‘ஜகமே தந்திரம்’ பற்றி என்ன சொல்கிறார் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்.?

‘ஜகமே தந்திரம்’ பற்றி என்ன சொல்கிறார் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Joju georgeஇந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஜகமே தந்திரம்” திரைப்படத்தின் ட்ரெய்லரை Netflix கடந்த வாரம் வெளியிட்டது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் லோக்கல் கேங்ஸ்டராக தனுஷ் நடிக்க, அமெரிக்க பிரபல நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் ஜோஜு ஜார்ஜ் இப்படத்தில் மிரட்டும் கேங்ஸ்டர் சிவதாஸ், பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாறுபட்ட நடிப்பில் மலையாளத்தில் பெரும் புகழை குவித்திருக்கும் நடிகர் ஜோஜு ஜார்ஜ், “ஜகமே தந்திரம்” திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

பெரும் எதிர்பார்ப்புடன் படம் வெளியாவதில் அவர் பெரும் உற்சாகத்தில் உள்ளார்.

ஜோஜு ஜார்ஜ் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்ன் தீவிர விசிறி இப்படத்தில் அவருடனும் உலகளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ அவர்களுடனும் பணிபுரிந்ததில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.

இது குறித்து ஜோஜு ஜார்ஜ் கூறியதாவது…

நான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்ன் மிகப்பெரிய விசிறி. “பீட்சா” படம் பார்த்து விட்டு அப்போதே அவரை சந்திக்க முயற்சித்தேன். அப்போது அது முடியவில்லை.

மலையாளத்தில் பிரபலமாக தொடங்கிய பிறகு தமிழிலும் வாய்ப்புகள் வரத்தொடங்கின.

இறுதியாக இப்படத்தின் எடிட்டர் டிமல் டென்னிஸ் மற்றும் விவேக் ஹர்ஷன் மூலம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களை சந்தித்தேன்.

இப்படத்தில் நடிக்க ஆடிசன் செய்தார் கார்த்திக். இந்த படத்தில் மிகப்பெரிய பாத்திரம் என்பதால் என்னிடம் ஒரு காட்சியை விவரித்து, நடித்து காட்ட சொன்னார்.

எனக்கு தெரிந்த அரைகுறை தமிழில், நான் அக்காட்சியை நடித்து காட்டினேன். ஆனால் அவர் என்னை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்றார்.

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ குறித்து கூறும்போது…

படத்தில் என் எதிர் பாத்திரமாக நடிப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ என்பது எனக்கு தெரியும்.

நான் நேரில் சந்தித்த முதல் ஹாலிவுட் நடிகர் அவர்தான். வாழ்க்கை தரும் ஆச்சர்யங்கள் பெரும் சந்தோஷமாக இருக்கிறது.

நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ அவர்களுடன் நடிப்பது மிகப்பெரும் பெருமை என்றார்.

பீட்டர் ( ஜேம்ஸ் காஸ்மோ ) மற்றும் சிவதாஸ் (ஜோஜு ஜார்ஜ்) இருவருக்குமான சுவாரஸ்யமான போரை காணத்தவறாதீர்கள் Netflix தளத்தில் 18 ஜூன் அன்று உலகம் முழுதும் வெளியாகிறது “ஜகமே தந்திரம்” திரைப்படம்.

Malayalam actor Joju George talks about Jagame Thanthiram film

விஜய் பிறந்தநாளுடன் கனெக்ட்டாகும் சிம்புவின் ‘மாநாடு’ பர்ஸ்ட் சிங்கிள்

விஜய் பிறந்தநாளுடன் கனெக்ட்டாகும் சிம்புவின் ‘மாநாடு’ பர்ஸ்ட் சிங்கிள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Simbuவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’.

இதில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு.

சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் பிரேம்ஜி, எஸ்ஏசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் ரம்ஜான் விருந்தாக வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணமடைந்தார்.

எனவே அப்பாடல் வெளியீட்டை தள்ளி வைத்தனர்.

ஆனாலும் சிம்பு ரசிகர்கள் மாநாடு பட அப்டேட் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

இந்த நிலையில், மாநாடு பட பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் வெளியிட்டு இருந்தார்.

மிக விரைவில் ஒரு பாடல் வெளியிடப்படும் என அவர் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அதன்படி இன்று பர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

வருகிற ஜூன் 21ஆம் தேதி அந்த பாடலை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மாநாடு இசை உரிமையை இப்பட இசையமைப்பாளர் யுவனே வாங்கியுள்ளார்.

