வேலைக்காரனுக்கு இப்படியொரு விளம்பரமா? ஒரு கோடி அபராதம் கட்ட விஷால் நோட்டீஸ்?

வேலைக்காரனுக்கு இப்படியொரு விளம்பரமா? ஒரு கோடி அபராதம் கட்ட விஷால் நோட்டீஸ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan nayantharaசிவகார்த்திகேயன், நயன்தாரா, சிநேகா, பகத்பாசில் ஆகியோர் நடிப்பில் வளர்ந்துள்ள வேலைக்காரன் படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார்.

இப்படத்தை ஆர்.டி.ராஜா தன் 24ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரித்திருக்கிறார்.

வருகிற செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இதன் டீசர் வெளியானதை முன்னிட்டு விளம்பரம் படுத்தும நோக்கதில் நாளிதழ்களில் முழு பக்கம் விளம்பரம் செய்திருந்தார் தயாரிப்பாளர்.

இதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் கண்டனங்களை தெரிவித்திருந்தார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

முழுபக்கம் விளம்பரம் செய்யக்கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் விதிமுறைகள் இருக்கும்போது இவர்கள் இப்படி செய்யலாமா? என சங்கத் தலைவர் விஷாலிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இதனையடுத்து தற்போது இதன் தயாரிப்பாளர் ரூ. ஒரு கோடியை அபராதமாக சங்கத்திற்கு கட்ட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம்.

இந்த விளம்ரத்தில் வேலைக்காரன் சாட்டிலைட் உரிமையை பெற்றுள்ள விஜய் டிவியும் இணைந்துள்ளதால் இரு நிறுவனங்களும் இந்த அபராத்தை கட்ட வேண்டும் என சொல்லப்படுகிறது.

ஆனால் மற்றொரு புறம் இது தயாரிப்பாளர் தரப்பு கொடுத்த விளம்பரம் அல்ல. விஜய் டிவி நிறுவனம் கொடுத்துள்ளது.

எனவே தயாரிப்பாளர் சங்க விதிமுறைகள் டிவி நிறுவனங்களுக்கு பொருந்தாது எனவும் செய்திகள் வந்துள்ளன.

Producer Council finned Rs 1crore to Vijay TV and Velaikkaran Producer

velaikkaran full page ad in news paper

அஜித்துடன் நடிப்பது எப்போது.? இப்படியா சொன்னார் கீர்த்தி சுரேஷ்.?

அஜித்துடன் நடிப்பது எப்போது.? இப்படியா சொன்னார் கீர்த்தி சுரேஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Keerthy Suresh hotரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ்.

இதனையடுத்து விஜய், தனுஷ் ஆகியோருடன் ஜோடி போட்டார்.

தற்போது சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் விக்ரம் உடன் சாமி2 படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் அண்மையில் அளித்த பேட்டியில் இவர் கூறியதாவது…

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் இப்படியொரு இடம் கிடைக்கும் என நினைக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் டாப் ஹீரோக்கள் என்னை அவர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு தந்தார்கள்.

அந்த வகையில் நான் ஒரு லக்கியான நடிகை என்றே சொல்லலாம்.

அப்போது அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள்? என்று கேட்டதற்கு…

தெரியவில்லை. நடக்கும் போது பார்த்துக்கொள்ளலாம்” என தெரிவித்தார்.

Keerthy Suresh talks about Acting with Ajith

கரகாட்டக்காரன்-AAA புகழ் சண்முக சுந்தரம் மரணம்; நடிகர் சங்கம் இரங்கல்

கரகாட்டக்காரன்-AAA புகழ் சண்முக சுந்தரம் மரணம்; நடிகர் சங்கம் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karagatakkaran AAA fame Actor Shanmugasundaram Passed awayமூத்த தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகர் சண்முக சுந்தரம் (79) இன்று சென்னையில் காலமானார்.

அவரது மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது…

“சண்முக சுந்தரம் அவர்கள் 1963-ம் ஆண்டு ரத்ன திலகம், கர்ணன் ஆகிய படங்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

கல்லூரியில் பயிலும் காலத்திலேயே நடிப்பில் ஆர்வம் கொண்டு மேடை நாடகங்களில் நடித்துக்கொண்டு தன் கலை வாழ்க்கையை தொடங்கியவர்.

1972-ம் ஆண்டு வாழையடி வாழை படத்தில் நடித்து திரைப்பட நடிகரானார். தொடர்ந்து இன்று வரை கரகாட்டக்காரன், கிழக்கு வாசல், நம்ம ஊரு ராசா, நண்பன், அச்சமின்றி உள்பட நூற்று கணக்கான படங்களில் நடித்து தனது இயல்பான நடிப்பாற்றலால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

அண்மையில் வெளியான சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் தான் கடைசியாக வெளிவந்த அவரது படம்.

மேலும் அண்ணாமலை, அரசியல்,செல்வி, வம்சம் ஆகிய சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.

தனது கடினமான உழைப்பாலும் திறமையாலும் நற்பெயரும் புகழும் பெற்று விளங்கியவர் திரு. சண்முக சுந்தரம் அவர்கள். அவரது மறைவு நாடக மற்றும் திரை உலகிற்க்கும் நடிகர் சமூகத்திற்க்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும்.

