பாண்டியராஜன் மகன் நடிக்க பாக்யராஜ் சிஷ்யர் இயக்கியுள்ள ‘தொட்ரா’

பாண்டியராஜன் மகன் நடிக்க பாக்யராஜ் சிஷ்யர் இயக்கியுள்ள ‘தொட்ரா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pandiarajan son Prithivirajan in Thotra movieJ.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’.

இந்தப்படத்தை இயக்குனர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.

இவர் பாபிசிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’ உட்பட சுமார் பதினெட்டு படங்களை வெளியிட்டவர்.

நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சரவணக்குமார் புது வில்லனாக அறிமுகமாகிறார். “மெட்ராஸ்” பட வில்லன்களைப் போல இதில் முழுக்க முழுக்க விளையாடியிருக்கிறார்.

ஒரு படம் வெற்றியடைய கதாநாயகனை எதிர்ப்பவர் சரியான தேர்வாக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்டவராக சரவணக்குமார் இப்படத்தில் பார்ப்பவர்களுக்கு பயமேற்படுத்தும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மைனா சூசன், தீப்பெட்டி கணேசன், கூல் சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் மதுராஜ் கூறியதாவது…

இன்று இருக்கக்கூடிய சமூக சூழலில் உறவுகள் எப்படி மதிக்கப்படுகின்றன? பண ஏற்றத்தாழ்வுகள், பிரிவினை ஏற்றத்தாழ்கள் என்ற இரண்டும்தான் உறவுகளை இணைப்பதோ பிரிப்பதோ செய்கிறது.
மிகப்பெரிய பணம் உள்ளவர் சாதி ரீதியாக அடித்தட்டில் இருந்தாலும் மேல்தட்டில் உள்ளவர்களுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள தடையிருப்பதில்லை.

பணமற்றவர்கள் தங்கள் மனதின் தேடலை நிறைவேற்றிக்கொள்ள முயலும்போதுதான் பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது. அப்படி ஒரு பிரித்தாளும் கும்பல் எல்லா ஏரியாக்களிலும் உள்ளது.

சிங்கத்திடமிருந்து தப்ப முதலை வாய்க்குள் மாட்டிக்கொள்வது போல அங்கே காதலும் காதலர்களும் சிதைக்கப்படுகிறார்கள்.

காதல் என்றாலே பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.. இதில் வீட்டைவிட்டு வெளியேறும் காதலர்கள் எதிர்கொள்ளும் போராட்டம் ரொம்பவே கடினமான ஒன்று.

அதிலும் அவர்கள் வழிமாறிப்போய் காதல் வியாபரிகளின் கையில் சிக்கிக்கொண்டால்..? இப்படி ஒரு விஷயத்தைத்தான் இந்தப்படத்தில் சமூக கண்ணோட்டத்துடன் பேசியுள்ளேன்.

இந்த மாதிரி சம்பவங்கள் சட்டத்தின் கண்காணிப்பில் வருவதே இல்லை. தன்னைச் சார்ந்தவர்களாகவே இருந்துகொண்டு எதிராக காய்களை நகர்த்திக்கொண்டே இருப்பார்கள். இப்படி காதலர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் மாட்டிக்கொள்ளும் பல நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து கதையை செதுக்கியுள்ளோம்.

பரத்துக்கு ஒரு “காதல்” போல பிருத்விக்கு “தொட்ரா” நல்ல பேர் வாங்கித்தரும்.

சினிமாவில் மிகமிக நல்ல பையன். அமைதி, ஸ்டார் வீட்டுக் கன்றுக்குட்டி போன்ற எந்த பந்தாவும் இல்லாதவர்.

இந்தப் படத்துக்கு பிருத்விதான் சரியா இருப்பான்னு எனக்கு கைகாட்டிவிட்டவர் என் குருநாதர் கே. பாக்யராஜ்.

முழுக்க முழுக்க சரியாகவே அமைந்திருந்தார் பிருத்வி.

வட மாவட்டங்களில் நடைபெற்ற, தமிழ்நாட்டை உலுக்கிய இரண்டு பயங்கரமான உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது.

தயாரிப்பாளர் சந்திரா சரவணக்குமார் சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் மற்றொரு பெண் தயாரிப்பாளர்.

இதனால் என்ன வருமானம் வரும் எனக் கேட்காமல்.. இதனால் நீ வெற்றி பெற்றுவிடுவாயா எனக் கேட்டு தயாரிக்க முன் வந்தார்.

