ஒரு நல்ல அரசியல் தலைவனுக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லாமல் ஆகிட்டோம்..; ரஜினி வெறியன் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி

ஒரு நல்ல அரசியல் தலைவனுக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லாமல் ஆகிட்டோம்..; ரஜினி வெறியன் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth karthik subbaraj“நான் கட்சி ஆரம்பிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்” என இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் அறவித்துவிட்டார்.

இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். மன்னியுங்கள்’ என்று அறிவித்து கட்சி தொடர்பான விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ரஜினிகாந்த்.

ரஜினியின் இந்த முடிவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பேட்ட பட இயக்குனரும் ரஜினி வெறியருமான கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்…

அதில், “தலைவா வருத்தப்படாதீர்கள்.உங்களைப் போன்ற ஒரு நல்ல அரசியல் தலைவனுக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லாமல் இருக்கலாம். நீங்கள் தான் எங்களுக்கு முக்கியம்.என்றும் எங்களின் அன்பு உங்களுக்காக இருக்கும்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Maybe We didn’t deserve good political leader like you says director Karthik Subbaraj

புத்தாண்டு விருந்தாக ‘ஈஸ்வரன்’ பாடல்கள் வெளியீடு..; சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி

புத்தாண்டு விருந்தாக ‘ஈஸ்வரன்’ பாடல்கள் வெளியீடு..; சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Eeswaranசிலம்பரசன் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஈஸ்வரன்.

இப்படத்திற்காக சிம்பு கடினமான உடற்பயிற்சி செய்து உடல் எடையை முற்றிலும் குறைத்தார்.

ஸ்லிம் சிம்புவாக மாறினார்.

பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மோஷன் போஸ்டரில் சிம்பு பாம்பை கையில் வைத்திருந்தார்.

அது சர்ச்சையாகியது. எனவே விலங்கு நல வாரியம் கண்டனம் தெரிவித்தது.

பின்னர் படக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அண்மையில் ‘ஈஸ்வரன்’ படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலாக “ தமிழன் பாட்டு” (Thamizhan Pattu) வெளியானது.

இந்த நிலையில் ‘ஈஸ்வரன்’ பட மற்ற பாடல்கள் அனைத்தையும் புத்தாண்டு விருந்தாக 2021 ஜனவரி 2ஆம் தேதி் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

STR’s Eeswaran Audio From Jan 2nd

என் ரஜினி நலமுடன் இருக்கனும்..; ரசிகர்களை போல எனக்கும் வருத்தமே.. விரைவில் சேதி – கமல்

என் ரஜினி நலமுடன் இருக்கனும்..; ரசிகர்களை போல எனக்கும் வருத்தமே.. விரைவில் சேதி – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kamalகொரோனா அச்சுறுத்தல் மற்றும் தன் உடல் நிலை காரணமாக தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்துவிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

இது குறித்து அவரின் நெருங்கிய நண்பரும் மக்கள் நீதி் மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கூறியதாவது…

“என் ரஜினி நலமாக இருக்க வேண்டும். அவரின் முடிவு அவரது ரசிகர்களை போல எனக்கும் வருத்தமே..

அரசியலை விட அவரது ஆரோக்கியம் முக்கியம். என் அரசியல் பிரச்சாரங்களை முடித்துவிட்டு சென்னை திரும்பிய பின் அவரை சந்திப்பேன்..

அதன்பின் உங்களுக்கு சேதி சொல்கிறேன்” என தெரிவித்தார் கமல்.

ஒருவேளை கமல் கட்சிக்கு ரஜினி வாய்ஸ் கொடுப்பாரோ..?

Rajinikanth should stay well says Kamal Haasan

JUST IN கட்சி இல்லை.. ஆண்டவன் எச்சரிக்கை..; இந்த வலி எனக்கு மட்டும்தான் தெரியும்.. : ரஜினி

JUST IN கட்சி இல்லை.. ஆண்டவன் எச்சரிக்கை..; இந்த வலி எனக்கு மட்டும்தான் தெரியும்.. : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthகொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டார்.

இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

“என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம். ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன்.

கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி முகக்கவசம் அணிந்து மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம்.

இவ்வளவு கட்டுப்பாடோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வித்தார்.

எனக்கு கொரோனா நெகட்டிவ் வந்தது. ஆனால் எனக்கு ரத்தக்கொதிப்பு அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு இரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது.

அரசியல்வாதிகளின் உதவி கேட்டு சென்னை வந்த மாற்றுத் திறனாளி பெண்..; நிதியுதவி அளித்த சூப்பர் ஸ்டார்

அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தைத் கடுமையாக பாதிக்கும். ஆகையால் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது.

என் உடல்நிலை கருதி தயாரிப்பாளர் திரு கலாநிதி மாறன் அவர்கள் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார். இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு பல கோடி ரூபாய் நஷ்டம் இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல்நிலை இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த எச்சரிக்கையாக தான் பார்க்கிறேன்.

நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற முடியாது இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்கமாட்டார்கள்.

நான் மக்களை சந்தித்து கூட்டங்களை கூட்டி பிரச்சாரத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும் 120 பேர் கொண்ட குழுவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் மூன்று நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது.

இப்போது இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது.

ரஜினி தூய்மையானவர்.. அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் வளம் பெறும்..; ரஜினி தத்தெடுத்த தந்தை ‘பாலம்’ கல்யாணசுந்தரம் பேட்டி

தடுப்பூசி வந்தால் கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை சாப்பிடும் நான் இந்த காலத்தில் மக்களை சந்தித்து பிரச்சாரத்தின் போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என் கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டு மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.

என் உயிர் போனாலும் பரவாயில்லை நான் கொடுத்த வாக்கை தவற நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும்.

இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள்.

ரஜினியும் நானும் போட்டியாளர்கள்தான்.. பொறாமைகாரர்கள் அல்ல.. அவரின் ஆதரவை கேட்பேன்.. – கமல்ஹாசன்

மக்கள் மன்றத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக என் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் காலத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கிறீர்கள். அது வீண் போகாது அந்த புண்ணியம் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும்.

கடந்த நவம்பர் 30-ஆம் தேதி நான் உங்களை சந்தித்த போது நீங்கள் எல்லோரும் ஒருமனதாக உங்கள் உடல் நலம் தான் எங்களுக்கு முக்கியம் நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.

நீங்கள் என் மேல் வைத்திருக்கும். அன்பிற்கும் பாசத்திற்கும் தலைவணங்குகிறேன் ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும் மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்கள் உடல் நலத்தை கவனியுங்கள், அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியில் இருந்து விலகி என் கூட வந்து பணியாற்ற சம்பாதித்த மரியாதைக்குரிய அர்ஜுன் அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன் தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன் நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை.

உண்மையையும் வெளிப்படைத் தன்மையையும் விரும்பும் என் நலத்தில் அக்கறையுள்ள என் மேல் அன்பு கொண்ட என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களும் தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு ஜெய்ஹிந்த்” என்று ரஜினி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

No Politics Sorry Tamilnadu Peoples God Warning says Rajini

பிரசாத் ஸ்டூடியோ வழக்கு.. பத்திரிகையாளர்கள் குவிப்பு.. பின் வாங்கினார் இளையராஜா..!

பிரசாத் ஸ்டூடியோ வழக்கு.. பத்திரிகையாளர்கள் குவிப்பு.. பின் வாங்கினார் இளையராஜா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ilayaraja prasad studio38 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவின் ஸ்டுடியோ செயல்பட்டு வருகிறது.

இளையராஜாவின் இசைக்கு ரொம்பவே நெருக்கமான இடம் அது கூறப்பட்டது.

அந்த இடத்தை இளையராஜா காலி செய்ய வேண்டும் என நிர்வாகம் தெரிவித்தது. இதனால் நிர்வாகம் – இளையாராஜா இடையே மோதல் ஏற்பட்டது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தன் இசைக் கருவிகளை எடுக்கவும் தியானம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று இளையராஜா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

சில நிபந்தனைகளுடன் நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 28) காலை இளையராஜா பிரசாத் ஸ்டியோவுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனால் காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் குவிந்தனர்.

ஆனால், திட்டமிட்டபடி இளையராஜா வரவில்லை.

ஆனால் இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் வந்தனர்.

இளையராஜா மன உளைச்சலில் இருப்பதால், அவர் வரவில்லை என்று அவருடைய பிஆர்ஓ தெரிவித்தார்.

Ilayaraja visit to Prasad lab cancelled

‘மாஸ்டர்’ தியேட்டர் ரிலீஸ் கன்பார்ம்..; ஆனால்.. ட்விஸ்ட் வைத்து வீடியோ வெளியிட்ட லோகேஷ்

‘மாஸ்டர்’ தியேட்டர் ரிலீஸ் கன்பார்ம்..; ஆனால்.. ட்விஸ்ட் வைத்து வீடியோ வெளியிட்ட லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay lokesh kanagarajலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் & விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.

இப்படம் தணிக்கை செய்யப்பட்டு ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது.

அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி தமிழ், ஹிந்தி & தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

ஹிந்தியில் ‘விஜய் தி மாஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

தமிழக முதல்வருடன் தளபதி சந்திப்பு..; விஜய் போடும் பக்கா ‘மாஸ்டர்’ ப்ளான்.!

இந்த நிலையில் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதில்.. ‘மாஸ்டர்’ படம் தியேட்டர்களில் ரிலீசாவது போலவும் அதனை விஜய் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது போலவும் சூப்பராக எடிட்டிங் செய்துள்ளனர்.

ஆனால் இறுதியாக நாளை டிசம்பர் 29ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு ஒரு அறிவிப்பை வெளியிடுவோம் என தெரிவித்துள்ளனர்.

Master release date is confirmed by production team

More Articles
Follows