இதற்கு அடுத்த நாள் ஜூன் 22 நடிகர் விஜய்யின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Maanaadu first single will be released on Jun 21st

வங்கி கணக்கில் பணம்.?.; தன் ரசிகர்களின் துயரம் நீக்கும் சூர்யா.

வங்கி கணக்கில் பணம்.?.; தன் ரசிகர்களின் துயரம் நீக்கும் சூர்யா.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soorarai pottru (2)கொரோனா ஊரடங்கால் மக்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

எனவே ஏழை எளியோருக்கு சில தொண்டு நிறுவனங்கள் உதவி வருகின்றன.

சாமானிய மக்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களும் தங்களால் முடிந்தளவிற்கு கொரோனா நிவாரணத்திற்கு உதவினர்.

மேலும் ஏழைகளுக்கு ரூபாய் 4,000 நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை தமிழக அரசு கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் வேலையின்றி வருமானமின்றி கஷ்டப்படும் தனது ரசிகர்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியதாக தகவல் வந்துள்ளது.

சுமார் 250 சூர்யா ரசிகர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூர்யா ரசிகர்கள் தரப்பில் இப்படி சொல்லப்பட்டாலும் அவரது பிஆர்ஓ தரப்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே தன் அகரம் பவுண்டேசன் மூலம் திறமையான ஏழை மாணவர்களை படிக்க வைத்து வருகிறார் சூர்யா என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Actor Suriya has donated 5000 RS to 250 members of his Fans Club

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் ஆர்.பி சௌத்ரி மீது விஷால் புகார்

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் ஆர்.பி சௌத்ரி மீது விஷால் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rb choudaryதென்னிந்திய சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆர்.பி. சௌத்ரி. இவரது தயாரிப்பு நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ்.

சேரன் பாண்டியன், நாட்டாமை, சூர்ய வம்சம், துள்ளாத மனமும் துள்ளும், ஜில்லா, களத்தில் சந்திப்போம் வரை 99 படங்களை தயாரித்துள்ளனர்.

தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக மட்டுமில்லாமல் திரைப்படங்களுக்கு பைனான்ஸ் கொடுத்தும் வருகிறார் ஆர்.பி.சவுத்ரி.

நடிகர்களான ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோர்களின் தந்தையும் ஆவார்.

இந்த நிலையில் சென்னை தி.நகர் காவல் துணை ஆணையரிடம் ஆர்பி. சௌத்ரி மீதான தனது புகாரை கொடுத்துள்ளார் நடிகர் விஷால்.

அந்த புகாரில்.. “நான் தயாரித்த ‘இரும்புத்திரை’ படங்களுக்கு புரோ நோட் மூலம் லட்ச கணக்கில் கடன் வாங்கினேன்.

இப்போது அந்த கடனை அடைத்து முடித்த பின்னரும் புரோ நோட்களை திரும்ப தரவில்லை என தெரிவித்துள்ளார்.

விஷால் தரப்பு கேட்டதற்கு, ப்ரோ நோட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தொலைந்து விட்டதாக கூறி, அதற்கு பதிலாக 100 ரூ. ஸ்டாம்ப் பேப்பரில் புதிய ஒப்பந்தம் ஒன்று எழுதி கொடுத்துள்ளார்.

இதனால் விஷால் சார்பில் அவருடைய மேலாளர் ஹரிகிருஷனன் ஆர்.பி சௌத்ரி மீதான புகார் மனுவை தியாகராய நகர் துணை ஆணையரிடம் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவோடு ஆர்.பி. சௌத்ரி தரப்பு ப்ரோ நோட் மற்றும் இதர ஆவணங்களுக்கு பதிலாக அளித்த 100 ரூ ஸ்டாம்ப் ஒப்பந்தத்தின் நகலையும் விஷால் தரப்பினர் இணைத்து வழங்கியுள்ளனர்.

Vishal complaint against RB Chowdary of Super Good Films

கண் மூடி திறப்பதற்குள் ஒரு சினிமா..; அமெரிக்கர் சாதனையை முறியடித்த தமிழர்.. அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு

கண் மூடி திறப்பதற்குள் ஒரு சினிமா..; அமெரிக்கர் சாதனையை முறியடித்த தமிழர்.. அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘Be Pretty’ என்ற உலகின் மிகச் சின்ன படத்தை தஞ்சாவூரைச் சேர்ந்த அன்பு ராஜசேகர் என்பவர் டைரக்ட் செய்துள்ளார்.

