‘பாகுபலி’ பிரபாஸை இயக்கும் KGF டைரக்டர் பிரஷான்த் நீல்..; ஹொம்பாளே பிலிம்ஸின் ‘சலார்’

‘பாகுபலி’ பிரபாஸை இயக்கும் KGF டைரக்டர் பிரஷான்த் நீல்..; ஹொம்பாளே பிலிம்ஸின் ‘சலார்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Salaarஇந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம்மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது.

தற்போது ‘யுவரத்னா’ மற்றும் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ ஆகிய படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது.

ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகண்தூர் தங்களது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அறிவித்துள்ளார்.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ‘டார்லிங்’ பிரபாஸ் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தை ‘கே.ஜி.எஃப்’ படங்களின் மூலம் நம்மை அசரவைத்த இயக்குநர் பிரஷான்த் நீல் இயக்கவுள்ளார்.

பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகவுள்ளது.
தற்போது ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ பணிகளில் இருக்கும் பிரஷான்த் நீல், அதை முடித்துவிட்டு பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார்.

இந்தப் பிரம்மாண்ட தயாரிப்பு குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகண்தூர் கூறுகையில் “ஆம்! அது உண்மைதான்!! ‘டார்லிங்’ பிரபாஸ் மற்றும் பிரஷான்த் நீல் இருவரையும் இந்த மிகப்பெரிய படத்தில் இணைப்பதில் மிகுந்து மகிழ்ச்சியடைகிறேன்,
ஹொம்பாளே பிலிம்ஸ் தங்கள் முதல் படத்தில் இருந்தே சினிமாத் துறையில் புதிய ட்ரெண்ட்டை உருவாக்கி வருகிறது.

”சலார்” படத்தை நாடு முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத ஒரு படமாக உருவாக்க எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளை மேற்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தயாரிப்பின் மூலம் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது ஹொம்பாளே பிலிம்ஸ். இதுவரை இந்தியத் திரையுலகில் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும், 2 படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிட்டதில்லை.

‘கே.ஜி.எஃப் சேப்டர் 1’, ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ ஆகிய படங்களைத் தொடர்ந்து பிரபாஸ் – பிரஷான்த் நீல் படத்தையும் அனைத்து மொழிகளிலும் வெளியிட ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்திய அளவில் அடுத்ததொரு பிரம்மாண்ட படைப்பு ரசிகர்களின் விருந்துக்காகத் தயாராகவுள்ளது.

Prabhas and KGF director Prashanth Neel joins for Salaar

4 ஹீரோக்களுடன் கன்னிகா இணையும் படம்..; பூஜையுடன் இனிதே துவக்கம்

4 ஹீரோக்களுடன் கன்னிகா இணையும் படம்..; பூஜையுடன் இனிதே துவக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dr.S.கேதார்நாத் அவர்களின் “சிவோம் Productions” தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படம் தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது.

பெண்களுடைய வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாக உள்ளது.

இந்த படத்தை இயக்குனர் திரு. முருகானந்தம் அவர்களின் உதவி இயக்குனர் திரு.சந்தோஷ் பிரபாகரன் இயக்கவுள்ளார்.

கதையின் நாயகர்களாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களாக நான்கு நாயகர்கள் களமிறங்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கதையின் களம் நாயகன் மற்றும் நாயகியை சார்ந்து இல்லாமல் கதாபாத்திரங்களின் வாழ்க்கையை மற்றும் மதுரையின் வாழ்வியலை மையப்படுத்தியும், பெண்கள் புரியும் சமூக சீர்திருத்ததை மையப்படுத்தியுமே உருவாக்கப்பட்டுள்ளது.

கதையின் நாயகியாக கன்னிகா களமிறங்குகிறார். இவர் ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகான மதுரை மாநகரை சார்ந்த பின்னணியில் உருவாக உள்ள இந்த படத்தில் பல புதுமுக நடிகர் நடிகைகள் இணைந்துள்ளார்.

நாடோடிகள், தூங்காநகரம், அஞ்சாதே போன்ற பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த திரு. சுந்தர் சி பாபு அவர்கள் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். கணேசபுரம், கல்தா போன்ற படங்களில் பணியாற்றிய திரு. வாசு அவர்கள் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

மேலும் சீனு ராமசாமி மற்றும் பிரபு சாலமன் போன்ற முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றிய திரு. விஜய் தென்னரசு கலை வடிவமைப்பாளராக தனது பங்கினை அளிக்கவுள்ளார். இந்த படம் பூஜையுடன் இனிதே படபிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

Actress Kannika’s next movie updates here

7a517352-7aff-4d0d-9b14-ff7297c2ab87

8d5b0370-07ca-469d-84c9-04fd0dd452a6

நியூ இயர் ஸ்பெஷலாக ‘மாஸ்டர்’ விஜய் தரும் சூப்பர் ட்ரீட்

நியூ இயர் ஸ்பெஷலாக ‘மாஸ்டர்’ விஜய் தரும் சூப்பர் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master Trailerவிஜய் & விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, கௌரி, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் உருவான இப்பட பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

இந்த்படம் 2021 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் பட டீசர் தீபாவளி தினத்தில் வெளியானது.

இந்த நிலையில் டிரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

2021 பிறக்கும் புத்தாண்டு அன்று டிரைலர் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Thalapathy Vijay’s Master trailer on New year?

மோடி பெயரில் ஆடு.. ரூ 72 லட்சத்திற்கு ஏலம் கேட்டும் கொடுக்க மறுத்த உரிமையாளர்..; அப்படியென்ன ஸ்பெஷல்?