வியாபாரத்தில் திட்டமிட்டுப் பழகியவர் என்பதால் எனக்கு இந்த படத்தை சரியாகத் திட்டமிட்டுக் கொடுத்தார். கிட்டத்தட்ட ஒரு தயாரிப்பு நிர்வாகியாகவே மாறிப்போனார்.

அவரின் ஆளுமை இந்தப் படத்தை விரைவாக முடிக்க உதவியது என்றார் இயக்குநர் மதுராஜ்.

கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா-2’வுக்கு இசையமைத்த உத்தமராஜா என்கிற இசையமைப்பாளரை இந்தப்படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்துள்ளார் மதுராஜ்.

போக்கிரிராஜா படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஆஞ்சி இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.
‘ஆறாது சினம்’ உள்ளிட்ட சில படங்களில் பணியாற்றிய ராஜேஷ் கண்ணன் என்பவர் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.

சண்டைக் காட்சிகளை உறியடி படத்திற்கு காட்சிகள் அமைத்த விக்கி நந்த கோபால் அமைத்துள்ளார்.

இந்தப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் தேவர்மகன் படப்பிடிப்பு நடந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தேவர்மகனுக்குப் பிறகு வேறெந்த படமும் அங்கு நடைபெறவில்லை. அதன்பிறகு நடந்த படப்பிடிப்பு “தொட்ரா”வின் படப்பிடிப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் ; பிருத்விராஜன், வீணா, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், “மைனா” சூசன், “தீப்பெட்டி” கணேசன், கூல் சுரேஷ் மற்றும் பலர்

படத்தொகுப்பு ; ராஜேஷ் கண்ணன்
ஒளிப்பதிவு ; ஆஞ்சி
இசை ; உத்தமராஜா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ; மதுராஜ்
தயாரிப்பு ; J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார்

கமல் கட்சியில் சேர விருப்பமா..? கோவை சரளா பேட்டி

கமல் கட்சியில் சேர விருப்பமா..? கோவை சரளா பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kovai Sarala reaction to joining in Kamals Political Partyகோவை சரளா, சரண்யா பொன்வண்ணன், கல்பனா, மனோபாலா, தேவதர்ஷினி, வெண்ணிறடை மூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் இட்லி.

அப்பு மூவீஸ் தயாரிப்பில் இயக்குநர் வித்யாதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்பட டீசரை நடிகர் கார்த்தி வெளியிட்டார்.

இந்நிலையில் இப்படம் குறித்து கோவை சரளா மற்றும் சரண்யா பொன்வண்ணன் கூறியதாவது…

நிருபர்: உங்களுக்கு குழந்தை இருக்கிறதா?
கோவைசரளா: எனக்கு நானே குழந்தை.
சரண்யா பொன்வண்ணன்: இராமசந்திராவில் இரண்டுபேருமே மருத்துவம் பெரியவள் மூன்றாம் ஆண்டும் சிறியவள் முதலாம் ஆண்டும் படிக்கிறார்கள்.

நிருபர்: கமல் சார் கட்சி ஆரமித்தால் அவர் கதாநாயகிகள் எல்லாம் அவர் கட்சியில் சேர்வார்களா?

கோவைசரளா: அது எனக்கு தெரியவில்லை இன்று என்ன நடக்கும் என்பதே தெரியவில்லை அப்படி இருக்கையில் நாளை என்ன என்பது மட்டும் எப்படி தெரியும்.

நிருபர்: இட்லி படத்தை பற்றி ஏதாவது சொல்லுங்க?

சரண்யா பொன்வண்ணன்: ஒரு படத்தை கதாநாயகனை நம்பி எடுப்பார்கள், இயக்குநரை நம்பி எடுப்பார்கள் ஆனால் இயக்குநர் கதையை மட்டுமே நம்பி எடுப்பது தான் சாமர்த்தியம்.

அப்படி தற்போது வந்தபடம் மகளிர்மட்டும் அதில் கதைக்கு யார் தேவையோ அவர்களை மட்டும் வைத்தார்கள் அதுபோலத்தான் இந்த இட்லி படமும் கதைக்கு தேவை என்பதால் எங்களை சேர்த்தார்.இந்த மாதிரி கதைகளை நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

நிருபர்: நீங்கள் மூன்றுபேரும் இப்படத்தில் தோழிகளா இல்லை யதார்த்தமாக சந்திப்பீர்களா?

சரண்யா பொன்வண்ணன்: ஆரம்பம் முதலில் இருந்தே தோழிகளாக வருவோம்.

