‘காதலும் கடந்து போகும்’ இயக்குனருடன் இணையும் ஆர்யா

‘காதலும் கடந்து போகும்’ இயக்குனருடன் இணையும் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nalan kumarasamyநடிகர் ஆர்யா கைவசம் ‘அரண்மணை 3’, ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் ‘எனிமி’ ஆகிய படங்கள் உள்ளன.

இதில் எனிமி படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ‘சூதுகவ்வும்’ மற்றும் ‘ ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம் ஆர்யா.

காதலும் கடந்து போகும் படத்திற்கு பிறகு படம் இயக்காமல் பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிக் கொண்டிருந்தார் நலன் குமாரசாமி.

தற்போது நலன் குமாரசாமி – ஆர்யா இணையும் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே அறிவிப்புகளை விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.

Nalan Kumarasamy to direct Arya?

.

ஒன்றுபடுவோம்… அற்புதம் செய்வோம்..; விலங்குகளையும் அழைக்கும் ராஷி கன்னா

ஒன்றுபடுவோம்… அற்புதம் செய்வோம்..; விலங்குகளையும் அழைக்கும் ராஷி கன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raashi Khannaஇந்தியா மிகமோசமான மருத்துவ நெருக்கடியை எதிர்க் கொண்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் கரோனா பெருந்தொற்று புதுப்புது சவால்களை நம் முன் நிறுத்துகின்றது.

இத்தகைய வேளையில், நாம் ஒவ்வொருவரும் தாமாகவே முன்வந்து நம்மால் இயன்ற உதவிகளை மனித குலத்திற்கும், இன்னும் பிற உயிர்களுக்கும் செய்வது சிறந்தது.
இதனைக் கருத்தில் கொண்டே நடிகை ராஷி கன்னா, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் களத்தில் இறங்கியிருக்கிறார்.

கரோனா பேரிடர் காலம் தொடங்கியது தொட்டே அவர் அவ்வப்போது உதவிகளை செய்துவந்தார்.

தற்போது #BeTheMiracle என்ற பெயரில் முயற்சியை முன்னெடுத்துள்ளார்.

இதன்மூலம், பசித்தோருக்கு உணவு வழங்குவதே அவரின் இலக்கு. கரோனாவால் வாழ்வாதாரம் இழந்தோரைத் தேடி பல்வேறு உதவிகளையும் அவர் தொடர்ந்து செய்துவந்தாலும் கூட தனது சேவையைப் பற்றி வெளியே தெரிவிக்காதவராக இருந்துவந்தார்.

அவரது நற்செயல்களை மவுனம் சூழ்ந்திருந்தது. ஆனால், அவரது குடும்பத்தினரும், நண்பர்களும், நலன் விரும்பிகளும் ஊக்குவித்ததின் அடிப்படையில் தற்போது அதை வெளிச்சத்துக்குக் கொண்டுவர விரும்புகிறார்.

தனது நற்செயல்களை வெளிப்படையாகக் கூறுவதன் மூலம் நல் உள்ளம் கொண்ட பலரையும் பெருந்தொற்று நெருக்கடியைக் கடக்க ஏழை, எளிய மக்களுக்கு உதவச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையில் அவர் இதனைச் செய்கிறார்.

#BeTheMiracle சேவையில் ராஷி, ரோடி பேங்க் (Roti Bank)
போன்ற பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

அதேபோல் விலங்குகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கும் அமைப்புகள், முதியோர் இல்லத்துக்கு உதவி செய்யும் அமைப்புகளுடனும் இணைந்து செயலாற்றி வருகிறார்.

இவ்வாறாக நற்பணிகள் பலவற்றையும் செய்ய தனது குடும்பத்தாரின் பங்களிப்பு நண்பர்கள், நலன் விரும்பிகளின் நிதியுதவி மட்டுமே போதுமானதாக இருக்காது என அவர் நினைக்கிறார்.

அவ்வாறு வரும் உதவிகள் சமுத்திரத்தில் சில துளிகள் போல் கரைந்துவிடுவதாகக் கருதுகிறார். இதற்காக நலத்திட்டங்களுக்கு மேலும் நிதி திரட்டும் வகையில், அவரின் குழுவினர் ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளனர்.

அதைப்பார்த்து நல்லுள்ளம் கொண்டோர் உதவிக்கரம் நீட்டக்கூடும் என எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில், தனது முயற்சி குறித்து ராஷி கன்னா கூறுகையில்…

“கரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து சாமான்ய மக்கள் படும்பாட்டைப் பார்க்க சகிக்கவில்லை.

#BeTheMiracle மூலம் நான் என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன்.

எனது குழுவினர் இந்த கொடூர நோயின் அச்சுறுத்தலுக்கு இடையேயும் வெளியே சென்று மக்கள் படும் இன்னல்களை காட்சிப்படுத்திக் கொண்டு வந்திருக்கின்றனர்.

