இரண்டு மெர்சல் போஸ்டர்களும் விவேகத்தை வீழ்த்தியது

இரண்டு மெர்சல் போஸ்டர்களும் விவேகத்தை வீழ்த்தியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam mersal ajith vijayஅட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் ‘மெர்சல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

நடிகர் விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் (https://twitter.com/actorvijay) நேற்று மாலை 6 மணிக்கு ட்வீட் செய்யப்பட்டது.

அப்போஸ்டர் கொண்ட ட்வீட்டை, சுமார் 40,000-க்கும் அதிகமானோர் ரீ-ட்வீட் செய்துள்ளார்கள்.

இதுபோல் கடந்த பிப்ரவரி மாதம் இயக்குநர் சிவா வெளியிட்ட அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சுமார் 31,000-க்கும் அதிகமானோர் ரீ-ட்வீட் செய்திருந்தனர்.

தற்போது விவேகத்தை முறியடித்து மெர்சல் கலக்கி வருகிறது.

மேலும் மெர்சல் படத்தின் 2வது போஸ்டரும் 30,000 ரீட்வீட்டை கடந்து வருகிறது.

இதுவும் விவேகம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சாதனை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. (இன்னும் சில நேரங்களில் இந்த சாதனை நிகழும்)

இவையில்லாமல் மெர்சல் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பக்கத்திலும் ரீட்விட்டுக்கள் அதிகம் உள்ளன.

VIVEGAM…..sai sai…. pic.twitter.com/Mk7D5UWrtZ
— siva+director (@directorsiva) February 1, 2017

Mersal first look posters beat Vivegam record

அஜித் இல்லேன்னா சிம்பு; AAA படத்தின் அமர்க்களம் ஆரம்பம்

அஜித் இல்லேன்னா சிம்பு; AAA படத்தின் அமர்க்களம் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kasi theatreசென்னையில் பல மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்கள் இருந்தாலும் ஒரு படத்தின் வெற்றியை பல்ஸ் பார்ப்பதில் முக்கியமான தியேட்டர் காசி.

கடந்த ஒரு சில மாதங்களாக இத்தியேட்டர் மூடப்பட்டு, புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.

இந்த பணிகள் முடிந்தவுடன் அஜித் நடித்துள்ள விவேகம் படத்தை திரையிடவிருந்தனர்.

தற்போது பணிகள் முடிவடைந்து விட்டது.

ஆனால் ஆகஸ்ட்டில் விவேகம் ரிலீஸ் என செய்திகள் வந்தாலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.

எனவே அஜித்துக்கு காத்திருக்காமல் நாளை முதல் சிம்புவின் AAA படத்தை திரையிடவிருக்கிறார்களாம்.

இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Chennai Kasi theater release AAA movie after renovation

kasi theatre full view

மெர்சல்-டைட்டிலில் இவ்வளவு மேட்டரா..? அட்லியே அசந்துடுவாரோ!

மெர்சல்-டைட்டிலில் இவ்வளவு மேட்டரா..? அட்லியே அசந்துடுவாரோ!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal movie stillsவிஜய் பிறந்தநாளை முன்னிட்டு, ஜீன் 21ஆம் தேதி மாலை அட்லி இயக்கியுள்ள விஜய் படத்திற்கு மெர்சல் என்ற டைட்டில் வெளியானது.

அதனையடுதுது ஜீன் 22ஆம் தேதி நள்ளிரவில் மெர்சல் படத்தின் 2வது போஸ்டர் வெளியானது.

முதலில் மெர்சல் என்றால் என்ன என்பதை சொல்லிவிடுகிறோம். இது வட சென்னை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் சொல்.

மெர்சல் என்றால், அசந்துட்டேன். இன்ப அதிர்ச்சி. மயங்கிட்டேன் என்று அவர்கள் சொல்கிறார்கள். இதனையடுத்து ஐ படத்தில் மெர்சலாயிட்டேன் என்ற பாடல் வந்து அந்த வார்த்தை பிரபலமாகியது.

தற்போது இதை தலைப்பாக வைத்துள்ளனர். இப்படத்திற்கு அட்லி எந்த காரணத்தால் மெர்சல் என்று பெயர் வைத்தாரோ? தெரியாது.

ஆனால் ரசிகர்கள் பல காரணங்களை சொல்லி வருகின்றனர்.

மெர் என்பது மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை குறிக்கிறது.

சல்… மீத்தேன் போராட்ட பகுதியான நெடுவாசல் வார்த்தையின் கடைசி இரண்டு எழுத்து என்கின்றனர்.

மேலும் மெர்சல் என்ற டிசைன் எழுத்து, ஜல்லிக்கட்டு காளை கொம்பு மற்றும் வாலை குறிக்கிறது.

அதில் உள்ள இரண்டு எழுத்துக்களை மட்டும் பார்த்தால் 61 என்ற நம்பர் தெரிகிறது. (இது விஜய்யின் 61வது படம் என்பது குறிப்பிடத்தக்கது)

அந்த எழுத்துக்களை தலை கீழாக பார்த்தால் விஜய் என்ற ஆங்கில எழுத்துக்கள் தெரியும் என்கின்றனர்.