நிருபர்: ஏதோ தனியா வேஷம்லாம் போட்டிருக்கிங்களாமே?

கோவை சரளா: ரொம்ப பெருசலாம் இல்ல ஓரளவுக்கு போட்டிருப்பேன்.
சரண்யா பொன்வண்ணன்: என்ன பொறுத்தவரை அது பெருசுதான் பேன்ட் சர்ட், ஜீன்ஸ்லாம் நான் போட்டதே இல்ல.

முதலில் விருப்பம் இல்லை வீட்டில் உள்ளவர்களிடம் கருத்து கேட்டேன் அவர்கள் கதைக்கு தேவைபட்டால் அதை பண்ணலாம் என்று சொன்னார்கள்.இயக்குநர் அளித்த நம்பிக்கையில் நடித்தேன்

நிருபர்: நீங்க மட்டுமா இல்லை அனைவருக்கும் அதே உடையா?

சரண்யா பொன்வண்ணன்: எல்லோருக்கும் அதே உடை அதுதான் ஆறுதலாக இருந்தது.

கோவைசரளா: ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்வோம். எங்களுக்கு ஒரு லவ் ட்ராக் இருக்கு அது மிக வித்தியாசமான ஒன்று அதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

நிருபர்: மூர்த்தி சார் பற்றி சொல்லுங்க:-

கோவை சரளா அவர் பெரிய லஜன்ட் அப்போ என்ன வம்பு பண்ணுவாறோ அது இப்பவரை இருக்குது.

சரண்யா பொன்வண்ணன் : இதில் ரொம்ப நடிகர்கள் இருக்கிறார்கள் அதான் இதன் ப்ளஸ்.எல்லாரும் அவங்க பங்கை சிறப்பா பண்ணியிருக்காங்க..

Kovai Sarala reaction to joining in Kamals Political Party

itly movie shooting spot

 

வெங்கட சுப்ரமணி மைக் டெஸ்டிங் 1-2-3… இந்த படம் பார்த்தா பொய் சொல்ல மாட்டங்களாம்

வெங்கட சுப்ரமணி மைக் டெஸ்டிங் 1-2-3… இந்த படம் பார்த்தா பொய் சொல்ல மாட்டங்களாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VENKADA SUBBRAMANI MIC TESTING 1 2 3 movie news updatesதேசிவுட்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் “ வெங்கட் சுப்பிரமணி மைக் டெஸ்டிங் 1..2..3 “.

இப்படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார் ரோஷன்.

இயக்குநர் ஹரியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய முருகேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

படத்தை பற்றி நாயகன் ரோஷன் கூறியதாவது…

பொய் பேசுபவர்கள் யாரும் பிடித்து பொய் பேசுவதில்லை. அப்படி பொய் பேசுபவர்கள் யாரும் எங்கள் படத்தை பார்த்தால் நிச்சயம் பொய் பேசமாட்டார்கள். அரசியல்வாதிகள் அதிகமாக பொய் பேசுவார்கள்.

அவர்கள் பொய் பேசகூடாது. இந்த படத்தை பார்த்த பிறகு அவர்கள் எல்லோரும் பொய் சொல்ல தயங்குவார்கள். அந்த அளவுக்கு இந்த படத்தில் புரட்சிகரமான ஒரு கருத்து உள்ளது.

இந்த படமே ஒரு புரட்சிகரமான படம்தான். நான் இந்த படத்தில் சேகுவேரா போன்றதொரு புரட்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

சேகுவேரா செஞ்சி அருகே ஒரு கிராமத்தில் பிறந்து மைக் செட்காரனாக இருந்து புரட்சி செய்தால் எப்படி இருக்கும் ?? அது தான் எங்கள் படத்தின் கதை களம்.

படத்தில் நான் அரசியல் கூட்டங்களுக்கு மைக் செட் போடுபவனாக வருகிறேன். அரசியல் கட்சி கூட்டங்களுக்கு மைக் செட் போடும் போது சில பிரச்சனைகளை சந்திக்கவேண்டி இருக்கும்.

அந்த பிரச்சனைகளின் மூலம் தான் கதை சூடு பிடிக்கும். படத்தில் நாங்கள் பிரதமர் மோடி முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி வரை சமகால அரசியல் பற்றி பேசியுள்ளோம்.

படத்தில் புகை பிடிக்கும் காட்சியோ, மது குடிக்கும் காட்சியோ கிடையாது. இந்த படத்துக்காக நான் 250 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்துள்ளேன். படத்தை நாங்கள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் தான் அதிகம் படம்பிடித்துள்ளோம்.

