ஸ்ரீதேவி திடீர் மரணம்; நடிகர் சங்கம்-தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்

ஸ்ரீதேவி திடீர் மரணம்; நடிகர் சங்கம்-தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nadigar Sangam and Producers Council condolence to Sridevi deathபிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று துபாயில் மரணமடைந்தார். அவரது திடீர் மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

” புகழ் பெற்ற நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

பல்வேறு மொழிகளில் 300 -க்கும் அதிகமான படங்களில் கதாநாயகியாக நடித்து பல வருடங்களாக தனது புகழை நிலை நாட்டியவர் ஸ்ரீதேவி. சிறந்த தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்தவர்.

2013-ல் இந்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ ‘ பட்டம் அளித்து கௌரவித்தது. தனது இயல்பான நடிப்பு திறனால் ரசிகர்கள் மனதை கவர்ந்த அவரது திடீர் மரணம் , இந்திய திரைப்பட துறைக்கு ஈடு செய்ய இயலாத மாபெரும் இழப்பாகும்.

அவரது பிரிவால் துக்கத்தில் ஆழந்துள்ள அவரது குடும்பம் மற்றும் உறவினர்களுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், அனைத்து உறுப்பினர்களும் துக்கத்தில் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம் ”

என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று துபாயில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது .அதில் கூறியிருப்பதாவது…

” தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. இந்திய திரைவானில் தனது ஆளுமையை பல வருடங்களாக நிலை நாட்டியவர் ஸ்ரீதேவி.

தனது நான்காம் வயதில் ‘துணைவன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர் ஸ்ரீதேவி.

தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடத்து வந்த ஸ்ரீதேவி தனது பதிமூன்றாவது வயதில் ‘மூன்று முடிச்சு’ படத்தின் மூலமாக கதாநாயகியானார் .

தொடர்ந்து ஜெயசங்கர், சிவகுமார்,ரவிக்குமார், ரஜினி, கமல் மற்றும் மலையாளம், தெலுங்கு,கன்னட முன்னணி நடிகர்களின் கதாநாயகியாகவும் உலா வந்தார்.

1983- ல் ‘ஹிம்மத் வாலா’ ஹிந்தி திரை பிரவேசம் அவரை இந்திய திரைப்பட ரசிகர்களின் மனதில் ‘கனவுக்கன்னி’யாக குடியேற்றி உலகப்புகழ் தேடி தந்து. 1997 -ல் தற்காலிகமாக நடிப்பை நிறுத்தியவர் 2012-ல் ‘இங்கிலீஷ் விங்க்ளீஷ்’ படத்தில் நடித்து மீண்டும் நடிப்பை தொடர்ந்து தனது ஆளுமை செலுத்தினார்.

2013-ல் இந்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ ‘ பட்டம் அளித்து கௌரவித்தது. தனி மனித வாழ்கையில் சோதனைகள் தாய் தந்தையரின் இழப்பு என்ற இன்னல்களையும் வேதனைகளயும் தாண்டி மன உறுதியாலும் உழைப்பாலும் உட்ச நட்சத்திர நாயகியாக திகழ்ந்து தனக்கு பின்னால் வந்த நடிகைகளுக்கு மார்கதர்சியனவர் ஸ்ரீதேவி.

மாபெரும் கலைஞரான அவரது மறைவு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், இந்திய திரைப்பட துறைக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அவரது பிரிவால் துக்கத்தில் ஆழந்துள்ள அவரது குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்களுடன் துக்கம் பகிர்ந்து கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் M.நாசர், துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், பொதுசெயலாளர் விஷால், பொருளாளர் Si.கார்த்தி , அறங்காவலர்கள், செயற்குழு உறுப்பினர்கள் , நியமன செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீர் அஞ்சலியையும் செலுத்துவதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ”

இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Nadigar Sangam and Producers Council condolence to Sridevi death

ஜெயலலிதா மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருந்தது இன்றும் நினைவில் உள்ளது; சிவகுமார் இரங்கல்

ஜெயலலிதா மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருந்தது இன்றும் நினைவில் உள்ளது; சிவகுமார் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jaya sridevi

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார்.

திரையுலகின் இந்த பேரிழப்புக்கு நடிகர் சிவக்குமார் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது…

குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பெரிய ஹீரோ, ஹீரோயினாக தமிழில் நமக்கு தெரிந்த இரண்டு பேர் கமல்ஹாசன், ஸ்ரீ தேவி.

ஆதிபராசக்தி படத்தில் ஜெயலலிதா அம்மையார் மடியில் முருகர் வேடம் இட்டுக் கொண்டு நடிகை ஸ்ரீ தேவி அமர்ந்திருந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவிரிக்கிறது.

16வயதினிலே மயிலை தமிழ் ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது அதன் பிறகு மூன்று முடிச்சு, வறுமையின் நிறம் சிகப்பு என்று பல ஹிட் படங்களில் நடித்தார்கள்.

