Mr. இந்தியா பட்டம் வென்ற தமிழர்..; கோலிவுட்டில் அறிமுகமாகும் கோபிநாத் ரவி

Mr. இந்தியா பட்டம் வென்ற தமிழர்..; கோலிவுட்டில் அறிமுகமாகும் கோபிநாத் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gopinath Raviசென்னையை சேர்ந்த கோபிநாத்ரவி என்ற இளைஞர், மிஸ்டர்.இந்தியா பட்டத்தை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தேசிய அளவிலான மிஸ்டர். இந்தியா பட்டத்திற்கான போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 34 இளைஞர்கள் கலந்துக் கொண்டார்கள்.

இந்த போட்டி கோபிநாத்ரவி மிஸ்டர்.இந்தியா பட்டத்தை வென்றதோடு, ‘பீப்ள்ஸ் சாய்ஸ்’, அதாவது மக்களின் தேர்வு என்ற மாபெரும் விருதையும் வென்றார்.

இதுவரை தென்னிந்தியாவில் யாரும் வென்றிடாத இந்த படத்தை வென்ற கோபிநாத்ரவி திற்கு தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் வட்டம் உருவாகியுள்ளது.

குறிப்பாக அவர் தமிழர் என்பதால், அவருக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். இதனால், அவருடைய சோசியல் மீடியா பக்கங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இப்படி சோசியல் மீடியாவில் பிரபலமாகியுள்ள மிஸ்டர்.இந்தியா கோபிநாத்ரவி வை தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் நம்மிடம் அவருடைய மாடலிங் துறை மற்றும் மிஸ்டர் இந்தியா போட்டியின் அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார்.

கல்லூரி காலத்திலேயே எனக்கு மாடலிங் துறை மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இருப்பினும், படிப்பிலும் கவனம் செலுத்திக் கொண்டு மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வந்தேன்.

அதனால், அது தொடர்பான விஷயங்களை அறிந்துக் கொள்வதோடு, அதற்காக என்னை தயாரிப்படுத்தியும் வந்தேன். அப்போதே, மிஸ்டர்.சவுத், மிஸ்டர்.இந்துஸ்தான் போன்ற சில போட்டிகளில் கலந்துக் கொண்டு பட்டம் வென்றதோடு, பேஷன் ஷோக்களில் ரேம்ப் வாக் உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வந்தேன்.

பிறகு தான் மிஸ்டர்.இந்தியா போட்டி பற்றி அறிந்து அதில் கலந்துக் கொள்வதற்காக என்னை தயாரிப்படுத்தி வந்தேன்.

கோவாவில் நடைபெற்ற போட்டியில் கலந்துக் கொண்ட பிறகு தான் தெரிந்தது, இந்த பட்டத்தை இதுவரை தென்னிந்தியாவில் இருந்து யாரும் வென்றதில்லை என்று. அதனால், எப்படியாவது பட்டத்தை வெல்ல வேண்டும் என்று கடுமையாக உழைத்தேன், இறுதியில் அதற்கான பலன் கிடைத்ததோடு, மக்களின் அங்கீகாரமும் கிடைத்துவிட்டது, என்று மகிழ்ச்சியோடு கூறியவரிடம், அடுத்த திட்டம் என்ன? என்று கேட்டதற்கு,

அடுத்ததாக சர்வதேச அளவிலான பட்டத்தை வெல்ல வேண்டும். அதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

அமெரிக்காவில் உள்ள பிளோரிடாவில் ‘மாஸ்டர்ஸ் ஆஃப் மிஸ்டர்ஸ்’ என்ற தலைப்பில் நடைபெறும் அப்போட்டியில் கலந்துக் கொண்டு பட்டம் வெல்ல வேண்டும், என்பது எனது அடுத்த லட்சியம், என்றார்.

மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் வருமே, உங்களுக்கு எப்படி? என்று கேட்டதற்கு, நிஜம் தான், நான் மாடலிங் துறையில் இருக்கும் போது எனக்கும் சினிமா வாய்ப்புகள் வந்தது.

அதன்படி, பிரபுதேவா ஹீரோவாக நடித்திருக்கும் ‘பகிரா’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்தது. சிறிய வேடமாக இருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால் நடித்தேன்.

அப்படத்தை தொடர்ந்து மேலும், மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது, அதற்கான பேச்சு வார்த்தை போய்க் கொண்டிருக்கிறது, என்றார்.

