தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் டிவியில் பிரபலமான மா.கா.பா.ஆனந்த் தற்போது ‘மாணிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் தொடக்கிவிழாவின் போது ரஜினியின் பாட்ஷா பட ஸ்டைலில் போஸ் கொடுத்திருந்தார் மாகாபா ஆனந்த்.
இப்படத்தை மார்ட்டின் இயக்க, ‘எதிர்நீச்சல்’ படத்தில் நடித்த சூஷா நாயகியாக நடிக்கிறார்.
மோஹிதா சினி டாக்கீஸ் எம்.சுப்பிரமணியம், வினோத் இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.ஆர்.பழனிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
தரண் இசை அமைத்து வருகிறார்.
இந்நிலையில், இப்பட பர்ஸ்ட்லுக் போஸ்டரை வருகிற செப். 15ஆம் தேதி நடிகர் விஷால் வெளியிடவுள்ளார்.
விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.
MaKaPa Anand Maanik first look will be released by Vishal