தடைகளை உடைத்து நாளை முதல் வருகிறது விஸ்வரூபம்2

தடைகளை உடைத்து நாளை முதல் வருகிறது விஸ்வரூபம்2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madras High Court refuses to stay Kamals Vishwaroopam 2 movie releaseநடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல்வாதியாக மாறிவிட்டார்.

மக்கள் நீதி மய்யம் என்ற தன் கட்சிப் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

அவரின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு முதன்முறையாக நாளை வெளியாகவுள்ள படம் விஸ்வரூபம் 2.

இப்படத்திற்கு தடை கேட்டு பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஐகோர்ட்டில் கடந்த 2-ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தது.

அதாவது… 2008-ம் ஆண்டு மர்மயோகி என்ற படத்தில் கமல் நடிக்க படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.

ரூ.100 கோடி செலவில் திட்டமிடப்பட்ட அந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடி வழங்கப்பட்டது.

அத்துடன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு ரூ.4 கோடி கொடுக்கப்பட்டது.

அந்தப்பணம் ‘மர்மயோகி’ படம் தயாரிக்க பயன்படுத்தப்படாமல், “உன்னைபோல் ஒருவன்” படத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே ரூ.6.90 கோடி கேட்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் ‘விஸ்வரூபம் 2’ படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
எனவே ‘மர்மயோகி’ படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கொடுக்க வேண்டும்.

இல்லையென்றால் ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிடத்தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கமல்ஹாசன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரமிட் சாய்மீரா நிறுவனம் ரூ.4 கோடி மட்டுமே கொடுத்ததாகவும், அந்த பணம் மர்மயோகி படத்தின் ஆரம்பகட்ட பணிகளுக்கு செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மர்மயோகி படத்துக்கு வேறு தயாரிப்பாளர் கிடைத்ததும் அந்த பணத்தை திருப்பி வழங்கிவிடுவதாக கமல்ஹாசனின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து, விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க முடியாது என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Madras High Court refuses to stay Kamals Vishwaroopam 2 movie release

முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி

முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Priyadharshan jo jerryஉல்லாசம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பல முன்னனி நடிகர்களுடன் பல விளம்பர படத்தை இயக்கி முன்னனி இயக்குனராக திகழ்பவர் ஜேடி ஜெர்ரி.

இவரின் மகன் பிரியதர்சன் ஜோ ஜெர்ரி லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்துள்ளார்.

தற்போது பிரியதர்சன் ஜோ ஜெர்ரி ஒரு விளம்பர படத்தை தயாரித்து, இசையமைத்து, இயக்கி ஜாஸ் விளம்பரப்படப் போட்டியில் முதல் பரிசு வென்றிருக்கிறார். தந்தையை போலவே மகனும் தனது முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்துள்ளார்.

ஜாஸ் பர்ப்யூம்ஸ் பிராண்ட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட விளம்பரப்படப் போட்டியில், “இன்டர்வியூ” என்ற தலைப்பில் பங்கேற்ற 300 படங்களில் ஜோ ஜெர்ரியின் விளம்பரப் படம் முதலிடம் பெற்று 1 லட்ச ரூபாய் பரிசை வென்றுள்ளனர்.

“இது நாங்கள் பங்கேற்ற முதல் போட்டி. நான் இயக்கிய முதல் விளம்பரம். எங்கள் குழுவுக்கு ஓர் அற்புதமான அனுபவம்” என்றார் பிரியதர்சன் ஜோ ஜெர்ரி.

*கடிகார மனிதர்கள்* படத்தால் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகும் லதா ராவ்

*கடிகார மனிதர்கள்* படத்தால் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகும் லதா ராவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress latha raoஅண்மையில் வெளியான கடிகார மனிதர்கள் படத்தில் லதா ராவ் அவர்கள் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அதுபற்றி அவர் கூறியதாவது…

நான் நடிகை லதா ராவ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி 4 மொழிகளில் நடித்தும், வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சின்னத்திரையில் இருந்து ஒதுங்கி, வெள்ளித்திரையில் முயற்சிகளை தொடர்ந்தேன்.