உங்களுக்கு சோசியல் மீடியாவில் அதிகமான ரசிகர்கள் இருப்பதோடு, அவர்கள் உங்களை பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு சொல்கிறார்களே, அதுபற்றி..

ஆமாம், என் ரசிகர்கள் அவ்வபோது என்னை பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க சொல்கிறார்கள். அவர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தியை சொல்ல போகிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட மிகப்பெரிய அளவில் முன்னணி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்க இருக்கிறது.

அதில், நான் போட்டியாளராக பங்கேற்க இருக்கிறேன். இதுவரை எந்த ஒரு தமிழ் தொலைக்காட்சியும் ஒளிபரப்பாத நிகழ்ச்சியாக அந்த நிகழ்ச்சி இருப்பதோடு, அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க வெளிநாட்டில் யாரும் எதிர்ப்பார்க்காத இடங்களில் நடக்க இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சி என் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, தொலைக்காட்சி உலகிற்கே மிகப்பெரிய் ஆச்சரியத்தை அளிக்கும், என்று உற்சாகத்தோடு தெரிவித்தார்.

மாடலிங் துறையில் சாதித்துக் காட்டிய கோபிநாத்ரவி , சினிமாத்துறையில் நடிகனாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சினிமாவுக்காக நடிப்பு பயிற்சி உள்ளிட்டவைகளை மேற்கொண்டு தன்னை தயாரிப்படுத்தி வருகிறார்.

தற்போது சில திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஒன்றில் ஹீரோவாக நடிப்பதற்கான பேச்சு வார்த்தையை தொடங்கியிருப்பவர், விரைவில் அவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.

Mr India title winner turns hero

மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல்… சிக்கலில் சிவகார்த்திகேயன்.!

மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல்… சிக்கலில் சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

எனவே கோலிவுட் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது பல படங்களின் ஓடிடி ரிலீஸ் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி நடித்துள்ள ‘நரகாசூரன்’, மணிகண்டன் இயக்கி விஜய்சேதுபதி நடித்துள்ள ‘கடைசி விவசாயி’, நயன்தாரா நடித்துள்ள ‘நெற்றிக்கண்’, ஹன்சிகா நடித்துள்ள ‘மஹா’, பாரதிராஜா நடித்துள்ள ‘ராக்கி’, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் பிரபு இயக்கியுள்ள ‘வாழ்’ ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தான் தயாரித்து நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தை ஓடிடியில் வெளியிட சிவகார்த்திகேயன் ஆர்வம் காட்டினாலும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஏற்கெனவே சன் டிவி நிறுவனத்திற்கு விற்று விட்டார்.

இதனால் ‘டாக்டர்’ படத்தை பெரிய தொகைக்கு வாங்க ஓடிடி நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றனவாம்.

தியேட்டர்கள் திறக்க 3 மாதங்கள் கூட ஆகலாம். அதுவரை என்ன செய்வது? என தெரியாமல் கதாநாயகன் கலங்கி நிற்கிறாராம்.

Actor Sivakarthikeyan in trouble ?

விஜய்யின் சூப்பர் ஹிட் பட ஹிந்தி ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்

விஜய்யின் சூப்பர் ஹிட் பட ஹிந்தி ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

salman khanஒரு பக்கம் ஹிந்தி மலையாளம் தெலுங்கு படங்கள் தமிழில் ரீமேக்காகி வருகின்றன.

அதே சமயம் தென்னிந்திய படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்யவும் பலத்த போட்டிகள் அவ்வப்போது ஏற்படும்.

அதுவும் தமிழில் ஹிட்டான படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருபவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான்.

இத்துடன் இவர் தமிழ் இயக்குனர் பிரபு தேவா இயக்கத்தில் நடிக்க அதிக ஆர்வமாக இருப்பார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் & விஜய்சேதுபதி நடித்து வெளியான ‘மாஸ்டர்’ பட ஹிந்தி ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம் சல்மான்.

இந்த படத்தை ஏற்கெனவே தெலுங்கு, ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.

இருந்தபோதிலும் தற்போது ‘மாஸ்டர்’ பட ஹிந்தி ரீமேக் உருவாகவுள்ளதாம்.

விஜய் கேரக்டரில் சல்மான் கானை நடிக்க அணுகியுள்ளனர் எனவும் விஜய் சேதுபதி கேரக்டரில் மற்றொரு முன்னணி பாலிவுட் ஹீரோவை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தைகள் நடக்கிறதாம்.

