ரஜினி வீடு முற்றுகை: பாதுகாப்பு அரண் அமைக்க ரசிகர்கள் திட்டம்

ரஜினி வீடு முற்றுகை: பாதுகாப்பு அரண் அமைக்க ரசிகர்கள் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Periyar controversial speech issue Rajini fans protect Poes Garden கடந்த வாரம் நடைபெற்ற துக்ளக் 50 ஆண்டு விழாவில் ரஜினி பேசிய பேச்சு சர்ச்சையானது.

முரசொலி முதல் பெரியார், ராமர் ஆகியோர் பற்றி பேசியிருந்தார்.

இதில் பெரியார் பற்றிய பேச்சுக்கு ரஜினி மீது தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலர் ரஜினி உருவ பொம்மையை எறிக்கவும் திட்டமிட்டனர்.

மேலும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், ரஜினி வீட்டை முற்றுகையிடப்போவதாக அறிவித்து இருந்த்தை பார்த்தோம்.

இளைஞர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கிறார் பெரியார் : மீரா கதிரவன்

அந்த கழகத்தினர் வரும் ஜனவரி 23-ம் தேதி காலை 10 மணி அளவில் ரஜினி மன்னிப்பு கேட்காவிடில் போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீட்டை முற்றுகை இட உள்ளதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் திடீரென போராட்டத்தை இன்று ஜனவரி 21ஆம் தேதி நடத்த திட்டமிள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த தகவலை அறிந்த ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெரியார் பற்றி பேச்சு; ரஜினி மன்னிப்பு கேட்க தபெதிக வலியுறுத்தல்

மேலும் அந்த எதிர்ப்பை சமாளிக்க ரஜினி வீட்டுக்கு பாதுகாப்பு அரண் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தங்களை தாண்டி எவரும் வர முடியாது என சவால் விடும் வகையில் சமூக வலைதளங்களில் செய்திகளை ரஜினி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த போராட்டம் மக்கள் கவனத்தை ஈர்க்கும் எனத் தெரிகிறது.

Periyar controversial speech issue Rajini fans protect Poes Garden

டாப் ஸ்டார் பிரசாந்தை இயக்கும் மோகன் ராஜா..?

டாப் ஸ்டார் பிரசாந்தை இயக்கும் மோகன் ராஜா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mohan raja to direct Top Star Prasanth ‘தி பியானோ டியூனர்’ என்ற பிரெஞ்ச் படத்தின் தழுவலாக வெளியான ‘அந்தாதுன்’ என்ற ஹிந்தி படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

மேலும் சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்றது.

இதில் ஆயுஷ்மன் குரானா, தபு நடித்திருந்தனர்.

எனவே இந்த படத்தின் ரீமேக்குக்கு பலத்த போட்டி உருவானது.

தனுஷ், சித்தார்த், ஆகியோர் போட்டியிட்ட நிலையில் இதன் உரிமையை டாப் ஸ்டார் பிரசாந்த் கைப்பற்றினார்.

இந்த நிலையில் இப்படத்தை தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

Mohan raja to direct Top Star Prasanth

ஆர்யா நடிப்பில் ‘அரண்மனை 3’ படத்தை இயக்கும் சுந்தர் சி

ஆர்யா நடிப்பில் ‘அரண்மனை 3’ படத்தை இயக்கும் சுந்தர் சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sundar C and Arya team up for Aranmanai 3சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படம் பேய் ஹிட்டானது. இதில் வினய், ஹன்சிகா ஆகியோர் நடித்திருந்தனர்.

இதனையடுத்து அரண்மனை 2 படத்தையும் இயக்கினார். இதில் சித்தார்த் மற்றும் த்ரிஷா நடித்திருந்தனர்.

இந்த படமும் ஓரளவு வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளதாம்.

இதில் நடிக்க ஆர்யா மற்றும் ராஷி கண்ணாவிடமும் பேசி வருகிறார்களாம்.

இவர்களுடன் விவேக், யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கலைஞர்கள் ஒப்பந்தம் ஆனவுடன் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.

