மெஜாரிட்டி இல்லாமல் புதுச்சேரியில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்..; என்ன நடந்தது.. சின்ன ப்ளாஷ்பேக்!

மெஜாரிட்டி இல்லாமல் புதுச்சேரியில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்..; என்ன நடந்தது.. சின்ன ப்ளாஷ்பேக்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Narayanasamy (2)தமிழகத்தைப் போலவே புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இன்னும் சில மாதங்களே உள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி் அரசு கவிழ்ந்துள்ளது.

என்ன நடந்தது..: ப்ளாஷ்பேக்

புதுச்சேரியில் 2016 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 15 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆட்சி அமைத்தது.

முதல்வராக நாராயணசாமி பதவியேற்றார். மூன்று தி.மு.க., – MLAக்கள், மாகி தொகுதி சுயேச்சை MLA, ஆட்சிக்கு ஆதரவளித்தனர்.

2020 கடந்தாண்டு ஜூனில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, அரசுக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த காரணத்தினால் பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேலுவை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர்.

இதனால் 18ஆக இருந்த காங். கூட்டணி கட்சியிலிருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 17ஆக ஆனது.

இந்தாண்டு 2021 ஜனவரியில்… முதல்வர் நாராயணசாமி உடனான மோதல் காரணமாக பபொதுப்பணித்துறை அமைச்சரும், வில்லியனூர் தொகுதி MLA நமச்சிவாயம் மற்றும் உசுடு தொகுதி MLA தீப்பாய்ந்தான் ஆகிய இருவரும் ராஜினாமா செய்து பாஜக.வில் இணைந்தனர்.

எனவே காங். கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் 17லிருந்து 15ஆக ஆனது.

இதன் பின்னர் புதுச்சேரி யானம் MLA மல்லாடி கிருஷ்ணா ராவ் கடந்த 15ஆம் தேதியும் அடுத்த நாள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராஜர் நகர் MLA ஜான்குமார்‌ இருவரும் ராஜினாமா செய்தனர்.

அதே பிப்ரவரி 16 இரவில்… புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்த கிரண் பேடியை விடுவித்து, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக ஜனாதிபதி ஒப்படைத்தார்.

பிப்ரவரி 17ஆம் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க ராகுல்காந்தி புதுச்சேரி வந்தார்

பிப்ரவரி 18ஆம் தேதி காலை 9 மணிக்கு துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றார் தமிழிசை சௌந்தரராஜன்.

நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பிப்ரவரி 22ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார் ஆளுநர் தமிழிசை.

இதையடுத்து நாராயணசாமி நியமன பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்களிக்கும் உரிமை கிடையாது என்றார்.

இதற்கு பாஜக மாநில தலைவரும், நியமன சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன், “உச்சநீதிமன்றம் நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் உள்ளது.. நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் பங்கு பெறுவோம்‌” என்றார்.

பிப்ரவரி 21ஆம் தேதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்பவன் MLA லட்சுமி நாராயணன் & திமுகவை சேர்ந்த தட்டாஞ்சாவடி தொகுதி MLA வெங்கடேசன் இருவரும் ராஜினாமா செய்தனர்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசும்போது…”புதுச்சேரியில் பாஜக ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியிருப்பதாகக் கூறிநீர்.

ஆனால், ராஜினாமா செய்த திமுக எம்எல்ஏ வெங்கடேசன் குறித்து எதுவும் பேசவில்லை.

தற்போது கட்சியிலிருந்து தற்காலிகமாக வெங்கடேசன் நீக்கப்பட்டுவதாக திமுக அறிவித்துள்ளது.

ஆக மொத்தம் புதுச்சேரியில் 6 MLAக்கள் பதவி விலகியதால், 17ல் இருந்து 11ஆக ஆனது. இதனால் காங்கிரஸ் கூட்டணி அரசு தனது மெஜாரிட்டியை இழந்தது.

இன்று சட்டசபையில் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை.

பெரும்பான்மை இல்லாமல் போனதால் நாராயணசாமி அரசு கவிழ்ந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்த தமது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே நாராயணசாமி வெளிநடப்பு செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதனால் நாராயணசாமி அரசு கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதன் மூலம் புதுச்சேரியின் 14ஆவது சட்டப்பேரவை காலத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

துணைநிலை கவர்னரிடம் தனது அரசு மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தனர்.

இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

Pondy CM Narayanasamy failed to show majority in floor test

பிராமணப் பெண்ணுக்கும் கிறித்தவ இளைஞனுக்கும் உள்ள காதலை சொல்லும் ‘மழையில் நனைகிறேன்’

பிராமணப் பெண்ணுக்கும் கிறித்தவ இளைஞனுக்கும் உள்ள காதலை சொல்லும் ‘மழையில் நனைகிறேன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mazhaiyil Nanaikiren (2)ராஜ் ஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜேஷ்குமார், ஸ்ரீவித்யா ராஜேஷ் ஆகியோர் தயாரிக்க, சுரேஷ் குமார் இயக்கி இருக்கும் படம் “மழையில் நனைகிறேன்”.

எதார்த்தமான வாழ்வியலுடன் அழகான காதலை சொல்லும் இப்படம் சென்னை உலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்தின் டீசர் பத்திரிக்கையாளர்களுக்குக் திரையிடப்பட்டது.

படம் பற்றிப் இயக்குனர் டி சுரேஷ் குமார் கூறியதாவது..:

”எஞ்சினியரிங் படித்த ஒரு பிராமணப் பெண்ணுக்கும், படித்து விட்டு வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டு இருக்கும், ஒரு கிறித்தவ இளைஞனுக்கும், ஏற்படும் காதலும் அதன் விளைவுகளுமே, இந்தப் படம்.

காதலில் ஒரு பிரச்னை வரும்போது ஒன்று காதலர்கள் காயப்பட வேண்டி இருக்கிறது .

அல்லது காதலர்களின் பெற்றோர்கள் காயப்பட வேண்டி இருக்கிறது. அது பற்றியும் இந்தப் படம் பேசுகிறது . படத்தில் சண்டைக் காட்சி இருந்தாலும் வில்லன் என்று யாரும் இல்லை.

படத்தில் நாயகி அறிமுக காட்சியும், இறுதிக் காட்சியும் மழையில் நடக்கும் . அதனால்தான் படத்துக்கு இந்தப் பெயர் பொருத்தமாக இருக்குமென வைத்தோம்.

தற்போது படம் உலக திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

அடுத்த மாதம் திரையரங்கில் வெளியாகும் அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள்.
எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்கும்” என்றார் .

தயாரிப்பாளர் பி. ராஜேஷ் குமார் கூறியதாவது….

*படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் சொன்ன விதமும், குறிப்பாக கிளைமாக்ஸ் பகுதியும் என்னை மிகவும் கவர்ந்தது . அதனால்தான் இந்தப் படத்தைத் தயாரித்தேன் .

இது குடும்பத்தோடுஎல்லோரும் பார்க்க வேண்டிய படம் என்றார் .

அன்சன் பால், பிகில் படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான், சங்கர் குரு ராஜா ஆகியோர் நடித்துள்ளார்கள். விஷ்ணு பிரசாத் இசை அமைப்பாளராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.

இவர் ஏ ஆர் ரகுமான் பள்ளியில் பயின்றவர். ஒளிப்பதிவு கல்யான், படத் தொகுப்பு வெங்கடேஷ். இயக்குநர் விஜி, கவின் பாண்டியன் இணைந்து வசனம் எழுதியுள்ளனர்.

படத்தின் வெளியீட்டு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Producer P Rajesh Kumar about Mazhaiyil Nanaikiren

‘மக்களுக்கு முதல் வணக்கம்’ நிகழ்ச்சி..; வருத்தம் தெரிவித்தார் ‘பிக் பாஸ்’ ஆரி

‘மக்களுக்கு முதல் வணக்கம்’ நிகழ்ச்சி..; வருத்தம் தெரிவித்தார் ‘பிக் பாஸ்’ ஆரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aari (2)‘பிக் பாஸ்’ சீசன் 4 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனார் நடிகர் ஆரி அர்ஜுனன்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஓரிரு படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஆனால் பொது நிகழ்ச்சிகளில் ஆரி பங்கேற்கவில்லை.

‘மக்களுக்கு முதல் வணக்கம்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் முதன்முறையாக மக்களை சந்திக்க சென்றார்.

இது சென்னையில் நேற்று 21.02.2021ல் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் தன் ட்விட்டரில் ஆரி வருத்தம் தெரிவித்து இருந்தார்.