அன்னாரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினர் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் . ” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Karagatakkaran AAA fame Actor Shanmugasundaram Passed away

மக்கள் கூடும் இடத்தில் சிவாஜிக்கு சிலை வேண்டும்… – நடிகர் சங்கம்

மக்கள் கூடும் இடத்தில் சிவாஜிக்கு சிலை வேண்டும்… – நடிகர் சங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nadigar Sangam request TN govt to keep Sivaji Statue at Public Placeமக்கள் அதிகமாக கூடும் பொது இடத்தில் வைக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சென்னை கடற்கரைச் சாலையில் இருந்த சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டு, சிவாஜி மணி மண்டப வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை மீண்டும் கடற்கரைச் சாலையில் காமராஜர் சிலை அருகே நிறுவ வேண்டுமென திரையுலகினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுவில், சிவாஜி சிலையை காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொது மக்கள் அதிகமாக கூடும் இடத்திலோ நிறுவ வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் குறித்து கடிதம் மூலம் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Nadigar Sangam request TN govt to keep Sivaji Statue at Public Place

sivaji statue

காயம்குளம் கொச்சுண்ணி கெட்டப்பில் கலக்கும் நிவின்பாலி

காயம்குளம் கொச்சுண்ணி கெட்டப்பில் கலக்கும் நிவின்பாலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nivin pauly as kaayamkula kochunni36 வயதினிலே ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் புதிய படம் படம் “காயம்குளம் கொச்சுண்ணி”.

இப்படத்தில் நிவின்பாலியும் அமலாபாலும் இணைந்து நடிக்கிறார்கள் என்பதை முன்பே பார்த்தோம்.

இப்படம் வழக்கமான கதை போன்று இல்லாமல் மாறுபட்ட கதையம்சம் கொண்டது இத்திரைப்படம் என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.

இதன் கதைப்படி, நிவின்பாலி திருடனாக நடிக்கிறாராம். இவரின் கெட்டப் போஸ்டர்கள் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

உதயநாணு தாரம்,மும்பை போலீஸ் , ஹவ் ஓல்ட் ஆர் யு போன்ற புகழ் பெற்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய பாபி மற்றும் சஞ்சய் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.ஒளிப்பதிவு பினோத் பிரதான் , படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் , கலை சுனில் பாபு இசை கோபி சுந்தர்.

கதை கரு :- காயம்குளம் கொச்சுண்ணி 19ஆம் நூற்றாண்டில் கயம்குளம் பகுதியில் வாழந்த பழம்பெரும் திருடன் ஒருவரை பற்றிய படமாகும்.

அத்திருடன் அப்போது வாழ்ந்த செல்வந்தர்களிடமிருந்து பணம் , பொருள் போன்றவற்றை திருடி நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார் (ராபின் ஹூட் போல).

அவருடைய குழந்தை பருவம் முதல் வறுமை வாட்டியெடுத்தது தான் இதை போன்ற விஷயங்களில் அவர் ஈடுபட காரணம் என்று கூறப்படுகிறது. கேரள வரலாற்றில் இவரை போன்ற அன்பான, பயங்கரமான திருடன் ஒருவன் இன்று வரை இருந்ததில்லை என்பது தகவல்.

1859 கொச்சுண்ணி போலீசாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா ஜெயிலில் அடைக்கப்பட்டு அங்கேயே இயற்கை எய்தியுள்ளார்.

Rosshan Andrews next film with Nivin Pauly titled Kaayamkulam Kochunni

director roshan andrew

தூய்மை இந்தியா பற்றிய ஆவணப்படம் துப்பறிவு 2020

தூய்மை இந்தியா பற்றிய ஆவணப்படம் துப்பறிவு 2020

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thupparivu 2020 documentary film regarding Clean Indiaஆச்சி கிழவி திரைக்கூடம் சார்பில் மா.திரவியபாண்டியன் தயாரிப்பில் சொழிந்தியம் வழங்கும் ‘துப்பறிவு’ 2020 இசை ஆல்பம் ஒன்று உருவாகியுள்ளது.

இது தூய்மை இந்தியா இயக்கம் சார்ந்து உருவாகியிருக்கிறது. ஒரு திட்டம் வெற்றி பெற அரசு மட்டும் போதாது மக்கள் ஒத்துழைப்பும் தேவை என்று வலியுறுத்துகிறது இந்த ஆல்பம்.

இதன் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தமிழ் ஆல்பத்தை வெளியிட்டார். தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இந்தி ஆல்பத்தை வெளியிட்டார்.

விழாவில் கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது… “இது ஒரு குடும்ப விழா வாக உணர்கிறேன். இதை இயக்கியுள்ள தினேஷின் தந்தை திரவிய பாண்டியன் எது செய்தாலும் என்னிடம் கேட்டுத்தான் செய்வார்.

