சிபிராஜ்-நட்ராஜ் தலைமையில் வாஸ்து மீன்-ரோல்ஸ் ராய்ஸ் மோதல்

சிபிராஜ்-நட்ராஜ் தலைமையில் வாஸ்து மீன்-ரோல்ஸ் ராய்ஸ் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sibi raj and natarajமணி சேயோன் இயக்கத்தில் சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், யோகி பாபு, லிவிஸ்டன், மைம் கோபி, பேபி மோனிகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கட்டப்பாவ காணோம்’.

‘விண்ட் சைம்ஸ்’ மீடியா தயாரித்துள்ள இப்படத்தில் முதன்முறையாக வாஸ்து மீன் ஒன்றும் நடித்துள்ளது.

இம்மீனுக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார்.

இப்படம் டிசம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதே நாளில் நட்ராஜ் நடித்துள்ள போங்கு படமும் வெளியாகிறது.

இப்படத்தை ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் சார்பாக ரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன் இணைத்து தயாரித்துள்ளனர்.

இதில் சதுரங்க வேட்டை நாயகன் நட்டி என்ற நட்ராஜ் நாயகனாக நடிக்க, முன்னாள் உலக அழகி ருஹிசிங் நாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் அதுல் குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், வில்லன் ஷரத் லோகித்தஷ்வா, ராஜன், பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

தாஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சாபுசிரில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இப்படம் ஹைடெக்காக கார் திருடும் நால்வரின் கதையாம்.

இப்படத்தின் முக்கிய பாத்திரமாக காஸ்ட்லியான ரோல்ஸ் ராய்ஸ் கார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Rolls Royce car and Vaasthu Fish clash on december 30th 2016

Kattapava Kaanom and Bongu movies clash on dec 30th 2016

2017 பொங்கல் ரேஸ்… விஜய்யுடன் மோதும் 5 ஹீரோக்கள்

2017 பொங்கல் ரேஸ்… விஜய்யுடன் மோதும் 5 ஹீரோக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa vijayபரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் அடுத்த வருடம் 2017 பொங்கல் பண்டிகையொட்டி ரிலீஸ் ஆகிறது.

பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானால் மற்ற படங்கள் தங்களது வெளியீட்டை தள்ளிப் வைப்பார்கள்.

ஆனால் இம்முறை எவரும் எதிர்பாரா வகையில் அரை டஜன் படங்கள் இந்த பொங்கல் ரேஸில் குவிந்துள்ளன.

அவை பின் வருமாறு…

  1. அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள குற்றம் 23 படம் வெளியாகிறது. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
  2. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள புரூஸ் லீ படம் வெளியாகிறது. படத்தின் நாயகனே இசையமைத்து இருக்கிறார்.
  3. ஜெய், பிரணித்தா நடித்துள்ள எனக்கு வாய்த்த அடிமைகள் படம். மகேந்திரன் ராஜா மணி இயக்கியுள்ள இப்படத்தில் அஞ்சலி கெஸ்ட் ரோலில் நடிக்க, சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார்.
  4. கிருஷ்ணா மற்றும் ஸ்வாதி இணைந்து நடித்துள்ள யாக்கை படமும் வெளியாகிறது. குழந்தை வேலப்பன் இயக்க, சத்யா இசையமைத்து இருக்கிறார்.
  5. இத்துடன் கலையரசன், ஜனனி ஐயர், ஷிவதா நாயர் ஆகியோர் நடித்துள்ள அதே கண்கள் படமும் இணைகிறது. ரோகின் வெங்கடேசன் இப்படத்தை இயக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இறந்த ‘அம்மா’வுக்கு உயிர் கொடுக்க தனுஷ் முயற்சி

இறந்த ‘அம்மா’வுக்கு உயிர் கொடுக்க தனுஷ் முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush sadதனுஷ் தயாரித்து நடித்துக் கொண்டிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி 2.

இப்படத்தை கலைப்புலி தாணுவும் இணைந்து தயாரிக்க, சௌந்தர்யா ரஜினி இயக்குகிறார்.

இதன் சூட்டிங்கை நேற்று ரஜினிகாந்த், க்ளாப் அடித்து துவங்கி வைத்தார்.

இப்படத்தின் முதல் பாகத்தில் தனுஷின் அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் இறந்துவிடுவதாக காட்சி இருக்கும்.

ஆனால் இரண்டாம் பாகத்திலும் சரண்யா நடிக்கவிருக்கிறாராம்.

