முதன்முறையாக சிம்புக்காக பாடிய இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்

முதன்முறையாக சிம்புக்காக பாடிய இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu Leon jamesசந்தானம் ஹீரோவாக நடிக்கும் சக்க போடு போடு ராஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சிம்பு.

இப்படத்தில் இடம் பெறும் பாடல்களை பல பிரபலங்கள் பாட இசையமைத்து வருகிறார் சிம்பு.

சிம்புவின் பெற்றோர் டி.ஆர்., உஷா ராஜேந்தர் மற்றும் யுவன் சங்கர் ராஜா பாட, இன்று அப்பாடலை சிம்பு ரிக்கார்டிங் செய்திருக்கிறார்.

தற்போது இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் அவர்களும் இதில் பாடியுள்ளாராம்.

அவர் மற்ற இசையமைப்பாளர் இசையில் பாடுவது இதுதான் முதல்முறையாம்.

உனக்காக… உனக்காக… என்று தொடங்கும் இப்பாடலை அண்மையில் ரிகார்ட்டிங் செய்ததாக சிம்பு தன் ட்விட்டர் தெரிவித்துள்ளார்.

கோ2, கவலை வேண்டாம் ஆகிய படங்களை தொடர்ந்து வீரா படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Music Director Leon James sung song in Simbus Music in Sakka Podu Podu Raja

#UnakaagaUnakaaga for #SakkaPoduPoduRaja young and talented @leon_james Fresh & peculiar voice timbre . Hope u all like it  God bless .

Leon James‏Verified account @leon_james 1m1 minute ago
Just sang on a killer track for @iam_str .First time singing for someone else! Scary yet exciting! Thanks for making it a joyful session sir

அஜித் கேரக்டர் என்றாலும் கெட்டப் சேஞ்ச் செய்ய மறுத்த பவர் ஸ்டார்

அஜித் கேரக்டர் என்றாலும் கெட்டப் சேஞ்ச் செய்ய மறுத்த பவர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

katamarayuduசிவா இயக்கத்தில் அஜித் நடித்த மாபெரும் ஹிட்டடித்த படம் வீரம்.

இதில் தமன்னா நாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் “கட்டமராயுடு” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இப்படம் அடுத்த வாரம் மார்ச் 24ஆம் தேதி வெளியாக உள்ளது.

கிஷோர் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் பவன் கல்யாண், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் ஒரிஜினல் படத்தில் அஜித் வயதான கெட்டப்பில் நரைத்த தலையுடன் நடித்திருப்பார்.

ஆனால் தெலுங்கில் வயதான கெட்டப் இல்லாமல் கருப்பு தலை முடியுடனே நடித்துள்ளாராம் இந்த பவர் ஸ்டார்.

ரீமேக் படம் என்றாலும் தமிழ்நாட்டிலும் 100-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

In Veeram Telugu remake Pawan Kalyan not changed get up like Ajith

Katamarayudu movie stills

pawan shruthi

விவேகம் பர்ஸ்ட் லுக்குக்கே ரீமேக் கன்பார்ம்; அதான் தல அஜித்

விவேகம் பர்ஸ்ட் லுக்குக்கே ரீமேக் கன்பார்ம்; அதான் தல அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam ajithஅஜித் நடித்த வீரம் மற்றும் வேதாளம் ஆகிய படங்களை சிவா இயக்கிருந்தார்.

இந்த இரு படங்களும் மாபெரும் வெற்றிப் பெற்றது.

இதனையடுத்து இந்த இரு படங்களும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

வீரம் ரீமேக் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகிறது. வேதாளம் ரீமேக் உருவாகி வருகிறது.

இதில் இரண்டிலும் தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாணே நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அஜித் நடிப்பில் உருவாகிவரும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியாகியுள்ளது.

படம் ஆகஸ்ட் மாதம்தான் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வரும் நிலையில், விவேகம் படத்தையும் தெலுங்கில் ரீமேக் செய்யவிருக்கிறார்களாம்.

இதிலும் பவன்கல்யாணே நாயகனாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், ரீமேக் உறுதி செய்யப்பட்டது அஜித் படமாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Not released Vivegam movie will be remake in Telugu

படத்தலைப்பில் ரஜினி-விஜய் இருவரையும் கனெக்ட் செய்யும் அட்லி?

படத்தலைப்பில் ரஜினி-விஜய் இருவரையும் கனெக்ட் செய்யும் அட்லி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay atleeஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு தளபதி என்றே பெயரை படக்குழு தேர்வு செய்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் ரஜினிகாந்த்-மம்மூட்டி நடித்திருந்தனர். இப்படம் 1991 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

மேலும் விஜய்யை ரசிகர்கள் தளபதி என்று அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

எனவே தளபதி என்று பெயர் பொருத்தமாக இருப்பதாக படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Rajinis hit movie Thalapathy may be title for vijay 61

ரஜினி-தனுஷ் கூட்டணியில் வித்யாபாலனுக்கு பதிலாக பிரபல நடிகை

ரஜினி-தனுஷ் கூட்டணியில் வித்யாபாலனுக்கு பதிலாக பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini deepika padukoneகபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார் ரஞ்சித்.

இப்படத்தை தனுஷ் தன் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கவிருக்கிறார் என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இப்படத்தில் நாயகியாக வித்யாபாலன் நடிக்கக்கூடும் என தகவல்கள் வந்தன.

ஆனால் தற்போது தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ஜோடி ஏற்கெனவே சௌந்தர்யா ரஜினி இயக்கிய கோச்சடையான் படத்தில் இணைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

விரைவில் இதன் சூட்டிங் தொடங்கவிருக்கிறது.

Deepika Padukone likely to join in Rajini Dhanush Ranjith Project

deepikarajinikanth

‘வாரணம் ஆயிரம் பட வரிசையில் கடுகு இருக்கும்..’ சூர்யா நெகிழ்ச்சி

‘வாரணம் ஆயிரம் பட வரிசையில் கடுகு இருக்கும்..’ சூர்யா நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor suriyaஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கி தயாரித்துள்ள படம் கடுகு.

இதில் டைரக்டரும் நடிகை தேவயாணியின் கணவருமான ராஜகுமாரன் நாயகனாக நடித்துள்ளார்.

முக்கிய கேரக்டரில் பரத், சுபிக்ஷா மற்றும் ஏ.வெங்கடேஷ் நடித்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள சூர்யா, இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது பேசும்போது…

நிறைய படங்களில் நாம் பணிபுரிந்தாலும் சில படங்கள் நம் மனசுக்கு பிடித்த படமாக இருக்கும்.

கதாபாத்திரத்தை முன் வைத்து கதை சொல்வது எனக்கு பிடிக்கும்.

அப்படி சொன்னால் எனக்கு உடனே ஈர்ப்பு வரும். அப்படித்தான் நந்தா. வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்தேன்.

தற்போது இந்த கடுகு படமும் நிச்சயம் அந்த வரிசையில் சேரும்.

படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

More Articles
Follows