அதில்…
“மக்களுக்கு முதல் வணக்கம்”
21.2.21 என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.
வந்திருந்த அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ள, காலமும் சூழலும், மெரினா மாலில் ஒத்துழைக்காததிற்கு வருந்துகிறேன்.
புகைப்படம் எடுக்க வரிசையில் நின்ற உங்கள் பண்பிற்கும் அன்பிற்கும் இந்த ரசிகனின் ராயல் சல்யூட்.”

என பதிவிட்டுள்ளார் ஆரி.

Bigg Boss Aari message to his fans

100 நாட்களுக்கு பிறகு FDFS கொண்டாடிய ‘சூரரைப் போற்று’.; தடை போட்ட தியேட்டர் உரிமையாளர்களை கடுப்பேற்றிய சூர்யா ரசிகர்கள்

100 நாட்களுக்கு பிறகு FDFS கொண்டாடிய ‘சூரரைப் போற்று’.; தடை போட்ட தியேட்டர் உரிமையாளர்களை கடுப்பேற்றிய சூர்யா ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soorarai pottru (2)சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி, ஊர்வசி, காளி வெங்கட், ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘சூரரைப் போற்று’.

ஜிவி பிரகாஷ் இசையமைக்க சூர்யாவே இப்படத்தை தயாரித்து இருந்தார்.

குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்கும் முயற்சியை இந்தியாவில் முன்னெடுத்த ஏர் டெக்கான் நிறுவன தலைவர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்ட சமயத்தில் இதன் ஓடிடி ரிலீசை அறிவித்தார் சூர்யா.

இதனால் சூர்யாவுக்கு பலத்த எதிர்ப்பு உருவானது.

சூர்யா தன் படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வேண்டும்.

அவர் தன் ஓடிடி முடிவை மாற்றாவிட்டால் இனி சூர்யா நடித்த தயாரித்த படங்களை தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என அறிவித்தனர்.

இந்த அறிவிப்புக்கு சூர்யா ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சூர்யா தன் முடிவை விட்டு விலகாமல் ‘சூரரைப் போற்று’ பட லாபத்தை திரைத்துறை மற்றும் மக்களுக்கு பகிர்ந்து அளித்தார்.

அந்த சூழ்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது.

ஆனாலும் தியேட்டர்களில் படத்தை வெளியிடாமல் நவம்பர் 12ல் ‘சூரரைப் போற்று’ படத்தை அமேசான் ஓடிடியில் ரிலீஸ் செய்தார் சூர்யா.

இப்படம் ரிலீசாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. தற்போது 100 நாட்களை கடந்துள்ளது இந்த படம்.

சென்னையில் 18வது சர்வதேச திரைப்பட விழா வரும் 18ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற்று வரும் தற்போதைய நிலையில் இதே படம் சென்னை சத்யம் தியேட்டரில் திரையிடப்பட்டது.

முதல் நாள் முதல் காட்சி FDFS போல ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டரில் ரசித்தனர்.

எந்த (சூர்யா) படத்தை தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என கூறினார்களோ இப்போது அதே படத்தை நாங்கள் திரையில் பார்த்து விட்டோம் என சூர்யா ரசிகர்கள் இணையங்களில் பதிவிட்டு தியேட்டர் உரிமையாளர்களை கடுப்பேற்றி வருகின்றனர்.

*கூடுதல் தகவல்கள்…*

18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடைபெறவுள்ளது.

இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகம் பிவிஆர் உடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது.

உலகெங்கிலும் உள்ள 53 நாடுகளில் இருந்து 37 மொழிகளில் (10 இந்திய மொழிகள் உட்பட) 92 திரைப்படங்கள் பங்குபெறவுள்ளன.

18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி 18.2.2021 அன்று பிவிஆர் மல்டிபிளெக்ஸின் சத்யம் திரையில் நடைபெற்றது.

25.2.2021 அன்று பிவிஆர் மல்டிபிளெக்ஸின் சத்யம் திரையில் நிறைவு விழா நடைபெறவுள்ளது.

Chennai film festival turned into fans show

‘பிக்பாஸ்’ புகழ் கணேஷ் வெங்கட்ராம் நடிக்கும் ரொமான்ஸ் திரில்லர் ‘உன் பார்வையில்’

‘பிக்பாஸ்’ புகழ் கணேஷ் வெங்கட்ராம் நடிக்கும் ரொமான்ஸ் திரில்லர் ‘உன் பார்வையில்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Un Paarvaiyil (2)பிக்பாஸ் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்த நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தற்போது ஒரு ரொமான்ஸ் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார்.

