கயல் சந்திரன்-அஞ்சனா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

கயல் சந்திரன்-அஞ்சனா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kayal Chandran and VJ Anjana blessed with a Boy babyடிவி ஆங்கர் அஞ்சனாவுக்கு பிரபல நடிகைகள் போல ரசிகர்கள் அதிகம்.

இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தாலும் மறுத்துவிட்டு டிவியிலே தொடர்ந்தார். ஒரு பக்கம் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் கயல் பட நாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

அதன்பின்னர் டிவியில் இருந்து விலகுவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

இந்நிலையில் அஞ்சனாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து அவரது கணவர் சந்திரன், தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளதாவது…

“அஞ்சனாவும் நானும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் நலம். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Kayal Chandran and VJ Anjana blessed with a Boy baby

சிறப்பான முறையில் சிவகார்த்திகேயனின் *சீமராஜா* வியாபாரம்!

சிறப்பான முறையில் சிவகார்த்திகேயனின் *சீமராஜா* வியாபாரம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyans SeemaRaja trade news updates24ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பாக சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர். டி. ராஜா தயாரித்துள்ள படம் சீமராஜா.

பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சமந்தா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தை வருகிற விநாயக சதுர்த்தி பண்டிகை அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் வியாபாரத்தையும் முடித்துவிட்டனர்.

இதன் சென்னை ஏரியா உரிமையை சத்யம் சினிமாஸின் எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

வட ஆற்காடு, தென்ஆற்காடு ஏரியாக்களை ஜி.ஸ்ரீனிவாசனின் ‘எஸ்.பிக்சர்’ நிறுவனம் வாங்கியுள்ளது.

செங்கல்பட்டு ஏரியாவை மட்டும் செண்பகமூர்த்தியின் எம்.எஸ்.எம்.மூவி டிரேடர்ஸ் உடன் இணைந்து ’24 ஏ.எம்.ஸ்டுடியோ’ நிறுவனம் வெளியிடுகிறது.

சேலம் ஏரியாவை ‘ஃபைவ் ஸ்டார் பிக்சர்ஸ்’ நிறுவனமும், கோயம்பத்தூர் ஏரியாவை மன்னாரின் ‘கந்தசாமி ஆர்ட்ஸ்’ நிறுவனமும் வாங்கியுள்ளன.

மதுரை ஏரியாவை மதுரை அன்புச்செழியனின் தம்பி அழகர் வாங்கியுள்ளார். திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியாவை ‘சியோன் பிலிம்ஸ்’ நிறுவனமும், திருச்சி, தஞ்சாவூர் ஏரியாவை ‘பாஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனமும் வாங்கியுள்ளன.

Sivakarthikeyans SeemaRaja trade news updates

தனுஷின் விஐபி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தனுஷின் விஐபி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

High court judgement in Dhanushs VIP movie story copy right caseவேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த படம் ‘வேலையில்லா பட்டதாரி’.

அனிருத் இசையைமத்த இப்படம் கடந்த 2014-ல் வெளியானது. இதன் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினி இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இதன் முதல் பாக கதையையும், பாடல்களையும் காப்பி அடித்து ‘MAHJA NAAV SHIVAJI’ என்ற பெயரில் மராட்டியில் ஒரு படம் வெளியாகியுள்ளது.

இந்த விஷயம் தனுஷிற்கு தெரியவே தன் அனுமதி பெறாமல் எடுத்த தயாரிப்பாளர் மீது, காப்பிரைட் சட்டத்தின்படி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் ‘MAHJA NAAV SHIVAJI’ என்ற திரைப்படம் தனுஷின் ‘வேலையில்லா பட்டத்தாரி’ படத்தின் அபட்டமான காப்பி என்பதை உறுதி செய்துள்ளது.

மேலும் தனுஷுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

எனவே விரைவில் அவருக்கு கணிசமான தொகை நஷ்டஈடாக கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

High court judgement in Dhanushs VIP movie story copy right case

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாகும் மெர்சல் நாயகி

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாகும் மெர்சல் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nithya menon likely to pair with Udhayanithi in Mysskin directionசீனுராமசாமி இயக்கியுள்ள ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்துக் கொடுத்துவிட்டார் உதயநிதி.

தமன்னா நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அட்லீயின் உதவியாளர் ஈனாக் இயக்கத்தில் உதயநிதி நடிப்பதாக இருந்தது.

‘மேயாத மான்’ படத்தில் நடித்த பிரியா பவானிசங்கர் மற்றும் இந்துஜா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கவுள்ளனர் என்ற தகவலும் வந்தன.

ஆனால், அப்படம் டிராப்பானது.

இந்நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார் என்ற தகவலையும் நம் தளத்தில் பார்த்தோம்.

இதில் 2 ஹீரோயின்கள் நடிக்க இருக்கும் இந்தப் படத்தில், ஒரு ஹீரோயினாக நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.

கடந்தாண்டு வெளியான விஜய்யின் மெர்சல் படத்தில் நித்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Nithya menon likely to pair with Udhayanithi in Mysskin direction

nithya menon

 

இந்தியன்-2 படத்திற்காக கமலை முத்தமிட நயன்தாரா நிபந்தனை.?

இந்தியன்-2 படத்திற்காக கமலை முத்தமிட நயன்தாரா நிபந்தனை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara condition to act with Kamal in Indian 2பெரும்பாலும் கமல்ஹாசன் படங்களே என்றாலே லிப் லாக் காட்சிகள் இல்லாமல் இருக்காது.

உலகநாயகன் என்ற பெயருடன் இவருக்கு முத்த நாயகன் என்ற ஒரு அன்பான பெயரும் உண்டு.

விஸ்வரூபம் 2 படத்திற்கு பின் சபாஷ் நாயுடு படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.

இப்படங்களை அடுத்து ஷங்கர் இயக்கவுள்ள இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

ஆனால் நீச்சல் உடை காட்சிகள், லிப் லாக் காட்சிகள் குறித்து நயன்தாரா சில நிபந்தனைகள் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

நாயகன் கமல் மற்றும் டைரக்டர் ஷங்கர் ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் இப்படத்தில் நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Nayanthara condition to act with Kamal in Indian 2

மீண்டும் *மன்மதன்*; இரண்டாம் பாகத்தை எடுக்க சிம்பு முடிவு.?

மீண்டும் *மன்மதன்*; இரண்டாம் பாகத்தை எடுக்க சிம்பு முடிவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu aka STR plans to direct Manmadhan sequelஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற மாபெரும் தோல்வி படத்திற்கு சிம்பு துவண்டு விடுவார் என பலரும் நினைத்திருந்தனர்.

ஆனால் எவரும் எதிர்பாராத வகையில் மீண்டும் உடம்பை பிட்டாக்கி கை நிறைய படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார்.

அண்மையில் ஒப்புக் கொண்ட மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தையும் முடித்துக் கொடுத்து விட்டார்.

விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துவிட்டு அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தன் திரையுலக வாழ்வில் முக்கிய திருப்பத்தை கொடுத்த மன்மதன் படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளாராம் சிம்பு.

இப்படத்தை அவரே இயக்கி தயாரித்து நடித்து உருவாக்கவுள்ளாராம்.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என சொல்லப்படுகிறது.

Simbu aka STR plans to direct Manmadhan sequel

More Articles
Follows