BREAKING பிகில் & கைதி படத்துடன் மோதும் ‘பெட்ரோமாக்ஸ்’

BREAKING பிகில் & கைதி படத்துடன் மோதும் ‘பெட்ரோமாக்ஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Petromax clash with Bigil and Kaithi on Diwaliஇந்தாண்டு தீபாவளி வருகிற அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதற்கு முன்பே அதாவது 24ஆம் தேதி படங்கள் வெளியாகவுள்ளன.

நிறைய படங்களின் ரிலீஸ் தேதிகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கைதி ஆகிய படங்கள் ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளன.

இந்த நிலையில் தமன்னாவின் புதிய படமும் தீபாவளிக்கு வெளியாகிறது.

தமன்னா நடிப்பில் திகில் கலந்த காமெடியில் உருவாகியுள்ள படம் பெட்ரோமாக்ஸ்.

அதே கண்கள் இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கியுள்ள இப்படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இவருடன் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்யன், காளி வெங்கட், பேபி மோனிகா, ஸ்ரீஜா, வெங்கடேஷ் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர்.

இப்படம் தெலுங்கில் டாப்ஸி, கிஷோர் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘அனந்தோ பிரம்மா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Petromax clash with Bigil and Kaithi on Diwali

ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது

ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director vasanthஜப்பானில் நடைபெற்ற 28வது ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது

ஜப்பானில் நடைபெற்ற 28வது ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றிருக்கிறது. அதன் இயக்குனர் எஸ் சாய் வசந்த் இந்த பெருமதிப்பு மிக்க விருதை, விழா இயக்குனர் ஹரிகி யாசுஹிரோ மற்றும் திரைப்பட விழா கமிட்டியின் தலைவர் குபோடா இசாவ்விடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

விருதை பெற்றுக்கொண்ட இயக்குனர் சாய் வசந்த் நெகிழ்ச்சியுடன் பேசுகையில்,
“இந்த பிரசித்தி பெற்ற ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ வென்றிருக்கும் விருது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. ஆத்மார்த்தமாக விழா குழுவை பாராட்டும் இந்த வேளையில், எனது எழுத்தாளர்கள், கதையின் நாயகர்கள், மறைந்த திரு அசோகமித்திரன், மறைந்த திரு ஆதவன், புகழ்மிக்க திரு ஜெயமோகன் ஆகியோரையும் பாராட்டி மகிழ்கிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இப்படத்தின் முதுகெலும்பாக இருந்த அவர்களை பாராட்டுவதில் பெருமிகிழ்ச்சி கொள்கிறேன்.”

இவ்விழாவில் கலந்து கொள்வதற்கென இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே திரைப்படம் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’. இப்படத்தில் பார்வதி திருவோத்து, லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். செப்டெம்பர் 15ல் திரையிடப்பட்ட இப்படம், அனைவரின் வெகுவான கவனத்தையும் சிறப்பான பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. மீண்டும் இத்திரைப்படம் செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் திரையிடப்பட இருக்கிறது.

வசனகர்த்தாவாக மாறிய பாடலாசிரியர் முருகன் மந்திரம்!

வசனகர்த்தாவாக மாறிய பாடலாசிரியர் முருகன் மந்திரம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyricist Murugan manthiram50க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள முருகன் மந்திரம், ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம் நடிப்பில், முன்னாள் கப்பல்படை வீரர் ப்ராஷ் இயக்கும் “ஆபரேஷன் அரபைமா” படத்தின் மூலம் வசன கர்த்தாவாகி இருக்கிறார்.

வசனம் எழுதுவது குறித்து முருகன் மந்திரம் கூறும்போது, “பாடல் எழுதுவதை விட, வசனம் எழுதுவதற்கு அதிக உழைப்பு தேவைப்படுகிறது. ஒரு பாடல் எழுதும்போது அதன் சூழலை, இயக்குநரின் எதிர்பார்ப்பை, கதாபாத்திரங்களின் உணர்வை, நமது வார்த்தைகளின் மூலம் மெட்டுகளுக்கு பொருத்தினால் போதும்.
ஆனால், வசனம் எழுதும்போது, கதை, கதைக்களம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்விட பின்னணி, பேச்சு மொழி பின்னணி, கதாபாத்திரத்தின் அப்போதைய மனநிலை, இயக்குநர் பேச விரும்பும் கருத்து, இப்படி நிறைய விசயங்களை தெரிந்து வசனம் எழுதினால் தான், படம் பார்க்கிறவர்கள் அந்த படத்தோடு, கதாபாத்திரங்களோடு ஒன்ற முடியும்.