நிறைய குடும்பங்கள் மிகவும் கொடுமையான சூழலில் இருக்கின்றன. கிட்டத்தட்ட பட்டினியால் வாடுகின்றன. இந்த வீடியோவைப் பார்த்து மக்கள் தங்களின் மனங்களைத் திறந்து உதவ வேண்டும் என விரும்புகிறேன்.

பெருந்தொகையைத் தான் கொடுக்க வேண்டுமென்பதில்லை. நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் நம்மை நெருக்கிக் கொண்டிருக்கும் இந்த கடின காலத்திலிருந்து விடுபடலாம்.

நாம் ஒன்றிணைந்தால் இல்லாதோர் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தலாம். ஒன்றுபடுவோம் வாருங்கள்” என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

Raashii Khanna’s initiative #BeTheMiracle provides food to the ones who have lost their livelihood

மாலை 5 வரை கடைகள் & பேருந்துகள் மதுக்கடைக்கு அனுமதி..; புதுச்சேரி -காரைக்காலில் ஊரடங்கு தளர்வுகள் முழு விவரம்

மாலை 5 வரை கடைகள் & பேருந்துகள் மதுக்கடைக்கு அனுமதி..; புதுச்சேரி -காரைக்காலில் ஊரடங்கு தளர்வுகள் முழு விவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக கொரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்து இருந்தது.

தற்போது கொரோனா பாதிப்பு 500க்கும் கீழ் குறைந்துள்ளது. அதேபோல பலி எண்ணிக்கையும் 20க்கு கீழ் குறைந்துள்ளது.

ஏற்கெனவே அமலில் உள்ள ஊரடல்கு இன்றுடன் (திங்கள்கிழமை) முடியவடையவுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி & காரைக்காலில் நாளை ஜூன் 8 முதல் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் முழு விவரம் இங்கே..

புதுச்சேரி காரைக்காலில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் : ஜூன் 7 முதல் ஜூன் 14 வரை

இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.

ஜூன் 8 முதல் அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி.

கடற்கரை சாலையில் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சிக்கு அனுமதி.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படலாம். பார்களுக்கு அனுமதியில்லை.

உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.

தனியார் நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 50% ஊழியர்களுடன் செயல்படலாம்.

பத்திரப்பதிவு & வாகனப் பதிவு உள்ளிட்ட அரசு அலுவலங்கள் அனைத்தும் இயங்கும்.

அனைத்து மத வழிப்பாட்டு தளங்கள் திறக்க அனுமதி.

ஆட்டோ டாக்ஸி தனியார் & அரசு பேருந்துகள் மாலை 5 மணி வரை இயங்கலாம். பூங்கா தியேட்டர்கள் நூலகங்கள் திறக்க அனுமதியில்லை.

பெட்ரோல் பங்குகள், ஏடிஎம்,இண்டர்நெட் & கேபிள் ஆப்ரேட்டர், மீடியா குடிநீர் & மின்முறை ஊழியர்கள் 24 மணி் நேரமும் செயல்பட அனுமதி.

திருமணத்தி்ல் 25 நபர்களுக்கும் மரண நிகழ்வுகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதி.

முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை எங்கும் கடைப்பிடித்தல் அவசியம்.

Covid 19 Lockdown relaxation in Puducherry and Karaikal updates

இளையராஜா மரணம்.. ரஜினியின் ‘காலா’ 3வது வருடம்.. மன உளைச்சலில் இயக்குனர் ரஞ்சித்

இளையராஜா மரணம்.. ரஜினியின் ‘காலா’ 3வது வருடம்.. மன உளைச்சலில் இயக்குனர் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தொற்றால் சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரையும் இழந்து வருகிறோம்.

இந்த நிலையில் ‘திராவிட பெண்கள்’ என்ற ஓவியங்கள் மூலம் பிரபலமானவர் ஓவியர் இளையராஜா. இவர் இன்று மே 7ஆம் தேதி கொரோனா தொற்றால் காலமானார்.

கொரானோ தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் மரணம் அடைந்தார்.

தனது அழகிய ஓவியங்களால் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர் இவர்.

அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் தன் இரங்கல் குறிப்பில்…

தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் திரு. இளையராஜா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!

கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்! https://t.co/1ssRWmzDjS

இந்த நிலையில் ஓவியர்இளையராஜா மறைவுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில்…

“பேரன்பு மிக்க அண்ணன் ஓவியர் இளையராஜா அவர்களின் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத தவிப்பையும், அடக்க முடியாத துயரத்தையும் தருகிறது. இந்த நோயின் கொடூரத்தை வெல்ல முடியாத சூழலை கண்டு பெரும் மன உளைச்சல் அடைகிறேன். ஆழ்ந்த இரங்கல்! https://t.co/8zj8MeT4Ie எனப் பதிவிட்டுள்ளார்.

