

மேலும், அவர் தன்னுடன் பணிபுரிய உள்ள டெக்னிஷன் பட்டியலையும் ரஜினியிடம் அளித்துள்ளார்.

அதனை பார்த்த ரஜினி, ‘அது உங்க சுதந்திரம். அதில் நான் தலையிட மாட்டேன்’ என தெரிவித்தாராம்.

அதில் ரஜினியின் ஜோடி யார்? என்ற விவரம் இருந்துச்சோ? என்னவோ..?

Rajini gave full freedom to Karthik Subbaraj in his movie script

தனுஷ்-அனிருத் கூட்டணி படைத்த மற்றொரு சாதனை

தனுஷ்-அனிருத் கூட்டணி படைத்த மற்றொரு சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Anirudh team made one more record in you tubeகோலிவுட் தாண்டி ஹாலிவுட், பாலிவுட் வரை சென்றுவிட்டவர் நடிகர் தனுஷ்.

தமிழில் இவரது நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி-2, வடசென்னை ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இவையனைத்துமே இந்தாண்டு 2018க்குள் ரிலீஸ் ஆகிவிடும்.

இந்நிலையில் தனுஷ் யு-டியூபில் ஒரு பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அனிருத் இசையில் மாரி படத்தில் இடம்பெற்ற ‘டானு டானு’ என்ற பாடல் யு-டியூபில் 5 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது.

இதற்கு முன்பு இவர்கள் கூட்டணியில் உருவான ஒய் திஸ் கொல வெறி என்ற பாடல் 14 கோடி ஹிட்ஸை கடந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush and Anirudh team made one more record in you tube

விவேகம் கண்றாவி; விஜய்யால் கோடி லாபம்… தயாரிப்பாளர் கே.ராஜன்

விவேகம் கண்றாவி; விஜய்யால் கோடி லாபம்… தயாரிப்பாளர் கே.ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer K Rajan speaks about Vivegam loss and Mersal hitசினிமா துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் தயாரிப்பாளர் கே. ராஜன் கலந்துக் கொள்கிறார் என்றால் அங்கு பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

மனதில் பட்டதை தைரியமாக பேசும் சுபாவம் அவருக்கே உரியது.

இந்நிலையில் அவரின் ஒரு பேட்டியில் தற்போது நடந்து வரும் சினிமா ஸ்டிரைக் மற்றும் விஜய், அஜித் படங்கள் வசூல் பற்றி பேசினார்.

அவர் பேசும்போது….

ஹீரோக்களின் சம்பளம் உயர ஒரு வகையில் தயாரிப்பாளர்களும்தான் காரணம்தான். ஒரு தயாரிப்பாளர் ஒரு தொகையை கொடுக்க தயாராக இருக்கும் போது அதைவிட அதிகமாக நான் தருகிறேன் என கூறி படத்திற்கு புக் செய்கின்றனர்.

பழம்பெரும் தயாரிப்பாளர்கள் இப்படி செய்வதில்லை. பணத்தை எப்போதும் ரொட்டேசனில் வைத்திருப்பவர்களே இப்படி செய்கின்றனர்.

விஜய்யின் மெர்சல் படம் 90 கோடியில் தயாரிக்கப்பட்டது. விஜய் படங்கள் எல்லாம் பெரும்பாலும் குறைந்த பட்சம் ரூ 15 கோடி லாபத்தை கொடுத்து விடுகிறது.

மெர்சல் பட்ஜெட் 90 கோடிதான். ஆனால் டைரக்டர்தான் 120 கோடியை தாண்டி செலவு செய்ய வைத்துவிட்டார்.

முக்கியமாக சினிமாவை கெடுப்பது இயக்குனர்கள் தான். அதற்கு உதாரணமாக, அஜித்தின் விவேகம் படத்தை சொல்ல்லாம்.

அதுல ஒரு கண்றாவியும் இல்லை. படத்துல அஜித்தை 100 பேர் சுடுகின்றனர், அவருக்கு ஒன்னும் ஆகவில்லை.

ஆனால் அவர் 100 பேரை சுடுகிறார் எல்லாரும் இறந்துடுவாங்க. அதற்கு அவர்கள் செய்திருக்கும் செலவு ரொம்ப அநியாயம்” என பேசியுள்ளார்.

Producer K Rajan talks about Vivegam loss and Mersal hit

மிரள வைக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்; மக்கள் புரட்சியில் கமல்

மிரள வைக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்; மக்கள் புரட்சியில் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan supports Thoothukudi people protest against Sterlite‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த 2019 ஆண்டு முடிவடைகிறது.

ஆலையின் அடுத்த விரிவாக்கப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

இந்த ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்றுநோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்த போராட்டம் இன்று மட்டும் நடைபெறவில்லை.