Sundar C and Arya team up for Aranmanai 3

மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி: சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன்

மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி: சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Santhanamஇயக்குநர் ஜான்சன்.கே கதை, திரைக்கதை, வசனம் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து சென்ற வருடம் வெளியான படம் ‘A1’. இந்தப் படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளும், வசனங்களும், பாடல்களும் சந்தானத்தின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்தன. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள பயனாளர்கள், விமர்சகர்கள் என்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கும் நல்ல லாபத்தை கொடுத்தது. சந்தானம் படங்களின் வசூலில் புதிய மகுடமாக அமைந்தது. அதே போல மீண்டும் ஒரு நகைச்சுவை விருந்தை எதிர்பார்க்கும் மக்களின் ஆசையை, இந்தக் கூட்டணி பூர்த்தி செய்யவுள்ளது. சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன் வெற்றி கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளது. தற்போது இந்தக் கூட்டணியில் ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன் இணைந்துள்ளார்.
இந்தப் படத்தின் பூஜை இன்று (ஜனவரி 20) சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பூஜையில் சந்தானம், இயக்குநர் ஜான்சன்.கே, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்ட படக்குழுவினருடன் தயாரிப்பாளர் மதன் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார்.

A1 படத்தைப் போலவே இந்தப் படமும் நல்ல நகைச்சுவை விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த இயக்குனர் அமீர்

தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த இயக்குனர் அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ameerஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர்கள் அமீர், சுப்பிரமணிய சிவா, எஸ்.ஆர்.பிரபாகரன், நடிகர் சவுந்தரராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

இசை அமைப்பாளர் பவதாரிணி பேசும்போது, ‘எல்லாருக்கும் நன்றி. தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. யுவன் அமீர் சாருக்கு நன்றி. படத்தில் பாடிய சிங்கர்ஸுக்கும் நன்றி’ என்றார்
.

இயக்குனர் அசோக் தியாகராஜன் பேசியதாவது, ‘இந்த மேடையை அலங்கரிக்கிற சினிமா ஜாம்பவான்களுக்கு நன்றி. நம் வாழ்க்கையும் நதிபோல் தான் நம்மால் கணிக்க முடியாத ஒன்று. அதுதான் மாயநதி படம். நதி நிறைய திருப்பங்கள் கொண்டது. நம் வாழ்க்கையில் நிறைய பக்கங்களை பெண்கள் தான் நிரப்பி வருகிறார்கள். படத்தில் மிக எதார்த்தமாக நடித்துள்ள நாயகன் அபி சரவணன், நாயகி வெண்பா ஆகியோருக்கு நன்றி. மேலும் படத்தில் ஒத்துழைத்து பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த விழாவில் ஹீரோயின் இசை அமைப்பாளர் பவதாரிணி மேடம் தான். எல்லாப் பாடல்களையும் மிகச்சிறப்பாக தந்துள்ளார். இந்தப்படத்தை தனிப்பட்ட முறையில் உருவாக்கி விடவில்லை. ஒரு டீமாக இருந்து தான் உருவாக்கினோம். இசைஞானி இளையராஜா பாடல்கள் தான் நம் கவலைகளை ஆற்றுப்படுத்தியது. சந்தோஷத்தை அதிகப்படுத்தியது. அவர் வீட்டில் இருந்து இந்த விழாவிற்கு வருகை தந்த யுவன் சங்கர் ராஜாவிற்கு நன்றி” என்றார்
.

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசும்போது, ‘பவதாரிணி இசை பற்றி நான் சொல்றது எப்படி இருக்கும்னு தெரியல. இந்தப்படத்தின் பாடல்கள் ரொம்ப நல்லாருக்கு. இசை எங்க ரத்தத்துல இருக்கு. என் கை பிடிச்சி வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி தான். என்னை இந்தளவிற்கு கூட்டிட்டு வந்தது அக்கா தான். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்றார்
.

அமீர் பேசியதாவது, ‘இரண்டு நாட்களுக்கு முன்னாடி சுப்பிரமணிய சிவா இந்த விழாவிற்கு கூப்பிட்டார். நான் யோசிச்சேன். அப்புறம் பவதாரிணி இசை என்று சொன்னார்கள். என்னால் எதுவும் பேச முடியல. உடனே வருகிறேன் என்றேன். நடிகர் அபி சரவணன், கேமராமேன், என எல்லாரும் எனக்கு நெருக்கமானவர்கள். உலக வரலாற்றிலே இளையராஜா குடும்பம் போன்று உலகத்தில் எங்கேயுமே கிடையாது. இப்படி ஒரு குடும்பம் தமிழ்க்குடும்பமாக கிடைத்தது நாம் செய்த பாக்கியம். எம்.ஜி.ஆர் இன்று வரை நினைவுகூரப்படுகிறது. ஆனால் அவரோடு வேலை செய்தவர்களிடம் நிறைய விசயங்களை கேட்டு பதிவு செய்ய வேண்டும்..

