தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் டிவி தொகுப்பாளராக இருந்தாலும் அவ்வப்போது சினிமாவிலும் தலை காட்டி வருகிறார் மா.கா.பா.ஆனந்த்.
இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தான் ‘மாணிக்’.
இதில் இவருக்கு ஜோடியாக சூஷா குமார் நடித்துள்ளார்.
இரண்டாவது ஹீரோவாக வத்சன் என்பவர் நடிக்கிறார்.
இவர்களுடன் அருள்தாஸ், அணு, புஜ்ஜி பாபு, கோலிசோடா சீதா, ஜாங்கிரி மதுமிதா, சிவசங்கர், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளார்கள்.
தரண்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மார்டின் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இப்படம் ஜனவரி 4ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த 2019 புத்தாண்டு பிறந்த உடன் முதல் படமாக இது ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Ma Ka Pa Anand and Suza starring Maaniik release on 4th Jan 2019