சத்ரு பட மோசன் போஸ்டரை கௌதம்மேனன் வெளியிட்டார்

சத்ரு பட மோசன் போஸ்டரை கௌதம்மேனன் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sathru posterஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு.

இந்த படத்தின் நாயகனாக கதிர் நடிக்க நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்.

இவர்களுடன் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நஞ்சுண்டான்

இப்படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படம்.

இந்த படத்தின் MOTION போஸ்டரை இயக்குனர் கெளதம்மேனன் வெளியிட்டார். படம் விரைவில் வெளியாக உள்ளது.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி
இசை – அம்ரிஷ்
பாடல்கள் – கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ
எடிட்டிங் – பிரசன்னா.ஜி.கே
கலை – ராஜா மோகன்
ஸ்டன்ட் – விக்கி

Kathirs Sathru motion poster launched by Gautam Vasudev Menon

வேலைக்காரன் படத்தை இலவசமாக பார்க்க மாணவர்களுக்கு வாய்ப்பு

வேலைக்காரன் படத்தை இலவசமாக பார்க்க மாணவர்களுக்கு வாய்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyans Velaikkaran movie free show for Studentsமோகன் ராஜ இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஸ்நேகா, பகத்பாசில், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் நடித்த படம் வேலைக்காரன்.

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார்.

இப்படம் கடந்த 2017 ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியானது.

இப்படம் இன்னும் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் புதிய முயற்சியாக பள்ளி மாணவர்களுக்கு இப்படத்தை இலவசமாக திரையிட இருக்கிறார்களாம்.

அதன்படி வருகிற பிப்ரவர் 1 முதல் 15 வரை இந்த சிறப்பு காட்சிகள் திரையிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Sivakarthikeyans Velaikkaran movie free show for Students

அதுபற்றிய அறிக்கை இதோ…

velaikkaran free show

ஜெயிக்கப்போவது யாரு பட இசையை இமான் வெளியிட்டார்

ஜெயிக்கப்போவது யாரு பட இசையை இமான் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jeyikka povathu yaaru movie songs launch by Music director Immanடிட்டு புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பானுசித்ரா தயாரிக்கும் படம் “ ஜெயிக்கபோவது யாரு“

இந்த படத்தில் சக்திஸ்காட் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வந்தனா நடிக்கிறார்.

மற்றும் ஆர்.பாண்டியராஜன், பவர்ஸ்டார் சீனிவாசன், கோட்டி, சைதன்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி நாயகனாக நடிக்கிறார் – சக்தி ஸ்காட்

இசை – சக்திஸ்காட் மற்றும் ஆண்டன் ஜெப்ரின்

படம் பற்றி இயக்குனர் சக்தி ஸ்காட் கூறியதாவது…

கார் ரேஸை மையமாக வைத்து உருவாக்கப் பட்ட காமெடி படம். பவர் ஸ்டார், காமெடி வில்லனாக நடித்திருக்கிறார்.

ஒரு பாடல் காட்சியில் அவர் புருஸ்லீ, அர்னால்டு, ஹிட்லர், ஐயின்ஸ்டீன், தாம்குரூஸ், ஜேம்ஸ்பாண்ட், பில்கேட்ஸ் என பல கெட்டப்களில் காமெடியில் அசத்தியிருகிறார்.

இந்த படம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட படம். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள், கலை, விஷுவல் எபெக்ட்ஸ், என சினமாவிற்கான 29 துறைகளையும் ஒரே ஒரு தனி மனிதனாக செய்து கின்னஸ் சாதனைக்காக அனுப்பி இருக்கிறேன்.

இதுவரை ஒரு படம் எடுப்பதற்கான 15 துறைகளையும் ஒரே ஒரு மனிதன் ஜாக்கிசான் அவர்கள் “ ஜோடியாக் “ என்ற ஆங்கிலப் படத்தில் பணிபுரிந்து 2012 ம் ஆண்டில் கின்னஸ் சாதனை படைத்தார்.

அதற்கு பிறகு நான் 29 துறைகளில் பணியாற்றி இந்த படத்தை முடித்துள்ளேன். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். கின்னஸ் புத்தகத்தில் எனது சாதனையும் இடம்பெறும் என்று நம்பிக்கையுடம் கூறுகிறார் இயக்குனர் சக்திஸ்காட்.