இன்று மே 7ல் ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கிய ‘காலா’ படம் ரிலீசாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Director PA Ranjiths condolence message to artist ilayaraja

Artist Ilayaraja

மூக்கு வழியாக தடுப்பு மருந்து.. சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி..; பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை

மூக்கு வழியாக தடுப்பு மருந்து.. சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி..; பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாட்டு மக்களுக்கு இன்று மே 7 மாலை உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

அவர் பேசியவை…

கடந்த 100 ஆண்டுகளில் உலகம் சந்தித்திராத கொடூரமான வைரஸ் கொரோனா தான். இதுபோன்ற ஒரு பெருந்தொற்றை பார்த்ததில்லை.

கொரோனா 2ஆவது அலைக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. கொரோனா பெருந்தொற்றால் பிரியமான பலரை நாம் இழந்துள்ளோம்.

கொரோனாவைத் தடுக்க ஒரே பேராயுதம் தடுப்பூசி தான்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி பலரது உயிரையும் காப்பாற்றியுள்ளது.

நாட்டில், இதுவரை 23 கோடி டோஸ்களுக்கு அதிகமாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

மூக்கு வழியாக சொட்டு மருந்தாக செலுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் மேலும் 3 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்தும் தடுப்பூசிகளை பெற்று, மக்களுக்கு செலுத்த நடவடிக்கை.

ஜூன் 21ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும்.

மாநிலங்களுக்கு தேவையான 75% தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து விநியோகிக்கும்.

சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் வகையில், பரிசோதனைகள் தொடங்கியுள்ளது.

மொத்தம் 7 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Prime Minister Modi announces free vaccines to adults over the age of 18

மதுக்கடைகளை திறக்க போராடும் பிஜேபி MLA ஜான்குமார்.; வைரலாகும் ஆடியோ..! இவர்தான் மக்களை காப்பாற்றுவாரா.?

மதுக்கடைகளை திறக்க போராடும் பிஜேபி MLA ஜான்குமார்.; வைரலாகும் ஆடியோ..! இவர்தான் மக்களை காப்பாற்றுவாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய கடைகளான மளிகை & காய்கறி கடைகள் மட்டுமே திறக்க அனுமதியளிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி & காரைக்கால் பகுதிகளில் மதியம் வரை கடைகள் திறக்க அனுமதி அமலில் உள்ளது.

இவர்களும் மக்கள் மீது அக்கறையில்லாமல் வாய்க்கு வந்தபடி காய்கறிக்கு விலை சொல்லி ஏமாற்றுகின்றனர்.

ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. குழந்தைகள் தங்கள் படிக்கும் வகுப்பையே மறந்து விட்டனர்.

மேலும் சலூன், ஒர்க் ஷாப், வெல்டிங், தனியார் நிறுவன ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றை எல்லாம் நினைத்து கவலைப்படாமல் இதற்கெல்லாம் குரல் கொடுக்காமல் சரக்கடிக்காமல் ஒருவர் இறந்துவிட்டதாக கூறி மதுக்கடைகளை திறக்க ஆளுநரிடம் கோரிக்கை ஙைத்துள்ளார் புதுச்சேரி பிஜேபி எம்எல்ஏ ஜான்குமார். அவரின் ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

குடிக்காரர்கள் குடிக்கட்டும்.. குடித்து குடித்து செத்து கூட மடியட்டும். அதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை என கேட்பவர்களுக்கு… “சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

மதுக்கடைகளில் நிச்சயம் சமூக இடைவெளி என்பதே கிடையாது. இதனால் கொரோனா வைரஸ் எளிதாக பரவும்.

மது கடைக்கு மதுபிரியர்கள் சென்று வீட்டிற்கு திரும்ப வந்தால் அவர்களால் குடும்பத்தினருக்கு தொற்று ஏற்படும். இதனால் சின்ன சின்ன குழந்தைகள் வரை பாதிக்கப்படுவர்.

இதனால் சமூகம் முற்றிலும் பாதிக்கப்படக் கூடிய அபாயம் உருவாகும். எனவே தான் மதுக்கடைகள் திறக்கப்படவே கூடாது என்கிறோம்.

*ஜான்குமார் யார்.? ஒரு பார்வை..*

புதுச்சேரியில் கடந்த 2019-ம் ஆண்டு காமராஜர் நகர் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ ஜான்குமார், தனது சொத்துகளை மறைத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய குற்றத்திற்காக வழக்கும் இவர் மீது போடப்பட்டது.

2021 பிப்ரவரியில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஜான் குமார் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காங்கிரஸ் தலைமையிலான நாராயணசாமி ஆட்சி பெருன்பான்மை இழந்தது. ஆட்சி பறிபோனது.

தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்தார் ஜான்குமார்.

அவரும் 2021 சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்வதை விட மதுக்கடைகளை திறக்க ஆடியோ வெளியிட்டுள்ளார் இந்த எம்எல்ஏ ஜான்குமார். இதுவல்லவோ பொது நலம்..??

Pondy BJP MLA John Kumar controversy audio goes viral

More Articles
Follows