குறும்படம் தெரியும்.. அது என்னப்பா.? சின்ன படம் எனக் கேட்கிறீர்களா.? நீங்கள் கண் மூடி திறப்பதற்குள் அந்த படம் 5 நொடிகளில் முடிந்துவிடுமாம்.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஏழு நொடிகள் கொண்ட ‘சோல்சர் பாய்’ என்ற சிறிய படத்தை அமெரிக்கர் ஒருவர் இயக்கியிருந்தார்.

அந்த படம் உலக சாதனை செய்திருந்த நிலையில் தற்போது அந்த சாதனையை தமிழர் ஒருவர் முறியடித்துள்ளார்.

இவர் கோலிவுட்டில் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

இவர் இயக்கிய, ‛பி பிரிட்டி’ (Be Pretty) என்ற இந்த சிறிய திரைப்படம் கொரோனா காலத்தில் முககவசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டு் பாராட்டியுள்ளார்.

இந்த உலக சாதனை படத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட வேண்டும் என அன்பு ராஜசேகர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Be pretty first look released by education minister Anbil Mahesh

Be Pretty

உயிர் காக்க நிதி திரட்டும் டிவி ஸ்டார்ஸ் அமித் பார்கவ் & ஸ்ரீஜனனி

உயிர் காக்க நிதி திரட்டும் டிவி ஸ்டார்ஸ் அமித் பார்கவ் & ஸ்ரீஜனனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amit Bhargavகரோனா பெருந்தொற்று அன்றாடம் ஆயிரமாயிரம் உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கும் சூழலில், சிகிச்சைக்கு அதிமுக்கியமாகத் தேவைப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கிக் கொடுக்கும் பணியை பிரபலங்களான அமித் பார்கவ், ஸ்ரீஜனனி முன்னெடுத்துள்ளனர்.

இதற்காக அவர்கள் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை பகுதியை தேர்வு செய்துள்ளனர்.

தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மக்களின் உயிர்காக்க ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவைப்படுகின்றன. மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகள் பலவற்றில் ஆக்சிஜன் தட்டுப்பாடும், மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடும், ஆம்புலன்ஸ் தேவையும் உள்ளது.

இந்நிலையில், கிரவுட் ஃபண்டிங் தளத்தின் வாயிலாக, சின்னித்திரை பிரபலங்களான அமித் பார்கவ் மற்றும் ஸ்ரீஜனனி, நிதி திரட்டி வருகின்றனர்.

அமித் பார்கவ் ஜீ தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவருகிறார். ஸ்ரீஜனனி பாடகியாகவும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் இருக்கிறார். கூடவே சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கிரவுட் ஃபண்டிங் தளத்தின் வாயிலாக, சின்னித்திரை பிரபலங்களான அமித் பார்கவ் மற்றும் ஸ்ரீஜனனி, நிதி திரட்டி வருகின்றனர்.

இதனை, ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கவும், ஆம்புலன்ஸ் சேவைகளை அதிகரிக்கவும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நற்செயலில், தஞ்சையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நிமல் நாகராஜனும் பங்கேற்கிறார்.

நிர்மல் ராகவனைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், இவர் கடந்த 2018ம் ஆண்டு முதல் தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதி மக்களுக்காக பல்வேறு நற்பணிகளை செயல்படுத்தி வருகிறார்.

நிமலும் அவரின் குழுவினரும் இணைந்து கொரோனா முதல் அலையின்போது தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு 4000 குடும்பங்களுக்கு உணவளித்த பசியாற்றினர்.

அமித், ஸ்ரீஜனனி முன்னெடுத்துள்ள இந்த திட்டத்தில், கைகோர்த்துள்ள நிமல் திரட்டப்படும் நிதி மூலம் வாங்கப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சேர்ப்பதில் உதவியாக இருப்பார். இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் பேசியிருக்கிறார்.

இதுவரை அமித், ஸ்ரீஜனனி மற்றும் நிமல் திரட்டியுள்ள பணத்தின் மூலம் 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.

அவை பேராவூரணி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதி மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தஞ்சை பகுதியின் தேவையைத் தீர்க்க இன்னும் 16 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவைப்படுகின்றன.

மக்களின் உயிர்காக்கும் இந்தப் பணியில் நல் உள்ளம் கொண்டோர் இணைய வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Link to contribute : https://milaap.org/fundraisers/support-help-needy-and-poor-people-covid-patient-oxygen-concentrators

celebrities Amit Bhargav and Sriranjani are doing a fundraiser to buy oxygen concentrators

More Articles
Follows