இப்போது படத்தின் இறுதிகட்ட எடிட்டிங் பனி நடைபெற்றுவருகிறது.

ஹர்ஷிதா பன்வர் என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக நடிக்கிறார். ஹர்ஷிதா வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நான் கடவுள் ராஜேந்திரன் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் படத்தில் இமான் அண்ணாச்சி, கருணாஸ், சரத் லோகிச்த்வா, வம்சிகிருஷ்ணா, யார் கண்ணன், மாரிமுத்து, ஆர்.என்.ஆர். மனோகர், அணு கிருஷ்ணன், ரிஷா, செவ்வாழை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, இயக்கம் :- முருகேஷ் பாரதி
ஒளிப்பதிவு :- ஜெ. ஸ்ரீதர்
இசை :- ஷ்யாம் நம்பூதிரி
பாடல்கள் :- யுகபாரதி, கதிர்மொழி, முருகேஷ் பாரதி
படத்தொகுப்பு :- டி.எஸ். ஜெய்
வசனம் :- பி. வெங்கட சுந்தரம்
கலை :- எம்.ஜி. முருகன்
நடனம் :- ராதிகா
சண்டை பயிற்சி :- ஆர். சக்தி சரவணன்
தயாரிப்பு :- சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ்
தயாரிப்பாளர்கள்.. ரோஷன் மற்றும் ஜி. ஸ்ரீநிவாசன்

VENKADA SUBBRAMANI MIC TESTING 1 2 3 movie news updates

VENKADA SUBBRAMANI MIC TESTING 1 2 3 movie news updates

நிலவேம்பு குறித்து தவறான கருத்தை கூறியதாக கமல் மீது வழக்கு

நிலவேம்பு குறித்து தவறான கருத்தை கூறியதாக கமல் மீது வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalடெங்கு காய்ச்சல் நோயால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே ஒரு சிலர் தாங்களே டாக்டர் ரேஞ்சுக்கு சமூக வலைத்தளங்களில் மருத்துவம் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

நிலவேம்பு கசாயம் மற்றும் பப்பாளி இலை சாப்பிட்டால் டெங்கு காய்ச்சலை தடுக்கலாம் என செய்திகள் வந்தன.

திடீரென டெங்கு காய்ச்சலுக்கு வழங்கப்படும் நிலவேம்புக் குடிநீரால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியது.

ஆனால் அந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அரசு சார்பில் தெரிவித்தனர்.

இந்நிலையில் நிலவேம்பு குடிநீர் பற்றி கருத்து தெரிவித்திருந்தார் கமல்.

அதில், ‘சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்கக் கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர், நிலவேம்புக் குடிநீர்குறித்து கமல் தவறானத் தகவல்களைப் பரப்புவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

Complaint filed against Kamal for false accusation about Nilavembu Kudineer

நீங்க நிஜ டாக்டர் இல்ல கமல்… நிலவேம்பு கருத்தால் வலுக்கும் எதிர்ப்பு

நீங்க நிஜ டாக்டர் இல்ல கமல்… நிலவேம்பு கருத்தால் வலுக்கும் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal speech stillsகமல் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சித்த மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் எங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.

உங்கள் அரசியல் ஆசைக்கு, வளர்ச்சிக்கு தயவு செய்து நிலவேம்பு கசாயம் குடிப்பதை இழுக்க வேண்டாம்.

உங்களின் ஒவ்வொரு செயலும்,கருத்தும் சமீபத்தில் அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பது என்கிற ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு உள்ளது.

உங்களுக்கு தெரியாத விஷயங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ள நீங்கள் நிலவேம்பு குடிநீர் பற்றிய உங்கள் சந்தேகம் தீர சென்னையில் உள்ள ஏதாவது ஒரு சித்த மருத்துவரை அணுகியிருக்கலாம், அல்லது நேரிடையாக சுகாதார துறை அமைச்சர் வேண்டாம் உங்களுக்கு தான் இந்த அரசை பிடிக்காதே, அதனால் சுகாதார துறை செயலாளர் அல்லது பத்திரிக்கை துறை நண்பர்களிடம் கேட்டு இருக்கலாம், இதை எல்லாம் விடுத்து நிலவேம்பை ஆராய்ச்சி முடிவுகள் வரும் வரை குடிக்க வேண்டாம் என உங்கள் ரசிகர்களுக்கு உத்தரவு இட்டுள்ளீர்கள்.