தன் மகன் இம் முயற்சியில் இறங்கிய போது வணிக அம்சங்களுக்கு இடம் தராமல் இனம் மொழி,தேசம் என்று உயர்ந்த நோக்கத்துக்கு ஆதரவாக இருந்து ஊக்கப்படுத்தியிருக்கிறார்.

சினிமாவில் இந்த தம்பி நல்ல இலக்கை நோக்கிச் சென்று வெற்றி பெறுவார். இவர் ஒரு கமர்ஷியல் படம் செய்ய வேண்டும். எனக்கு ஒரு படம் இயக்க வேண்டும். ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ் எல்லாம் கூட கமர்ஷியல் படத்தில்தான் நல்ல கருத்தையும் சொல்வார்கள். அதே மாதிரி செய்யுங்கள்.” என்று கூறி வாழ்த்தினார்.

பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சுபாஷ் பேசும் போது, “ஒரு டாக்டர் நோயாளியைக் காப்பாற்றவும் ஊசி போடலாம். ஒருவரை விஷ ஊசி போட்டுக் கொல்லவும் ஊசி போடலாம்.

இப்படி ஊசியை எப்படியும் பயன்படுத்தலாம். அதுபோல் தான் சினிமாவும் என்று கூறலாம். அப்படி நல்ல நோக்கத்துக்கு இந்த ஆல்பம் உருவாகியுள்ளது பெரிய விஷயம். வாழ்த்துகள் ” என்றார்.

தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் பேசும்போது, ” இருக்கும் தெரு சுத்தமானால் நாடு சுத்தமாகும். அப்பா ஒரு நல்ல தயாரிப்பாளர் மகனுக்கு நல்ல அங்கீகாரம் பெற இந்த ஆல்பத்துக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். வாழ்த்துகள்.” என்றார்.

விழாவில் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “

துப்பறிவு என்கிற தலைப்பைப் பார்த்து விட்டு ஏதோ ஜேம்ஸ் பாண்ட் ரகப் பட மோ என்று நினைத்தேன். இங்கு வந்த பிறகுதான் சமூகத்துக்குத் தேவையான ஒன்று என்று தெரிந்தது. படத்தில் குப்பை சேர்க்காதீர் என்று சொல்ல நினைக்கிற இளைஞனின் கோபம் புரிகிறது.

நீங்கள் சினிமாவுக்கு வந்து நல்ல படம் எடுப்பீர்கள். உங்கள் தமிழ் உணர்வைப் பாராட்டுகிறேன். தமிழனாக இருப்பதே பெருமை. வாழ்க. தமிழ்வெல்க. ” என்று கூறினார்.

ஒரு படைப்பில் கேள்வி கேட்டால் அரசு விரோதமா? என்று இந்த ஆவணப்பட இயக்குநர் தமிழ் ஆப்தன் என்கிற தினேஷ் பேசும் போது ஆதங்கமாகக் கேட்டார்.

அவர் பேசும் போது “இந்த முயற்சிக்கு வந்திருந்து வாழ்த்த வந்துள்ள திரையுலக முன்னோடிகருக்கு என் நன்றி.” என்றார்.

‘துப்பறிவு 2020 இசை ஆல்பம் இயக்கிய அனுபவம் பற்றிக் கூறும்போது, ” இது தூய்மையாக இருப்பதை வலியுறுத்தவே எடுக்கப்பட்டது. ஒரு நாடு சுத்தமாக இருக்க அரசு முயன்றால் மட்டும் போதாது.

மக்களும் ஒத்துழைக்க வேண்டும். நாட்டில் ஏராளமாகக் குவிந்து கிடக்கும் குப்பைகள் எல்லாம் மக்கள் போட்டது தான். மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

ஆனால் தணிக்கையில் சான்றிதழ் தரத் தயங்குகிறார்கள். தராமல் ஏதேதோ சொல்லி இழுத்தடிக்கிறார்கள். ஆறு ரிவ்யூ ஆகி விட்டது. இன்னமும் சான்றிதழ் தரவில்லை. போராடிச் சோர்வு அடைந்து விட்டோம்.

கேள்வி கேட்டால் அரசை எதிர்ப்பதாக தவறாக நினைக்கிறார்கள். பிரச்சினை என்று இருந்தால் கேள்வி வரத்தான் செய்யும். ஒரு படைப்பு கேள்வி கேட்டால் அரசு விரோதமா? கேள்வி கேட்டாலே பயப்படுவது ஏன்? போராடிப் பார்த்து விட்டு இன்று மாலை ஆன்லைனில் வெளியிடுகிறோம்.” என்றார்.

இவ்விழாவில் ஆல்பத்தில் நடித்துள்ள பாடகர் வீரமணிதாசன், இசையமைப்பாளர் பினூப் ராகினி.ஒளிப்பதிவாளர் அசோக் பன்னீர்செல்வம் உள்ளிட்ட படக்குழு வினரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆவணப் படத்துக்காக வாரணாசி, அலகாபாத்,சென்னை போன்ற பல இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

துப்பறிவு 2020 யூடியூப் தளத்தில் உலகெங்கும் உலா வரவுள்ளது.

Thupparivu 2020 documentary film regarding Clean India

Thupparivu 2020 documentary film regarding Clean India

 

More Articles
Follows