நானும் ஸ்ரீதேவியும் கவிகுயில், மச்சான பார்த்திங்களா , சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்று மூன்று படங்களில் ஒன்றாக நடித்தோம்.

ஹிந்தியில் உச்சம் தொட்ட நடிகை சிவகாசி பக்கம் அவரின் பூர்விகம். இவ்வளவு சீக்கிரம் அவரின் வாழ்கை முடியும் என்று யாரும் கற்பனை கூட பண்ணி இருக்க மாட்டார்கள். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

இவ்வாறு சிவகுமார் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Indian Cinema icon Sridevi dies of heart attack Sivakumar condolences

ஸ்ரீதேவி மரணத்தையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமை… கமல் இரங்கல்

ஸ்ரீதேவி மரணத்தையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமை… கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal srideviதமிழ், இந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு துபாயில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர் ஈபிஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..

“மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது.

இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான்.

இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார்.

Sridevis stardom was well deserved says KamalHaasan

sridevi death kamal

அன்பான தோழி ஸ்ரீதேவியை இழந்துவிட்டேன்… ரஜினி இரங்கல்

அன்பான தோழி ஸ்ரீதேவியை இழந்துவிட்டேன்… ரஜினி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sridevi passes away Rajinikanth condolencesஇந்திய சினிமாவை தன் நடிப்பால் கட்டிப்போட்ட பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்தார்.

குழந்தை நட்சத்திரமாக துணைவன் என்ற படத்தில் நடித்தார்.

அதன்பின்னர் பல படங்களை தொடர்ந்து இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

’16 வயதினிலே’ மயிலாக பாரதிராஜாவால் உச்சம் பெற்றுத் தமிழ் ரசிகர்களின் கனவுகளை ஆக்கிரமித்தவர்.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது..

“நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். எனது அன்பான தோழியை இழந்துவிட்டேன். திரைத்துறை ஒரு உண்மையான நடிகையை இழந்துவிட்டது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினரின் வலியை நான் உணர்கிறேன். உங்களை இழந்துவிட்டோம் ஸ்ரீதேவி” என்று வேதனையோடு ட்வீட் செய்துள்ளார்.

மேலும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Sridevi passes away Rajinikanth condolences

I’m shocked and very disturbed. I’ve lost a dear friend and the industry has lost a true legend. My heart goes out to her family and friends. I feel the pain with them #RIPSridev … you will be missed.
— Rajinikanth (@superstarrajini) 25 February 2018

நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார்

நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lady SuperStar Actress Sridevi passed awayதமிழில் அறிமுகமாகி இந்தியில் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார்.

நேற்று இரவு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்றார்.

இரவு 11.30 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிவகாசியை சொந்த ஊராக கொண்டவர் ஸ்ரீதேவி (54). இவர் 4 வயதிலேயே திரைப்படத்துறையில் நுழைந்தவர்.

தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார்.

தமிழில் 16 வயதினிலே, மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், தமிழ் திரைப்பட உலகில் கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்.

அண்மையில் அஜித்துடன் இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்திலும் விஜய்யுடன் புலி என்ற படத்திலும் இணைந்து நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அவர் நடித்த மாம் திரைப்படம் வெளியானது.

இவர் 2013-ம் ஆண்டில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

மேலும், இவர் பிலிம்பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்துக்காக தமிழக அரசின் விருது என பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்..

இவருக்கு போனி கபூர் என்ற கணவரும், ஜானவி மற்றும் குஷி என இரண்டு மகள்களும் உள்ளனர்.

Lady SuperStar Actress Sridevi passed away

அஜித் பிறந்தநாளில் ஆர்.கே.சுரேஷ் வைக்கும் அதிரடி விருந்து

அஜித் பிறந்தநாளில் ஆர்.கே.சுரேஷ் வைக்கும் அதிரடி விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

billa pandiநடிகர் அஜித்துக்கு சினிமாவுலகிலும் பல நடிகர்கள் ரசிகர்களாக உள்ளனர்.

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அவர்கள் ஒரு படத்தில் அஜித் ரசிகராக நடித்து வருகிறார்.

பில்லா பாண்டி என்று இப்படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.

இந்லையில் எங்க குல தங்கம், எங்க தல சிங்கம் என்று தொடங்கும் ஒரு பாடலை மட்டும் அஜித் பிறந்தநாளில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

கல்யாண் மாஸ்டர் நடனம் அமைக்கும் இந்த பாடலுக்காக சுமார் 300 அஜித் பேனர்கள், கட் அவுட்டுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த பாடலின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது

ஆர்.கே.சுரேஷ், இந்துஜா, யோகிபாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சரவணஷக்தி இயக்கி வருகிறார்.

இளையவன் இசையில் ஜீவன் ஒளிப்பதிவில் ராஜாமுகமது படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.

More Articles
Follows