இந்த படத்தின் இசையை நூறு படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் D.இமான் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Jeyikka povathu yaaru movie songs launch by Music director Imman

jeyikka povathu yaaru movie stills (7)

குடியரசு தினத்தில் நாடோடிகள்-2 படம் தொடங்கியது

குடியரசு தினத்தில் நாடோடிகள்-2 படம் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nadodigal 2 shoot started on Republic Day 20182009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் “நாடோடிகள் – 2 ” உருவாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டார பகுதிகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் அஞ்சலி, பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை – ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு – ஏகாம்பரம்
கலை – ஜாக்கி
எடிட்டிங் – ரமேஷ்
பாடலாசிரியர் – யுகபாரதி
சண்டை பயிற்சி – திலீப் சுப்புராயன்
நடனம் – திணேஷ், ஜானி
மக்கள் தொடர்பு – மெளனம் ரவி
தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்.

மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது.

இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளனர்.

Nadodigal 2 shoot started on Republic Day 2018

nadodigal2 team

ஜாதி பெயர் கொண்ட நடிகைகளை கலாய்க்கும் மன்னர் வகையறா

ஜாதி பெயர் கொண்ட நடிகைகளை கலாய்க்கும் மன்னர் வகையறா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mannar Vagaiyara movie release more than 300 theatres in TNவிமல் தயாரித்து நடித்துள்ள படம் மன்னர் வகையறா.

பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இப்படத்தில் ஆனந்தி, சாந்தினி, ஜீலி, நீலிமாராணி, பிரபு, ரோபோ சங்கர், ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தை வெளியிடவுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் புரோமோ வீடியோக்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.

அதில் ஒரு காட்சியில்… விமல் மற்றும் ரோபோ சங்கர் இருவரும் ஒரு திருமண நிகழ்வில் மொய் வைக்க செல்கின்றனர்.

அப்போது தன் பெயருடன் தேவர் என்ற ஜாதி பெயரை சொல்கிறார் ரோபோ சங்கர்.

அதற்கு மொய் எழுதும் பெண்ணோ.. என்ன சார்? இந்த காலத்துல ஜாதி எல்லாம் பெயரோடு வச்சிருக்கீங்க என்று கேட்கிறார்.

ஏம்மா.. ஐஸ்வர்யா ராய், ஷில்பா செட்டி, லட்சுமிமேனன் இவங்க எல்லாம் ஜாதி பெயர வச்சிருக்கும்போது, தமிழ்நாட்டுக்காரன் நான் தமிழ்நாட்டுல என் பெயரை ஜாதியோட சேர்த்து சொல்லக்கூடாதா? என கேட்கும் விதமாக அந்த ஜாதி பெயர் கொண்ட நடிகைகளை கலாய்த்துள்ளார்.

Mannar Vagaiyara movie release more than 300 theatres in TN

இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது; கமல்-ரஜினி-விஜயகாந்த் வாழ்த்து

இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது; கமல்-ரஜினி-விஜயகாந்த் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayaraja gets Padma Vibhushan Award Rajini Kamal wished himநாளை இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதில் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டள்ளது.

எம்.ஆர்.ராஜகோபால், நாகசாமி, ஞானம்மாள், தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் வாசுதேவன் ஆகியோர் பத்ம விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் ராஜகோபாலன் வாசுதேவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாளுக்கு(98) பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோர் இளையராஜாவுக்கு தொலைபேசியில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பத்ம விபூஷண் விருது பெற்றது குறித்து இளையராஜா சற்றுமுன் கூறியதாவது…

பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இளையராஜா கூறியுள்ளார். மேலும் மத்திய அரசு என்னை கௌரவித்ததாக கருதவில்லை என்றும் தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.

Ilayaraja gets Padma Vibhushan Award Rajini Kamal Vijaykanth wished him

 எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது .
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இசைத்துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்தது மட்டுமல்லாமல் தமிழ் இசையையும், கிராமிய இசையையும் உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியவர் இசைஞானி இளையராஜா(1)
பத்ம விபூஷன் விருது பெறும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல விருதுகள் பெற்று, விருதுகளுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.(2)
More Articles
Follows