ஆபரேஷன் அரபைமா, ஒங்கள போடணும் சார் என இரண்டு படங்களுக்கு வசனம் எழுதியது வேறு வேறு மாதிரியான அனுபவம். கதையின் தன்மை இரண்டு படங்களுக்கும் மொத்தமாக வேறுபட்டது. அந்தந்த படத்திற்கான தேவையைப் பொருத்து வசனங்களை எழுதி இருக்கிறேன். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து டைம் அண்ட் டைட் ஃப்ரேம்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் “பிரளயம்”, “மிலிடெரி” ஆகிய படங்களுக்கு வசனம் எழுதுகிறேன், என கூறுகிறார்.

இன்றே விஜய் ரசிகர்களுக்கு ‘பிகில்’ இசை விருந்தளிக்கும் அட்லி

இன்றே விஜய் ரசிகர்களுக்கு ‘பிகில்’ இசை விருந்தளிக்கும் அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Unakaga Romantic 3rd Single from Bigil movie todayவிஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கியுள்ள படம் ‘பிகில்’.

ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க, ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருக்கிறார்.

இதுவரை படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நாளை அனைத்து பாடல்களும் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘உனக்காக’ எனும் ரொமாண்டிக் பாடல் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியிடப்படும் என இயக்குனர் அட்லீ தெரிவித்துள்ளார்.

Unakaga Romantic 3rd Single from Bigil movie today

BREAKING பொது மொழியாக ஹிந்தியை ஏற்க முடியாது..: ரஜினி

BREAKING பொது மொழியாக ஹிந்தியை ஏற்க முடியாது..: ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hindi language cannot be Imposed says Rajinikanthபாஜக. முக்கிய தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா அவர்கள் *ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதுதான் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும்.

ஆதலால் மக்கள் தங்கள் தாய் மொழிகளுடன் இந்தியையும் சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது ஹிந்தி மொழியால் மட்டுமே முடியும்* என அண்மையில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.

இதற்கு தென்னிந்தியாவில் பலத்த எதிர்ப்பு உருவானது. நடிகர் கமலும்…

இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளேன். படத்தில் நடிப்பது என் தனிப்பட்ட ஆர்வம். எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார். ஆனால் இதுதான் மொழி என ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி பேசியதாவது…

எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் அது அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.

ஆனால், துரதிஷ்டவசமாக நம் நாட்டில் பொது மொழியை கொண்டு வர முடியாது. அதேபோல் இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்க கூடாது.

இந்தி மொழியை திணித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தி திணிப்பை தமிழகம் மட்டுமல்ல தென் இந்தியாவில் எந்த மாநிலமும் ஏற்றுக்கொள்ளாது. வட இந்தியர்களே இந்த கொள்கையை ஏற்கமாட்டார்கள்.” என்றார்.

அதேபோல் பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணம் குறித்து ரஜினியிடம் கேட்டபோது…

“பேனர்கள் வைக்கக்கூடாது என எனது ரசிகர்களிடம் நான் ஏற்கனவே கூறிவிட்டேன். அதை அவர்கள் கடைபிடிப்பார்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

Hindi language cannot be Imposed says Rajinikanth

தமிழில் ஹீரோ; மலையாளத்தில் வில்லன்; ‘குன்றத்திலே பிரஜினுக்கு கொண்டாட்டம்’

தமிழில் ஹீரோ; மலையாளத்தில் வில்லன்; ‘குன்றத்திலே பிரஜினுக்கு கொண்டாட்டம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TV Actor Prajin shares his experience in Tamil and Malayalam filmsசின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டிலுமே சரிசமமாக கவனம் செலுத்தி வருபவர் நடிகர் பிரஜின்.

சமீபத்தில் ஓணம் பண்டிகை ரிலீசாக மலையாளத்தில் வெளியாகியுள்ள லவ் ஆக்ஷன் ட்ராமா என்கிற படத்தில் வில்லனாக நடித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் பிரஜின்.