பல அரசியல் தலைவர்களும், அவ்வப்போது இந்த எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் சில காலம் சூடு பிடிக்கும் இந்த போராட்டம் பின்னர் அமைதியாகும். தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இன்று மட்டும் எந்தவொரு தலைவனின் வழிகாட்டுதலும் இல்லாமல், பொதுமக்கள் தானாகவே முன்வந்து கிட்டதட்ட 20,000-க்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளனர்.

இதற்கான கண்டன பொதுக்கூட்டம் அங்கு நடைபெற்று வருகிறது.

லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குநர் அனில் அகர்வாலின் வீட்டின் முன்பு லண்டன் வாழ் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் தூத்துக்குடி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் அனைத்து போராட்டங்களிலும் முதல் நடிகராக கலந்துக் கொள்ளும் ஜிவி. பிரகாஷ் ஆரம்பம் முதலே இந்த போராட்டம் குறித்த விவரங்களை தன் ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து, தன் ட்விட்டரில் அவரின் கருத்தை பதிவிட்டுள்ளார்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 19m19 minutes ago
ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை. தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன்.

Kamalhassan supports Thoothukudi people protest against Sterlite

sterlite

 

சூர்யாவின் அதிரடி திட்டத்தில் இணைந்த கார்த்தி-விஷால்

சூர்யாவின் அதிரடி திட்டத்தில் இணைந்த கார்த்தி-விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Suriya decision Karthi Vishal plans to give salary to their assistantsதன்னைச் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் சிறந்த மாணவர்களின் படிப்புக்காக பல உதவிகள் செய்து வருகிறார் சூர்யா.

மேலும் அகரம் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையும் நடத்தி வருகிறார்.

தற்போது தன் பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக தனது உதவியாளர்களின் சம்பளத்தை இனி தானே கொடுப்பதாகவும் சூர்யாஅறிவித்துள்ளார்.

இவரின் முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது சூர்யாவைப் போல் தாங்களும் செய்யப்போவதாக விஷாலும் கார்த்தியும் அறிவித்துள்ளனர்.

After Suriya decision Karthi Vishal plans to give salary to their assistants

கூண்டோடு ராஜினாமா விவகாரம்; ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு தலைவர் கட்டளை

கூண்டோடு ராஜினாமா விவகாரம்; ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு தலைவர் கட்டளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dindigul Rajini Makkal Mandram issue Rajini Orderநடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றினார்.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நிர்வாகிகளை நியமித்து வருகின்றார்.

ஆனால் இதற்கு முன்பாக மன்றத்தின் விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக ரஜினி மக்கள் மன்றம் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தம்பிராஜை இடைநீக்கம் செய்தது, இதை எதிர்க்கும் விதத்தில் ஒட்டுமொத்த ரஜனி மக்கள் மன்ற நிர்வாகிகள் ராஜினாமா செய்வதாக கூடி பேசி நேற்று அறிவித்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுக்கு, ரஜினியின் அறிவுரைப்படி, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி விஎம்.சுதாகர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை வெளியிட்டுள்ள செய்தியில்,

தம்புராஜ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு அனைவரையும் அழைக்காமல் தனக்கு விருப்பமானவர்களை மட்டும் அழைத்து பேசியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவரை தொடர்பு கொண்டபோது சரியான விளக்கம் அளிக்கவில்லை.

நியமிக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுடன் ஒற்றுமையா செயல்பட அறிவுறுத்தியது.

சென்னை தலைமை மன்றத்திற்கு இரண்டு முறை அழைத்தபோதும் அவர் வராமல் வேறு ஒருவரை அனுப்பி வைத்தார்.

தன்னலமற்ற மக்கள் சேவை என்ற புனிதமான உயர்ந்த எண்ணத்தோடும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நாம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் துவங்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தில் இதுபோன்ற செயல்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது.

பொதுநலம் விடுத்து தங்கள் சுயநலத்திற்காக சிலர் செயல்பட முயற்சி செய்வதும், அத்தகைய முயற்சி நிறைவேறாத பட்சத்தில் மன்றத்தில் நற்பெருக்கு களங்கம் கற்பிக்க முயல்வதும் மக்கள் விரோத செயல் என்பதால் அவை ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது.

அத்தகைய செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு மன்றத்தில் இடமில்லை.

மன்றத்தின் உள் விவகாரங்களை நமக்குள் விவாதிப்பதை விடுத்து, அதை பிரச்சாரம் செய்து அதில் ஆதாயம் தேட முயற்சிப்பது ஆரோக்கியமான செயல் அல்ல.

தலைமை எடுத்த முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஒழுக்கத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் பெயர்போன ரசிகர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்.

ஒற்றுமையாக செயல்பட்டு கொடுக்கப்பட்ட பணியை செய்வதே நமக்கும், மன்றத்திற்கும் நல்லது. என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Dindigul Rajini Makkal Mandram issue Rajini Order

More Articles
Follows