மோடி பெயரில் ஆடு.. ரூ 72 லட்சத்திற்கு ஏலம் கேட்டும் கொடுக்க மறுத்த உரிமையாளர்..; அப்படியென்ன ஸ்பெஷல்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

goat auction modi nameமகாராஷ்டிரா மாநிலத்தில் அட்பாடி என்ற மிகப்பெரிய ஆட்டு சந்தை உள்ளது.

இந்த சந்தையில் வழக்கம்போல கால்நடை வளர்ப்பவர்கள் ஆடுகளை விற்க கூடினர்.

அப்போது பாபுராவ் மெட்காரி என்பவர் ஒரு ஆட்டுடன் வந்துள்ளார். அவரின் ஆட்டின் பெயர் மோடி.

இந்த ஆட்டை, 1.5 கோடி ரூபாய்க்கு ஏலத்துக்கு விட்டுள்ளார்.

ஆனால், அங்கிருந்தவர்கள் 72 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் கேட்டுள்ளனர்.

ஆனாலும் 1.5 கோடி ரூபாய் கொடுத்தால்தான் விற்பேன். ஒரு பைசா குறைக்க முடியாது என தெரிவித்துள்ளார் பாபுராவ் மெட்காரி.

அப்படி என்ன ஸ்பெஷலோ..??

Here’s an interesting thing in goat auction in north india

ரஜினியும் நானும் போட்டியாளர்கள்தான்.. பொறாமைகாரர்கள் அல்ல.. அவரின் ஆதரவை கேட்பேன்.. – கமல்ஹாசன்

ரஜினியும் நானும் போட்டியாளர்கள்தான்.. பொறாமைகாரர்கள் அல்ல.. அவரின் ஆதரவை கேட்பேன்.. – கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kamalசென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் முன்னிலையில், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு தன்னை கட்சியில் இணைந்து கொண்டார்.

இவர் கிருஷ்ணகிரி, சிவகங்கை மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றி உள்ளார்.

இவரது பதவிக்காலம் முடிய இன்னும் 8 ஆண்டுகள் இருந்தும் பாரத் நெட் டெண்டர் விவகாரத்தில் விருப்ப ஒய்வு பெற்றார்.

தற்போது மநீம கட்சியில் முன்னாள் ஐ.ஏ.எஸ் சந்தோஷ் பாபுவிற்கு தலைமை கழக பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் நிருபர்களிடம் பேசினார் கமல்ஹாசன்.

அப்போது…

“டெல்லி சலோ விவசாயிகள் போராட்டத்தை அஜாக்கிரதையாக விடக்கூடாது. இது கோரிக்கை அல்ல. குரல்.

விவசாயிகளின் போராட்டத்தில் மோடியின் நடவடிக்கை எப்படி? என்ற கேள்விக்கு… ’ரோம் எரியும்போது வயலின் வாசிக்கக்கூடாது’ என்றார்.

பின்னர் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது…

“ரஜினி அரசியல் பிரவேசத்தை விட அவரது ஆரோக்கியம் தான் எனக்கு முக்கியம்.

ரஜினியும், நானும் திரைத்துறையில் போட்டியாளர்கள் மட்டுமே. ஆனால் எப்போதும் பொறாமைக்காரர்களாக இருந்தது இல்லை.

வருங்காலத்தில் ரஜினியும், நானும் போட்டியாளராக இருக்கலாம். இல்லாமலும் போகலாம்.

தேர்தலில் ரஜினியின் ஆதரவை கேட்பேன்.

எனக்கு தொழிலைவிட அரசியலில் தான் ஆர்வம் அதிகம்..”

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

I Seek Rajinikanth’s support says Kamal Haasan

டெல்லி சலோ : 6 நாட்களாக 6 மாநில விவசாயிகள் போராட்டம்..; மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே கண்டனம்

டெல்லி சலோ : 6 நாட்களாக 6 மாநில விவசாயிகள் போராட்டம்..; மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anna Hazareமத்தியில் ஆளும் பாஜக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநில விவசாயிகள் ‘டெல்லி சலோ’/போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றுடன், அந்த போராட்டம் 6 வது நாள்.

இதனால், இந்தியாவின் தலைநகர் டெல்லியே ஸ்தம்பித்து உள்ளது.

டெல்லி போலீசார் தண்ணீரைப் பீச்சி அடித்தும், புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தை கலைக்க முயன்றனர்.

இதனால், விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

நம் நாட்டில் 500 க்கும் மேற்பட்ட விவசாய குழுக்கள் இருக்கின்றன. ஆனால், பேச்சுவார்த்தைக்கு 32 குழுக்களை மட்டுமே அரசு அழைத்து உள்ளது.

அனைத்து குழுக்களும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடப்படும் வரையில், நாங்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளப் போவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்.. இது வரை அமைதி காத்து வந்த சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, மத்திய அரசை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

“தேர்தல் சமயத்தில் விவசாயிகளிடம் வாக்கு கேட்கும் பாஜக அரசு, விவசாயிகளின் போராட்டம் நடந்தும் ஏன் விவாதிக்கக்கூடாது.

போராட்டம் நடத்தும் விவசாயிகள் பாகிஸ்தானிலிருந்து வந்தார்களா?”

இந்தப் போராட்டத்தில் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் ஆனாலும் விவசாயிகள் பொறுமையுடன் நிதானத்துடன் போராடுகின்றனர்.

விவசாயப் போராட்டத்தில் வன்முறை வெடித்தால் அது யார் பொறுப்பு?

“டெல்லி சலோ” போராட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்” என அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.

Social activist Anna Hazare condemns Central govt

More Articles
Follows