முதலில் வடிவேலுக்கு ஜோடியாக தில்லாலங்கடி என்ற படத்தில் காமெடியான கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானேன்.

அதைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் இயக்கத்தில் ஈசன், சமுத்திரக்கனி அவர்களின் இயக்கத்தில் நிமிர்ந்து நில், கே.எஸ். ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி போல பல படங்களில் நடித்தேன்.

இப்பொழுது வெளியான கடிகார மனிதர்கள் என்ற படத்தில் கதையின் நாயகியாக அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

அடுத்து வெளிவர இருக்கும் பரத் நடிக்கும் 8, விவேக் & தேவயானி அவர்கள் நடிக்கும் எழுமின் படங்களில் நடித்திருக்கிறேன்.

தொடர்ந்து சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.

தனுஷ் தந்தை கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் *பாண்டிமுனி*

தனுஷ் தந்தை கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் *பாண்டிமுனி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Kasthuri Raja next movie Pandimuni (aka) Pandi Muniதனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம் 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி ஊட்டி பகுதிகளில் 25 நாட்கள் நடைபெற்றது.

இப்படத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கின்றார்.

கதாநாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா அறிமுகமாகிறார்கள்.முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார்.

மற்ற நடிகர்கள் பின்னர் அறிவிக்க உள்ளனர்.

ஒளிப்பதிவு – மது அம்பட்
இசை – ஸ்ரீ காந்த்தேவா
கலை – ஸ்ரீமான் பாலாஜி
நடனம் – சிவசங்கர்
சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன்
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் : கஸ்தூரி ராஜா.

படம் பற்றியும் படப்பிடிப்பு பற்றியும் அவரிடம் கேட்டோம்…

பயங்கரமான ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப் பகுதி அரண்மனையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படை யாக வைத்து இந்த கதை உருவாக்கப் பட்டுள்ளது.

படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது ஆச்சர்யமான ஒரு சம்பவம் நடந்தது, பனகுடிசோலை என்கிற இடத்தில் அந்தப்பகுதி மக்கள் தங்களது இஷ்ட கடவுளாக கும்பிடும் குட்டஞ்சாமி என்கிற கோயில் உள்ளது.

இந்த கோயிலுக்கு சுமார் 700 வருஷமாகிறது என்று சிலர் சொல்கிறார்கள்.

சிலர் ஆயிரம் வருஷமாகிறது என்கிறார்கள். அந்த கோயிலுக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். அது குகைக்கோயில் மாதிரியான இடம்.

அங்கே நாங்கள் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தோம். அங்கே வந்த ஊர் மக்கள் இந்த கோயிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது.. செருப்பு உபயோகிக்கக் கூடாது என்றார்கள்.

நாங்கள் வருத்தம் தெரிவித்து விட்டு வந்தோம்.

மறு நாள் அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்த சென்றோம். சென்ற கொஞ்ச நேரத்திலேயே மேகாலிக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டார். நாங்கள் வெல வெலத்துப் போய் விட்டோம்.

ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றது. அந்த அனுபவம் ஆச்சர்யமாக இருந்தது. குறிஞ்சிப் பூவை பார்ப்பதே அபூர்வம்.

நாங்கள் படப்பிடிப்பை நடத்திய இடத்தை சுற்றிலும் குறிஞ்சி பூ கண் கொள்ளா காட்சி. அதையும் எங்கள் காமிராவுக்குள் பதுக்கிக் கொண்டோம்.
அதை விட இன்னொரு அதிசயமும் நடந்தது.

பனகுடி சோலையில் அந்த குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்க வில்லை என்பது அதிசயமான ஒன்று.