அது எப்படி? என்று கேட்டால் அது மட்டும் சஸ்பென்ஸ் என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

எது எப்படியோ? இறந்த அம்மாவை மீட்டு வந்தால் சரிதானே…

ரஜினி-விஜய்-அஜித் ஜோடிகளை முந்திய சன்னி லியோன்

ரஜினி-விஜய்-அஜித் ஜோடிகளை முந்திய சன்னி லியோன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sunny leone big bossஇந்த 2016ஆம் வருடம் முடிய போகிறது. அப்படி என்றால், இந்த வருடத்தில் எவை மறக்க முடியாதவை?, எது பெஸ்ட்?, எது வேஸ்ட்? என்பதை கொடுக்க வேண்டியது தானே எங்கள் கடமை.

இந்த வருடத்தில் கூகுள் இந்தியாவில் அதிக தேடப்பட்ட நடிகை யார்? என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் 5வது இடத்தில் பிரியங்கா சோப்ரா இருக்கிறார்.

இவர் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்த பாலிவுட் நடிகை என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

4வது இடத்தில் ரஜினியின் கோச்சடையான் நாயகி தீபிகா படுகோனே இருக்கிறார்.

3வது இடத்தில் காஜல் அகர்வால் இருக்கிறார். இவர் தற்போது அஜித்துடன் நடித்து வருகிறார்.

2வது இடத்தில் கத்ரீனா கைஃப் இருக்கிறார்.

முதல் இடத்தில் நீங்கள் (மன்னிக்கவும் நாம் எதிர்பார்த்த… ஹிஹி…ஹி) சன்னி லியோன் இடம் பிடித்துள்ளார்.

kajal 3

வெற்றிமாறனின் ‘விசாரணை’யை விரட்டிய ஆஸ்கர்

வெற்றிமாறனின் ‘விசாரணை’யை விரட்டிய ஆஸ்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

visaranai movie posterவெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரக்கனி, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்த படம் ’விசாரணை’.

தனுஷ் தயாரித்த இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ரிலீஸானது.

இப்படத்தின் விசாரணை காட்சிகள் தமிழ்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

மேலும் சிறந்த துணைநடிகர், சிறந்த படம், சிறந்த படத்தொகுப்பு என மூன்று தேசிய விருதுகளை வென்றது.
எனவே இப்படம் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில் வெளிநாட்டு திரைப்படம் என்கிற பிரிவிற்காக பரிந்துரைக்கப்பட்ட விசாரணை, விருது பட்டியலில் தேர்வாகவில்லை.

ஆஸ்கர் கனவோடு காத்திருந்த தமிழ் ரசிகர்களுக்கு இச்செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

ஆர்யா-ரஞ்சித் தொடங்கி வைத்த ‘கின்டர் லா’

ஆர்யா-ரஞ்சித் தொடங்கி வைத்த ‘கின்டர் லா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arya Ranjith‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பார்கள்.

சிறு வயது முதலே குழந்தைகள் தனக்கான ஒரு களத்தை தேர்ந்தேடுத்து செல்ல சிறந்த ஆசிரியர்களும், வழி காட்டுதல்களும் வேண்டும்.

சென்னை அடையாரில் ‘கின்டர் லா’(Kinder La) ப்ளே ஸ்கூல் எனப்படும் மழலையர் கல்வி சாலை. இதன் சிறப்ப்மசமே முழுக்க முழுக்க விளையாட்டை அடிப்படையாய் கொண்டு குழந்தைகளை கற்பிப்பது.

பிரபல நடிகரும், சைக்கிள் வீரருமான ஆர்யா மற்றும் கபாலி பட இயக்குனர் ரஞ்சித் இதை நேற்று சென்னையில் தொடங்கி வைத்தனர்.

கலையரசன், நடன இயக்குனர் சதிஷ் என பல்வேறு துறை சேர்ந்தோர் இத்தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

“ குழந்தைகளின்பால் அன்புகொண்டு அவர்களுக்கு துணையாகவும், நல்ல எடுத்ஹ்டு காட்டாகவும் விளங்கவல்ல சிறந்த ஆசிர்யர்கள்.

எதையும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய விளையாட்டு போக்கில் ஒரு கல்வி சுழல் என இன்றிய குழந்தைகளின் புரிதலுக்கேற்ப எங்களது பாட வழி முறைகள் அமைந்துள்ளன.

விளையாட்டு, பொழுதுபோக்கு என அனைத்தையும் தாண்டி நாட்டின் எதிர் காலத்தை உருவாகுகிறோம் என்பதில் பெருமிதமே” எனக் கூறுகின்றனர் கின்டர் லா நிறுவனர்கள் சுபிக்கா மற்றும் ப்ரியா கலையரசன்.

Arya and Ranjith launched Chennai’s First Sports Play School

More Articles
Follows