கமல் அவர்களே தாங்கள் கவுரவ டாக்டர் பட்டம் மட்டுமே பெற்று இருக்கீங்க, நிஜ டாக்டர் இல்லை, ஒருவகையில் நிலவேம்பை பற்றி தெரியாமல் கருத்தை பதிவு செய்த நீங்களும் ஒரு போலி மருத்துவர் தான் அய்யா.

சித்த மருத்துவர்களில் பலர் உங்கள் ரசிகர்கள் தான்,தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கடுமையாக உழைத்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு சித்த மருத்துவரும் உங்கள் கருத்தால் மிகுந்த மன வேதனை கொண்டு உள்ளனர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஏன் எனில் நீங்கள் வாழும் சமூகம் வேறு,நாங்கள் கசாயம் வழங்கும் இடத்தில் உள்ள சமூகம் வேறு.

நீங்களும் நிலவேம்பு கசாயமும் ஒன்று தான், சமீப காலங்களில் அதிக கல்லடி, ஏளன பேச்சுகள் என இரண்டுமே அதிக பாதிப்புக்கு உள்ளானது, என்ன உங்களுக்கு வாய் இருக்கிறது செய்ய மாட்டீர்கள் என்று எங்கள் எல்லோருக்கும், ஏன் உங்களுக்கே கூட தெரியும் இருந்தும் இந்த நாட்டை விட்டே போய் விடுவேன் என்று நீங்கள் பொய் சொல்லவில்லையா?

ஒரு பிரபலத்தை கூப்பிட்டு கமல் நடிப்பு சரியில்லை அவருக்கு நடிப்பு திறமை இல்லை எனவே ஓரு நிபுணர் குழுவை அமைத்து அதன் அறிக்கை வந்த பின் அவரை நடிக்க அனுமதிக்கலாம் என்று சொன்னால் எல்லோரும் சிரிக்க மாட்டார்கள், அது போல தான் இருக்கு உங்கள் அறிவிப்பும்.

எத்தனையோ தடை செய்யப்பட்ட மருந்துகள் நம் நாட்டில் புழக்கத்தில் இருக்கிறது அதை எல்லாம் கண்டு கொள்ளாத நீங்கள் நிலவேம்பை மட்டும் எதிர்ப்பது ஏன்?ஏன் இந்த கபட அரசியல் ?

நோய் இல்லாமல் வாழ வழி சொன்ன சித்த மருத்துவமா ஐயா நோய்க்கு வழங்கும் மருந்தில் நச்சை வைத்து விட போகிறது. இனிமேலும் இது போன்ற அரை வேக்காட்டுத் தனமான பேச்சுகளை விட்டு உங்கள் தொழிலான நடிப்பை மட்டும் பாருங்கள்,தேவை இல்லாமல் மருந்துகளை பற்றி பேசி போலி மருத்துவ தொழில் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Dr. ஆ.சுவாமிநாதன். M. D, செயலாளர்.
தமிழ்நாடு அரசு சித்த மருத்துவர்கள் சங்கம்.

Tamilnadu Siddha Doctors Association condemned Kamal in Dengue Medicine issue

ஜிவி. பிரகாஷ் பட பர்ஸ்ட் லுக்கை தனுஷ் வெளியிட இதான் காரணமா?

ஜிவி. பிரகாஷ் பட பர்ஸ்ட் லுக்கை தனுஷ் வெளியிட இதான் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush revealed GV Prakashs Kuppathu Raja first lookநடன இயக்குனர் பாபா பாஸ்கர் முதன்முறையாக இயக்கும் படத்தின் பெயர் குப்பத்து ராஜா.

இதில் ஜிவி. பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். அவருடன் பூனம் பாஜ்வா, பல்லக் லால்வானி, பார்த்திபன், M S பாஸ்கர், யோகி பாபு மற்றும் ‘ஜாங்கிரி’ மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் நாயகன் ஜிவி. பிரகாஷ் இசையமைக்க, மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘S Focuss’ சார்பாக சரவணன், சிராஜ் மற்றும் டி. சரவணன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்றுமுன் தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
தன் நண்பர் பாபா பாஸ்கருக்காக இந்த போஸ்டரை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.

Dhanush revealed GV Prakashs Kuppathu Raja first look

Dhanush‏Verified account @dhanushkraja 2m2 minutes ago
Here is the first look of my friend and choreographer who turned director baba Baskar’s “kuppathu raja” .. all the very best to the team

More Articles
Follows