திடீரென மலையாள படத்தில் வில்லனாக மாறியது எப்படி, இந்தப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பிரஜின் பேசியதாவது…

மலையாளத்தில் ஏற்கனவே சமீபத்தில் வெளியான ‘த்ரில்லர்’ படம் உட்பட 4 படங்களில் நடித்துள்ளேன்.

சண்டக்கோழி வில்லன் நடிகர் லால் டைரக்ஷனில் மலையாளத்தில் ‘டோர்னமெண்ட்’ என்கிற படத்தில் வில்லனாக நடித்தபோது அந்த படத்தை பார்த்த நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ், எனது நடிப்பை மனதார பாராட்டினார்..

அப்போது தான் அவரும் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்கிற படத்தில் நிவின்பாலியுடன் இணைந்து அறிமுகமாகியிருந்த சமயம். அதன் பிறகு கடந்த ஆறு வருடங்களில் முன்னணி கதாநாயகனாக மாறிவிட்ட அஜு வர்கீஸ் தான், இந்த லவ் ஆக்ஷன் ட்ராமா படத்தில் இணை தயாரிப்பாளராக இணைந்து தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்க நடிகரைத் தேடிக் கொண்டிருந்தபோது இத்தனை வருடங்களாக என்னை மறக்காமல் நினைவு வைத்திருந்த அஜு வர்கீஸ் உடனே கேரளாவிற்கு கிளம்பி வரச்சொன்னார். அங்கே போனதும்தான், இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார்கள்.

இப்படத்தின் இயக்குநர் தயன் சீனிவாசன் பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான சீனிவாசனின் மகன் அதுமட்டுமல்ல, இயக்குநர் வினீத் சீனிவாசனின் தம்பியும் கூட..

இதுவரை ஹீரோவாக சில படங்களில் நடித்து வந்தவர் இந்த படத்தின் மூலம் டைரக்ஷன் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.. அவரது தந்தை, அண்ணனை போலவே இவருக்கும் நடிப்பு டைரக்சன் என்பது ரத்தத்திலேயே ஊறிப் போய் இருந்ததால் அவர் தற்போது இயக்குநராக மாறியுள்ளார்.

ஆனால் தயன் சீனிவாசன் கதையையும் அதற்கேற்ற கதாபாத்திரங்களையும் கச்சிதமாக தேர்வு செய்து முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுள்ளார்.

மலையாளத்தில், தான் ஒரு முன்னணி ஹீரோ என்றாலும் அதற்கான பந்தாவும் இல்லாமல் பழகினார் நிவின்பாலி.

நயன்தாரா உடன் இந்தப்படத்தில் இரண்டு காட்சிகளில் இணைந்து நடித்துள்ளேன். ஒரு காட்சியில் அவரை எதிர்த்துப் பேசுவது போல வசனம் பேசியிருந்தேன். ஆனால் ஒரு சில காரணங்களால் அது படத்தில் இடம்பெறவில்லை.

எனது நடிப்பைப் பாராட்டி அஜூ வர்க்கீஸ் காஸ்ட்லியான TAGHUER வாட்ச் ஒன்றை பரிசளித்தார்.
கேரளாவின் மிகப்பெரிய விருதைப் பெற்றதுபோல் உணர்ந்தேன்.

தற்போது தமிழில் சீனு ராமசாமியின் உதவியாளர் இயக்கியுள்ள ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்கிற படத்தில் நடித்துள்ளேன். இன்னும் இரண்டு மாதங்களில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

இது தவிர தற்போது மிகப்பெரிய கம்பெனி ஒன்றில் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

லவ் ஆக்சன் ட்ராமாவை தொடர்ந்து, இனி மலையாளத்திலும் நல்ல வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கிறேன்.

இன்னொரு பக்கம் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் விஜய் டிவியில் மீண்டுமொரு பிரமாண்டமாக தொடரில் என்னை எதிர்பார்க்கலாம்.. அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன” என்று சந்தோசத்துடன் கூறினார் பிரஜின்.

TV Actor Prajin shares his experience in Tamil and Malayalam films

More Articles
Follows