Salman Khan to star in the Hindi remake of Vijay’s Master

ஆதிவாசி குடும்பங்களுக்கு நடிகர் ராணா கொரோனா கால நிவாரண உதவி

ஆதிவாசி குடும்பங்களுக்கு நடிகர் ராணா கொரோனா கால நிவாரண உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rana daggubatiதெலுங்கில் மிக பிரபலமானவர் நடிகர்
ராணா டகுபதி.

‘பாகுபலி’ படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார்.

தமிழில் “பெங்களூர் டேய்ஸ்“, “ஆரம்பம்” திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

சமீபத்தில் வெளியான பிரபு சாலமனின் “காடன்” திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் தெலுங்கானாவில் உள்ள நிர்மல் மாவட்டத்தைச் சேர்ந்த 400 ஆதிவாசி குடும்பங்களுக்குத் தேவையான அத்யாவசியப் பொருட்களையும் மருந்து பொருட்களையும் கொரோனா கால நிவாரண பொருட்களாக வழங்கி உள்ளார் நடிகர் ராணா.

Actor Rana Daggubati Helps 400 Tribal Families Of Nirmal District During COVID-19 Pandemic

இண்டர்நெட் யூஸ் பண்ணாதவங்க உயிர் வாழ வேண்டாமா.? மோடிக்கு ராகுல் சரியான கேள்வி

இண்டர்நெட் யூஸ் பண்ணாதவங்க உயிர் வாழ வேண்டாமா.? மோடிக்கு ராகுல் சரியான கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

modi rahul gandhi18 வயது முதல் 45 வயதுக்குள் உட்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

பொதுமக்கள் பலரும் முன் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.

கிராமப்புற மற்றும் நகரப்புறங்களிலும் கூட இண்டர்நெட் பயன்படுத்தாதவர்கள் ஆண்ட்ராய்டு போன் இல்லாதவர்கள் பலர் உள்ளனர்.

இதை எல்லாம் குறித்து கவலைப்படாத புரிந்துக் கொள்ளாத அரசாங்கம் COWIN இணைய தளத்தில் பதிவு செய்தால் மட்டுமே தடுப்பூசி போடப்படும் என உத்தரவிட்டுள்ளது்

இதுகுறித்து ராகுல் காந்தி தன் டிவிட்டர் பக்கத்தில்..

“தடுப்பூசிக்கு இணையதளப் பதிவு தேவையற்றது. இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளது.

கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கோவின் இணையதளப் பதிவைக் கட்டாயமாக்கக் கூடாது. தடுப்பூசி மையம் வரும் அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும்.”

இவ்வாறு ராகுல் காந்தி மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

Rahul Gandhi slams PM Modi

அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகள் & அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஆபத்து.; தமிழக அரசு அதிரடி மூவ்

அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகள் & அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஆபத்து.; தமிழக அரசு அதிரடி மூவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mk stalin (7)தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக தொடக்கக் கல்வி இயக்குநர் பிறப்பித்துள்ள அறிக்கை உத்தரவில்…

“தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும், அரசு நிதியுதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், சுயநிதியில் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் இளம் மழலையர் பள்ளிகள் ஆகியவை சார்பாக தொடக்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் சார்பாக விவரங்களை அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அங்கீகாரம் பெறுவதற்குரிய முழுமையான வடிவில் கருத்துரு அளிக்க இயலாத பள்ளிகளை உடனடியாக இக்கல்வி ஆண்டுடன் மூடுதல் சார்ந்து உரிய விதிமுறைகளின்படி அப்பள்ளியில் பயலும் மாணவ, மாணவிகளை வேறு பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துவக்க அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் அனைத்து இளம் மழலையர் பள்ளிகள், நர்சரி மற்றும் பள்ளிகள், சுயநிதி தொடக்க, நடுநிலை பள்ளிகள், உதவிபெறும் தொடக்கநிலை பள்ளிகளை மூடுதல் சார்ந்து விதிமுறைகளின்படி, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

துவக்க அங்கீகாரம், தொடர் அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்படுமானால் , வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரே பொறுப்பேற்க நேரிடும்.

எனவே, அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது பள்ளி வாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரத்தினை ஜூன் 20க்குள் இவ்வியக்கத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.”

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN govt ordered to shut schools without recognition

More Articles
Follows