இதையெல்லாம் கேட்டால் விஜய்-அட்லியே அசந்துடுவாங்களே பாஸ்

Here is the reason Why Atlee titled Mersal for Vijay movie

‘மற்றொரு தாய் தந்த என் அண்ணன்…’ விஜய்க்கு சாந்தனு வாழ்த்து

‘மற்றொரு தாய் தந்த என் அண்ணன்…’ விஜய்க்கு சாந்தனு வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay shanthanu 1st photoதளபதி விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இணையதளம் முழுவதும் அவரது படங்கள் மற்றும் செய்திகளே இன்று அதிகம் இடம் பெற்று வருகின்றன.

இந்நிலையில், விஜய்யின் தீவிர ரசிகரும் நடிகருமான சாந்தனு பாக்யராஜ், நடிகர் விஜய்க்கு தன் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் விஜய்யுடன் எடுத்துக் கொண்டு முதல் படத்தை பதிவிட்டு விஜய்யை வாழ்த்தியுள்ளார்.

மற்றொரு தாய் தந்த என் அண்ணன் விஜய் என வாழ்த்தியுள்ளார்.

Shanthnu Buddy‏Verified account @imKBRshanthnu 14h14 hours ago
Brother frm another Mother ஒரு ரசிகராய் ஆரம்பித்து,உடன்பிரா சகோதரர் ஆகிய @actorvijay அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Actor Shanthnu said Vijay is my brother from another mother

விஜய் 61 பட டைட்டில்-பர்ஸ்ட் லுக் வெளியானது

விஜய் 61 பட டைட்டில்-பர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal first lookஅட்லி இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்து வரும் படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை.

இப்படத்திற்கு பாகுபலி புகழ் விஜேயேந்திர பிரசாத் கதை எழுத, ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோஸ் தயாரித்து வருகிறது.

இதில் விஜய்யுடன் சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜேசூர்யா, கோவை சரளா, யோகிபாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

நாயகிகளாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்திற்கு தற்போது மெர்சல் என பெயரிட்டு அதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இது விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானதால், இதை ரசிகர்களிள் அதிக ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

‘பரஞ்சோதி’ டூ ‘பரமன்’ சௌந்தரராஜா ரொம்ப ஹேப்பி

‘பரஞ்சோதி’ டூ ‘பரமன்’ சௌந்தரராஜா ரொம்ப ஹேப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundhar raja‘சுந்தரபாண்டியன்’ படத்தில் சசிக்குமாரின் நண்பராக அறிமுகம் ஆனவர் நடிகர் சௌந்தரராஜா.

அதன்பின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜிகர்தண்டா’ என வலம் வந்தவருக்கு, காமெடி மன்னன் கவுண்டமணியுடன் நடித்த, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, திரைப்படம் கதாநாயகன் புரமோஷன் கொடுத்தது.

சௌந்தர ராஜா இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் திரைப்படம், ‘ஒரு கனவு போல’ வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. அதற்கு முன்னால் சௌந்தர ராஜா வில்லனாக நடித்திருக்கும், ‘தங்க ரதம்’ திரைப்படம் வெளியாகி அவருக்கு பெரு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

இது பற்றி சௌந்தர ராஜா கூறுகையில், ‘இப்போது வெளியாகியுள்ள ‘தங்க ரதம்’ படத்தில் கதாநாயகியின் அண்ணனாக வில்லனாக நடித்திருக்கிறேன்.

படம் பார்த்த சினிமாத்துறை நண்பர்களும், பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்களும் மற்றும் பொதுமக்களும் என் தோற்றம் மற்றும் நடிப்பு மிக சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். மிக மிக சந்தோஷமாக இருக்கிறேன். ‘தங்க ரதம்’ இயக்குநர் பாலமுருகன் மற்றும் படக்குழுவிற்கு என் நன்றி.
என்ஜினியரிங் படித்த நான் வெளிநாட்டு வேலைகளை விட்டுவிட்டுத்தான் சினிமாவிற்கு வந்தேன்.

அதனால் எந்த இமேஜும் வைத்துக்கொள்ளாமல் கிடைத்த கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்தேன். என் முகம் ஓரளவுக்கு அனைவருக்கும் தெரிந்தபின் தேர்ந்தெடுத்து நடிக்கலாம் என்று நினைத்தேன்.
இப்போது ஓரளவு அனைவருக்கும் பரிச்சயமான நடிகனாக இருக்கிறேன் என்று நம்புகிறேன்.

‘தங்க ரதம்’ படத்தில் என் நடிப்பிற்கு கிடைத்துள்ள பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்திருக்கிறது. அந்த உற்சாகம் இனிமேல் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆர்வத்தை தந்திருக்கிறது.

“பரஞ்சோதி”யாக சுந்தரபாண்டியனில் ஆரம்பித்த என் பயணம், “பரமனாக” ‘தங்க ரதம்’ படத்தில் வளர்ந்திருக்கிறது என்று நம்புகிறேன். மகிழ்கிறேன்.

என்னை பாராட்டி உற்சாகப்படுத்தி நான் வளர உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

More Articles
Follows