தனுஷின் பவர் பாண்டியை தெலுங்கில் ரீமேக் செய்ய ரஜினி சிபாரிசு

தனுஷின் பவர் பாண்டியை தெலுங்கில் ரீமேக் செய்ய ரஜினி சிபாரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth mohanbabuதனுஷ் முதன்முறையாக இயக்கிய பவர் பாண்டி படம் தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று ரிலீஸ் ஆனது.

ரிலீசுக்கு முன்பே தனுஷை ரஜினி பாராட்டியிருந்தார் என்பதை பார்த்தோம்.

மேலும் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

எனவே இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய தனுஷிடம் ரஜினி கேட்டுக் கொண்டார் என கூறப்படுகிறது.

அத்துடன் தன்னுடைய நண்பரும் பிரபல தெலுங்கு நடிகருமான
மோகன்பாபுவை வரவழைத்து, அவருக்கும் இப்படத்தைப் போட்டுக் காட்டியிருக்கிறாராம்.

அவருக்கும் ராஜ்கிரண் கேரக்டர் பிடித்துக் போக, அதில் நடிக்க சம்மதித்து இருக்கிறாராம்.

எனவே, விரைவில் தெலுங்கு சினிமாவிலும் தனுஷின் பவரை எதிர்பார்க்கலாம்.

Pa Paandi to be remade in Telugu with Mohan Babu

சிறந்த நடிகராக என்னை பாரதிராஜா ஏற்று கொள்ளமாட்டார் – ரஜினி ஓபன் டாக்

சிறந்த நடிகராக என்னை பாரதிராஜா ஏற்று கொள்ளமாட்டார் – ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth at briic functionசென்னையில் நடைபெற்ற பாரதிராஜா பிலிம் இன்ஸ்டிட்யூட் துவக்க விழாவை நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தொடங்கி வைத்தனர்.

இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது…

நான் நிறைய படங்களில் நடித்துவிட்டேன். நான் அப்படி எவ்வளவுதான் நடித்தாலும் என்னை ஒரு சிறந்த நடிகர் என்று பாரதிராஜா ஒத்துக்கொள்ளமாட்டார்.

ஆகையால் அவருக்கு என்னை பிடிக்கும் ஆனால், பிடிக்காது.

சினிமா என்பது பாரதிராஜாவின் உயிரோடு இணைந்த ஒன்று.

ஒரு கலைஞனை மக்களுக்கு பிடித்துவிட்டால் அவன் செய்யும் அனைத்தையும் ரசிப்பார்கள்.

இங்கு சேரும் மாணவர்கள் நிச்சயம் சிறந்த பயிற்சியை பெறுவார்கள்” என பேசினார் ரஜினிகாந்த்.

‘எம்ஜிஆர் போல இருங்க; இப்போ டைரக்ஷன் வேண்டாம்..’ தனுஷுக்கு ரஜினி அட்வைஸ்

‘எம்ஜிஆர் போல இருங்க; இப்போ டைரக்ஷன் வேண்டாம்..’ தனுஷுக்கு ரஜினி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nadodi mannanதனுஷ் தயாரித்து, இயக்கி, பாடல்கள் எழுதி பாடிய நடித்துள்ள பவர் பாண்டி படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

இதில் தனுஷ் உடன் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரேவதி, மடோனா உள்ளிட்டோர் நடிக்க, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் வெளியாவதற்கு முன்பே, தன் மருமகனின் இயக்கத்தை பார்த்த ரஜினி, தனுஷ்க்கு சில அட்வைஸ் செய்தாராம்.

படம் ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் கொஞ்ச நாளைக்கு டைரக்ஷன் வேண்டாம். அப்போதான் இந்த படம் அதிகமாக பேசப்படும்.

எம்ஜிஆரும் இதே பார்முலாவைதான் கடைப்பிடித்தார்.

‘நாடோடி மன்னன்’ படத்துக்குப் பிறகு கிட்டதட்ட 15 வருஷம் கழிச்சுதான் படம் டைரக்டர் செய்தார்.

நீங்க அடுத்த படத்தை தள்ளி வையுங்க” என்று கூறினாராம்.

