கபாலி-விவேகம் சாதனைகளை மெர்சல் தெறிக்க விட்டது எப்படி.?

கபாலி-விவேகம் சாதனைகளை மெர்சல் தெறிக்க விட்டது எப்படி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal beat Kabali and Vivegam records in box officeநேற்று தீபாவளி திருநாளில் விஜய் நடித்த மெர்சல் படம் ரிலீஸ் ஆனது.

இப்படத்திற்கு இதுவரை பாசிட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே வந்துள்ளது.

படத்தை பார்த்த பலரும் விஜய்யின் ஆக்ட்டிங் மற்றும் அட்லியின் மேக்கிங் ஆகியவற்றை பாராட்டியே வருகின்றனர்.

எனவே படத்தின் வசூலும் பாராட்டும்படியே வந்துள்ளது.

சென்னையில் மட்டும் முதல்நாளில் ரூ. 1.5 கோடி வசூலை எட்டியுள்ளது.

சில மாதங்களுக்கு முன் வெளியான அஜித்தின் விவேகம் படம் முதல்நாளில் ரூ.1.2 கோடி மட்டும் வசூலித்து இருந்தது.

அதுபோல் கடந்த 2016ஆம் ஆண்டில் வெளியான ரஜினியின் கபாலி படம் ரூ. 1.1 கோடியை வசூலித்தது.

முதன்முறையாக ரஜினி படம் வசூலை விஜய், அஜித் ஆகிய நடிகர்கள் முறியடிக்க, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியும், மாநில அரசின் கேளிக்கை வரியும்தான் காரணம் என கூறப்படுகிறது.

அதாவது 2017 ஜீலை 1 முதல் ஜிஎஸ்டி வரி இந்தியா முழுவதும் அமுலானது.

அதன்பின்னர் விவேகம் வெளியானது. தற்போது தமிழக அரசின் கேளிக்கை வரி அமுலுக்கு வந்த பின்னர் மெர்சல் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mersal beat Kabali and Vivegam records in box office

மற்ற படங்கள்…

Top 5 Day 1 Gross in #Chennai
#Mersal 1.52 Cr
#Vivegam 1.21 Cr
#Kabali 1.12 Cr
#Theri 1.05 Cr
#Bairavaa 0.92 Cr

மெர்சல் படம் திரையிட எதிர்ப்பு; காட்சிகள் ரத்தானதால் ரசிகர்கள் கொதிப்பு

மெர்சல் படம் திரையிட எதிர்ப்பு; காட்சிகள் ரத்தானதால் ரசிகர்கள் கொதிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal movie shows cancelled in Bangalore and Mysoreபடத்தலைப்பு வழக்கு, சென்சார் பிரச்சினை உள்ளிட்ட பல தடைகளை தகர்த்து மெர்சல் படம் நேற்று தீபாவளிக்கு வெளியானது.

இப்படத்திற்கு உலகமெங்கும் வரவேற்பு இருந்த போதிலும் நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் தமிழ் படத்தை வெளியிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

மெர்சல் படத்தை வரவேற்று பெங்களூரு மற்றும் மைசூரிலுள்ள விஜய் ரசிகர்கள் பேனர்கள் மற்றும் கட் -அவுட்கள் வைத்திருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த அமைப்புகள் பேனர்கள் மற்றும் கட்-அவுட்களைக் கிழித்தனர்.

இதனால், விஜய் ரசிகர்களுக்கும் கன்னட அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.

இந்த மோதல் சம்பவத்தால், ‘மெர்சல்’ படத்தின் காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன.

இதனால் ரசிகர்கள் கோஷமிட்டு கொந்தளிப்பில் கலைந்து சென்றனர்.

Mersal movie shows cancelled in Bangalore and Mysore

அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார் விஜய்.? மெர்சலுக்கு தமிழிசை எச்சரிக்கை

அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார் விஜய்.? மெர்சலுக்கு தமிழிசை எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

BJP Chief Tamilisai Saundrajan slam Vijay for criticizing GST in Mersalசினிமா துறையினரே கதிகலங்கும் அளவுக்கு பல பிரச்சினைகளை முறியடித்து விஜய் நடித்த மெர்சல் படம் நேற்று வெளியானது.

அப்பாடா? ஒருவழியாக பிரச்சினை ஓய்ந்தது என்று படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் மெர்சல் பட பிரச்சினைகளை தீர்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரில் நன்றி தெரிவித்திருந்தார் நடிகர் விஜய்.