நம் தமிழ்நாட்டில் இன்று மூன்றே கலைஞர்கள் தான் பெரிய கலைஞர்கள். இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பற்றிய பதிவுகளை உடனடியாக பதிய வேண்டும். அதனால் இளையராஜா பற்றிய பதிவுகளை யுவன்சங்கர் ராஜா பதிவு செய்ய வேண்டும். இதை எல்லாம் அரசு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். நம் சங்கங்கள் எல்லாம் இப்போது மூடுவிழா கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. வளரும் நடிகர்கள் சமூக சேவை செய்கிறார்கள். நல்ல விசயம் தான். ஆனால் அது அவர்களுக்கு நல்லதல்ல. இங்கு சேவை என்பது வேற. அரசியல் என்பது வேற. இங்கு பொது விசயங்களை செய்தால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதை நானே அனுபவித்து இருக்கிறேன். தமிழ்சினிமாவில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் சினிமா தான் இங்கு ஆண்டு கொண்டிருக்கிறது. ஆனால் சினிமா முன்னேறவே இல்லை. இங்கு சினிமாவில் இருக்கும் பலரும் எம்.ஜி.ஆர் ஆக முயற்சிக்கிறார்கள். எம்.ஜி.ஆர், கலைஞர் ஆகியோரிடம் இருந்த ஆட்கள் எல்லாம் அவர்களுக்குத் தேவையானதைச் செய்து கொண்டார்கள். அவர்கள் சினிமாவிற்கு எதுவும் செய்யவில்லை.

கலைஞர், எம்.ஜி.ஆர் பிலிம்சிட்டியை அமைத்தார். ஜெயலலிதா வந்ததும் அந்தப்பெயரை மாற்றினார். ஆனால் சினிமா ஆட்கள் உடனே இந்த இதை மறுத்து ஜெயலலிதாவிடம் முறையிட்டிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அதனால் கலைஞர் திரும்ப ஆட்சிக்கு வந்ததும் அந்த இடத்தில் பாதியை டைட்டில் பார்க்குக்கு கொடுத்து விட்டார்.

அதுபோல் கலைஞர் சினிமா தொழிலாளர்களுக்கு வீடு கொடுப்பதற்கு இடம் ஒதுக்கினார். அதுவும் நடக்கவில்லை. இங்கு இரண்டு பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வர இருப்பதால் தமிழக அரசு விருது கொடுக்க யோசிக்கிறது என்று யோசிக்கிறேன். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் பயப்பட வேண்டியதில்லை. ஏன் என்றால் அவர் எந்தப்பால் போட்டாலும் அடிக்கிறார். அதனால் அவரிடம் சினிமா விருதுகளை வழங்க வேண்டுமென கோரிக்கையாக வைக்கிறேன்.

இந்த மாயநதி என்ற திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றியடையணும். ஒரு ஆரோக்கியமான சூழல் சினிமாவிற்கு வரணும். இந்த விழா சிறியதாக ஆரம்பித்து பெரிதாக முடிந்திருக்கிறது” என்றார்.

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்யும் விஷால்

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்யும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishalவிஷால்- இன் தேவி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தும் மேற்படிப்பு தொடர முடியாத எழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு உதவி செய்து வருகிறார்

ரெஜினா, ஸ்ரத்தா, சிருஷ்டி.. விஷாலுக்கு மூன்று ஜோடிகள்

அவ்வாறு தனது தேவி அறக்கட்டளை மூலம் படித்து வரும் மாணவ,மாணவியர்கள் படிப்பு குறித்த சந்திப்பு நடைபெற்ற போது..
நீங்கள் என்னை உயர்த்துகிறீகள். அது ஒரு சிறிய முற்ச்சி தான் இந்த தேவி அறக்கட்டளை உதவிகள். நீங்கள் படித்து நல்ல நிலமையில் வாருங்கள். நீங்களும் மற்ற்வர்களுக்கு உங்களால் முடிந்த கல்வி உதவியை செய்யுங்கள் என்றார்,தேவி அறக்கட்டளை நிறுவனர் நடிகர் விஷால்.
Vishal through his Devi Foundations helps the poor students who could not continue their college studies and who have completed the higher secondary school

More Articles
Follows