கோயிலை சுற்றி உள்ள இடங்களில் பறந்த ஹெலிகேம் கோயில் மேல் பறக்காதது ஏன் என்பது தான் ஆச்சர்யமானது.

ஆசிப், மேகாலி, ஜோதி, வைஷ்ணவி,யாஷிகா ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகள் மூன்று பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டப்படப்பிடிப்பில் ஜாக்கி ஷெராப் அகோரி கெட்டப்பில் இணைய உள்ளார் என்றார் கஸ்தூரிராஜா.

Director Kasthuri Raja next movie Pandimuni (aka) Pandi Muni

நான்கே எழுத்துக்களில் ஒரு நூற்றாண்டு அதுதான் கலைஞர்.: வைரமுத்து

நான்கே எழுத்துக்களில் ஒரு நூற்றாண்டு அதுதான் கலைஞர்.: வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vairamuthu Paid last Respect To DMK Chief Karunanidhiஇந்திய அரசியலின் முதுபெரும் தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவையொட்டி அவரது நெருங்கிய நண்பர் வைரமுத்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது…

கலைஞர் என்பது ஒரே சொல்லில் ஒரு சரித்திரம். நான்கே எழுத்துக்களில் ஒரு நூற்றாண்டை அடக்கமுடியுமென்றால் அதன்பேர் கலைஞர்.

ஒரு புலவனே போராளியாகவும், போராளியே புலவனாகவும் திகழ்ந்த பெருஞ் சரித்திரம் இந்தியப் பெரும்பரப்பில் கலைஞருக்கே வாய்த்திருந்தது. இந்திய தேசப்படம் யோசித்து ஏற்றுக்கொள்ளும் ஒரு குக்கிராமத்தில் பிறந்து இந்தியாவை ஆளும் குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கும் ஆற்றலாக வளர்ந்த அதிசயம் அவர்.

மெய்யான திராவிட இயக்கக் கொள்கைகளை 80 ஆண்டுகள் ஏந்தி நடந்தவர்.

அவர் கல்லூரிக் கல்வி காணவில்லை; ஆனால் பல்கலைக்கழகங்களைப் படைத்தளித்தார். மின்சாரம் இல்லாத ஊரில் பிறந்தார்; தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பரிசளித்தார்.

இசைத்தமிழ் வளர்க்கும் குடும்பத்தில் பிறந்தார்; ஆனால் முத்தமிழுக்கும் பங்களிப்புச் செய்தார். பேராசிரியரையும் நாவலரையும் அழைத்துக் கூட்டம் போடுவதற்கு வீட்டு வெள்ளிக் கிண்ணத்தை அடமானம் வைத்தார்; ஆனால் ஆண்டாண்டு காலமாக அடமானம் கிடந்த தமிழர்களின் மானத்தை மீட்டெடுத்தார்.

வீழ்த்தப்பட்டவர்களுக்காகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் இவர் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை இந்தியாவின் எல்லாத் திசைகளுக்கும் நீட்டித்தார்.

எழுத்தாளர் – கவிஞர் – நாடக ஆசிரியர் – பத்திரிகையாளர் – கட்சித் தலைவர் – ஆட்சித் தலைவர் – உறங்காத படைப்பாளி – ஓயாத போராளி என்று எத்துறை தொட்டாலும் அத்துறையில் வித்தகம் காட்டிய வித்தகர் இந்திய அளவில் இவர் மட்டும்தான்.

கட்சித் தலைவன் போய்விட்டான் என்று தொண்டர்கள் கதறுகிறார்கள். எங்கள் கவியரங்கத் தலைவன் போய்விட்டான் என்று கவிஞர்கள் கதறுகிறோம்.

பெரியார் ஆட்சிப் பொறுப்பை மறுத்திருந்தார். காலம் அண்ணாவுக்கு ஆயுளை மறுத்திருந்தது.