“உன் பார்வையில்” எனும் இப்படத்தை Kaho na pyar hai, Pardes, Taal போன்ற பாலிவுட் மெஹா ஹிட் படங்களின் ஒளிப்பதிவாளர் கபிர் லால் இப்படத்தினை இயக்குகிறார்.

இது தமிழில் இவருக்கு அறிமுகப்படமாகும்.

இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு டேராடூன், உத்ராகண்ட் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இப்படம் தமிழ், தெலுங்கு, மராட்டி பெங்காலி மொழிகளில் படமாகிறது. தமிழ் பதிப்பில் கணேஷ் வெங்கட்ராமன், பார்வதி நாயர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ரொமான்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் சைக்லாஜிஸ்ட் ஆகவும், பார்வதி நாயர் பிஸினஸ் உமனாகவும் நடிக்கிறார்கள்.

படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி அனைவரையும் கவரும்படி அமைந்துள்ளது.

நடிகர் கணெஷ் வெங்கட்ராம் கூறியதாவது…

Kaho na pyar hai, Pardes, welcome back போன்ற பல படங்களில் கபிர் அவர்கள் ஒளிப்பதிவில் செய்த மேஜிக் கண்டு பிரமித்திருக்கிறேன். அவர் என்னிடம் கதை சொன்னபோது படு பரபரப்பான சுவாரஸ்யம் மிகுந்த கதையாக இருந்தது.

ரன் கதாப்பாத்திரம் பல அடுக்குகள் கொண்டதாக இருந்தது. இம்மாதிரியான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கவே காத்திருந்தேன். படம் அழகாக உருவாகி வருகிறது.

பார்வதி நாயர் கூறியதாவது..,

நடிப்புக்கு சவால் தரும் கதாப்பத்திரம் என்னுடையது. என் முழு உழைப்பை தந்து நடித்திருக்கிறேன். கணேஷ் வெங்கட்ராம் மிகச்சிறந்த நடிகர். படப்பிடிப்பில் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தார்.

கபீர் அவர்கள் ஒவ்வொரு காட்சியையும் அமைக்கும் விதம் அதை படமாக்கும் விதம் பிரமிப்பானது.

“உன் பார்வையில்” படத்தினை Lovely World Production சார்பில் அஜய் சிங் தயாரிக்கிறார். பரபரப்பாக உருவாகிவரும் இப்படத்தினை வரும் ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Ganesh Venkat Ram and Nisha joins for Un Paarvaiyil

‘மீம்’ கலைஞராக ‘சாம்பியன்’ விஷ்வா நடிக்கும் த்ரில்லர் படம்

‘மீம்’ கலைஞராக ‘சாம்பியன்’ விஷ்வா நடிக்கும் த்ரில்லர் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Champion Vishwa (2)சுசீந்திரன் இயக்்்இய சாம்பியன் படத்திிிிில் கால்பந்து வீரராக அறிமுகமானவர் விஷ்வா.

கால் பந்து பயிற்சி பெற்று நடித்து, முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது ‘மீம்’ கலைஞன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதுபற்றி அவர் கூறியதாவது:-..

“சாம்பியன்” படத்தில் என் நடிப்பை பார்த்து பிடித்து விட்டு
KH பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஹரி பாஸ்கரன் சார் என்னை பாராட்டினார்.

அதன் பின், டைரக்டர் பாரதி பாலா கதையை சொல்லி அதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று சொல்லி என்னை தேர்ந்தெடுத்தார்.

இப்படம் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் திரில்லர் படமாக இளைஞர்களை கவரும் படியாக இருக்கும்.

நான் அறிமுகமான முதல் படத்தில் கால்பந்து வீரராக பயிற்சி எடுத்தேன். இப்போது ‘மீம்’ கலைஞனாக பயிற்சி எடுத்து வருகிறேன்.

வினோத் என்கிற ‘மீம்’ கலைஞரோடு பயிற்சி எடுத்து வருகிறேன்.

அவரிடம் ‘மீம்’ பற்றி நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்,என்றார்.

மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு நடைப்பெற்று வருகிறது.

தயாரிப்பு: கோமளா, ஹரி பாஸ்கரன்
நிறுவனம்: KH picturs

Champion Vishwa’s next thriller film details

More Articles
Follows