தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பார்த்திபன் இயக்கி தயாரித்து அவர் ஒருவர் மட்டுமே நடித்து வெளியான படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
பல சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘ஒத்த செருப்பு’ படம் திரையிடப்பட்டது.
சிறந்த ஒலிக்கலவைக்கான தேசிய விருதை இப்படம் வென்றது.
இந்தப் படத்தை ஹிந்தியில் வெளியிட விரும்புகிறார் பார்த்திபன்.
இதனையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்துக்கு ஹிந்தியில் என்ன பெயர் வைக்கலாம்? அம்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும்… என அந்த கமெண்டில் பதிவிட்டுள்ளார்.
இது ஹிந்தி ரீமேக்..? அல்லது படத்தை இந்தியில் ‘டப்’ செய்யப் போகிறாரா? என பார்த்திபன் குறிப்பிடவில்லை.
Parthiban’s otha seruppu goes to bollywood?