பொங்கல் தினத்தில் ரஜினியுடன் மோத மல்லுக்கட்டும் அஜித்

பொங்கல் தினத்தில் ரஜினியுடன் மோத மல்லுக்கட்டும் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Petta and Viswasam movies clash on Pongal news updatesசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த நடித்துள்ள பேட்ட திரைப்படம் அடுத்த வருடம் 2019 பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

‘பொங்கலுக்கு பராக்’ என ஒரு போஸ்டரையும் அதிரடியாக வெளியிட்டு திரையுலகை அசர வைத்தனர்.

இதற்கு முன்பே அஜித்தின் விஸ்வாசம் படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.

ரஜினி படங்கள் வெளியானால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் ஏகப்பட்ட பிரச்சினை இருக்கும்.

ஒருவேளை பேட்ட படத்துடன் விஸ்வாசம் வெளியானால் குறைந்த எண்ணிக்கையிலேயே தியேட்டர்கள் கிடைக்கும்.

எனவே தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த பிரச்சினையில் தலையிட்டு சுமூகமான தீர்வை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.

இந்த படங்களுடன் சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன், ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த வாட்ச்மேன், ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள எல்.கே.ஜி. ஆகிய படங்கள் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு படங்களின் மோதல் உறுதியானால், பேட்ட படம் ஜனவரி 15ஆம் தேதியும் விஸ்வாசம் படம் ஜனவரி 10ஆம் தேதியும் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Petta and Viswasam movies clash on Pongal news updates

20 வருடங்களுக்கு பிறகு ஜப்பானில் ரஜினியின் *டான்சிங் மகாராஜா*

20 வருடங்களுக்கு பிறகு ஜப்பானில் ரஜினியின் *டான்சிங் மகாராஜா*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

4K version of Rajinis Block Buster Muthu to Rerelease in Japanசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

உலக தமிழர்கள் மட்டுமில்லாமல் ஜப்பான், சீனா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, அமெரிக்கா நாடுகளிலும் அந்தந்த நாட்டினரே ரஜினிக்கு ரசிகர்களாக உள்ளனர்.

அதெப்படி ரஜினிக்கு மட்டும் இப்படி? என்றொரு கேள்வி உங்களில் சிலருக்கு தோன்றலாம்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இணைந்த முத்து படம் தான் முதன்முறையாக ஜப்பான் நாட்டிலும் அவருக்கான ரசிகர்களை உருவாக்கியது.

கவிதாலயா தயாரிப்பில் ஏஆர். ரஹ்மான் இசையமைத்த இப்படம் 1995ம் ஆண்டில் தமிழில் வெளியானது.

அதன் பின்னர் ஜப்பான் மொழியில் சப்-டைட்டிலிங் செய்யப்பட்டு 1998ல் முத்து – ஒடோரு மகாராஜா – டான்சிங் மகாராஜா என்ற பெயரில் அங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

அதன்பின்னர் ஜப்பானில் நாட்டில் ரஜினியின் எல்லா படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது முத்து படம் டிஜிட்டலில் மாற்றம் செய்யப்பட்டு ஜப்பான் நாட்டில் நவம்பர் 23ம் தேதி மீண்டும் வெளியாகிறது.

இந்த அறிவிப்பை படத்தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா அறிவித்துள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மேற்பார்வையில் படத்தின் ஒலியமைப்பும் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.

முத்து படம் ஜப்பானில் வெளியாகி 20 வருடங்கள் ஆனதை முன்னிட்டு அப்படத்தை அந்நாட்டு தலைநகரான டோக்கியோவில் நவம்பர் 23ம் தேதியன்று மீண்டும் வெளியிட உள்ளார்கள்.

டிஜிட்டலில் 4 கே மற்றும் 5.1 சரவுன்ட் ஒலியமைப்பில் இப்படத்தைத் திரையிட உள்ளனர்.

இந்த ரீரிலீஸ் தொடர்பாக தொடர்பாக கவிதாலயாவின் புஷ்பா கந்தசாமி அவர்கள் ரஜினியை சந்தித்து பேசியதாக சொல்லப்படுகிறது.

4K version of Rajinis Block Buster Muthu to Rerelease in Japan

muthu re release in Japan

அட்லி இயக்கத்தில் விஜய்யுடன் இணையும் அஜித் பட வில்லன்

அட்லி இயக்கத்தில் விஜய்யுடன் இணையும் அஜித் பட வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor arun vijay six pack‘சர்கார்’ படத்தை தொடர்ந்து அட்லி இயக்கவுள்ள தளபதி 63 (தற்காலிக பெயர்) படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

ஏஜிஎஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

படத்தின் அறிவிப்பு வெளியான அன்றே படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டனர்.

அடுத்த ஆண்டு 2019ல் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

இதில் விஜய்யுடன் காமெடி நடிகர் விவேக் இணைவது உறுதியாகியுள்ளது.

படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முக்கிய கேரக்டர் ஒன்றில் அருண் விஜய் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மிரட்டியவர் அருண்விஜய் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

First time Arun Vijay team up with Vijay for Thalapathy 63

விஜய்சேதுபதிக்கு வில்லனாக வைபவ்வின் ப்ரதர் சுனில் அறிமுகம்

விஜய்சேதுபதிக்கு வில்லனாக வைபவ்வின் ப்ரதர் சுனில் அறிமுகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vaibhavs Brother Sunil Debuts As Baddie In Vijay Sethupathis Seethakaathiபாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள படம் சீதக்காதி.

இதில் நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில், வில்லனாக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

“உண்மையில், இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகரை கண்டுபிடிப்பது மிகப்பெரிய ஒரு சவாலாக இருந்தது. இது கதாபாத்திரத்தின் இயல்பு அதற்கு முக்கிய காரணம்.

திரைக்கதையை எழுதும்போதே, இந்த கதாபாத்திரம் வழக்கமான ஒன்றாக இல்லாமல், புதுமையாக இருக்க வேண்டும் என்ற தெளிவான பார்வை இருந்தது.

இந்த கதாபாத்திரம் உங்களை வெறுப்புக்கு ஆளாக்காமல், சிறு புன்னகைக்கு ஆட்படுத்தும். தோற்றத்தை பொறுத்தவரை சில அசாதாரண தேர்வுகளை செய்தோம். இந்த கதாபாத்திரத்துக்கு நாங்கள் சில பிரபலமான பெயர்களை கூட பரிசீலனை செய்தோம்.

அவர்களுக்கு கதாபாத்திரம் பிடித்திருந்தாலும் அவர்களது கால சூழலால் இதை செய்ய முடியவில்லை. ஒரு எதிர்பாராத திருப்புமுனையாக நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில் அவர்களை ஒரு பிறந்த நாள் விழாவில் சந்தித்தேன்.

உடனடியாக என் வில்லனை அங்கு கண்டேன். ஆடிஷன் செய்ய அவருக்கு தயக்கம் இருந்தது. இறுதியில் அந்த முயற்சியை மேற்கொண்டார். அந்த கதாபாத்திரத்தில் பொருந்தினார்.

குறுகிய கால நடிப்பு பயிற்சியோடு இந்த படத்துக்குள் வந்தார். ரசிகர்கள் படம் முடிந்து போகும்போது சீதக்காதி (விஜய் சேதுபதி) கதாபாத்திரத்தை மட்டுமல்லாமல் இந்த வில்லன் கதாபாத்திரத்தையும் நினைத்துக் கொள்வார்கள்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பக்ஸ் கதாபாத்திரம் அளவுக்கு இந்த கதாபாத்திரமும் இருக்கும், பேசப்படும் என்றார் இயக்குனர் பாலாஜி தரணீதரன்.

பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் இந்த சீதக்காதி படத்தை தயாரித்திருக்கிறது. ஏற்கனவே விஜய் சேதுபதியின் தோற்றம் மூலம் படத்தின் மீதான நமது ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.

கோவிந்த் வசந்தாவின் முதல் சிங்கிள் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, ரசிகர்களிடம் அதிகமான தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Vaibhavs Brother Sunil Debuts As Baddie In Vijay Sethupathis Seethakaathi

குரு வணக்கம் & சிலம்பாட்டத்துடன் தன்ஷிகாவின் பிறந்த நாள் விழா

குரு வணக்கம் & சிலம்பாட்டத்துடன் தன்ஷிகாவின் பிறந்த நாள் விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Sai Dhanshika Birthday Celebration newsகபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்தவர் நடிகை தன்ஷிகா.

இவர் தனது பிறந்த நாளை தனது சிலம்பாட்டம் குருவான பாண்டியன் மாஸ்டர் அவர்களின் இடத்தில் கொண்டாடினார்.

தனது பிறந்தநாளின் முதல் நிகழ்வாக தனது குருவிற்கு வணக்கம் செலுத்தியவர் அங்கு குழுமியிருந்த பல்வேறு மாவட்ட ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடன இயக்குனர் ஸ்ரீதர் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் பல்வேறு தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர் நடிகைகள் அலைபேசி வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

ரசிகர்களின் அன்பிற்கிணங்க நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தன்ஷிகா சிலம்பாட்டம் செய்து காட்டினார். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் விருந்தளிக்கப்பட்டது.

Actress Sai Dhanshika Birthday Celebration news

கஜா பாதிப்பு; 1 கோடியே 1 லட்சம் கொடுத்த 2.0 பட நிறுவனம் லைகா

கஜா பாதிப்பு; 1 கோடியே 1 லட்சம் கொடுத்த 2.0 பட நிறுவனம் லைகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyca Subaskaran contributes towards Cyclone Gaja reliefஓரிரு தினங்களுக்கு முன் கஜா புயல் தமிழகத்தின் 7 மாவட்டங்களை கடுமையாக தாக்கியது.

புயல் கரையை கடந்து ஒரு வாரம் ஆன நிலையிலும் மக்கள் இன்னும் முழுமையான இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை.

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

இந்நிலையில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் நிறுவனமான லைகா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடியே 1 லட்சம் ரூபாயை அளித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை அவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் லைகா நிறுவனம் பதிவிட்டுள்ளது.

Lyca Subaskaran contributes towards Cyclone Gaja relief

lyca gaja donation

More Articles
Follows