எம்ஜிஆர் இயக்கிய படங்கள்…

  • நாடோடி மன்னன் (1958)
  • அரசகட்டளை (1967 எம்ஜிஆரின் அண்ணன் எம்ஜி சக்ரபாணி இயக்கம்)
  • உலகம் சுற்றும் வாலிபன் (1973)
  • மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (1978)

After Watching Power Paandi movie Rajini advice to Dhanush

விஜய்-மகேஷ்பாபுவை இயக்குவது மணிரத்னம்? ஏஆர் முருகதாஸ்.?

விஜய்-மகேஷ்பாபுவை இயக்குவது மணிரத்னம்? ஏஆர் முருகதாஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and mahesh babuதமிழ் சினிமாவில் விஜய் மாஸ் என்றால், தெலுங்கு சினிமாவில் மாஸ் மகேஷ்பாபு.

இவர்கள் இருவருரையும் இணைத்து சில வருடங்களுக்கு முன் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் மணிரத்னம்.

ராஜராஜசோழன் மற்றும் வந்தியத்தேவன் ஆகிய கேரக்டர்களில் அவர்கள் நடிப்பார்கள் என கூறப்பட்டது.

ஆனால் அது வெறும் பேச்சோடு முடிந்து விட்டது.

இந்நிலையில், மகேஷ் பாபு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது…

நாங்கள் சேர்ந்து நடிக்கணும் என்றால், அதற்கான கதையும், அதை கையாள தெரிந்த இயக்குனரும் தேவை.

அப்படியென்றால், ஏ.ஆர்.முருகதாஸ்தான் சரியாக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் சமீபகாலமாக சரித்திர கதைகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

எனவே பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் கையில் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சூர்யா-கார்த்தி-யுவன் கூட படிச்சவன் நான்… – ‘ஸ்பைடர்’ மகேஷ்பாபு

சூர்யா-கார்த்தி-யுவன் கூட படிச்சவன் நான்… – ‘ஸ்பைடர்’ மகேஷ்பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mahesh Babu and Suriyaஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

வெகுநாட்களாகவே இப்படத்தின் டைட்டிலை அறிவிக்காமல் இருந்தனர் படக்குழுவினர்.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் ஸ்பைடர் என்ற டைட்டிலை பர்ஸ்ட் லுக்குடன் வெளியிட்டு இணையத்தில் ட்ரெண்டாக்கினர்.

இந்நிலையில் இவரின் பேட்டியில் மகேஷ்பாபு கூறியதாவது…

நான் சென்னை பையன்தான். என் ஸ்கூல் சென்னை செயின்ட் பீட்ஸ்தான். அதன்பின் லயோலா கல்லூரியில் படித்தேன்.

சூர்யா, கார்த்தி, யுவன் ஆகியோருடன்தான் நான் படித்தேன்.

என் ஸ்கூல் லைப்பில் பார்த்து வியந்த படம் ‘தளபதி. அதில் சந்தோஷ் சிவன் சாரின் ஒளிப்பதிவை மிகவும் ரசித்தேன்.

இப்போது ‘ஸ்பைடர்’ படத்தில் அவருடன் பணிபுரிவது என் அதிர்ஷ்டம்.” என்று தெரிவித்துள்ளார்.

மீடியா பாராட்டு; ராஜ்கிரண் ஆசி… மகிழ்ச்சியில் ‘பவர் பாண்டி’ தனுஷ்

மீடியா பாராட்டு; ராஜ்கிரண் ஆசி… மகிழ்ச்சியில் ‘பவர் பாண்டி’ தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Rajkiranநடிகர், பாடகர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என திரைத்துறையில் பன்முகங்கள் காட்டி வெற்றி பவனி வருகிறார் தனுஷ்.

தற்போது ஒரு இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் இயக்கி தயாரித்து நடித்துள்ள பவர் பாண்டி படம் (ப. பாண்டி) படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி சற்றுமுன் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது.
இதில் சென்டிமெண்ட், கமர்ஷியல், குடும்பம், காமெடி என அனைத்தையும் சரியான அளவில் கலந்து கொடுத்துள்ளார் தனுஷ்.

இதன் க்ளைமாக்ஸ் காட்சி முடியும் தருவாயில் அனைவரும் கைத்தட்டி ரசித்தனர்.

மேலும் சிறப்புக் காட்சிக்கு வந்திருந்த தனுஷ், ராஜ்கிரண், பிரசன்னா, ஷான் ரோல்டன், வேல்ராஜ் ஆகியோரின் பணியை அனைவரும் பாராட்டி சென்றனர்.

Press Media prasises Dhanush Power Paandi

rajkiran

More Articles
Follows