பாண்டிராஜ்-கார்த்தி இணையும் கடைக்குட்டி சிங்கம்; சூர்யா தயாரிக்கிறார்

பாண்டிராஜ்-கார்த்தி இணையும் கடைக்குட்டி சிங்கம்; சூர்யா தயாரிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi starrer Kadaikutty Singam first look launched by Suriyaபாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படத்துக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ என பெயரிட்டு இருக்கிறார்கள்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இப்படத் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா வெளியிட்டார்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்திற்கு தெலுங்கில் சின்ன பாபு என பெயரிட்டுள்ளனர்.

இதில் கார்த்திக்குடன் சாயிஷா, சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தென்காசியை சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கப்பட்டது.

இந்த பட போஸ்டரில் இடம்பெற்றுள்ள ‘பயிர் செய்ய விரும்பு’ என்ற வாசகம் சமூகவலைத்தளத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை ஏப்ரலில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Karthi starrer Kadaikutty Singam first look launched by Suriya

எழுத்தாளர் ஞாநி காலமானார்; ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

எழுத்தாளர் ஞாநி காலமானார்; ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth pays tribute to his friend and strong critic Gnani Sankaranசிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவந்த எழுத்தாளர் ஞாநி, இன்று அதிகாலை மரணமடைந்தார்.

அவருக்கு வயது 64. செங்கல்பட்டில் பிறந்த ஞாநியின் இயற்பெயர், சங்கரன். எழுத்தாளர், நாடக்ல்ப கலைஞர், அரசியல் விமர்சகர் என்று பல்வேறு தளங்களில் பணியாற்றியுள்ளார்.

அவர், சமகால அரசியல்குறித்த விமர்சனங்களையும், கருத்துகளையும் ஊடகங்களில் வெளிப்படுத்திவந்தார்.

இந்த நிலையில், உடல் நலக்குறைபாடு காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது உடல், பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக கே.கே.நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடல், மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக அளிக்கப்படுகிறது.

ஞாநியின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். ஞாநியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ’ஞாநி என்னுடைய நண்பர், நான் அவரது ரசிகர். தனக்குச் சரியெனத் தோன்றியதைப் பயமின்றி பேசக்கூடியவர், எழுதக்கூடியவர் ஞாநி. அவரது மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது’ என்றார்.

Rajinikanth pays tribute to his friend and strong critic Gnani Sankaran

rajini gnani

சிவகார்த்திகேயனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைக்கு ஏஆர்.ரஹ்மான் இசை!

சிவகார்த்திகேயனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைக்கு ஏஆர்.ரஹ்மான் இசை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Rahman may compose music for Sivakarthikeyans nextவேலைக்காரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது தன் ஆஸ்தான இயக்குனர் பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க, சூரி முக்கிய வேடத்தில் நடிக்க இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தையும் வேலைக்காரன் படத்தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு ‘சீமத்துரை’ எனத் தலைப்பிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படம் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையை பின்னணியாக கொண்டு உருவாகவுள்ளதாம்.

இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதை அதிகாரப்பூர்வமாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த படத்தையும் ஆர்.டி.ராஜாவின் ‘24 AM STUDIOS’ நிறுவனமே தயாரிக்கிறது.

அடுத்த 2019 ஆண்டில் இப்படத்தை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

AR Rahman may compose music for Sivakarthikeyans next

arrahman sivakarthi

பிப்ரவரி 2ல் தல-தளபதி விசிறி-களுக்கு செம விருந்து

பிப்ரவரி 2ல் தல-தளபதி விசிறி-களுக்கு செம விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Visiri movie will release on 2nd February Treat for Ajith Vijay fansஜெ.சா.புரொடக்சன்ஸ் சார்பில் ஏ.ஜமால் சாஹிப் கி.ஜாபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து, வெற்றி மகாலிங்கம் தயாரிக்கும் படம் ‘விசிறி’.

இதில் ராம்சரவணா, ராஜ், சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். ரெமோனா ஸ்டெபனி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பி.டி.அரசகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் ஆகிய “தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா ரசிகர்களிடம் தொடங்கிய மோதல், “எம்.ஜி.ஆர். -சிவாஜி, ‘ரஜினி -கமல்’ என்று தொடர்ந்தது. அந்த வரிசையில் ‘தல-தளபதி’ ரசிகர்களின் மோதல் மிக முக்கியமானது மட்டுமல்ல, சுவாரஸ்ய மானதும் கூட. அதை மையக்கருவாக வைத்து விசிறி படத்தை இயக்கி இருக்கிறார் வெற்றி மகாலிங்கம்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, விறுவிறுப்பாக பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து, தணிக்கை குழுவினருக்கு இப்படத்தை அனுப்பி இருக்கிறார்கள்.

படத்தை பார்த்த குழுவினர் ‘யூ/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தை பிப்ரவரி மாதம் 2ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Visiri movie will release on 2nd February Treat for Ajith Vijay fans

thala thalapathy visiri

சமுத்திரக்கனி-சசிகுமாரின் நாடோடிகள்2 படத்தில் இணைந்தார் அஞ்சலி

சமுத்திரக்கனி-சசிகுமாரின் நாடோடிகள்2 படத்தில் இணைந்தார் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anjali joins hands with Samuthirakani and Sasikumar for Nadodigal2சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது இதன் 2ஆம் பாகம் உருவாகவுள்ளது என்பதை பார்த்தோம்.