இந்நிலையில், மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்குமாறு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்…
‘எங்க ஊரில் பணமேயில்லை, எல்லாம் டிஜிட்டல்தான். ஒரே கியூதான்’ என்று கிழிந்த பர்சை வடிவேலு ஒரு காட்சியில் காட்டுவார்.

மற்றொரு காட்சியில் ஒருவர் புதிய 500 ரூபாய் நோட்டுகளை மொத்தமாக கொண்டுவந்து ஒரு உண்டியலில் போடுவார்.

இப்போ இந்த ஐநூறு ரூபாயும் செல்லாதுன்னு சொல்லிட்டாங்களா’ என்று மத்திய அரசை கிண்டல் செய்வது போல ஒரு காட்சியிருக்கும்.

மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் அதிரடியாக நம் நாட்டு நடப்புகளை ஆணித்தரமாக பேசியிருப்பார் விஜய்.

சிங்கப்பூரில் ஜிஎஸ்டி வரி குறைவாக இருப்பதாகவும், 28 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கும் இந்தியாவில் இலவச மருத்துவ உதவிகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை என்று கூறியிருப்பார்.

தற்போது இந்த க்ளைமாக்ஸ் காட்சி பன்ச் டயலாக்குகள்தான் பெறும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இந்த காட்சிகளை நீக்கவில்லை என்றால் வழக்கு தொடுக்க போவதாக கூறியுள்ளார் தமிழிசை.

மேலும் அரசியலுக்கு வருவதற்காக விஜய் தவறான தகவல்களை பரப்பிவருவதாகவும் தமிழிசை ஆரூடம் தெரிவித்துள்ளார்.

BJP Chief Tamilisai Saundrajan slam Vijay for criticizing GST in Mersal

விஜய் ரசிகர்களே மெர்சல் நெட்டில் வெளியானால் இதில் புகார் கொடுங்க

விஜய் ரசிகர்களே மெர்சல் நெட்டில் வெளியானால் இதில் புகார் கொடுங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெர்சல் போஸ்டர்அட்லி இயக்கத்தில் ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள படம் மெர்சல்.

இதில் விஜய்யுடன் சமந்தா, காஜல், நித்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது.

எனவே இப்படத்தை இணையத்தில் வெளியிடக்கூடாது என தயாரிப்பாளர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து 2500க்கும் மேற்ப்பட்ட இணையத்தளங்களை முடக்க கோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில் மெர்சல் படம் இணையத்தில் வெளியானால் அந்த சம்பந்தப்பட்ட இணையதள முகவரியை [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

If you found Mersal relesed in Internet you can complaint

விஜய் ரசிகரின் உயிரை பலி வாங்கிய மெர்சல் பேனர்

விஜய் ரசிகரின் உயிரை பலி வாங்கிய மெர்சல் பேனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal posterஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் இன்று தீபாவளி தினத்தில் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் வெளியான தெறி படம் ஹிட்டானதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது.

எனவே ரசிகர்களும் இப்படத்தை வரவேற்க தோரணம் கட்டி, போஸ்டர், பேனர் என அமர்களப்படுத்தி மெர்சல் தீபாவளியாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்த வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே மெர்சல் பட பேனரை கட்ட குடிநீர் குழாய் மூலம் சுவரின் மீது நான்கு விஜய் ரசிகர்கள் ஏறினர்.

இதில் எவரும் எதிர்பாரா வகையில் சுவர் இடிந்து விழுந்ததில் கீழே நின்று கொண்டிருந்த 24 வயது வாலிபர் பலியாகியுள்ளார்.

எனவே வாலாஜாபாத் போலீசார் இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Vijay fan death while keeping Mersal banner on wall

mersal death 1

கர்ஜனை-க்காக த்ரிஷாவுக்கு கைகொடுத்த கார்த்தி

கர்ஜனை-க்காக த்ரிஷாவுக்கு கைகொடுத்த கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi Launches Trishas Garjanai Movie Motion Posterசெஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஜோன்ஸ் தயாரித்து, சுந்தர் பாலு இயக்கத்தில் த்ரிஷா நடித்து வெளிவர இருக்கும் படம் ‘கர்ஜனை’

காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள்.

இதன் பின்னணியில் நடக்கும் கதை ஆக்‌ஷன் திரில்லராக படமாக்கப்பட்டுள்ளது.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் த்ரிஷா நடித்துள்ளார்.

இப்படத்தின் மோஷன் போஸ்டரை ‘பருத்தி வீரன்’ புகழ் கார்த்தி வெளியிட்டார்.

இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

Karthi Launches Trishas Garjanai Movie Motion Poster

https://www.youtube.com/watch?v=dP0aIZcBRu0

More Articles
Follows