ஆனால் இந்த இரண்டையும் ஒருங்கே பெற்று இத்தனை ஆண்டுகள் கலைஞர் இயங்கியதால்தான் பெரியார், அண்ணா என்ற தத்துவங்கள் கணிப்பொறித் தலைமுறைக்குக் கடத்தப்பட்டன. இந்த ஒரு பெரும்பணிக்காகவே காலம் கலைஞரை நினைவு கூரும்.

தொல்காப்பியப் பூங்கா – குறளோவியம் – சங்கத்தமிழ் – சிலப்பதிகார நாடகம் – ரோமபுரிப் பாண்டியன் – தென்பாண்டிச் சிங்கம் – திருக்குறள் உரை போன்ற படைப்புகளால் கலைஞர் காலத்தை வென்று நிற்பார்.

மகாகவி தாகூர் மரித்த நாளில் கலைஞர் மறைந்திருக்கிறார். ஓ! கலைஞரின் மரணம் கூட கம்பீரமானது.
மரணத்தால் கலைஞர் மரிப்பதில்லை.

அவர் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் அவர் புரிந்த ஒவ்வொரு செயலும் மரணத்தை முறியடிக்கும் ஏற்பாடுதான். என் ஒவ்வோர் எழுத்தையும் வாசித்து நேசித்து உரையாடுவார்.

இதோ இந்த இரங்கல் செய்தி படிக்க அவரில்லையே என்று அழுகிறேன். அவர் புகழுடம்பு வாழும் திசை நோக்கித் தொழுகிறேன்.” என உருக்கமாக தெரிவித்துள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார் வைரமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

Vairamuthu Paid last Respect To DMK Chief Karunanidhi

vairamuthu family with kalaignar

தமிழ் சினிமாவில் நல்ல தமிழ் ஒலிக்க காரணமானவர் கலைஞர். : சிவகுமார்

தமிழ் சினிமாவில் நல்ல தமிழ் ஒலிக்க காரணமானவர் கலைஞர். : சிவகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakumar and Suriya paid last respect to Late Kalaignar Karunanidhiதிமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது…

1. பெரியார், ராஜாஜிக்கு பிறகு 95 வயது வரை புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.

2. பெரியார் – எந்த ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்துக்கு திட்டங்கள் தீட்டினாரோ அவற்றை கலைஞர் அவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்த உடனே நிறைவேற்றினார்.

3.அண்ணா அவர்கள் துவங்கிய திராவிட முன்னேற்ற கழகத்தை கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் கட்டிக்காத்தவர் .

4. அரசியலில் சாதித்ததற்கு இணையாக – கலை இலக்கியத்திலும் 60 ஆண்டுகளுக்கு மேல் சாதனை புரிந்தவர் .

5.1950 களில் தமிழ் சினிமாவில் நல்ல தமிழ் ஒலிக்க காரணமானவர்களில் முதன்மையானவர் .

6. குறளோவியம், சங்கத்தமிழ், தொல்காப்பியப்பூங்கா – போன்றவை அவரது புலமைக்குச்சான்றானது.

7. பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள் – அவர் வசனம் பேசி நடித்தேன்.

8. என் ஓவியங்களை பார்க்க 30 ஆண்டுகளுக்கு முன் எங்கள் இல்லம் வந்து 2 மணி நேரம் இருந்தார்.

9. சூர்யாவின் முதல் படம் நேருக்கு நேர் – கார்த்தி- முதல் படம் பருத்திவீரன் பார்த்து ஆசி கூறியவர்.

10.தமிழகத்தில் அவர் இடம் என்றும் காலியாகவே இருக்கும் .
அன்னாரது ஆத்மா சாந்தியடையவும் / பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன். “ எனத் தெரிவித்துள்ளார் சிவகுமார்.

கருணாநிதியின் உடலுக்கு சிவகுமார், சூர்யா இருவரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். கார்த்தி வெளியூரில் இருப்பதால் கலந்துக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

Sivakumar and Suriya paid last respect to Late Kalaignar Karunanidhi

More Articles
Follows