இப்படத்தை நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இதை சமுத்திரகனி இயக்கி முக்கிய வேடத்தில் நடிக்க, நாயகனாக சசிகுமார் நடிக்கிறார்.

இந்நிலையில் இதில் நாயகியாக அஞ்சலி நடிக்கவிருக்கிறாராம்.

இசையை ஜஸ்டின் பிரபாகரன் மேற்கொள்ள ஒளிப்பதிவை என்.கே.ஏகாம்பரம் செய்கிறார்.

கலை இயக்கம் – ஜாக்கி, படத்தொகுப்பு – A.L.ரமேஷ்.

Anjali joins hands with Samuthirakani and Sasikumar for Nadodigal2

கரப்பான் பூச்சி கவிதை எழுதிய நடிகை கீர்த்தி சுரேஷ்

கரப்பான் பூச்சி கவிதை எழுதிய நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal and Keerthy Suresh launched Lingusamy Haiku bookலிங்குசாமியின் ” லிங்கூ-அய்க்கூ” புத்தக வெளியிட்டு விழா சென்னை ரஷ்யன் கல்சுரல் சென்டரில் நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் – நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், நடிகை கீர்த்தி சுரேஷ், பேராசிரியர் ஞான சம்பந்தம், இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல் , வசந்தபாலன் , கவிஞர் பிருந்தா சாரதி, நடன இயக்குநர் ராஜு சுந்தரம், எழுத்தாளர் S.ராம கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

“லிங்கூ – ஹைக்கூ ” நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசியதாவது…

“தாகூரின் கவிதை ஒன்று நியாபகம் வருகின்றது சரியானவற்றை நீ தேர்ந்தெடுப்பதில்லை சரியானவை உன்னை தேர்ந்தேடுக்கின்றன. அவ்வாறு அமைந்தது தான் என்னுடைய அணைத்து நண்பர்களும் இந்த மேடையும். இங்கு மேடையில் உள்ள அனைத்து நபர்களுடனும் 25 வருடம் அல்லது 25 மாதங்களாக இருக்கலாம் ஆனால் இவர்களிடம் நீண்ட பிடிப்பு உள்ளது.

பாலாஜி சார் தான் முதல்முறையாக என்னுடைய கவிதையை படித்து காட்டி என்னை உதவி இயக்குனராக சேர்த்துவிட்டார்.

பாலாஜி சாரை அறிமுகப்படுத்திய பாலன். இதே புஷ்கின் இலக்கிய பேரவைக்காக ஒரு மூன்று வரி கவிதையை எழுத வேண்டும் என்று முதல் முதலாக சந்தித்த பிருந்தா சாரதி அவர்கள் இப்பொது அதே ஹாலில் என்னுடைய கவிதை புத்தகத்தை வெளியீடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஒரு மூன்று வரி கவிதை விகடனில் எழுதி 30 ரூபாய் பணம் வந்த பிறகு எப்படியும் எழுதி பிழைத்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான் நான் சென்னைக்கு வந்தேன்.

இப்பொதும் இதற்கு முன்பு கவிதை வெளியீட்டு விழாவில் கூறியது போன்று நம்மிடம் இருந்து எல்லாம் போன பின்பும் கவிதை எழுத தெரிந்தால் பிழைத்துக் கொள்ளலாம். இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார் இயக்குநர் லிங்குசாமி.

விஷால் பேசியதாவது…

எனக்கும் கவிதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என்னை ஏன் லிங்குசாமி இங்கே அழைத்தார் என்று தெரியவில்லை. எனக்கு அவரை இயக்குநர் லிங்குசாமியாக தான் தெரியும். எனக்கு கவிதை, புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை.

ஆனால் இன்று முதல் இயக்குநர் லிங்குசாமி “ லிங்கு ஹைக்கு “ புத்தகம் கண்டிப்பாக என்னுடைய அறையில் இருக்க போகிறது. இது தான் நான் வாசிக்க போகும் முதல் கவிதை புத்தகம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் நடிகை கீர்த்திசுரேஷ் அவரே சொந்தமாக ஒரு கவிதையை எழுதி வந்து வாசித்து அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றார். “ கரப்பான பூச்சியை “ மையமாக கொண்ட கவிதை ஒன்றை கூறி இது தான் தனக்கு பிடித்த கவிதை என்று கூறினார்.

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் தமிழ் பேசாத இக்காலத்தில். கீர்த்தி சுரேஷ் தமிழில் கவிதை ஒன்றை கூறியது. தனக்கு பிடித்த தமிழ் கவிதை பற்றி பேசியது தங்களுக்கு ஆச்சரியமாக இருந்ததாக பேசிய எழுத்தாளர்கள் அனைவரும் கூறினார்கள்.

Vishal and Keerthy Suresh launched Lingusamy Haiku book

lingusamy book launch

More Articles
Follows